நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday 17 September 2009

யார் குடியைக் கெடுத்தேன்?- பகுதி 3

அன்று மறுமுறை டாக்டரிடம் போகும் நாள். மனதுக்குள் திக் திக்கென்று இருந்தது. போகும் வழியில் இவர் '' நிறையச் சிரிக்கிறேன் என்று டாக்டரிடம் சொல்லாதீர். நான் இப்போ சந்தோசமாய் இருக்கிறேன். அதுதான் சிரிக்கிறேன். அந்த மனிதர் மருந்து தந்து சிரிக்கவே முடியாமல் பண்ணி விடுவான்'' என்கிறார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இவர் மயங்கி விழுந்ததைப் பற்றியும், சிரிப்பதைப் பற்றியும் தான் சொல்ல நினைத்திருந்தேன். இனி எப்படிச் சொல்வது? குழப்பத்துடன் அங்கு போனபோது, இம்முறை டாக்டர் அவருடன் தனியே கதைத்த பின்னர் என்னைத் தனியே அழைத்துக் கதைத்தார்.

அவருடன் கதைத்ததில் பல விடயங்கள் அறிந்திருந்தார். நாம் தனியே இருக்கிறோம் என்று அதிர்ந்தார். அவர் பெற்றோடுக்கு மதியெங்கே போய்விட்டது என்று கோபித்துக் கொண்டார். இதனால் அவருக்கும், என் உயிருக்கும் ஆபத்து நேரிடலாம் என்று சொன்னார். '' இவன் மூளையில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஏதோ வித்தியாசமாக நடக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். இந்த நரம்பியல் மிகச் சிக்கலானது. ஒவ்வொருவரை ஒவ்வொரு விதமாகப் பாதிக்கும். அரவிந்துக்கு இரண்டு முறை மோசமாகி மின்னதிர்ச்சி வைத்தியம் செய்தோம். இதற்கு முற்றான சிகிச்சை கிடையாது. சோர்ந்து போகும்போது நரம்புகளை உசுப்பி விட்டும், வீறிப் பாயும் நரம்புகளை அடக்கித் தூங்க வைத்தும் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்''. என்று சொல்லி நிறுத்தினார். மௌனம் என்ற அரக்கனிடம் பலியாகி , கல்லாய் உறைந்திருந்தேன்.

கூர்ந்த பார்வையுடன் ''உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' அவர் திடீரெனக் கேட்ட போது, மெய் சிலிர்த்து, முகம் சிவந்து போனேன். வயதானவர் ஆனாலும், இத்தனை நாள் எவருக்குமே சொல்லாமல் கட்டிக் காத்த ரகசியத்தை , முன்பின் தெரியாதவரிடம் எப்படிச் சொல்வது என்று கலங்கினேன். '' இதோ பார் , நான் அரவிந்தோடு கதைத்து விட்டுத்தான் வருகிறேன். அவன் சொன்னவற்றை ஊர்ஜிதம் செய்யத்தான் உன்னிடம் இந்தக் கேள்வி கேட்கிறேன்'' என்றார். பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில், திக்குத் திணறி '' அப்படி எதுவும் .....நம்மிடையே கிடையாது. அவர் எனக்கு ஒரு குழந்தை போல '' சொல்லி முடித்த போது ,தான் எதிர் பார்த்த பதில் என்பது போல தலையை அசைத்த படி, '' முற்பது வயது மகனைத் தத்தெடுத்து இருக்கிறாய் என்று சொல்லு '' என்றார். ஒவ்வொரு வார்த்தையும் நெருப்புத் துண்டாய் நெஞ்சில் விழ , இனிமேல் தாங்காதென்று கண்கள் பெருக்கெடுக்கத் தொடங்கின. இதயமே இல்லாத மனிதர் முன்னால் இருப்பதை உணர்ந்தேன். இதில் என் தப்பு என்னவென்று எனக்குப் புரியவில்லை.

அவர் முடிக்கவில்லை. '' உனக்கு இதை எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அரவிந்துக்கு நான் கொடுக்கும் மாத்திரைகள் அவனது வீறு கொண்ட நரம்புகளை அடக்குவதுக்குத் தான் . பாலின உணர்ச்சிகளும் நரம்பு சம்பத்தப் பட்டதால் அந்த உணர்வுகளும் அடக்கப் பட்டு விடும். மருந்துகளை நிறுத்தவும் முடியாது. இந்தப் பிரச்சனைக்கு முடிவும் கிடையாது'' ஒரே முஉச்சில் சொல்லி முடித்தார் . என் உடம்பில் அப்போதும் மூச்சிருந்தது ஆச்சரியம் தான் .இனிமேல் எதையும் தாங்கும் சக்தி எனக்கு இல்லாததால் அழுது கொண்டே ஓடி வந்து விட்டேன். அன்று இருவருமே எதுவும் கதைக்க வில்லை. அவர் நிறையச் சிந்திக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. மெல்ல அவரிடம் நாங்கள் அவர்கள் வீட்டில் போய் ஒரு மாதம் இருப்போம் என்று சொன்னேன். ஒத்துக் கொண்டார். வார இறுதியில் போகலாமென்றும் தேவையானவற்றை பெட்டிகளில் அடுக்கச் சொன்னார். டாக்டர் என்ன சொன்னார் என்று கூடக் கேட்கவில்லை. அவர் என்ன சொல்லியிருப்பார் என்று ஊகித்தவர் போல நடந்து கொண்டார். ஒரு புது மனிதன் போல் மாறி விட்டார். எதையும் இயந்திரம் போல் செய்தார்.

தூக்கமில்லாமல் தவித்து என் மூளை சிந்திக்கும் திறனை இழந்து விட்டிருந்தது. அன்று பாடசாலை ஓய்வறையில் நான் மயங்கி விழுந்து விட்டேன். கண் விழித்த போது கூர்ந்து பார்த்தபடி என் அப்பா என் முன்னே இருந்தார். எதேச்சையாக என்னைச் சந்திக்க வந்திருக்கிறார்.'' நானும் உன்னை இத்தனை நாள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். புதிதாய் திருமணம் செய்த பெண்ணின் பூரிப்பை உன்னிடம் நான் காணவில்லை. என்ன பிரச்சனை உனக்கு? அரவிந்த் உன்னிடம் அன்பாக இல்லையா?'' அவர் பரிவாகக் கேட்ட போது நான் உடைந்து போனேன். தன்னிரக்கம் பொங்கிப் பிரவாகமாகி நான் அன்றுவரை கட்டிக் காத்த என் கவலைகள், ரகசியங்கள் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு ஓட, ''ஓவென்று'' வாய்விட்டு அழுதபடி அவர் தோளில் சாய்ந்து விட்டேன். நான் சொல்லி முடித்த போது அவர் சிலையாகி விட்டிருந்தார். ' நான் யார் குடியைக் கெடுத்தேன்? ஏன் இந்தச் சோதனை ''என்று அலட்டினார். அந்த அதிர்ச்சியில் அவர் கைகள் நடுங்கியதைக் கண்டேன். என்னைச் சுதாகரித்துக் கொண்டு அவர்கள் வீட்டில் வந்து சத்தம் போடக் கூடாதென்று அவரிடம் சத்தியம் வாங்கினேன். உடனே அம்மாவை வரவழைக்கப் போவதாகவும் அதுவரை கவனமாக இருக்கும் படியும் சொன்னார். விட்டுப் பிரிய மனமில்லாமல் விடை பெற்றார். அம்மா இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கப் போகிறாள் என்று பயந்தேன்.
தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு புகுந்த வீடு போனோம். அதன் பின்னர் படிப் படியாக பல மாறுதல்கள் தெரிந்தன. மாத்திரை கொடுப்பது பெரும் பாடானது. அவர் தாயார் உணவினுள் மாத்திரையை கரைத்துக் கொடுக்க அவருக்கு எவர் மேலும் நம்பிக்கை இல்லாமல் போனது. தன் முன்னால் சமைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணினார். நான் அவர் அருகில் போகப் பயப் படுவதைப் பார்த்து மாமி மனங் கலங்கினாள். அப்போது அவளிடம் என் அம்மா விரைவில் வர இருப்பதைச் சொன்னேன். ' எல்லாம் இறைவன் விட்ட வழி' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

அம்மாவை நான் முதலில் ஹோட்டேலில் போய்ச் சந்தித்தேன். எனக்கு வேலை வைக்காமல் அப்பா அவளிடம் எல்லா விபரமும் சொல்லியிருந்தார். அவளைக் கண்டதும் ஓடிப் போய் அவள் மார்பில் விழுந்தேன். தொண்டைவரை வந்த வார்த்தைகள் அங்கேயே சிக்கித் தவித்தன. அவளுக்கும் என்ன சொல்லி என்னைத் தேற்றுவது என்று தெரியவில்லை. அமைதியாக அவள் கொட்டிய கண்ணீர் என் கன்னத்தைச் சூடாக்கியது. அவர்கள் இருவரும் அந்த டாக்டருடன் கதைக்க விரும்பினார்கள். அவரை வெளிநாடு கொண்டுபோய் சிகிச்சை செய்ய முடியுமா என்று கேட்கவும் நினைத்தார்கள். எனக்கோ அந்த டாக்டரின் பெயரைச் சொல்லவே நடுங்கியது. அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி அங்கே போனேன். என் பெற்றோரை டாக்டருக்கு அறிமுகம் செய்து விட்டு அவர்கள் என் கணவரைப் பற்றி முழு விபரமும் அறிய விரும்புகிறார்கள் என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்து விட்டேன். அதற்குள் என் நெஞ்சு பட பட என அடிக்கத் தொடங்கி விட்டது. நீண்ட நேரம் அவர்கள் கதைத்தார்கள். வெளியே இருந்தபோது டாக்டரைப் பார்க்க வந்திருந்த பலரையும் பார்த்துக் கலங்கி விட்டேன். இவர்களுக்கு வாழ்க்கையில் என்ன சோதனை வந்ததோ என்று எண்ணி மனம் மிகப் பாரமாகிப் போனது. வெளியே வந்த அவர்கள் முகத்தில் இருந்த குழப்பம் அங்கே என்ன நடந்ததென்பதை ஓரளவு சொல்லின. அமைதியாக ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம். அம்மா '' உன்னால் அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. ஏனென்றால் நீதான் இப்போ அவன் பிரச்சனைக்குக் காரணம். இதுவரை ஒழுங்காக மாத்திரை சாப்பிட்டு வேலைக்குப் போய் வந்த அரவிந்த் இந்தக் கல்யாணத்தின் பின் தான் இப்பிடி ஆகிப் போனான் என்று டாக்டர் சொல்கிறார்.'' அம்மா கண்ணீருடன் சொல்லி முடித்தாள். அவர்கள் எல்லாம் சொன்ன போது தான் அந்த டாக்டருக்கு என் மேல் ஏன் கோபம் என்று தெரிந்தது. அவர் நான் இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்திருக்கிறேன் என்று நினைத்திருக்கிறார். தன்னிடம் கலந்துரையாடாமல் கல்யாணம் என்ற பேரில் என் வாழ்வையும் அவர் வாழ்வையும் கெடுத்து விட்டேன் என்று அவர் கோபப் பட்டிருக்கிறார். என் பெற்றவர்கள் சொன்னபோதுதான் எதுவுமே தெரியாமல் நடந்த விடயம் என்று தெரிந்து மிகக் கவலைப் பட்டிருக்கிறார். அவர் அபிப் பிராயப் படி எவ்வளவு விரைவில் நான் அவரை விட்டு விலகுகிறேனோ அவ்வளவு அவருக்கு நன்மை. அரவிந் டாக்டரிடம் இந்த மாத்திரைகள் தான் தன்னை ஆணாக இல்லாமல் பண்ணி விட்டது என்றும் இனி மாத்திரை சாப்பிட மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து தான் அவர் நிலைமை மோசமாகியது. நான் அம்மாவுடன் இந்தியா போவதைவிட வேறு வழியில்லை என்று அவர்கள் சொன்னபோது இந்த உலகமே தட்டாமாலை சுற்றியது. அந்த மூன்று மாதத்தில் நான் அவருடன் மனத்தளவில் மிகவும் நெருங்கி விட்டேன். என் பிரிவை அவர் உணராதபடி அவரை உறக்கத்தில் வைத்திருக்க அவருக்கு டாக்டர் இருக்கிறார். அவரைப் பிரிந்து இதயம் நொறுங்கிப் போகப் போகும் எனக்கு என்ன ஆகப் போகிறது. அதைப் பற்றி என் பெற்றோர் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஏதோ நடப்பது நடக்கட்டும் என்று மனது வெறுத்த நிலையில் பெற்றவர்களுடன் அவர் வீட்டுக்குப் போனேன். அப்பா கொஞ்சம் குரலை உயர்த்தித் தான் பேசினார். ஆனால் அவர்கள் குரல் மிக அடங்கிப் போனதால், சண்டையாக மாறவில்லை. மாமி கூட என்னை பெட்டியை அடுக்கிக் கொண்டு அவர்களுடன் புறப் படச் சொன்னாள். அவர் வெளியே போயிருந்தார். மாமி என்னை அரவிந் வரமுன்பு போகச் சொல்லி மன்றாடினாள்..என்னால் முடியவில்லை. அழுத கண்ணும் ,வெந்த நெஞ்சுடனும் பெட்டியுடன் புறப் படத் தயாரான போது, எதிர் பாராமல் அரவிந் வந்து விட்டார். எவரும் எதுவும் சொல்லாமலே நடப்பது என்னவென்று அவருக்குப் புரிந்து விட்டது. என்னிடம் நேரே வந்தார். '' என் உயிர் உன்னிடம் இருக்கிறது. அதையும் கொண்டுதான் போகிறாய்'' என்று சொன்னார். ஓடிப் போய் அறைக் கதவைச் சாத்திக் கொண்டார். நான் உடைந்து போனேன். அவ்வளவு தான் , என்ன நடந்தாலும் நான் அங்கிருந்து காலெடுத்து வைக்க மாட்டேன் என்று விட்டேன். அம்மா அழுது புரண்டாள். நான் சம்மதிக்க வில்லை. அவளைச் சமாதானப் படுத்தி அப்பா அழைத்துச் சென்றார். தலையில் அடித்தபடி அவள் போன காட்சி மனதினில் என்றும் காயமாய் நிற்கிறது.

அன்று அவர்கள் போனதும் இவர் என்னிடம் வந்து '' நீ இன்று எடுத்த முடிவுக்காக எப்பவுமே கவலைப் படும் படி நான் விட மாட்டேன்'' என்று சொன்னார். தன் கண்கள் பெருக்கெடுக்க என் கண்ணீரைத் துடைத்தார். அந்த நிமிடம் நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன். ஆனால் படிப் படியாக இவர் நிலைமை மோசமாகி மாத்திரை போட்டும் தூங்க முடியாமல் , எவராலும் இவருடன் கதைக்கவோ ,மாத்திரை கொடுக்கவோ முடியாத நிலை வந்தபோது நான் செய்த தப்புப் புரிந்தது. அவருக்கு நன்மை செய்வதாக நினைத்து நான் அவரைப் பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்தது. அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்படும் மன வலிமை இல்லாததால் இப்போ கோழை மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

விமானம் சென்னையில் இறங்குகிறது. முன்பு ஒரு தடவை அம்மாவைப் பார்க்க வந்ததால் அவள் வீட்டுக்குச் செல்லும் வழி எனக்குத் தெரியும். என்னை வலிந்து அழைத்த வாடகை வண்டியில் ஏறி அமர்கிறேன். நான் வருவது அம்மாவுக்குத் தெரியாது. என்னைக் கண்டு மலைக்கப் போகிறாள். கதவைத் திறந்தவள் கதறியபடி கட்டி அணைக்கிறாள். அம்மா மடியில் வந்து விழுந்து விட்டேன் என்று மகிழ முடியாத நிலையில் நான். பிரமை பிடித்தவள் போல் முகட்டைப் பார்த்தபடி பல நாட்கள் இருக்கிறேன். அப்போ தான் என் தம்பிமார் என்னை இங்கிலாந்து அனுப்ப முயல்கிறார்கள் என்று தெரிகிறது. மற்றவர்கள் உணர்வுகளைப் புரியாமல் தங்கள் எலும்பில்லா நாவால் இதயங்களைப் பிசைந்து எடுக்கும் இந்தக் கேடுகெட்ட உலகத்துக்கு நான் பயப் படவில்லை. எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் விதி போகும் பாதையில் நான் போக என்னைத் தயாரித்துக் கொள்கிறேன். காலம் மருந்தாகும் என்று சொல்கிறார்கள். அந்தக் காலம் என் சுக்கு நூறான என் இதயத்தை ஒட்ட வைத்து விடுமா?பல காத தூரத்தில் நான் விட்டு வந்த என் உயிரைத் திரும்ப என்னிடம் கொண்டு வந்து விடுமா? எனக்குத் தெரியவில்லை.
(முற்றும்)






25 comments:

யாழினி said...

இதை வாசித்து முடித்தவுடன் உண்மையிலேயே அழுது விட்டேன் ஜெஸ்வந்தி. மிக மிக சோகமான முடிவு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கதை மனதை விட்டு அகல மறுக்கின்றது.

அகல்விளக்கு said...

சோகம் வேதனை தைரியம்

அழுத்தமான ஆழமான கதை

தொடருங்கள்.....

ஹேமா said...

ஜெஸி நெகிழ்வான கதை.இந்த முடிவில் ஒரு பெண்ணாய் என் மனமே அழுதுவிட்டது.

பா.ராஜாராம் said...

ஜெஸ்...உங்களை,உங்கள் கைகளை துதிக்கணும் போல இருக்கு மக்கா.வேறு சொல்ல தெரியலை.தொண்டை அடைத்து வருகிறது.எங்கேயோ போய் கொண்டிருக்கிறீர்கள்,மட்டும் இப்போதைக்கு.

பா.ராஜாராம் said...

இந்த முற்றும் தாங்க இயலாமல் இருக்கு.இது போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கு,ஜெஸ்.தொடருங்களேன்.கிட்ட தட்ட எல்லோருமே இதைத்தான் சொல்ல போகிறார்கள்.கதையின் அக்கறையைவிட,இந்த தொடரின் உங்கள் எழுத்தாற்றலை தொடர்ந்து பார்க்கணும் போல இருக்கு.சுத்தி வைங்கடா குட்டிகளா அம்மாவுக்கு!

Shan Nalliah / GANDHIYIST said...

THE FATE/KARMA IS MORE STRONGER THAN OUR PLANS AND HOPES!WE CANNOT FIND ANSWERS FOR SOME UNKNOWN INCIDENTS/EPISODES WHICH HAPPENS IN OUR LIVES WITHOUT PRE-PLANS!!!OUR MEANS/WAYS ARE ALLREADY DECIDED! WE JUST FOLLOW THE PATH ! BUT WE SHD MAKE SURE TO TRY OUR BEST ALLWAYS TO MOVE ON THE RIGHT DIRECTION!!!BUT SOMETIMES WE CAN'T!
THAT IS FATE!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி யாழினி. கதையை மறக்க மாட்டீர்கள் என்றால் என்னையும் மறக்க மாட்டீர்கள் தானே!
உங்களை நான் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேன். கண்டு கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.இந்தப் பதிவைப் பாருங்கள்.
http://maunarakankal.blogspot.com/2009/09/blog-post_12.html

ப்ரியமுடன் வசந்த் said...

சோகத்தை கடைசி வரிகளில் பிழிந்துவிட்டீர்கள்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அகல் விளக்கு said...
சோகம் வேதனை தைரியம்
அழுத்தமான ஆழமான கதை
தொடருங்கள்.....//

உங்கள் கருத்துக்கு நன்றி அகல் விளக்கு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஜெஸி நெகிழ்வான கதை. இந்த முடிவில் ஒரு பெண்ணாய் என் மனமே அழுதுவிட்டது.//

வாங்க ஹேமா. கருத்துக்கு நன்றி. அழவைத்ததுக்கு என்னை மன்னித்து விடுங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
ஜெஸ்...உங்களை,உங்கள் கைகளை துதிக்கணும் போல இருக்கு மக்கா.வேறு சொல்ல தெரியலை.தொண்டை அடைத்து வருகிறது.எங்கேயோ போய் கொண்டிருக்கிறீர்கள் ,மட்டும் இப்போதைக்கு.//
உங்கள் அதீத புகழ்ச்சிக்கு நன்றி ராஜாராம். உங்களை மாதிரி நண்பர்கள் தான் என் எழுத்துக்கு ஊன்று கோல்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
இந்த முற்றும் தாங்க இயலாமல் இருக்கு.இது போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கு,ஜெஸ்.தொடருங்களேன்.கிட்ட தட்ட எல்லோருமே இதைத்தான் சொல்ல போகிறார்கள்.கதையின் அக்கறையைவிட,இந்த தொடரின் உங்கள் எழுத்தாற்றலை தொடர்ந்து பார்க்கணும் போல இருக்கு.சுத்தி வைங்கடா குட்டிகளா அம்மாவுக்கு!//

என்ன ராஜாராம், இப்போ நீங்கள் என்னைக் குழப்புகிறீர்கள். சற்று முன்னர்தான் கதை நன்றாக இருக்கிறது என்று சொன்னீர்கள். இப்போ கதை' முற்றும் ' போட்ட இடம் பிழை என்கிறீர்கள். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

dondu(#11168674346665545885) said...

இம்மாதிரி திருமணங்கள் சட்டப்படியே null and void ஆக கோர்ட்டில் மனுகொடுத்து செய்து கொள்ள இயலும். அதற்கு முன்னால் மாமனார் மாமியாரையும் விடக்கூடாது. நஷ்ட ஈடு கேட்க முடியும்.

மேலே சொன்னதுபோல இத்திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதைவிட வேறு வழியே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சந்தான சங்கர் said...

நெகிழ வைத்த உண்மை..
உறவு பாலத்தின்
விரிசல்களில் ஏற்படும்
கண்ணீர் கசிவுகள்..

Anonymous said...

பெண்ணே உன் கண்ணீருக்கு விலையே இல்லை...தியாக தீபமாகிவிட்டாய் ஆம் பெண்ணின் குணமே இது தானோ? அழவச்சிட்டீங்க ஜெஜ்...கற்பனைக் திறன் ரொம்ப எதார்த்தம்...இனிமேல் இப்படி எழுதாதீங்க....இதை படிச்சிட்டு இதயமில்லாதவர் போல இயல்பாய் இருக்க முடியலைடா....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/Shan Nalliah / GANDHIYIST said...
THE FATE/KARMA IS MORE STRONGER THAN OUR PLANS AND HOPES!WE CANNOT FIND ANSWERS FOR SOME UNKNOWN INCIDENTS/EPISODES WHICH HAPPENS IN OUR LIVES WITHOUT PRE-PLANS!!!OUR MEANS/WAYS ARE ALREADY DECIDED! WE JUST FOLLOW THE PATH ! BUT WE SHD MAKE SURE TO TRY OUR BEST ALWAYS TO MOVE ON THE RIGHT DIRECTION!!! BUT SOMETIMES WE CAN'T! THAT IS FATE!//

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நண்பரே. விதி பலர் வாழ்க்கையில் விசித்திரமாக விளையாடி விடுகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்...வசந்த் said...
சோகத்தை கடைசி வரிகளில் பிழிந்துவிட்டீர்கள்..//

வாங்க வசந்த். கடைசி வரிகளில் மட்டும் தானா???

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//dondu(#11168674346665545885) said...
இம்மாதிரி திருமணங்கள் சட்டப்படியே null and void ஆக கோர்ட்டில் மனுகொடுத்து செய்து கொள்ள இயலும். அதற்கு முன்னால் மாமனார் மாமியாரையும் விடக்கூடாது. நஷ்ட ஈடு கேட்க முடியும். மேலே சொன்னதுபோல இத்திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதைவிட வேறு வழியே இல்லை.//

வாங்க இராகவன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி. உண்மைதான் . சட்டங்கள் இப்படியான நிலைமையில் இருக்கும் பெண்களுக்கு சார்பாக இருந்தாலும், எத்தனை பேர் கோட்டுக்குப் போகப் போகிறார்கள்.? நிச்சயமாக என் நாயகி செய்ய மாட்டாள். அவள் பாச வலையில் விழுந்து விட்டாள்.
சட்டப் படியும் என் கதையின் முடிவு சரியானது என்று அறிய மகிழ்ச்சி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சந்தான சங்கர் said...
நெகிழ வைத்த உண்மை..
உறவு பாலத்தின்
விரிசல்களில் ஏற்படும்
கண்ணீர் கசிவுகள்..//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி சங்கர். உங்கள் நெகிழ்ச்சியான கருத்துக்கும் மிக்க நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தமிழரசி said...
பெண்ணே உன் கண்ணீருக்கு விலையே இல்லை...தியாக தீபமாகிவிட்டாய் ஆம் பெண்ணின் குணமே இது தானோ? அழவச்சிட்டீங்க ஜெஜ்...கற்பனைக் திறன் ரொம்ப எதார்த்தம்...இனிமேல் இப்படி எழுதாதீங்க....இதை படிச்சிட்டு இதயமில்லாதவர் போல இயல்பாய் இருக்க முடியலைடா....//

வாங்க தமிழ். உங்களை அழ வைத்ததுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நீங்க சொன்னால் சரிதான். இனி சோகக் கதையே கிடையாது இங்கே. சரிதானா? சிரிச்சிட்டிங்க இல்ல. பிறந்த நாள் கொண்டாட வேண்டாமா?

யாழினி said...

//ஜெஸ்வந்தி said...
நன்றி யாழினி. கதையை மறக்க மாட்டீர்கள் என்றால் என்னையும் மறக்க மாட்டீர்கள் தானே!
உங்களை நான் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேன். கண்டு கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.இந்தப் பதிவைப் பாருங்கள்.
http://maunarakankal.blogspot.com/2009/09/blog-post_12.html//


ஜெஸ் என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? நீங்கள் அழைத்து நான் கண்டு கொள்ளாமல் இருப்பதா? அலுவகல வேலை, சோம்பல் கரணமாக எழுதவில்லை. தொடர் பதிவுகளே ஏராளமாக உள்ளன. ஹி.. ஹீ இப்போது பதிவில் ஆணி பிடுங்க வேண்டிய வேலைகள் கூடி விட்டது. நிட்சயமாக எல்லாம் ஒரு நாள் எழுதி முடிப்பேன் ஜெஸ். பிளீஸ் மன்னித்துக் கொள்ளுங்கள். அதற்காக நான் உங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன் என்று கூறி மனதை நோகடிக்காதீர்களேன். Please...........

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

யாழினி
=======
வருகைக்கு நன்றி சகோதரி. ஆறுதலாக எழுதுங்கள். எந்த அவசரமும் இல்லை. ரசிகர்களும் ப்லோக்கும் எங்கும் ஓடப் போவதில்லை. ஹா ஹா ஹா
எனக்கும் இன்னும் தொடர் இடுகை பாக்கி இருக்கு.
நீங்கள் அந்தப் பதிவில் கருத்தைத் தெரிவிக்க வில்லை.இனிமேல் 'படிச்சுட்டேன் ,ஆறுதலாக எழுதுகிறேன்' என்று கருத்துப் போடுங்கோ. எந்தப் கோபமும் இல்லை.

Muruganandan M.K. said...

மிகவும் விரிவான உணர்வுபூர்வமான பதிவு. அழவில்லை. அனால் பலரையும் கலங்க வைக்கக் கூடிய அழுத்தமான பதிவு.

பல விடயங்களைப் புரிந்து கொண்டேன்.மருத்துவம் செய்வது என்பது வெறுமனே படிப்பால் வருவது அல்ல. அதற்கு மேல் மனிதர்களின் மனங்களைப் படிக்க வேண்டும் என்பது அதில் ஒன்று

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர். எதேச்சையாக உங்கள் வலையத்தை
வந்தடைந்தேன். உங்கள் மருத்துவ சம்பந்தமான பதிவுகள் மிக விளக்கமாகவும் பலருக்கும் பயனளிக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றன. வாழ்த்துக்கள்.

Rajeswari said...

ஜெஸ்வந்தி...என்ன சொல்வது..ஒரே மூச்சில் மூன்று பாகங்களையும் படித்தேன்.கதைக்குள்ளே இருப்பது போன்ற ஒரு உணர்வு.இவ்வுணர்வு சாதாரணமாக எல்லா கதைகளிலும் இருக்காது..

ரொம்ப அருமை..வாழ்த்துக்கள்