நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 22 April 2010

விருதுகள் பலவிதம்

பதிவுலகில் நட்பை வளர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த விருதுகள் எமது வலைப் பூக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இரண்டு வாரங்களாக வலைப் பக்கமே வரமுடியாமல் போய் விட்டதால் சற்றுத் தாமதமாக வந்திருக்கிறேன். அந்த இடை வெளியினால், இன்று நான் சென்ற வலையங்களில் எல்லாம் இந்த விருது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வலையங்களில் இந்த விருது இல்லாததால் அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஒரு ஊகத்தில் நண்பர் ஜெய்லானி அன்புடன் அளித்த இந்த விருதை நான் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.

1.அம்பிகா -- http://ambicajothi.blogspot.com

2.ஆ. ஞானசேகரன் -- http ://ammaappa.blogspot.com

3. R.Gopi.---http://jokkiri.blogspot.com

4. தேவன் மாயம் ---http://abidheva.blogspot.com.


நண்பர் ஜெய்லானிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


.

Wednesday, 14 April 2010

PIT போட்டிக்காக ''தண்ணீர்''

இந்த மாதம் PIT போட்டிக்கான தலைப்பு '' தண்ணீர்'' என்றறிந்ததும் , இரண்டு வருடங்களுக்கு முன்னர் நயாகரா நீர் வீழ்ச்சியில் நான் எடுத்த சில படங்கள் நினைவு வர அவற்றை தேடித் பிடித்தேன். அமெரிக்க ,கனேடிய எல்லையாக இருக்கும் இந்த நீர் வீழ்ச்சி ஒரு கண் கொள்ளாக் காட்சியாகும். இந்தப் படங்களை என் வலையத்தில் பிரசுரிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இதை விட சரியான தருணம் கிடையாது என்று தோன்றியதால் இங்கே உங்கள் பார்வைக்கு.கடைசிப் படத்தைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.


.

Thursday, 8 April 2010

இது தான் முதலைக் கண்ணீரா?

''முதலைக் கண்ணீர் வடிப்பது '' என்பது இப்போ சர்வ சாதாரணமாக வழக்கத்திலுள்ள ஒரு பதமாக விட்டது. பொய்யாக ஒருவர்மேல் அனுதாபம் காட்டும் போதோ, இரங்கும் போதோ, நீலிக் கண்ணீர் வடிக்கும் போதோ ,அதனை 'முதலைக் கண்ணீர்' என்கிறோம். ஏன் அதனை முதலைக் கண்ணீர் என்று சொல்கிறோம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? அல்லது உண்மையாகவே முதலை கண்ணீர் வடிக்குமா? அப்படி வடித்தாலும் நீரினுள் அது வடிக்கும் கண்ணீர் யார் கண்ணில் படும்? என்று சிறு வயதில் நீங்கள் யாரையாவது கேள்வி கேட்டதுண்டா? அல்லது நீங்கள் யாருக்கும் முதலைக் கண்ணீர் என்று சொல்லப் போக '' அது ஏன் முதலைக் கண்ணீர்'' என்று யாராவது உங்களை மடக்கியதுண்டா? இல்லையா? அப்போ நீங்கள் தப்பி விட்டீர்கள் என்று சொல்லுங்கள். ஆனால் நான் என் பெண்களிடம் நன்றாக மாட்டிக் கொண்டேன். ஆனாலும் ''இப்போ நேரமில்லை. நாளைக்குச் சொல்கிறேன் ''என்று ஒருபடியாகச் சமாளித்து விட்டேன். எப்படியும் பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியான நிலைமையில் '' Can crocodiles cry?'' என்று 'Google' இல் தட்டச்சிட்டு பல சுவாரசியமான விடயங்களை அறிந்து கொண்டேன். அடுத்த நாள் அவர்கள் மறந்தே போய் விட்ட அந்தக் கேள்வியை திரும்ப நினைவு படுத்தி பெரிய மேதாவி போல விளக்கமும் தந்து விட்டேன். நான் சேகரித்த அந்த சுவாரசியமான விடயங்களை இப்போ உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்.பக்கத்திலிருக்கும் படத்தில் ஒரு அலிகெடோர் முதலையைக் காண்கிறீர்கள். அதன் கண்ணில் இருந்து வரும் கண்ணீர் தெரிகிறதா? இந்தக் கண்ணீர் மனிதரைப் போலவே கண்ணீர் சுரப்பியினால் சுரக்கப் படுகின்றன. இந்த உப்புக் கரிக்கும் திரவம் அதன் கண்களைத் துப்பரவு செய்யவும், முதலை நீரை விட்டு வெளியே இருக்கும் போது வரண்டு போகும் கண்களை ஈரமாக வைத்திருக்கவும் உதவுகின்றது. அதனால் முதலை நீரை விட்டு வெளியில் இருக்கும் போது இதன் கண்களில் நீர் வடிவதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளார்கள்.

முதலையின் கண்களில் இருந்து நீர் வடிந்தாலும் அவை உணர்ச்சி வசப் பட்டு அழுவதில்லை. ''முதலைக் கண்ணீர்'' என்ற பதம் பேச்சு வழக்கில் எப்போ சேர்ந்தது என்பது எவருக்கும் சரியாகத் தெரியவில்லை. 13 ஆம் நுற்றாண்டில் ' முதலைக் கண்ணீர்' என்ற பதம் பாவனையில் இருந்ததற்கு ஒரு புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறது. பின்னர் 14 ஆம் நுற்றாண்டில் ' Mandeville's Travels' என்ற புத்தகத்தில் முதன் முதலாக தற்போதைய கருத்தை வலியுறுத்தும் வகையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.அதற்குப் பின்னர் வந்த ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளில் நீலித்தனமான அழுகைக்கு ' முதலைக் கண்ணீர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கலிபோனியாவில் செய்த ஒரு ஆய்வின்படி முதலைகள் இரையைக் கவ்வ வாயைத் திறக்கும் போது இதன் கண்ணீர் வெளிவருவதை அவதானித்துள்ளார்கள். கிழேயுள்ள படம் அதனைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. இதற்கான காரணம் இன்னும் சரியாக விளக்கப் படவில்லை.'' முதலைக் கண்ணீர் '' என்ற பதம் எப்போ எவரால் வழக்கத்துக்கு வந்தது என்று சரியாகத் தெரியாவிட்டாலும், '' மிகவும் கொடூரமாக உங்களைக் கொல்லக் கூடிய ஜந்துவான முதலை ,உங்களை இரையாக்கும் போது கூட கண்ணீர் வடிக்கக் கூடியது'' என்பதை இந்தப் பதம் வலியுறுத்துவதால் தான் இது காலால காலமும் நிலைத்து இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.

ஆதாரம்
http://www.flmnh.ufl.edu/cnhc/cbd-faq-q6.htm


.