நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 12 February 2010

காதலர் தினமும் பறவைகளும் ....
ஏனோ தெரியவில்லை. காதலுக்கும் பறவைகளுக்கும் அந்தக் காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பிருக்கிறது . கல்யாணப் பத்திரிகையில் இரண்டு அன்னப் பட்சி மோதிரத்தைக் கவ்விச் செல்லும் படமும், காதலர் தின வாழ்த்துகளில் பறவைகள் பறப்பதும் முத்தமிடுவதுமான படங்களும் பார்த்து எமக்குப் பழகி விட்டது.
ஆனால் ஐரோப்பிய தேசங்களில் காதலர் தினத்தன்று ஒரு கல்யாணமாகாத பெண் முதன் முதலாகக் காணும் பறவை அவளுக்கு வரப் போகும் கணவன் எப்படிப் பட்டவன் என்பதைச் சொல்லும் என்று பழங் காலத்தில் நம்பப் பட்டதாம். அதனால் பெண்கள் எந்தப் பறவைகள் எந்தப் பகுதியில் இருக்கும் என்பதை ஓரளவு ஊகித்து பறவைகளைத் தேடித் போவார்களாம். இவர்கள் இப்படிப் பறவைகளைத் தேடித் போவார்கள் என்பதை அறிந்த ஆண்கள் இவர்களைப் பார்க்கப் புறப்படுவார்களாம். அனேகமாக காட்டுப் பகுதிகளைத் தவிர்த்து நதிக் கரையில் தான் பெண்கள் பறவைகளைத் தேடினார்களாம். அதிலுள்ள ரகசியத்தைக் கீழே படியுங்கள்.


GOLDFINCH
இந்தப் பறவையைக் கண்டால் கணவர் தனவந்தராக இருப்பாராம். ஆனால் கொடூரமான குணமுள்ளவராக இருப்பாராம்.
BLACKBIRD
பரிசுத்தமான மனமுள்ளவராகவும் , சமூக சேவை
செய்பவராகவும்
இருப்பாராம்.
CANARY


கணவர் டாக்டராக இருப்பாராம்.
BLUEBIRD


அருகிலுள்ள அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் படைத்தவராக நகைச்சுவையுள்ளவராக இருப்பாராம்.

DUCK

வாழ்க்கையை ஆழமாக உணர்ந்து அழகாக நடத்துபவராக இருப்பாராம்.BIRDS OF PREY

கணவர் அரசியல் வாதியாகவோ ,வர்த்தகராகவோ அல்லது ஒரு தலைவராகவோ இருப்பாராம்.


GULL

இதன் இறகுகள் ஆகாய விமானத்தை நினைவு படுத்துவதாலோ என்னவோ , கணவர் தொடர்ந்து பிரயாணம் செய்பவராகவும் ,அமர்ந்து கதைக்க நேரமில்லாதவராகவும் இருப்பாராம்.ROBINமீனவனாகவோ, நீர்ப் படையைச் சார்ந்தவராகவோ அல்லது ஏதாவதொரு நீர் சம்பத்தப் பட்ட தொழில் செய்பவராக இருப்பாராம்.SPARROW

மரம் வெட்டுபவராகவோ, தோட்டக் காரராகவோ ஏதோ மரத்துடன் சம்பத்தப் பட்ட வேலை செய்பவராக இருப்பாராம்.

PIGEON


கணவர் தான் சின்ன வயதில் எங்கே இருந்தாரோ அந்த இடத்திலே திரும்பவும் போய் வாழும் நோக்கத்திலேயே இருப்பாராம்.KINGFISHER

பரம்பரையாகவோ , தானாகவோ சேர்த்த செல்வத்தைத் தாராளமாகக் கொண்டு வருவாராம்.

WOODPECKER

இந்தப் பறவை கண்டால், இந்த ஜென்மத்தில் கல்யாணமே கிடையாதாம்.

DOVE

அன்பானவராகவும் இனியவராகவும் வாழ்க்கை முழுக்க இருப்பாராம். அதனால் பெண்கள் இந்தப் பறவையைக் காண்பது அதிஸ்டம் என்று கருதினார்களாம்.

இப்போது கூட இந்த மரபு வழியினால் பறவை பார்க்கச் செல்வது வழக்கத்திலிருக்கிறதாம். ஆண்கள் பலர் இப்படி பறவை பார்க்கச் சென்ற நேரத்தில் தான், காதலர் தினத்தன்று , தங்கள் மனைவியரைச் சந்தித்தார்களாம். உள்ளூர் தினப் பத்திரிகையொன்றில் படித்தேன்.

ஆமா, எங்க ஊரில் வெளியில் வந்தால் காக்கா தானே தெரியும். பரவாயில்லையே ! ஒரு மரக்கொத்தியைப் பார்த்து கல்யாணமே கிடையாதோ என்று கவலைப் படுவதை விட , ஒரு காக்கா பார்த்து சமூக சேவை செய்திட்டுப் போகலாம் . நீங்க என்ன சொல்றீங்க? இதில உள்ள பறவைகளைப் பற்றி மட்டும் தான் எனக்குத் தெரியும். இங்கே வந்து மயில் கண்டால் எப்பிடி கணவர் வருவார் என்று மடக்கிக் கேள்வி கேட்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.ஆதாரம் http://www.telegraph.co.uk/relationships/valentines-day/7211482/Valentines-Day-let-a-little-bird-tell-you-what-your-romantic-future-holds.html


.

21 comments:

கமலேஷ் said...

மிக சுவாரஸ்யமான பதிவு....மிக நன்றாக சுவையுடன் இருக்கிறது.... வாழ்த்துக்கள் தொடருங்கள்......

V.A.S.SANGAR said...

எங்க பறந்து மேட்டர புடிசிங்க

Chitra said...

interesting European tradition. Thank you for sharing it with us. நம்ம ஊரு காக்கா, குருவி, கிளி, ஆந்தைக்கு அர்த்தம் சொல்லி புதுசா கிளப்பி விட வேண்டியதுதான்.

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்குதுங்க:)! படங்கள் மிக அழகு.

ஜெய்லானி said...

வவ்வால் கிடைத்தால் என்ன பலன்.
பதிவு சூப்பர்

ஜெய்லானி said...

//கல்யாணப் பத்திரிகையில் இரண்டு அன்னப் பட்சி மோதிரத்தைக் கவ்விச் செல்லும் படமும், காதலர் தின வாழ்த்துகளில் பறவைகள் பறப்பதும் முத்தமிடுவதுமான படங்களும் பார்த்து எமக்குப் பழகி விட்டது///
இனை பிரியாது, எப்போதும் அன்புடன் வாழ நினைவு படுத்தவே இந்த பறவை படங்கள்(உதா-லவ் பேர்ட்ஸ்)

அன்புடன் அருணா said...

அட!பறவை ஜோஸ்யம் நல்லாருக்கே!

பிரியமுடன்...வசந்த் said...

பதிவு சுவாரஸ்யம் ஜெஸ்ஸம்மா..

பறவையெல்லாம் கண் கொள்ளா அழகு

எல்லா பறவையும் சேர்ந்து ஒரே இடத்தில் பார்த்தால் எப்படியிருக்கும்?

:))))))))

சி. கருணாகரசு said...

அந்த பறவை படங்க மிக அழகோ அழகுங்க.... ஆனா அந்த நம்பிக்கைதான் மிக கோமாளித்தனமா இருக்குங்க.... பகிர்ந்து கொண்ட தகவலுக்கு நன்றிங்க.

☀நான் ஆதவன்☀ said...

விசயம் எல்லாம் புதுசு :))

R.Gopi said...

//எங்க ஊரில் வெளியில் வந்தால் காக்கா தானே தெரியும். பரவாயில்லையே ! ஒரு மரக்கொத்தியைப் பார்த்து கல்யாணமே கிடையாதோ என்று கவலைப் படுவதை விட , ஒரு காக்கா பார்த்து சமூக சேவை செய்திட்டுப் போகலாம் . நீங்க என்ன சொல்றீங்க? இதில உள்ள பறவைகளைப் பற்றி மட்டும் தான் எனக்குத் தெரியும். இங்கே வந்து மயில் கண்டால் எப்பிடி கணவர் வருவார் என்று மடக்கிக் கேள்வி கேட்கக் கூடாது.//

ஹா..ஹா..ஹா... சரி சரி சொல்லிட்டீங்க...

பறவைகள் எல்லாம் சூப்பர் அழகு...

நான் இதுல “ப்ளூ பேர்ட்” வகை...

மாதேவி said...

கிளி ஜோசியம் போல் பறவையா..:))
படங்கள் நன்று.

கலா said...

அன்பானவராகவும்
இனியவராகவும் வாழ்க்கை முழுக்க
இருப்பாராம். அதனால் பெண்கள்
இந்தப் பறவையைக்


\\\காண்பது
அதிஸ்டம் என்று கருதினார்களாம்.\\\\\\\\\

ஜெஸி...இந்தப் பறவையைக் காண்பது அரிது..

அதுபோல்,,,,...இந்த ஆணைக் காண்பதும்
அரிது என்பதற்காக..!! அப்படிச் சொல்லியிருக்கலாம்
அல்லவா?
ஆதலால்....இப்படியானவர்கள்....எங்கே .!!!!?????

வசந்த் சண்டைக்கெல்லாம் வரப்படாது
ஏன் என்றால் அந்தப் பறவையைப் பார்த்தால்..
கிடைக்கக் கூடியவர்களில் நம்ம வசந்தும்
ஒரு ஆள்.

கலா said...

உலகத்தில் பறவைகள்,மிருகங்களால்...
நல்லவை,கெட்டவைகள் நடப்பது
பற்றிச் சொல்வது இன்று நேற்றல்ல
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே...
நடந்து வருகிறது
இது அவரவர்களின் நம்பிக்கை.

அழகான பறவைகளையும் அதன்
விளக்கத்துக்கும் நன்றி .

உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தாருக்கும்
எனது அன்பர் தின வாழ்த்துகள் ஜெஸி.

SUFFIX said...

புதிய தகவல். பறவைகள் பலவிதம் மாதிரி, காதலர்களும் பலவிதம். என்னவோ போங்க, மக்கள் சந்தோசமா இருந்தா சரி அந்தப் பறவைகள் போல்.

குடந்தை அன்புமணி said...

உங்கள் தொகுப்பு நன்றாக இருக்கிறது. என்றாலும் இது எந்தளவுக்கு உண்மையோ... அனுபவஸ்தர்கள் சொன்னால் சரி...

தமிழ்பாலா said...

விஞ்ஞான யுகத்தில் மூட நம்பிக்கை வளர்க்கும் கருத்துக்களை உதிர்த்த உங்களுக்கு எனது எதிர் கருத்துக்களை அளிக்கின்றேன்

எட்வின் said...

இந்த பதிவு யூத்ஃபுல் விகடனின் காதல் பக்கத்தில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.
http://youthful.vikatan.com/youth/Nyouth/feb14/index.asp

ஹேமா said...

அதிசயமான செய்திகள் ஜெஸி.இதுவரை இப்படியொன்று கேள்விப்படதில்லை.

ரிஷபன் said...

பார்த்த உடன் உள்ளம் சிறகடிப்பதால் பறவைகளைத் தேடிப் போகிறார்களா?! நல்லா இருக்கு

ஜெஸ்வந்தி said...

கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எனது கணினி வைரஸால் தாக்கப் பட்டதால் தனித் தனியாக பதிலிட முடியவில்லை. மன்னிக்கவும்.