நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday, 19 July 2009

ஊக்கம் தரும் விருதுகள்.


இந்த வாரம் விருதுகள் பல்வேறு திசையில் பறந்து கொண்டிருக்கின்றன . இப்போ அனைவருக்கும் இந்த சுவாரசிய வலையத்துக்கான விருது என்னவென்று தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.. மற்றைய விருதுகளைப் போல் இதுவும் ஒரு ஊக்கம் தரும் விருது தான். இதனை செந்தழல் ரவி என்பவர் ஆரம்பித்திருக்கிறார். என் அன்புத் தோழி எழுத்தோசை -தமிழரசி எனக்கு மனமுவந்து அளித்துள்ளார்.

விருது பெற்று இரண்டு நாள் ஆகிறது. நான் இதனை ஆறு பேருக்கு கொடுக்க வேண்டும். ஆறு பேரைத் தெரிந்து கொண்டு பதிவு போட ஆரம்பிக்கும் போது நான் தெரிவு செய்தவர்களுக்கு மற்றவர்கள் விருது அளித்துவிட்டார்கள். இப்படியே இரண்டு நாள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. போகும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் எல்லோர் வலையத்தையும் இந்த விருது அலங்கரித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் விருது கொடுக்கும் நண்பர்கள் இதோ

1. ரசனைக்காரி- ராஜேஸ்வரி

2. நேசமிதிரன் கவிதைகள்- நேசமித்திரன்

3. வீட்டுப் புறா -- சக்தி

4.முத்துச் சரம் --ராமலக்ஷ்மி

5. ஒண்ணுமில்லை- ச்சும்மா --.எம் .எம் .அப்துல்லா

6. காதலன் கவிதைகள்- கவிக்கிழவன்.

ஆறு பேருக்கு மட்டும் இந்த விருதைக் கொடுக்கலாம் என்பது இந்த விருதின் விதி முறை. அதனால் நான் ரசிக்கும் மற்றப் பதிவர்களைத் தெரிய முடியவில்லை. நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி விடை பெறுகிறேன்..

24 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களிடம் விருது பெற்ற மற்றவர்களுக்கும்..........

sakthi said...

வாழ்த்துக்கள் ஜெஸ்

sakthi said...

என் தளத்தை சுவாரஸ்யமானது எனக் கூறிய உங்கள் பெருந்தன்மைக்கு என் நன்றி

sakthi said...

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி !!!

தொடர்ந்து அசத்துங்க....இன்னும் நிறைய ...எ.பா..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

எல்லோருக்கும்.

R.Gopi said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

குடந்தை அன்புமணி said...

விருது பெற்ற தங்களுக்கும், விருதை தங்களிடமிருந்து பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.(என் கருத்தை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி)

அபுஅஃப்ஸர் said...

நானும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை கூவிக்கிறேன்

நேசமித்ரன் said...

உவந்து களிக்கும் உயிர் திமிர்ந்து கொண்டாடும்
பிரளயக்கூச்சலிடும் மனம் பேசும் மொழியென்ன
மௌனமான ராகங்கள்

அற்புதங்களுக்கு முந்தைய கணமும் அற்புதமானது
பின்பான பொழுதுகள் பேரன்புக்குரியதாக்குகிறது உலகை
அன்பின் ஜெஸ்வந்தியின் விருதும்

மிக்க நன்றி ஜெஸ்வந்தி !

ஷ‌ஃபிக்ஸ் said...

வாழ்த்துக்கள் தங்களுக்கும், விருது பெற்ற நன்பர்களுக்கும்.

புதுகைத் தென்றல் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் , விருதை ஏற்றுக்கொண்ட நண்பர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

ரங்கன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

சீக்கிரம் விருது விஷயங்களை முடித்து.. அடுத்த பதிவுகளை எழுத ஆரம்பியுங்கள்.

ஆவலோடு காத்திருக்கிறேன்.
ரங்கன்

Anonymous said...

வாழ்த்துக்கள் பெற்றுக் கொண்டதற்கும் பகிர்ந்ததற்கும்.......

ஜெஸ்வந்தி said...

நன்றி தமிழரசி.

ஜெஸ்வந்தி said...

//ரங்கன் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

சீக்கிரம் விருது விஷயங்களை முடித்து.. அடுத்த பதிவுகளை எழுத ஆரம்பியுங்கள்.

ஆவலோடு காத்திருக்கிறேன்.//

இது எல்லாம் யார் தப்பு? பல நாள் ஆசை என்று விருது ஒன்று உருவாக்க வேண்டியது அப்புறம் எழுத எங்கே நேரம் கிடைக்கும்.

Anonymous said...

நீங்க குடுத்த விருதுக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி. உங்களிடம் இருந்து சிறிதும் எதிர்பார்க்கவில்லை!!ஆமாம் இப்ப இந்த விருதை நான் யாருக்குக் குடுக்குறது?? கிட்டத்தட்ட எல்லாரும் வாங்கிட்டாங்களே!!!

எம்.எம்.அப்துல்லா.

கவிக்கிழவன் said...

உங்கள் பெருந்தன்மைக்கு என் நன்றி

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

I like very much ஜெஸ்வந்தி...
Yatthavan from Sri Lanka

ஜெஸ்வந்தி said...

//எம்.எம்.அப்துல்லா. said
நீங்க குடுத்த விருதுக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி. உங்களிடம் இருந்து சிறிதும் எதிர்பார்க்கவில்லை!!ஆமாம் இப்ப இந்த விருதை நான் யாருக்குக் குடுக்குறது?? கிட்டத்தட்ட எல்லாரும் வாங்கிட்டாங்களே!!!//

இன்னும் எத்தனையோ சுவாரசிய பதிவர்கள் இருக்கிறார்கள்.கண்டு பிடியுங்கள். அவர்கள் தளத்திலும், மனதிலும் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க இதை விட சிறந்த வழி கிடையாது. ஹா ஹா ஹா

ஜெஸ்வந்தி said...

//கவிக்கிழவன் said...
உங்கள் பெருந்தன்மைக்கு என் நன்றி
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

I like very much ஜெஸ்வந்தி...
Yatthavan from Sri Lanka//

பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். வயதில் சிறியவர் என்றாலும் கவிதையில் கிழவன் என்று உங்களுக்கே தெரிந்திருக்கிறதே! உண்மையில் உங்கள் கவிதை சிந்திக்க வைக்கிறது.

வண்ணத்துபூச்சியார் said...

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

நண்பர் செந்தழலாருக்கு நன்றி.. கலக்கிட்டேள்..

ராமலக்ஷ்மி said...

உங்கள் விருதுக்கு நன்றி சொல்லி நான் இட்ட பின்னூட்டம் எப்படியோ பதிவாகாமல் போயிருக்கிறது. நன்றி சொன்ன கையோடு உங்கள் பெயரை விருதுப் பட்டயத்தின் கீழ் சேர்த்து விட்டிருந்தேன் ஜெஸ்வந்தி. ஹிஹி முன்னும் பின்னும் இன்னும் இரண்டு பேரும் கொடுத்திருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்:)!

திரும்பவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஜெஸ்வந்தி said...

//ராமலக்ஷ்மி said...

உங்கள் விருதுக்கு நன்றி சொல்லி நான் இட்ட பின்னூட்டம் எப்படியோ பதிவாகாமல் போயிருக்கிறது. நன்றி சொன்ன கையோடு உங்கள் பெயரை விருதுப் பட்டயத்தின் கீழ் சேர்த்து விட்டிருந்தேன் ஜெஸ்வந்தி. ஹிஹி முன்னும் பின்னும் இன்னும் இரண்டு பேரும் கொடுத்திருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்:)!//

வாழ்த்துக்கள் தோழி.