நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday, 14 September 2009

காதல், கடவுள், அழகு, பணம்

இது ஒரு தொடர் பதிவு. குழந்தைநிலா ஹேமா ஆரம்பித்து வைத்த இந்தப் பதிவு இப்போ சூடு பிடித்திருக்கிறது. வீட்டுப்புறா சக்தி என்னை இதற்குள் மாட்டி விட்டு பல நாட்கள் ஆகிறது. இங்கே காதல், கடவுள், அழகு, பணம் என்ற பதங்களுக்கு உங்கள் அபிப்பிராயம் என்னவென்று சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த வலையில் இன்னும் மாட்டாத ஒரு சிலரை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும். மிக எளிமையான விளையாட்டு. தொடர்வோமா?


காதல்

காதலைப் பற்றிப் பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காதல் சக்தியுள்ளது. சாதி சமயங்களை உடைக்கும் வலிமை உள்ளது. ஏற்றத் தாழ்வு தெரியாதது. இதயத்தின் ஒலி அது. உண்மை காதல் சாவில்லாதது.

காதலில் வெற்றி பெறுவது என்பது எவெரெஸ்ற் மலை உச்சியை அடைவதைப் போலத்தான். ஒரு சிலர் தான் ஏறி முடிக்கிறார்கள். பலர் பாதியிலேயே களைத்து விடுகிறார்கள். உச்சிக்கு ஏறியவர்களுக்குத் தான் அங்கிருந்து பார்க்கும் அற்புதக் காட்சி தெரிகிறது. காதல் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சிலர் அதைக் கொச்சைப் படுத்தி விடுகிறார்கள்.


பணம்

''Money money money
It's always sunny
In rich mans world''


காதல் இல்லாமல் வாழ்ந்து விடலாம். இந்தப் பணம் இல்லாமல் வாழவே முடியாது.அதுதானே ' பணம் இல்லாதவன் பிணம் ' என்றும் ' திரை கடலோடியும் திரவியம் தேடு 'என்றும் நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
பணம் மிக அவசியம். ஆனால் அதுதான் வாழ்க்கையல்ல . பணத்தால் வாங்க முடியாத பல சுகங்கள் இருக்கின்றன.
பணம் ஒரு நல்லவனிடமிருந்தால் அதனால் பல நன்மைகள் செய்ய முடியும். அதே பணம் ஒரு கெட்டவனைப் பல பாதகம் செய்ய வைக்கும். சுருக்கமாகச் சொன்னால் அதற்கு சக்தி உண்டு.

கடவுள்


கடவுள் தான் அன்பு. அன்புதான் கடவுள். பெற்றவர் கூட எங்கள் அன்பை எதி பார்த்துத் தான் எங்களை அன்பு செய்கிறார்கள். நீங்கள் ' நாசமாப் போன கடவுள்' என்று அவரை நிந்தித்த போதும் அவர் உங்களை அன்பு செய்கிறார். நீங்கள் பிறரை அன்பு செய்யும் போது அங்கே கடவுள் இருக்கிறார்.
ஏனோ சிலர் சோதனைகள் தாக்கும் போது கடவுளை நம்பாமல் அவரைத் தூற்றத் தொடங்குகிறார்கள். கடவுளால் ஆகாது மனிதனால் எப்படி ஆகும்? சிந்திக்க மறுக்கிறார்கள். கவலைக்குரிய விடயம் இது.அழகு.

அழகு முகத்திலல்ல. இதயத்தில் இருக்கிறது. அதற்கு இலக்கணம் கிடையாது.
என்னைப் பொறுத்தவரை எவரும் அழகுடன் பிறப்பதில்லை. அதை இவ்வுலகில் சேகரித்துக் கொள்கிறார்கள். நான் அழகென நினைப்பது வாழ்க்கையில் அடிபட்டு, பலதையும் இழந்து , வரும் தடைகளை வென்று முன்னேறுபவர்கள் தான். அவர்களுக்குத் தான் உணர்வுகளை மதிக்கத் தெரியும். வாழ்க்கையின் அர்த்தம் புரியும். மற்றவர்களை அன்பு செய்யத் தெரியும். அவர்கள் மிக அழகானவர்கள்.


என் வேலை முடிந்து விட்டது இந்த வலையில் மாட்டியவர்கள்

1. பா. ராஜாராம்
2. ரங்கன்
3. கவிநயா
4. சிநேகிதி.

34 comments:

ஹேமா said...

//கடவுள் தான் அன்பு. அன்புதான் கடவுள். பெற்றவர் கூட எங்கள் அன்பை எதி பார்த்துத் தான் எங்களை அன்பு செய்கிறார்கள். நீங்கள் ' நாசமாப் போன கடவுள்' என்று அவரை நிந்தித்த போதும் அவர் உங்களை அன்பு செய்கிறார். நீங்கள் பிறரை அன்பு செய்யும் போது அங்கே கடவுள் இருக்கிறார்.
ஏனோ சிலர் சோதனைகள் தாக்கும் போது கடவுளை நம்பாமல் அவரைத் தூற்றத் தொடங்குகிறார்கள். கடவுளால் ஆகாது மனிதனால் எப்படி ஆகும்? சிந்திக்க மறுக்கிறார்கள். கவலைக்குரிய விடயம் இது.//

ஜெஸி பதிவு உங்கள் மனம்.அமைதியான உங்கள் அழகு விளங்குகிறது.

ஜெஸி நான் கடவுளோடு பேசியிருக்கிறேன்.வாங்க உப்புமடச்சந்திக்கு.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஆனால் நல்லா எழுதி இருக்கீங்க ஜெஸ்வந்தி

ஜீவன் said...

///காதல் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சிலர் அதைக் கொச்சைப் படுத்தி விடுகிறார்கள்.///

//பணத்தால் வாங்க முடியாத பல சுகங்கள் இருக்கின்றன.///


//பெற்றவர் கூட எங்கள் அன்பை எதி பார்த்துத் தான் எங்களை அன்பு செய்கிறார்கள். //

//என்னைப் பொறுத்தவரை எவரும் அழகுடன் பிறப்பதில்லை. அதை இவ்வுலகில் சேகரித்துக் கொள்கிறார்கள்.///

எல்லாம் சிறந்த தத்துவங்களாக ஜொலிக்கின்றன..!!!

ராமலக்ஷ்மி said...

கவித்துவமான தத்துவங்களாய் சொல்லிவிட்டீர்கள் ஜெஸ்வந்தி! வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

மிக உணர்ச்சிபூர்வமாக வாழ்வை அணுகும் கவிதை மனத்தின் மௌனங்களில் இருந்து வரும் ராகங்கள் உங்கள் சொற்கள் என்பதை மீண்டும் சொல்லி இருக்கும் பதிவு இது

நட்புடன் ஜமால் said...

அழகான காதல்

அழகானது காதல்

காதல் அழகானது

காதல் அழகு.

------------

அழகு - காதலும் - மிக அழகு.

ஜெஸ்வந்தி said...

ஹேமா
========
கருத்துக்கு நன்றி தோழி. உப்பு மடச் சந்திக்கு வந்து கடவுளோடு நீங்க போட்ட சண்டையைப் பார்த்து விட்டுத் தான் வருகிறேன்.

ஜெஸ்வந்தி said...

S.A. நவாஸுதீன்
================
நான் எதை எழுதினாலும் , உணர்ச்சி வசப் பட்டு எழுதுகிறேன் என்றுதான் நண்பர்கள் சொல்கிறார்கள். நான் எனக்குப் பட்டத்தை எழுதினேன். உங்கள் கருத்துக்கு நன்றி நவாஸுதீன் .

ஜெஸ்வந்தி said...

ஜீவன்
=======
நிறையத் தத்துவங்கள் சொல்கிறார்கள் என்றால் வயது போகிறது என்று சொல்வார்கள் .
ஒருவேளை அது தான் காரணமாக இருக்கலாம். ஹா ஹா ஹா

ஜெஸ்வந்தி said...

ராமலக்ஷ்மி
===========
வாங்க தோழி. நீண்ட இடை வெளிக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி..

பிரியமுடன்...வசந்த் said...

//அழகு முகத்திலல்ல. இதயத்தில் இருக்கிறது. அதற்கு இலக்கணம் கிடையாது.
என்னைப் பொறுத்தவரை எவரும் அழகுடன் பிறப்பதில்லை. அதை இவ்வுலகில் சேகரித்துக் கொள்கிறார்கள். நான் அழகென நினைப்பது வாழ்க்கையில் அடிபட்டு, பலதையும் இழந்து , வரும் தடைகளை வென்று முன்னேறுபவர்கள் தான். அவர்களுக்குத் தான் உணர்வுகளை மதிக்கத் தெரியும். வாழ்க்கையின் அர்த்தம் புரியும். மற்றவர்களை அன்பு செய்யத் தெரியும். அவர்கள் மிக அழகானவர்கள்.//

மிகவும் சரியாக கூறினீர்கள் சகோதரி.....

R.Gopi said...

நல்ல விளக்கம் ஜெஸ்...

என்னை கூட அன்புடன் அருணா இந்த தொடரை எழுத அழைத்தார்கள்... நானும் எழுதி விட்டேன்...

உங்க அளவுக்கு இவ்வளவு விரிவா எழுத எனக்கு தெரியல... ஏதோ எழுதி இருக்கேன்... வந்து பாருங்களேன்...

http://jokkiri.blogspot.com/2009/09/blog-post_15.html

அ.மு.செய்யது said...

//காதலைப் பற்றிப் பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காதல் சக்தியுள்ளது. சாதி சமயங்களை உடைக்கும் வலிமை உள்ளது. ஏற்றத் தாழ்வு தெரியாதது. இதயத்தின் ஒலி அது. உண்மை காதல் சாவில்லாதது.//

கொஞ்சம் கஷ்டந்தான்.நீங்க சொல்றதெல்லாம் இப்ப இந்தியாவுல அவுட் ஆஃப் டேட் ஆயிடுச்சிங்க..!!!

ஏற்று கொள்ள வேண்டிய நிதர்சனம்.

ஜெஸ்வந்தி said...

நேசமித்ரன்
===========
வாங்க நேசன். சரியாகத்தான் வலையத்துக்குப் பெயர் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறீர்கள்.நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி said...

நட்புடன் ஜமால்
==============
என்ன நண்பரே! நான் போட்டுக் குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன்.

ஜெஸ்வந்தி said...

பிரியமுடன்...வசந்த்
===================
வசந்த் பிரியமுடன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நம்புகிறேன்.

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

ஜெஸ்வந்தி said...

R.Gopi
=====
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி கோபி. உங்கள் பதிவு படித்து விட்டுத்தான் வருகிறேன். அழகாக சில வரிகளில் 'நச்' என்று சொல்லி இருக்கிறீர்கள்.

வெ.இராதாகிருஷ்ணன் said...

காதல், பணம், கடவுள், அழகு பற்றிய கண்ணோட்டம் வெகு சிறப்பு.

கடவுளின் மேல் மட்டுமே பற்று கொண்டவர்களுக்கு இந்த காதல், பணம், அழகு எல்லாம் அவசியமற்றது.

மிக்க நன்றி.

மீண்டும் ஒரு தொடர்பதிவுக்குத் தங்களை அழைக்கிறேன். நான் தங்களை ஏமாற்றியது போல் என்னை ஏமாற்றிவிடாதீர்கள்.

ஜெஸ்வந்தி said...

/அ.மு.செய்யது said...
/காதலைப் பற்றிப் பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காதல் சக்தியுள்ளது. சாதி சமயங்களை உடைக்கும் வலிமை உள்ளது. ஏற்றத் தாழ்வு தெரியாதது. இதயத்தின் ஒலி அது. உண்மை காதல் சாவில்லாதது./
கொஞ்சம் கஷ்டந்தான்.நீங்க சொல்றதெல்லாம் இப்ப இந்தியாவுல அவுட் ஆஃப் டேட் ஆயிடுச்சிங்க..!!! ஏற்று கொள்ள வேண்டிய நிதர்சனம்.//

இந்தியாவில் மட்டுமல்ல, எங்கும் அப்பிடித்தான் தெரிகிறது. அது தான் everest மலையில் ஏறி முடிப்பவர்கள் ஒரு சிலர் தான் என்று சொன்னேன். மற்றவர்கள் ஏதோ உணர்வுகளைக் காதல் என்று தப்பாக எடை போட்டு விடுகிறார்கள்.

ஜெஸ்வந்தி said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
மீண்டும் ஒரு தொடர்பதிவுக்குத் தங்களை அழைக்கிறேன். நான் தங்களை ஏமாற்றியது போல் என்னை ஏமாற்றிவிடாதீர்கள்.//

என்னை தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு நன்றி நண்பரே. எனக்கு அப்படிப் பதிலடி கொடுக்கும் பழக்கம் கிடையாது. ஒரே நாட்டில் இருக்கிறோம். நட்பைப் பேணுவோம்.

சந்ரு said...

விளக்கங்கள் மிகமிக அருமை

சந்ரு said...

உங்கள் வலைப்பதிவு புலம்பெயர்ந்த இலங்கை வலைப்பதிவர்களைத் திரட்டும் சொந்தங்கள் வலைப்பதிவிலே இணைக்கப்பட்டுள்ளது.


www.sonthankal.blogspot.com

ஜெஸ்வந்தி said...

//சந்ரு said...
விளக்கங்கள் மிகமிக அருமை//

நன்றி சந்ரு. உங்கள் கருத்துக்கும், 'சொந்தங்கள் ' இணையத்தில் என் வலையத்தைச் சேர்த்துக் கொண்டதற்கும்.

பா.ராஜாராம் said...

டீச்சர் வணக்கம்.துணுக்கு துணுக்கா அருமையான விளக்கம்.எல்லாவற்றுடனும் ஒன்றிப்போக முடிகிறது,இவ்வளவு அழகாய் சொல்ல முடியுமான்னு தெரியலை,(ஆமா, நீங்க நல்லவரா,கெட்டவரா?மாட்டி விட்டு பார்க்கிறதில் எவ்வளவு சந்தோசம் உங்களுக்கு!அதுலையும் மொத ஆளாய்!!)அவ்வளவுதான் மக்கா.இன்னும் ரெண்டு நாள்.ரமதான் வேலைகள் ஓடியே போயிரும்.பிறகு தூள் கிளப்பிரலாம்.நம்ம ஜெஸ் நீங்க,நமக்கில்லாமல் எதுக்கு இருக்கு கருவேலநிழல்?நன்றியும் அன்பும் மக்கா.

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...
டீச்சர் வணக்கம்.துணுக்கு துணுக்கா அருமையான விளக்கம்.எல்லாவற்றுடனும் ஒன்றிப்போக முடிகிறது,இவ்வளவு அழகாய் சொல்ல முடியுமான்னு தெரியலை,(ஆமா, நீங்க நல்லவரா,கெட்டவரா?மாட்டி விட்டு பார்க்கிறதில் எவ்வளவு சந்தோசம் உங்களுக்கு!அதுலையும் மொத ஆளாய்!!)அவ்வளவுதான் மக்கா.இன்னும் ரெண்டு நாள்.ரமதான் வேலைகள் ஓடியே போயிரும்.பிறகு தூள் கிளப்பிரலாம்.நம்ம ஜெஸ் நீங்க,நமக்கில்லாமல் எதுக்கு இருக்கு கருவேலநிழல்?நன்றியும் அன்பும் மக்கா.//

வாங்கோ, எங்கே வரவே மாட்டிங்களோ என்று நினைத்தேன். குறும்போடு டீச்செர் என்று கூப்பிட்டுக் கொண்டு வருகிறீர்கள். நான் நல்லவளா? கெட்டவளா? என்று என்னிடமே கேட்கிறீர்களா? நீங்கள் உருப்பட்ட மாதிரித்தான். பெண்ணுங்க சொல்லுறதை அப்பிடியே நம்பி விடுவதா?
ஆறுதலாக பதிவு போடுங்க. குசும்பு இல்லாமல் இருக்கட்டும்.

கவிநயா said...

அன்னிக்கே வர ஆரம்பிச்ச்சு இப்பதான் வந்து சேர்ந்திருக்கேன் உங்க வலைக்கு :) மன்னிச்சுக்கோங்க. தெளிவான சிந்தனையோட அழகா(ன படங்களோடவும்!) எழுதியிருக்கீங்க. அந்த மாதிரி எனக்கு முடியுமான்னு தெரியல. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாள் கழித்து (நவராத்திரி முடிந்த பின்) முயற்சிக்கிறேன். அழைப்புக்கு நன்றி ஜெஸ்வந்தி :)

ஜெஸ்வந்தி said...

வாங்க கவிநயா, தாமதமானாலும் வந்து விட்டீர்கள் என்ற மகிழ்ச்சி. ஆறுதலாக எழுதுங்கள். அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT!!!

ரங்கன் said...

ஜெஸ்..!!
என்னை அழைத்தமைக்கு நன்றிகள் பல..!
என் நேரமின்மையே இன்னும் இந்த பதிவை நான் ஏற்று எழுதாததற்கு காரணம்..

நிராகரித்துவிட்டேனோ என்று கலங்க வேண்டாம்..!!

விரைவில் பதிவேற்றுகிறேன்..நன்றி.

இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாளாய் அமையட்டும் என்ற வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்>>!!

கவிநயா said...

வந்து பாருங்க ஜெஸ் ... :)

http://kavinaya.blogspot.com/2009/10/blog-post.html

+VE Anthony Muthu said...

அக்கா, இந்தப் பதிவில் கடைசியாக நீங்கள் போட்டிருக்கும் படம்..... ஆ... அந்த வரிகள், எத்தனை உயர்வானவை.

நன்றி அக்கா.

ஜெஸ்வந்தி said...

//+VE Anthony Muthu said...

அக்கா, இந்தப் பதிவில் கடைசியாக நீங்கள் போட்டிருக்கும் படம்..... ஆ... அந்த வரிகள், எத்தனை உயர்வானவை.
நன்றி அக்கா.//

எனது பழைய பதிவுகளையும் இப்போ படிக்கிறாய் என்று அறிய மகிழ்ச்சி.
நலம் தானே?

Om Santhosh said...

azhaku mugathil illai thadaikalai ethirthu munnerupavan than unmayana azha . this line touch my heart