நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Saturday, 13 February 2010

இவை இந்தியாவில் மட்டும்தான் .....

எனக்கு மெயிலில் வந்த சில படங்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சிரிக்க வைக்கும் இப்படங்கள் சிந்திக்கவும் வைக்கின்றன..

Friday, 12 February 2010

காதலர் தினமும் பறவைகளும் ....
ஏனோ தெரியவில்லை. காதலுக்கும் பறவைகளுக்கும் அந்தக் காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பிருக்கிறது . கல்யாணப் பத்திரிகையில் இரண்டு அன்னப் பட்சி மோதிரத்தைக் கவ்விச் செல்லும் படமும், காதலர் தின வாழ்த்துகளில் பறவைகள் பறப்பதும் முத்தமிடுவதுமான படங்களும் பார்த்து எமக்குப் பழகி விட்டது.
ஆனால் ஐரோப்பிய தேசங்களில் காதலர் தினத்தன்று ஒரு கல்யாணமாகாத பெண் முதன் முதலாகக் காணும் பறவை அவளுக்கு வரப் போகும் கணவன் எப்படிப் பட்டவன் என்பதைச் சொல்லும் என்று பழங் காலத்தில் நம்பப் பட்டதாம். அதனால் பெண்கள் எந்தப் பறவைகள் எந்தப் பகுதியில் இருக்கும் என்பதை ஓரளவு ஊகித்து பறவைகளைத் தேடித் போவார்களாம். இவர்கள் இப்படிப் பறவைகளைத் தேடித் போவார்கள் என்பதை அறிந்த ஆண்கள் இவர்களைப் பார்க்கப் புறப்படுவார்களாம். அனேகமாக காட்டுப் பகுதிகளைத் தவிர்த்து நதிக் கரையில் தான் பெண்கள் பறவைகளைத் தேடினார்களாம். அதிலுள்ள ரகசியத்தைக் கீழே படியுங்கள்.


GOLDFINCH
இந்தப் பறவையைக் கண்டால் கணவர் தனவந்தராக இருப்பாராம். ஆனால் கொடூரமான குணமுள்ளவராக இருப்பாராம்.
BLACKBIRD
பரிசுத்தமான மனமுள்ளவராகவும் , சமூக சேவை
செய்பவராகவும்
இருப்பாராம்.
CANARY


கணவர் டாக்டராக இருப்பாராம்.
BLUEBIRD


அருகிலுள்ள அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் படைத்தவராக நகைச்சுவையுள்ளவராக இருப்பாராம்.

DUCK

வாழ்க்கையை ஆழமாக உணர்ந்து அழகாக நடத்துபவராக இருப்பாராம்.BIRDS OF PREY

கணவர் அரசியல் வாதியாகவோ ,வர்த்தகராகவோ அல்லது ஒரு தலைவராகவோ இருப்பாராம்.


GULL

இதன் இறகுகள் ஆகாய விமானத்தை நினைவு படுத்துவதாலோ என்னவோ , கணவர் தொடர்ந்து பிரயாணம் செய்பவராகவும் ,அமர்ந்து கதைக்க நேரமில்லாதவராகவும் இருப்பாராம்.ROBINமீனவனாகவோ, நீர்ப் படையைச் சார்ந்தவராகவோ அல்லது ஏதாவதொரு நீர் சம்பத்தப் பட்ட தொழில் செய்பவராக இருப்பாராம்.SPARROW

மரம் வெட்டுபவராகவோ, தோட்டக் காரராகவோ ஏதோ மரத்துடன் சம்பத்தப் பட்ட வேலை செய்பவராக இருப்பாராம்.

PIGEON


கணவர் தான் சின்ன வயதில் எங்கே இருந்தாரோ அந்த இடத்திலே திரும்பவும் போய் வாழும் நோக்கத்திலேயே இருப்பாராம்.KINGFISHER

பரம்பரையாகவோ , தானாகவோ சேர்த்த செல்வத்தைத் தாராளமாகக் கொண்டு வருவாராம்.

WOODPECKER

இந்தப் பறவை கண்டால், இந்த ஜென்மத்தில் கல்யாணமே கிடையாதாம்.

DOVE

அன்பானவராகவும் இனியவராகவும் வாழ்க்கை முழுக்க இருப்பாராம். அதனால் பெண்கள் இந்தப் பறவையைக் காண்பது அதிஸ்டம் என்று கருதினார்களாம்.

இப்போது கூட இந்த மரபு வழியினால் பறவை பார்க்கச் செல்வது வழக்கத்திலிருக்கிறதாம். ஆண்கள் பலர் இப்படி பறவை பார்க்கச் சென்ற நேரத்தில் தான், காதலர் தினத்தன்று , தங்கள் மனைவியரைச் சந்தித்தார்களாம். உள்ளூர் தினப் பத்திரிகையொன்றில் படித்தேன்.

ஆமா, எங்க ஊரில் வெளியில் வந்தால் காக்கா தானே தெரியும். பரவாயில்லையே ! ஒரு மரக்கொத்தியைப் பார்த்து கல்யாணமே கிடையாதோ என்று கவலைப் படுவதை விட , ஒரு காக்கா பார்த்து சமூக சேவை செய்திட்டுப் போகலாம் . நீங்க என்ன சொல்றீங்க? இதில உள்ள பறவைகளைப் பற்றி மட்டும் தான் எனக்குத் தெரியும். இங்கே வந்து மயில் கண்டால் எப்பிடி கணவர் வருவார் என்று மடக்கிக் கேள்வி கேட்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.ஆதாரம் http://www.telegraph.co.uk/relationships/valentines-day/7211482/Valentines-Day-let-a-little-bird-tell-you-what-your-romantic-future-holds.html


.

Thursday, 4 February 2010

நான் ரசித்த இயற்கைக் காட்சிகள்


சில மாதங்களின் முன் இங்கிலாந்திலுள்ள நோர்த் வேல்ஸ் என்ற இடத்திற்குப் போய் ஒரு வாரம் தங்கியிருந்தேன். மிகவும் ரம்மியமான அந்தப் பயணத்தில் எனக்குப் பிடித்த சில காட்சிகளை உங்களுடன் பகிர்வதற்காகப் படம் பிடித்தேன்.இன்றுதான் அவற்றைத் திரும்பிப் பார்க்கும் நேரம் வந்துள்ளது. லண்டனிலிருந்து சுமார் ஐந்து மணி நேரப் பயணம். படத்தில் சிகப்பு நிறத்தில் குறித்துக் காட்டியுள்ளேன். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பார்த்த போது தெரிந்த பச்சைப் பசேலென்ற காட்சியை கீழே பாருங்கள்.
தினமும் அருகிலுள்ள கடற்கரைக்கு மண் மேட்டினூடாக ஆள் உயரத்துக்கு வளர்ந்து நின்ற புல்லுக்கூடாக நடந்து சென்றது ஒரு புதிய அனுபவம்.மலையும் கடலும் அருவியும் சேர்ந்து இந்தப் பகுதியை உல்லாசப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாக்கியிருக்கின்றன. மௌன்டைன் ரயில்வே (Mountain railway) மலைகளைச் சுற்றிச் சுற்றியோடி 3560 அடி உயரத்துக்குக் போகின்றது. மலையுச்சியிலிருந்து தெரியும் காட்சி மெய் மறக்க வைக்கின்றது.மேலேயுள்ள படத்தில் ரயிலில் போகும்போது தெரிந்த( bronze mine )
உலோகமெடுக்கப் பட்ட சுரங்கமொன்றைப் படமாக்கினேன்.
கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் வெள்ளிக் கோடுகளாய்த் தெரிந்த அருவிகள்.


எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆங்காங்கே தெரிந்த பழைய அரச கோட்டைகள் ( castles)
கோன்வி கோட்டையை மட்டும் தான் அருகில் போய்ப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தக் கோட்டை எட்வர்ட் நம்பர் ஒன் அரசனால் 1283 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டதாம். அதற்கு முன்னால் நின்ற என் பெண்ணையும் பாருங்கள்.


கோட்டைக்கு எதிராக கோன்வி நதியில் சென்ற படகுகள் இங்கேபல மைல்களுக்கு நீண்டுள்ள சுனோடோனியா ( Snodonia) மலைத்தொடர் இந்தப் பகுதியில் பிரசித்தமானது.
பல நீர் வீழ்ச்சிகளிருந்தாலும் இந்த swallow falls மிகவும் ரம்மியமானது. ல்லுக்வி ( Llugwy) என்ற அருவி மலைகளினூடாகவும் அடர் காட்டினூடாகவும் ஓடிப் பாய்வது ஒரு கண் கொள்ளாக் காட்சி.Add Image


இந்தப் பிரதேசத்தில் அழகைச் சுற்றிப் பார்க்க ஒரு வாரம் காணாதென்பது அங்கு போனபின்பு தான் தெரிந்தது. அடுத்த தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

.