நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday, 28 September 2009

உங்களுக்குத் தெரியுமா?

'கின்னஸ் உலகச் சாதனை 2010 ' இந்த மாதம் வெளியிடப்பட்டது. போன வாரம் வாங்கினேன். அவற்றில் என்னைக் கவர்ந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மிகப் பெரிய வைரம்
=================
இதுவரை காலத்தில் கண்டெடுக்கப் பட்ட வைரங்களில் மிகப் பெரியது 3106 காரட் அளவானது. இது தென்னாபிரிக்காவிலுள்ள பிரிமியர் வைரச் சுரங்கத்தில் 1905 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப் பட்டது.

மிக இளமையில் 'டாக்டர்' பட்டம் பெற்றவர்
==================================== ==
ஆஸ்திரியா வைச் (Austria) சேர்ந்த கார்ல் விட்டே (Carl Witte) என்ற 12 வயதே ஆன பையன் philosophy இல் டாக்டர் பட்டம் பெற்று உலக சாதனை செய்திருக்கிறார். இவர் 1814 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 13 ந் திகதி ஜெர்மனியிலுள்ள Glessen என்ற பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

மிக மோசமான நடன மேனியா
==========================
1374 ஆம் ஆண்டு ஆனிமாதம் 24 ந் திகதி , ஒரு வித நரம்புப் பாதிப்பினால் (tarantism) பாதிக்கப் பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் தங்களை அடக்க முடியாத நிலைமையில் , ஜெர்மனியில் ஆடிய ஆட்டம் , உலக வரலாற்றில் சாதனை ஆகிவிட்டது.

மிக உரத்த சத்தம்
===============
இந்தோனேசியாவில் , 1883 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வெடித்த எரிமலையின்
சத்தம் 3, 100 மைல்களுக்கு அப்பால்அவுஸ்திரேலியாவில் உள்ள பேர்த் ( Perth) நகரத்தில் கேட்கப் பட்டதாம்.

மிகப் பெரிய பறவை
=================
உலகில் வாழ்ந்த பறவைகளில் பெரியது ' யானைப் பறவை' என அழைக்கப் பட்ட ஏப்யோர்னிஸ் மக்ஸ்ய்முஸ் ( Aepyornis Maximus ) என்ற இனமாகும். கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்னர் இந்த இனம் முற்றாக அழிக்கப் பட்டு விட்டது. இந்தப் பறக்க முடியாத பறவை மடகஸ்காரில் வாழ்ந்த அறிகுறிகள் இருக்கிறது.
கிட்டத்தட்ட 500 கிலோ கிராம் நிறையுள்ள இந்தப் பறவை 10-11 அடி நீளமானது.

பி.கு : இந்த வருடம் சித்திரை மாதம் இந்தப் பறவையின் முட்டை இங்கிலாந்தில் 500 பௌண்ட்ஸ் க்கு ஏலத்தில் விற்பனையானது..

32 comments:

S.A. நவாஸுதீன் said...

ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஜெஸ்வந்தி

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

தகவல்களுக்கு நன்றி ஜெஸ்

வேந்தன் said...

நல்ல தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

புது தகவல்கள்!

Ammu Madhu said...

ரொம்ப நல்ல தகவல்கள்.


அன்புடன்,

அம்மு.

பிரியமுடன்...வசந்த் said...

தகவல்கள் நன்று...

நேசமித்ரன் said...

ஜெஸ்,

நல்ல தகவல்கள்..!

பகிர்வுக்கு நன்றி!!!

உங்களின் அழைப்பை பார்த்தேன் மிக்க நன்றி உடல்நிலை காரணமாக ஒரு வார காலமாக இணையப் பக்கமே வர முடியவில்லை . தயவு செய்து எனை மன்னியுங்களேன் இந்த ஒரு முறை மட்டும்

:)

R.Gopi said...

ஜெஸ்...

இன்னும் இன்டரஸ்டிங்கா நெறைய தகவல் இருக்குமே...

கொஞ்சம், கொஞ்சமா எடுத்து ஷேர் பண்ணலாமே... பண்ணலாம்தானே??

நன்றி ஜெஸ்....

ராமலக்ஷ்மி said...

அறிந்திராத தகவல்கள். நல்ல பகிர்வு ஜெஸ்வந்தி!

கவிக்கிழவன் said...

நான் என்னத்த சொல்ல

ஜீவன் said...

நல்ல தகவல்கள் ..! நல்ல பதிவு ..! நன்றி ..!

" உழவன் " " Uzhavan " said...

அருமை. இன்னும் நிறைய பகிர்ந்திருக்கலாமே...

ஹேமா said...

ஜெஸி,புதுமையான புதிய தகவல்கள்.நன்றி.

அன்புடன் மலிக்கா said...

ஜெஸி, நல்ல அருமையான தகவல்கள்
பாராட்டுக்கள்.

thenammailakshmanan said...

Jaswanti
superb short news
enkitta seviyai vida manasuthaan ellathaiyum thiirmanikkuthu
so mauna raagangal en manasukkuLLa kettututey irukkuthu

ஜெஸ்வந்தி said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே !

***அன்புடன் அருணா
***S.A. நவாஸுதீன்
***பிரியமுடன்...வசந்த்
***ஷ‌ஃபிக்ஸ்/Suffix
***வேந்தன் -------முதல் வருகைக்கு நன்றி.
***Ammu Madhu -----முதல் வருகைக்கு நன்றி.

ஜெஸ்வந்தி said...

//நேசமித்ரன் said...
ஜெஸ், நல்ல தகவல்கள்..! பகிர்வுக்கு நன்றி!!!
உங்களின் அழைப்பை பார்த்தேன் மிக்க நன்றி உடல்நிலை காரணமாக ஒரு வார காலமாக இணையப் பக்கமே வர முடியவில்லை . தயவு செய்து எனை மன்னியுங்களேன் இந்த ஒரு முறை மட்டும் //

வாங்கோ, அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி நேசா. இப்போ நலமாக இருக்கிறீர்களா? பதிவுக்கு எந்த அவசரமும் இல்லை. ஆறுதலாக எழுதுங்கள்.

ஜெஸ்வந்தி said...

//R.Gopi said...
ஜெஸ்...--இன்னும் இன்டரஸ்டிங்கா நெறைய தகவல் இருக்குமே...கொஞ்சம், கொஞ்சமா எடுத்து ஷேர் பண்ணலாமே... பண்ணலாம்தானே??//

வாங்க கோபி. உண்மைதான். எல்லாமே சுவாரசியமாக இருக்கிறது. என் பிள்ளைகள் நடன வகுப்புகளுக்குப் போகும் போது நான் அதிகமாக காரில் காத்திருப்பேன். இப்போ இந்தப் புத்தகத்தை எடுத்திட்டுப் போகிறேன். எப்படி நேரம் போகுது என்று தெரிய வில்லை.
பதிவுகளுக்கு இடையில் நீங்கள் சொல்வதைப் போல் சிலதைப் பகிர்ந்து கொள்வேன். உங்கள் ஐடியா வுக்கு நன்றி.

ஜெஸ்வந்தி said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே !
***ராமலக்ஷ்மி
***ஜீவன்
***" உழவன் "
***ஹேமா
***கவிக்கிழவன்

ஜெஸ்வந்தி said...

முதல் வருகைக்கு நன்றி.
***அன்புடன் மலிக்கா

ஜெஸ்வந்தி said...

//thenammailakshmanan said...
Jaswanti
superb short news
என்கிட்டே செவியை விட மனசுதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது
சோ மௌன ராகங்கள் என் மனசுக்குள்ள கேட்டுட்டே இருக்குது//

வாங்கோ, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
ராகங்கள் கேட்க அடிக்கடி வாங்கோ.

பா.ராஜாராம் said...

மிக உரத்த சத்தம்.
=================
இருக்காதே ஜெஸ்!..சவுதி டு சிவகங்கை 3500 மைல். என் வரம் கொடு தேவதை தொடரில் உள்ள "வரம் ஆறு,வரம் ஏழு",படிச்சுட்டு "டேய்..ராஸ்கல்"என்று கதறிய லதாவின் குரல் எனக்கு கேட்டுச்சே!ஒரு வேலை கின்னஸ்க்கு கேட்க்காமல் இருந்திருக்கும்!
நல்ல தகவல்கள் மக்கா!

Big M blog said...

Great blog.....keep it up.

சந்ரு said...

நல்ல தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி.

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...
மிக உரத்த சத்தம்.
=================
இருக்காதே ஜெஸ்!..சவுதி டு சிவகங்கை 3500 மைல். என் வரம் கொடு தேவதை தொடரில் உள்ள "வரம் ஆறு,வரம் ஏழு",படிச்சுட்டு "டேய்..ராஸ்கல்"என்று கதறிய லதாவின் குரல் எனக்கு கேட்டுச்சே! ஒரு வேலை கின்னஸ்க்கு கேட்க்காமல் இருந்திருக்கும்!
நல்ல தகவல்கள் மக்கா!//

லதா போட்ட கூப்பாடு எனக்கும் இங்கே கேட்டுச்சே! ஆனால் அதுக்குப் பெயர் 'ரெலிப்பதி' என்பார்கள் மக்கா. அதனால் கின்னெஸ் கணக் கெடுக்காமல் விட்டிருக்கும் போல.

ஜெஸ்வந்தி said...

//Big M blog said...
Great blog.....keep it up.//

உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி said...

//சந்ரு said...
நல்ல தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி //

கருத்துக்கு நன்றி சந்ரு

Anonymous said...

புதுத்தகவல் தந்து இருக்கடா இன்னும் இருப்பவரையும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லாமே.....

ஜெஸ்வந்தி said...

//தமிழரசி said...
புதுத்தகவல் தந்து இருக்கடா இன்னும் இருப்பவரையும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லாமே.....//

தமிழ் கேட்ட பிறகு சொல்லாமலா.! இடைக்கிடை துணுக்குகளைத் தெளிக்கலாம் என்று தான் நினைத்திருக்கிறேன். இத்தனை ஆர்வமாக பதிவர்கள் படிப்பார்கள் என்று எனக்கு இப்போ தானே தெரிகிறது.

என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை? said...

தகவல்கள் சிறப்பு !
இன்னும் கிடைக்குமா?
நன்றி!

இராயர் அமிர்தலிங்கம் said...

i'm coming back

கலகலப்ரியா said...

good 1