நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 30 December 2010

வியக்க வைக்கும் வீதிகள் 2Skippers Road

இந்த வீதி நியுசிலாந்தில் உள்ளது .மிகவும் அகலம் குறைந்த இந்த வீதி மலைப்பாறையில் பல திடீர் வளைவுகளுடன் செல்கிறது. இந்தப் பாதையில் இரண்டுவாகனங்கள் ஒன்றையொன்று கடப்பது மிகவும் கடினம். பாதையோர பள்ளத்தாக்குகள் மிகவும் அபாயகரமானவை. ஓட்டுனர் சிறிது கவனம் குறைந்தாலும்உயிர் தப்ப முடியாது. கிட்டத்தட்ட இந்தப் பாதையை அமைக்க 22 வருடங்கள்எடுத்தது. அத்துடன் இந்தப் பாதை சீனாவை சார்ந்த வேலையாட்களால் கட்டிமுடிக்கப் பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.


Winter Road


உலகில் பல இடங்களில் , நதிகளின் மேல் உறைந்த பனிப் படலத்தின் மேல் பாதைகள் அமைப்பது ( Ice Roads) வழிமுறையில் இருந்தாலும் கனடாவிலிருக்கும் இந்த வீதி மிகப் பிரபலமானது.இதுவே உலகில் மிக நீண்ட ஐஸ் விதியாகும். இந்த வீதி கனடாவின் வடக்குப்பகுதியை கிழக்குப் பகுதியுடன் இணைக்கின்றது.பனிக் காலத்தில்இப்பகுதியிலுள்ள ஏரிகளும் ,நதிகளும் பனிக் கட்டியாகி ஒரு படலமாக உறைந்துவிடுவதால் , வருடத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தை உண்டுபண்ண , கிட்டத்தட்ட பூச்சியத்திலிருந்து 30 தொடக்கம் 70 டிகிரி பரனைற் கீழுள்ள கடுங் குளிரில் மனிதர்களால் இந்தப் பாதை அமைக்கப் படுகின்றது . இந்தப் பாதைமுக்கியமாக வடக்கில் எடுக்கப் படும் விலை மதிப்புள்ள உலோகங்களையும் ,ரத்தினங்களையும் கிழக்குக்குக் கொண்டு வரவே முதலில் அமைக்கப் பட்டது.ஆனால் இப்போது பனிக் காலத்தில் அமைக்கப் படும் இந்தப் பாதையில் வடக்குப்பகுதிக்கு உணவுகளும் ,மற்றும் அத்தியாவசிய பொருட்களும் குறைந்த செலவில்எடுத்துச் செல்லப் படுகின்றன. மற்றைய பத்து மாதங்களிலும் இப்பகுதிக்குபோக்கு வரத்து விமானப் பாதை மட்டுமே.


ஜனவரி மாதம் 2000 ஆண்டு டீஸல் கொண்டு சென்ற ஒரு பாரிய வண்டியொன்றுமச்கேன்சி நதியில் மூழ்கியது .அதிஸ்டவசமாக வாகன ஓட்டுனர் காப்பாற்றப்பட்டார். இது வரை சுமார் 20 க்கு உட்பட்ட விபத்துக்கள் இந்த வீதியில் நடைபெற்றாலும் எந்த உயிரிழப்பும் இந்தப் பாதையில் நடை பெறாதது இதன்மகிமையாகும்.Sichuan Tibet High way

ஆதாரம்

சீனாவிலுள்ள இந்த வீதி செங்க்டு ( Chengdu) என்ற இடத்திலிருந்து Tibet (திபெத் )வரை நீள்கிறது. இந்த வீதியில் நடைபெறும் மண் சரிவுகளும் , மலைகளிலிருந்து உருண்டு விழும் கற்களும், வெள்ளப் பெருக்கெடுப்புகளும் சீனாவில் வாகன விபத்துகளின் பெரும் பங்கை வகிக்கின்றது. 2412 கிலோ மீட்டர் நீளமான இந்த வீதி சுமார் 4000-5000 மீட்டர் உயரமான 14 மலைகளையும், பல நதிகளையும், அபாயகரமான காடுகளையும் கடந்து செல்கின்றது. இதில் பயணிப்பவர்கள் மிக அற்புதமான காட்சிகளை ரசிக்கக் கூடியதாயிருக்கும். மொத்த வீதியையும் கடந்து செல்ல சுமார் 15 நாட்கள் செல்லும். பயணிகள் இந்த 15 நாட்களில் பலவிதமான காலநிலையுள்ள பிரதேசங்களைக் கடந்து செல்வார்கள். அவர்கள் கண் முன்னாலே வெப்பநிலை குறைந்து ,இலையுதிர் காலம் வந்து , பனி கொட்டும் கடும் குளிர் பிரதேசமாகிப் போவதைப் பார்ப்பது மிகவும் ஒரு அற்புதமான அனுபவமாக விருக்கும்.Monday, 13 December 2010

வியக்க வைக்கும் வீதிகள் 1


வீதிகள் பலவிதம். ஆனாலும் எங்களை வியக்க வைக்கக் கூடிய , உலகிலே மிக நீண்ட சாலைகளிலும் , மிகச் சிக்கலான சந்திகளிலும், மிகவும் அகலங் குறைந்த சந்துக்களிலும், மிக அபாயகரமான வீதிகள் எனப் பெயர் பெற்ற இடங்களிலும், உயிருக்கு உத்தரவாத மில்லாத ,உடம்பில் அதிரீனலின் பாய வைக்கும் வகையில் அமைக்கப் பட்ட சில உலகப் பிரசித்தமான வீதிகளிலும் பயணம் செய்யும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைத்திருக்காது என்று நம்புகிறேன். அத்தகைய சில விதிகளைப் பற்றி இந்தத் தொடரில் உங்களுடன் பகிர வந்துள்ளேன்.
பான் அமெரிக்கன் ஹை வே
Pan American High Way

இதுவே உலகின் மிக நீண்ட சாலையாகும். வட அமெரிக்காவின் உச்சியிலிருந்து தென்னமெரிக்கா அடிவரை பல தேசங்களை ஊடுருவு
ம் நீளும் இந்தப் பாதை சுமார்
29, 800 மைல்கள் நீண்டது.
இந்த நெடுஞ் சாலை பல காடுகளையும், நதிகளையும், பாலை வனங்களையும் கடந்து கிட்டத் தட்ட 15,000 அடிவரை உயரத்துக்குச் செல்கிறது. இவற்றின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உல்லாசப் பயணிகள் பயணிக்கிறார்கள். பல பகுதிகள் நதிப் பெருக்கெடுப்பாலும், மண் சரிவுகளாலும் பாதிக்கப் படக் கூடிய அபாயகரமான பாதையாக விருப்பதால் கால நிலைமையைப் பொறுத்தே இந்த வீதியின் பல பகுதிகளிலும் பயணம் செ
ய்ய முடியும்.பாராளுமன்ற வீதி
Parliament Street
உலகிலே மிகக் குறைந்த அகலமுள்ள வீதியென கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துக் கொண்ட இந்த வீதி இங்கிலாந்திலுள்ள எசெட்டர்( Exeter) என்ற நகரில் உள்ளது. இதன் அகலம் 25 அங்குலம் நீளம் 50 மீட்டர் .இந்த வீதி 1300 ஆம் ஆண்டிலிருந்து இருப்பதாகத் தெரிகிறது.

சாவுப் பாதை
Death Road (North Yangas Road)
முன்னர் வட யன்கஸ் ரோடு எனப் பெயர் கொண்ட இந்த வீதி உலகத்தில் மிக அபாயகரமான சாவுப் பாதை எனப் பெயர் பெற்று ''Death Road'' என அ
ழைக்கப் படுகிறது.பல அகோர விபத்துக்களைக் கண்ட வீதியிது. இது பொலிவிய ( Bolivia)என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளைக் கொண்டு அமைக்கப் பட்டது. அந்தக் கைதிகளில் பெரும் பாலார் இந்த வீதி அமைக்கும் போது விபத்தினால் இறந்தார்கள். தொடர்ந்து
அதில் பயணிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 70 கிலோ மீட்டர் நீண்ட இந்த வீதி 3600 மீட்டர் உயரம் வரை வளைந்து நெளிந்து ( ஹேர் பின் வளைவுகள்) செல்கிறது.
கரணம் தப்பினால் மரணம் என்று இதைத் தான் சொல்லுவார்களோ !

If you want to see more pictures please check this link.
Guoliang Tunnel Road
குஒலியங் குகை வீதி

இந்த வீதி சீனாவில் உள்ளது . இது அபாயகரமான வீதியானாலும் சாவுப் பாதை போலதல்ல. மலையைத் தோண்டி அதனுள் குகை போல பாதை அமைத்து வெளிச்சத்துக்காக வெவ்வேறு வடிவிலும் அளவிலும் முப்பது ஜன்னல்கள் அமைக்கப் பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விடயமென்னவென்றால், 13 கிராம வாசிகள் சேர்ந்து இந்த வீதியை 5 வருடத்தில் கட்டி முடித்திருக்கிறார்கள்.Spooky Guoliang Tunnel.


Tuesday, 23 November 2010

கணினியும் நாமும்!
இன்றைய நவீன லகில் கணினியின் பாவனை எவரும் எதிர் பாராத வகையில் முன்னேறி விட்டது. கணினி உபயோகிக்காதவனை கை நாட்டுக் காரன் போல் பார்க்கத் தொடங்கி விட்டது எங்கள் சமூகம் . நாங்கள் ஆபிசில் வேலை செய்பவர்களானால் தினமும் எட்டு மணி நேரம் சுமார் 270 நாட்கள் கணினி முன்னால் இருக்கிறோம். ஆனாலும் வீடு வந்த பின்னரும் அந்த உறவு போதாதென்று , கேம்ஸ் ,மெயில், ப்ளோக் என்று பல நோக்கங்களின் நிமித்தம் மேலும் சில மணி நேரம் கணினியுடன் இருக்கிறோம். ஒரு நாள் கணினி பழுதடைந்து விட்டால் வாழ்க்கையே போய் விட்டது போல் பதறிப் போகும் நிலைமையில் பலர் இருக்கிறோம். ( அனுபவம் பேசுதுங்கோ!)
Double vision

இப்படியான அதீத கணினிப் பிரயோகம் கண்களைப் பாதிப்பதை கண் வைத்தியர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். அமெரிக்காவில் செய்த ஒரு ஆய்வில் கணினியில் வேலை
செய்வோரில் 70% ஆனோர் கம்ப்யூட்டர் விஷன் சிண்றோம் ( Computer Vision Syndrome) எனும் ஒரு கண் பார்வைச் சோர்வு நோயால் பாதிக்கப் படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.


இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் பெரிதளவில் பாதிக்கிறது. தொடர்ந்து கணினித் திரையை பார்க்கும் போது பிள்ளைகளின் கண்கள் சாதாரண பார்வை வளர்ச்சியை
ப் பெறுவது தடைப் படுகிறது. இவர்கள் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் கணினியில் இருந்தால் அவர்கள் பார்வை பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று கண்டுள்ளார்கள்.

இப்படி கண் சோர்வினால் பாதிப்படைந்தவர்கள் , தலையிடியினாலும், கண் அரிப்பு, கண்ணிலிருந்து நீர் வடிதல், வரண்ட கண்கள், கண் சோர்வு, இரட்டைப் பார்வை, மங்கலான பார்வை, தோள்
ட்டை நோவு என்று பல அறிகுறிகளினால் அவஸ்தைப் படுகிறார்கள்.
மேலுள்ள அறிகுறிகளைக் கொண்ட , பல மணி நேரம் வேலை செய்வதினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் கண் சோதனை செய்தபின்னர் இதற்காக விசேடமாக தயாரிக்கப் படும் கண்ணாடிகளை அணிய வேண்டியிருக்கும்.
இன்றைய சமுதாயத்தை எதிர் கொள்ளும் ஒரு பாரிய மருத்துவப் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகும்.
இந்தியாவிலும் இதற்கு இப்போ சிகிச்சை உண்டு. எனக்குக் கிடைத்த ஒரு லிங்கை இங்கே இணைத்துள்ளேன்.

இப்படி கண்கள் பாதிக்கப் படாமல் தடுக்கச் செய்யக் கூடிய வழிகளைப் பார்ப்போம்.

* சரியான அளவில் ஒளியுள்ள இடத்தில் கணினி பாவிக்க வேண்டும். பிரகாசமான சூரிய ஒளியும் , இயற்கை ஒளியும் கண்களைச் சோர்வடைய வைக்கும்

* அடிக்கடி கணினியிடம் இருந்து எழுந்து இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் வேலை செய்யும் போதும் அடிக்கடி கண்களால் வெளியே பசுமையான காட்சிகளைப் பார்த்து கண்களைக் குளிர்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

* கண் யோகாசனம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒரு முறை மிகத் தூரத்திலுள்ள ஒரு பொருளை 5 -10 sec கூர்ந்தது பார்க்க வேண்டும் ( focus )

* கணினியில் வேலை செய்யும் போது நாம் இயற்கையாக கண் மூடித் திறப்பது ( blink ) தானாகக் குறைந்து விடுகிறது. கண் blink பண்ணும் போது கண்கள் வறண்டு போகாமலும் , கண் அரிப்பு வராமலும் இருக்கிறது. வலிந்து நாமாக blink பண்ணும் வழக்கத்தை உண்டாக்க வேண்டும். ( உங்களுக்கு வேறு ஏதாவது ஐடியா தோன்றினாலும் அதுவும் நன்மைக்கே )

(Blink every time you hit ' enter' key or click the mouse)* மேலேயுள்ள படத்தில் காட்டியபடி உங்கள் இருக்கையின் உயரத்தையும் கணினித் திரைக்கும் கண்களுக்கும் இடையில் உள்ள தூரத்தையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கைப் பாருங்கள்.