நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 17 September 2009

அறிந்ததும் அறியாததும்!

அகரமும் alphabet உம் கேள்வியாய் மாறி இங்கே என்னையும் இழுத்து வந்திருக்கிறது நண்பர்களே.

1. A – Available/Single? Not Available & Not Single :

முதல் கேள்வியைத் தப்புத் தப்பாகக் கேட்கிறார்கள்.
2. B – Best friend? :

அவசரப் பட்டு இறந்திட்டாள். அந்த இடம் இன்னும் வெறுமை தான்.
3. C – Cake or Pie?:

கேக் தான்.
4. D – Drink of choice? :


தண்ணீர் மாதிரி எதுவும் தாகம் தணிக்காதே!

5. E – Essential item you use every day? :


உடை தான்
6. F – Favorite color? :


ஊதா நிறம்
7. G – Gummy Bears Or Worms?:

யக்!என்ன கேள்வி இது?
8. H – Hometown? -


யாழ்ப்பாணம் இப்போ சேர்ட்சி
9. I – Indulgence? -

கனவுகளின் சொந்தக்காரி.
10. J – January or February?


ஜனவரி, வருடம் பிறக்குமல்லவா?
11. K – Kids & their names?


அஞ்சலி, அஸ்வினி, ஆர்த்தி - மூன்று பெண்கள்
12. L – Life is incomplete without? -


பிள்ளைகள்
13. M – Marriage date?

ஆவணி 21
14. N – Number of siblings?

ஐந்து, நான்கு தம்பிமார் , ஒரு தங்கை
15. O – Oranges or Apples?

ஆப்பிள் தான், மரத்தை வளர்த்து பழம் சாப்பிடுகிறேன். இப்போ சீசன் தான் அனுப்பி வைக்கட்டுமா?
16. P – Phobias/Fears?

மனித உருவில் இருக்கும் மிருகங்களிடம்.

17. Q – Quote for today? :

மனித வாழ்க்கை நிரந்தர மில்லாதது. ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது.
18. R – Reason to smile? :

இலவசமாகக் கொடுப்பதற்கு கஞ்சத்தனம் காட்டுவதில்லை.
19. S – Season?

இயற்கையை ரசிப்பவள்.
20. T – Tag 4 People?

திட்டு வாங்கப் போறேன் என்று சொல்லுங்கோ.

நேசமித்ரன், ராமலஷ்மி, சந்ரு, ஜமால்
21. U – Unknown fact about me?

எனக்குத் தெரியாததை உங்களுக்கு எப்படிச் சொல்வது?
22. V – Vegetable you don't like?

புடலங்காய்
23. W – Worst habit?

ஒரு சின்னச் ' சொல்லில்'' அடிபட்டுப் போவது.

24. X – X-rays you've had?


போன வருடம் விழுந்து தொலைத்து உடம்பு முழுவதும் கதிர் படம் எடுத்தார்கள்.


ஒன்றும் பெரிதாக முறியவில்லை.
25. Y – Your favorite food? :


எதுவும் ருசியாய் இருந்தால் சரிதான். முடிந்தால் முருங்கை இல்லைப் புட்டும் கருவாட்டுப்

பொரியலும் பார்சலில் அனுப்புங்கோ மக்கா.
26. Z – Zodiac sign?


Libra



அகரம் தொடர்கிறது......


அன்புக்குரியவர்கள்: நிறையப் பேர். இங்கே எழுத இடம் காணாது.

ஆசைக்குரியவர்: சொல்ல மாட்டேன் போங்கோ

இலவசமாய் கிடைப்பது: சுவாசிக்கும் காற்று, நண்பர்களின் பின்னூட்டம்.

ஈதலில் சிறந்தது: பசித்தவனுக்கு உணவு

உலகத்தில் பயப்படுவது: கனவிலும் நிஜத்திலும் பாம்புக்கு.

ஊமை கண்ட கனவு: நான் ஊமை இல்லைங்க.நம்புங்க.

எப்போதும் உடனிருப்பது: கடவுளின் கருணை.

ஏன் இந்த பதிவு: நண்பர் வெ.இராதாகிருஷ்ணன் தொடர் விளையாட்டுக்கு அழைத்து விட்டதால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நோயற்ற வாழ்வு

ஒரு ரகசியம்: ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.

ஓசையில் பிடித்தது: நீரோடும் ' சல சல ' சத்தம்.

ஔவை மொழி ஒன்று: ''துட்டனைக் கண்டால் தூர விலகு''

(அ)ஃறிணையில் பிடித்தது: அன்பு.



32 comments:

Anonymous said...

பதில்கள் எல்லாம் குறும்புத்தனமாகவும் நச்சுன்னு இருந்தது ஜெஸ்... A TO Z ஆகட்டும் அகரமாகட்டும் பதில்களில் உண்மையும் அமைதியும்....

குடந்தை அன்புமணி said...

//ஒரு ரகசியம்: ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.//
???????????

S.A. நவாஸுதீன் said...

குறும்பான கலகலப்பான பதில்கள் ஜெஸ்வந்தி

நட்புடன் ஜமால் said...

குழந்தைகள் இல்லாத வாழ்க்கையா என்பது அழகு.

நிறம் - யாமும் அதே ...

-----------------

15. O – Oranges or Apples?

ஆப்பிள் தான், மரத்தை வளர்த்து பழம் சாப்பிடுகிறேன். இப்போ சீசன் தான் அனுப்பி வைக்கட்டுமா?]]

யோசிக்கவே அழகாயிருக்குங்க.

--------------------

காய்களில் பிடித்தது - உங்கள் குறும்பில் எங்களுக்கு பிடித்தது

---------------------

ஆசைக்குரியவர்: சொல்ல மாட்டேன் போங்கோ]]

அம்பூட்டு ஆசைங்களா - சந்தோஷம்.

---------------------

தொடர் பதிவு போட்டா ரொம்ப நாள் கழித்து போடாமலே இருக்கும் சோம்பேறி நான்.

ஆனா பாருங்க நீங்க கூப்பிட்டு விட்டீங்க என்பதால் வெகு சீக்கிரமா போட்டு விட்டேன்

http://www.itsjamaal.com/2009/09/who-am-i.html

இதில சிறப்பு நீங்க பின்னூட்டமும் போட்டாச்சி

------------------

என்னை நினைவு கூர்ந்து உங்கள் ப்லாக்கில் அழைத்தமைக்கு நன்றி தோழமையே.

தமிழ் அமுதன் said...

//ஆப்பிள் தான், மரத்தை வளர்த்து பழம் சாப்பிடுகிறேன். இப்போ சீசன் தான் அனுப்பி வைக்கட்டுமா?//

அனுப்பினா வேணாம்னா சொல்லபோறோம் ,,))


// ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.//

ஆஹா ....! என்னைபோல தானா ..!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தமிழரசி said...
பதில்கள் எல்லாம் குறும்புத்தனமாகவும் நச்சுன்னு இருந்தது ஜெஸ்... A TO Z ஆகட்டும் அகரமாகட்டும் பதில்களில் உண்மையும் அமைதியும்....//

கொஞ்சம் சுவாரசியமாகவும் இருந்தால் மனதில் நிற்குமல்லவா? அதுதான் இப்படி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//குடந்தை அன்புமணி said...
//ஒரு ரகசியம்: ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.//
???????????//

என்ன அன்புமணி? ரகசியமாகச் சொன்ன விடயத்தை இத்தனை உரத்த சத்தத்தில் கேட்கிறீர்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
குறும்பான கலகலப்பான பதில்கள் ஜெஸ்வந்தி//

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி நண்பரே!

Radhakrishnan said...

அழைப்பினை ஏற்று சிரமம் பாராமல் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.

மிகவும் எளிமையான அருமையான பதில்கள். ஆப்பிள் ரசித்தேன். மிக்க நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நட்புடன் ஜமால்
==============
வாங்க ஜமால். என் குறும்பு ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க அதை மிஞ்சின குறும்புடன் என் தலையில் ஒரு குட்டு அழகாக விட்டிருக்கிறீர்கள். தப்புத்தான். மன்னிக்கணும். உங்கள் பதிவைப் படித்து கருத்தும் போட்டு பின்னர் உங்களை அழைத்திருக்கிறேன். மறதி கூடுது இப்போ. ஜமாலை எந்தத் தொடருக்கும் அழைக்கவில்லை இம்முறை அழைக்கவேண்டும் என்று மட்டும் தான் தோன்றியது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஜீவன் said...
/ஆப்பிள் தான், மரத்தை வளர்த்து பழம் சாப்பிடுகிறேன். இப்போ சீசன் தான் அனுப்பி வைக்கட்டுமா?/
அனுப்பினா வேணாம்னா சொல்லபோறோம் ,,))//

மடக்கி விடுறது என்று இருக்கிறிர்கள். அட்ரஸ் குடுங்கோ.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/ஜீவன் said
/ ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க./
ஆஹா ....! என்னைபோல தானா ..!//

வாங்க சகா.! நலந்தானா ?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
அழைப்பினை ஏற்று சிரமம் பாராமல் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.
மிகவும் எளிமையான அருமையான பதில்கள். ஆப்பிள் ரசித்தேன். மிக்க நன்றி.//

வாங்க நண்பரே! இதில் எந்தச் சிரமமும் இல்லை. நான் மகிழ்ச்சியுடன் இந்த விளையாட்டில் கலந்து கொண்டேன்.

butterfly Surya said...

Good. ரசித்தேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

//ஈதலில் சிறந்தது: பசித்தவனுக்கு உணவு//

கிரேட்..உள்மனதின் உதவும் குணம் வெளிப்பட்டுள்ளது

பா.ராஜாராம் said...

எல்லாம் நல்லாவே இருக்கு.ஒரு ரகசியம் தவிர.

R.Gopi said...

ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ ஜெஸ்வந்தி...

////ஆப்பிள் தான், மரத்தை வளர்த்து பழம் சாப்பிடுகிறேன். இப்போ சீசன் தான் அனுப்பி வைக்கட்டுமா?//

ஆஹா... அனுப்பி வைங்க‌ ஜெஸ்... என்னோட‌ துபாய் அட்ர‌ஸ் சொல்ல‌வா?

// ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.//

என் தோப்பும்...புங்கை ம‌ர‌மும்... பின்னே ஞானும் ப‌டிக்க‌ற‌ ஞாப‌க‌ம் வந்த‌து...

ரொம்ப நல்லா இருந்தது ஜெஸ்.... வாழ்த்துக்கள்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//butterfly Surya said...
Good. ரசித்தேன்..//
வரவுக்கு நன்றி சூர்யா . ரசித்தால் சரிதான். பொய் சொல்ல மாட்டீர்கள் தானே!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்...வசந்த் said...
//ஈதலில் சிறந்தது: பசித்தவனுக்கு உணவு//
கிரேட்..உள்மனதின் உதவும் குணம் வெளிப்பட்டுள்ளது//

வாங்க வசந்த். தேவதை அருள் கொடுத்து லண்டன் வந்தால் என்னையும் மறக்காமல் வந்து பாருங்க .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
எல்லாம் நல்லாவே இருக்கு.ஒரு ரகசியம் தவிர.//

என்ன ராஜா, இப்பிடிச் சொல்லி விட்டீர்கள். நல்லா இருக்காது என்பதால் தானே அது ரகசியமாய் இருக்கு. கேள்வி கேட்டுக் குப்பையைக் கிளறுகிறார்கள் பாருங்கள்.
உங்களுக்கு ஆவி என்றால் பயமா என்ன? இத்தனை நாள் என்னுடன் கதைத்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்? பிறகென்ன பயம்.?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...
ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ ஜெஸ்வந்தி...
//ஆப்பிள் தான், மரத்தை வளர்த்து பழம் சாப்பிடுகிறேன். இப்போ சீசன் தான் அனுப்பி வைக்கட்டுமா?//
ஆஹா... அனுப்பி வைங்க‌ ஜெஸ்... என்னோட‌ துபாய் அட்ர‌ஸ் சொல்ல‌வா?

// ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.//
என் தோப்பும்...புங்கை ம‌ர‌மும்... பின்னே ஞானும் ப‌டிக்க‌ற‌ ஞாப‌க‌ம் வந்த‌து...
ரொம்ப நல்லா இருந்தது ஜெஸ்.... வாழ்த்துக்கள்...//

வாங்க கோபி, ஆப்பிளை அனுப்புகிறேன் என்று சொல்லி உங்கள் அட்ரஸ் கண்டு பிடிக்கப் பார்க்கிறேன். வலையில் விழுந்து விடாதீர்கள். எனது ரகசியம் சொல்லியும் உங்களுக்குப் பயம் பரவில்லையா நண்பரே? ஹ ஹ ஹா

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

Anonymous said...

எப்போதும் உடனிருப்பது: கடவுளின் கருணை.
//


உண்மைதான். அதுதானே எல்லோருக்கும் வேண்டும். மனம் அமைதிக்கொள்ள கடவுள் நம்பிக்கை அவசிமான ஒன்று. உங்கள் முந்திய பதிவிலும் கடவுள் பற்றிய கருத்துக்கள் அருமை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கடையம் ஆனந்த் said...
/எப்போதும் உடனிருப்பது: கடவுளின் கருண/
உண்மைதான். அதுதானே எல்லோருக்கும் வேண்டும். மனம் அமைதிக்கொள்ள கடவுள் நம்பிக்கை அவசிமான ஒன்று. உங்கள் முந்திய பதிவிலும் கடவுள் பற்றிய கருத்துக்கள் அருமை.//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஆனந்த். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Rayar said...

Im going get engagement on 24th september,2009

i need ur wishes

see u soon

take care

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாங்க ராயர். நல்ல செய்தியோடு வந்திருக்கிறீர்கள். என் வாழ்த்துக்கள் எப்போதும் உங்களுக்கு உண்டு. முடிந்தால் மெயிலில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Thekkikattan|தெகா said...

நான் முன்பு ஒரு பின்னூட்டம் கொடுத்திருந்தேனே, கிடைக்கவில்லையா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் முதல் வருகைக்கு நன்றி தெகா. இதற்கு முன் எனக்கு எந்தக் கருத்தும் பதிவாக வில்லை. திரும்பவும் உங்கள் கருத்தைப் பதியுங்கள்.

Thekkikattan|தெகா said...

ம்ம்ம் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது...

அதனில் கூறியிருந்தேன்: நண்பர் வெ.இரா அழைப்பை ஏற்று நீங்க போட்டுடீங்க, நான் எப்பொழுதுதோ...

உங்கள் பதில் அத்துனையும் நன்றாக அமைந்திருந்தது(சில கேள்விகள் அபத்தம் என்ற பொழுதிலும்...)

அந்த "ரகசியமாக" சொன்ன விடயம் ரொம்ப ஆழமான விசயமாக படுவதாக கூறியிருந்தேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வணக்கம் தெகா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
உங்களுக்குப் பயமே கிடையாதா? என்ன.
நேரம் கிடைக்கும் போது உங்கள் பதில்களையும் வந்து படிக்கிறேன்.

Shan Nalliah / GANDHIYIST said...

DIED.....WHICH YEAR EXACTLY...?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah / GANDHIYIST said...
DIED.....WHICH YEAR EXACTLY...?//

ஆமா, இந்தக் குசும்புதான் வேண்டாங்கிறது. அறிந்து என்ன பண்ணப் போகிறீர்கள்.?
இனிக் கொலையா? தற்கொலையா? என்று கேட்கப் போகிறீர்களோ?ஹா ஹா ஹா