நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Saturday 18 July 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது


இது என்ன புது விருது என்று பார்ப்போம் என்ற ஆவலில் நண்பர் ரங்கனின் பதிவைப் படிக்கப் போனேன். என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். பல நாள் ஆசையின் நிமித்தம் இந்த ' Best Friend' விருதை இவர் ஆரம்பித்துள்ளார். அதில் முதல் சுற்றில் என் பெயரையும் கண்டேன். நிச்சயம் நான் கனவு காணவில்லை என்று உறுதியாக்கிய பின்பு இதை எழுதுகிறேன்.நன்றி நண்பரே!

இந்த விருதின் விதி முறைகள்

1. நீங்கள் இதனை எத்தனை பேருக்கும் அனுப்பலாம்.
2. இதனுடன் பரிசு வேண்டுமானாலும் சேர்த்து அனுப்பலாம்.
( இது ஜோக் என்றுதான் நினைக்கிறேன்)
3. நீங்கள் இவர்களை ஏன் தெரிவு செய்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாக சொல்லி விட வேண்டும் .
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப் படக் கூடாது. அப்படி நீக்குவதானால் உரிய விளக்கம் அளிக்கப் பட வேண்டும்.

நான் இந்த விருதினை அளிக்கும் நண்பர்கள்

1. ரங்கன்--- என்னை நல்ல தோழியாக ஏற்றுக் கொண்டு விருது வழங்கியவர்.

2. தமிழரசி --ரங்கன் இவருக்கு முதலே விருது வழங்கி விட்டாலும் என் விருதும் அவருக்கு நிச்சயம் உண்டு. என்னை அழகாக வலைசரத்தில் அறிமுகம் செய்தது போதாதென்று, சுவாரசிய விருதும் வழங்கிய தோழி இவர்.

3. கவிநயா--வலையத்தில் காலடிவைத்து இரண்டு வாரங்களில் மனமுவந்து பட்டாம் பூச்சி விருதை எனக்கு வழங்கியவர் இவர்.

4. புதியவன்---ஆரம்பத்தில் இருந்தே என் வலையத்தைத் தொடர்ந்து பின்னூட்டம் மூலம் ஊக்கம் அளித்தவர்.

5. Shan Nalliah ---தமிழ் வலயத்தை ஆரம்பிக்கும் எண்ணத்தை முதலில் தந்த நல்ல நண்பர் இவர்.

6. பா.ராஜாராம்.---பின்னூட்டத்தால் மனதைத் தொடுவது மட்டுமல்லாமல் அடிக்கடி வீட்டுக்கு வந்து போகும் நண்பர்.

7. இராயர் அமிர்தலிங்கம்---எனது எழுத்தை மிகவும் ரசிப்பவர். எனக்குத் தெரியாமலே ' பெண்கள் பதிவில்' என் வலையத்தைச் சேர்த்தவர்.

8. குடந்தை அன்புமணி--ஆரம்பத்திலிருந்து ஊக்கம் தரும் நல்ல நண்பர்.

9. ஹேமா---இவர் படைப்புகள் ஏனோ என்னை யாழ்ப்பாணம் இழுத்துச் செல்கிறது. அதனால் ஈர்க்கப் பட்டு பலமுறை இவர் வீடு போய் வருகிறேன்.

ஒன்பது எனது ராசியான இலக்கமென்பதாலும் , மற்றவர்களுக்கும் சில நண்பர்களை நான் விட்டுக் கொடுக்கும் எண்ணத்துடனும் எனது பட்டியலை இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன். எல்லோரும் இந்த விருதை ஆரம்பித்த ரங்கனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.


.

19 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

Shan Nalliah / GANDHIYIST said...

Great!You know how to write and get many readers/ friends!!!
Talent is like the "SUN",which you cannot hide
with palm!Please continue about politics too!
Ex.Tamil politics in Srilanka(1948-2009)with neutrality!I know you can write!!!

குடந்தை அன்புமணி said...

எனக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டீர்கள். மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

அப்துல்மாலிக் said...

இன்னாமே புச்சு புச்சா விருது தாறாங்கோ

இப்படி விருதா பிளாக்லே அப்டேட் செஞ்சுட்டா அப்புறம் போஸ்டிங் போட இடமே இருக்காதுப்பா..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

செண்பகநாதன் said...

வாழ்த்துகள்!
ஜெஸ்வந்தி

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி.

ஸ்ரீ....

ஹேமா said...

தோழி வர வர உங்கள் அன்பு கண்டு அதிசயிக்கிறேன்.உங்கள் கையால் இரண்டாவது விருதும் தட்டிக்கொண்டேன்.சந்தோஷமாயிருக்கு.
நன்றி ஜெஸி.

மற்றைய நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இனி நானும் குடுக்க வேணுமோ ?

vasu balaji said...

வாழ்த்துகள்

R.Gopi said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி............

அப்படியே இந்த விருதை தங்களுக்கு அளித்த "ரங்கன்"க்கு நன்றி........

தொடர்ந்து ஆடுங்கள்.......... பட்டையை கிளப்புங்கள்..........

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கருத்துச் சொன்ன, வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.

butterfly Surya said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

sakthi said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி

எம்.எம்.அப்துல்லா said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தமிழ் said...

வாழ்த்துகள்

Anonymous said...

respected all viwers this site verey usfull for in my heart beets.selvi selvaraju...sslovechannal@yahoo.in

பா.ராஜாராம் said...

பிரியங்கள் நிறைந்த ஜெஸ்...
"அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!"
எப்பவும் நிறைகிற நன்றியும் அன்பும்...

இராயர் said...

மிக்க நன்றி தோழி!!
என்னையும் உங்கள் நண்பராக சேர்த்துக்கொண்டதற்கு

மீண்டும் நன்றி



குறிப்பு :
வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உங்களின் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க முடியவில்லை

Kavinaya said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ஜெஸ்வந்தி! என்னையும் உங்கள் வரிசையில் சேர்த்துக் கொண்டதற்கு நன்றிகள் :)

வேலைப்பளு மிக அதிகமாகிவிட்டதால் கொஞ்ச நாளாகவே பதிவுகள் பக்கம் வர முடியவில்லை. முடிகையில் அவசியம் வருகிறேன். விருதிற்கான பதிவிட கொஞ்சம் அவகாசம் வேண்டும் :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
விருதை ஏற்றுக் கொண்ட நண்பர்களுக்கும் என் நன்றி.