நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Saturday, 12 September 2009

தேவதை வந்தாள்

பிரியமுடன் வசந்த் கண்டெடுத்த இந்தத் தேவதை வலம் வந்து ஹேமா வீட்டில் இருந்து என் வீட்டுக்கு வந்தாள். அவளைச் சிறை வைக்க மனமில்லாமல் இன்றே என் நண்பர்களிடம் அனுப்பி வைக்க நினைத்தேன்.

வரங்கள் ஆயிரம் கேட்க மனமிருந்தாலும், பத்தே வரங்கள் கேட்கிறேன்.


1. தமிழன் கனவு நனவாக வேண்டும் -அவன்
தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் திரும்ப வேண்டும்.

2. தீயவர் வஞ்சனை வெளிப்பட வேண்டும்-அவர்கள்
தீட்டிய திட்டங்கள் உடைய வேண்டும்.

3. கடவுள் கருணை காட்ட வேண்டும்-எம் அன்பே
கடவுளாய் மாற வேண்டும்.

4. பணத்தை மனிதர் தேட வேண்டும் - அதனைப்
பகுத்தறிவுடன் பகிர வேண்டும்.

5. சாதி சமயம் ஒழிய வேண்டும்- எம்மவர்
சத்தியமாக மாற வேண்டும்.

6. பள்ளிப் பருவம் திரும்ப வேண்டும்- அன்றுபோல்
பட்டாம் பூச்சியாய்ப் பறக்க வேண்டும்.

7. பெற்றவள் மனம் மகிழ வேண்டும்- அவளிடம்
பிள்ளையாய் பிறகும் பிறக்க வேண்டும்.

8. என் பிள்ளைகள் என்றும் சிரிக்க வேண்டும்- அவர்கள்
என்னருகில் இருக்க வேண்டும்.

9. சுயநலப் பேய்கள் ஒழிய வேண்டும்- என்றும்
சுற்றுச் சூழல் காக்க வேண்டும்.

10. நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்.


நான் தேவதையை பவித்திரமாய் அனுப்புகிறேன் என் நண்பர்களிடம் இதோ.

1. ஜீவன்
2. கவிக்கிழவன்
3. யாழினி
4. வெ.இராதாகிருஷ்ணன்


.

33 comments:

சினேகிதி said...

\\என் பிள்ளைகள் என்றும் சிரிக்க வேண்டும்- அவர்கள்
என்னருகில் இருக்க வேண்டும்.

9. சுயநலப் பேய்கள் ஒழிய வேண்டும்- என்றும்
சுற்றுச் சூழல் காக்க வேண்டும்.\\

8 சுயநலமில்லையா:) கோவிக்காதீங்க.

பா.ராஜாராம் said...

எட்டாவது வரம் ரொம்ப நெகிழ்வு ஜெஸ்!)குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க சம்மதியுங்கள் தோழி..

ஹேமா said...

ஜெஸி அத்தனையும் வரங்களும் தேவையானவையே.தேவதை வந்தால் விடாதேங்கோ.

அகல் விளக்கு said...

//நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்.//

வரங்களனைத்தும் பலிக்க வாழ்த்துக்கள்

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

Anonymous said...

un pan patta ullamum vanjamilla yennamum ingu nangu velipattu irukku jes.....ippadi ellarum podhunalam vendi vazhanthal thevathaikku velaiye illamal poividum...nalla varangal anaithum kandippa kedaikum.....

கவிக்கிழவன் said...

நன்றி உங்கள் அன்புக்கு
1. தமிழன் கனவு நனவாக வேண்டும் -அவன்
தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் திரும்ப வேண்டும்.
10. நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்.
1 ,10 எனக்கு பிடிச்சிருக்கு நானும் எழுதுபட்ட முயற்ச்சி செய்கிறான்

ஜெஸ்வந்தி said...

//சினேகிதி said...
\என் பிள்ளைகள் என்றும் சிரிக்க வேண்டும்- அவர்கள் என்னருகில் இருக்க வேண்டும்./

/9. சுயநலப் பேய்கள் ஒழிய வேண்டும்- என்றும்
சுற்றுச் சூழல் காக்க வேண்டும்.\\

8 சுயநலமில்லையா:) கோவிக்காதீங்க.//

வாங்க சகோதரி. உங்களை முதல் முதலில் அழைத்து வந்த தேவதைக்கு நன்றி. என் பிள்ளைகள் என்னருகில் இருக்க வேண்டும் என்று கேட்டது., எட்டிய தூரத்தில் , கண்டம் விட்டுக் கண்டம் போகாமல் இருக்க வேண்டும் என்பது தான். தாய் மடியில் வந்து விழுந்து அவர்கள் கவலை தீர வேண்டும் என்று தான். அதில் எந்த சுயநலமும் இல்லையம்மா.
அது அந்தத் தேவதைக்குப் புரிந்திருக்கும்.

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...
எட்டாவது வரம் ரொம்ப நெகிழ்வு ஜெஸ்!)குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க சம்மதியுங்கள் தோழி..//

வாங்க ராஜாராம். யார் இப்போ திருமணம் பற்றிக் கதைத்தது.? அந்தத் தேவதையிடம் என் பிள்ளைகள் சிரிக்க வேண்டும் என்ற ஒற்றை வரத்தில் அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதையும் அடக்கி விட்டேனே! என் பிள்ளைகள் skype இலும் chat
இலும் என்னுடன் கதைக்காமல் நேரில் போய்க் கதைக்கும் தூரத்தில் இருந்தால் போதும். என் வீட்டில் வைக்கப் போகிறேன் என்று நினைத்து விட்டீர்கள் போல .

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே நெகிழ்ச்சியான வரங்கள்தான் ஜெஸ்வந்தி. வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

தேவதை வரங்கள் அழகாக இருக்கிறது!

ஷ‌ஃபிக்ஸ் said...

அழகா, தெளிவா சொல்லி இருக்கிங்க, எல்லா வரங்களும் எனக்கு பிடிச்சு இருக்கு.

ஜீவன் said...

கவிதை போல இருக்கிறது ..!

// என் பிள்ளைகள் என்றும் சிரிக்க வேண்டும்- அவர்கள்
என்னருகில் இருக்க வேண்டும். ///

என்ன சொல்ல ......!

என்னை அழைத்ததற்கு நன்றி விரைவில் பதிவிடுகிறேன்..!

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்.]]

மிக அழகு ஜெஸ்வந்தி.

சினேகிதி said...

அப்பிடியெண்டால் சரி :) தேவதையே ஜெஸ்வந்தி கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்துவிடு.

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல எண்ணம் ஜெஸ்வந்தி தாங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி said...

//ஹேமா said...
ஜெஸி அத்தனையும் வரங்களும் தேவையானவையே.தேவதை வந்தால் விடாதேங்கோ.//

வாங்க தோழி. தினம் தினம் கடவுளிடம் கேட்கும் விடயம்தான். தேவதையிடமும் கேட்டேன்.

ஜெஸ்வந்தி said...

//அகல் விளக்கு said...
/நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்./
வரங்களனைத்தும் பலிக்க வாழ்த்துக்கள்//

வாங்க தோழி, தேவதை எனக்குப் பல புதிய நண்பர்களையும் இழுத்து வந்திருக்கிறது போல் தெரிகிறது. ஹா ஹா ஹா

ஜெஸ்வந்தி said...

//தமிழரசி said...
un pan patta ullamum vanjamilla yennamum ingu nangu velipattu irukku jes.....ippadi ellarum podhunalam vendi vazhanthal thevathaikku velaiye illamal poividum...nalla varangal anaithum kandippa kedaikum.....//

வாம்மா தமிழ். உன் புகழ்ச்சி மழையில் நனைந்து நான் மெய் மறந்து போனேன்.
உன் வாழ்த்துக்கு நன்றி.

ஜெஸ்வந்தி said...

//கவிக்கிழவன் said...
நன்றி உங்கள் அன்புக்கு
1. தமிழன் கனவு நனவாக வேண்டும் -அவன்
தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் திரும்ப வேண்டும்.
10. நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்.
1 ,10 எனக்கு பிடிச்சிருக்கு நானும் எழுதுபட்ட முயற்ச்சி செய்கிறான்//

நன்றி யாதவன். உங்கள் வரங்களைக் காலையில் படித்தேன். உருக்கமாக இருந்தது.

ஜெஸ்வந்தி said...

//S.A. நவாஸுதீன் said...
எல்லாமே நெகிழ்ச்சியான வரங்கள்தான் ஜெஸ்வந்தி. வாழ்த்துக்கள்//

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

ஜெஸ்வந்தி said...

//அன்புடன் அருணா said...
தேவதை வரங்கள் அழகாக இருக்கிறது!//

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

ஜெஸ்வந்தி said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
அழகா, தெளிவா சொல்லி இருக்கிங்க, எல்லா வரங்களும் எனக்கு பிடிச்சு இருக்கு.//

நன்றி நண்பரே. எனக்கும் உங்களுக்கும் பிடித்தால் போதாது. அந்தத் தேவதைக்குப் பிடிக்கணுமே!

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க உங்களின் வரப் பட்டியல்

ததாஸ்து
ஆமென்

:)

ஜெஸ்வந்தி said...

//ஜீவன் said...
கவிதை போல இருக்கிறது ..!
/ என் பிள்ளைகள் என்றும் சிரிக்க வேண்டும்- அவர்கள்
என்னருகில் இருக்க வேண்டும். /
என்ன சொல்ல ......!
என்னை அழைத்ததற்கு நன்றி விரைவில் பதிவிடுகிறேன்..!//

வாங்க ஜீவன். என்ன சொல்ல? என்று கேட்டால் என்ன அர்த்தம். நீங்கள் நினைத்ததைச் சொல்லியிருக்கலாம். என்ன வரம் கேட்கிறீர்கள் என்று பார்க்க வருவேன்.//

ஜெஸ்வந்தி said...

//நட்புடன் ஜமால் said...
/ நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்./
மிக அழகு ஜெஸ்வந்தி.//

வாங்க ஜமால். தொடர்ந்து வரும் உங்கள் நட்பையும் சேர்த்துத்தான் வரம் கேட்டேன் நண்பரே!

ஜெஸ்வந்தி said...

//பிரியமுடன்...வசந்த் said...

நல்ல எண்ணம் ஜெஸ்வந்தி தாங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகள்//

தேவதை ஒன்றை அனுப்பி விட்டு இப்போ வாழ்த்தும் வந்து சொல்லி விட்டாய். நன்றிப்பா.

ஜெஸ்வந்தி said...

//நேசமித்ரன் said...
நல்லா இருக்குங்க உங்களின் வரப் பட்டியல்
ததாஸ்து
ஆமென் :)//

வாங்க நண்பரே. நன்றி. எனக்கு ஆமென் மட்டும் போதும்.

நட்புடன் ஜமால் said...

உங்கள் நட்பையும் சேர்த்துத்தான் வரம் கேட்டேன் நண்பரே!]]

அதை நினைத்து தான் சந்தோஷம் கொண்டேன்.

வெ.இராதாகிருஷ்ணன் said...

அருமையான வரங்களைக் கேட்டு இருக்கிறீர்கள். என்னிடம் இந்த தேவதையை அனுப்பியமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.

கவிநயா said...

அழகான தேவதை நீங்கள் கேட்ட வரங்களை தவறாமல் தரட்டும்!

ஜெஸ்வந்தி said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
அருமையான வரங்களைக் கேட்டு இருக்கிறீர்கள். என்னிடம் இந்த தேவதையை அனுப்பியமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.//

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. நல்ல வரங்களாகக் கேளுங்கள்.

ஜெஸ்வந்தி said...

//கவிநயா said...
அழகான தேவதை நீங்கள் கேட்ட வரங்களை தவறாமல் தரட்டும்!//

வாங்க கவிநயா. எப்படி இருக்கிறீர்கள்.?அழகான தேவதையைக் கண்டு பிடித்த பிரியமுடன் வசந்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.