நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday, 26 July 2009

கல்யாண மோதிரம்

கல்யாண மோதிரத்தை ஏன் நான்காவது விரலில் அணிகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?


( இது மிகச் சுவையானது . தொடர்ந்து படியுங்கள்.)

சீனர் அழகான ,நம்பக்கூடிய விளக்கம் தருகிறார்கள்

பெருவிரல் உங்கள் பெற்றோரைக் குறிக்கும்
ஆள்காட்டி விரல் உங்கள் சகோதரரைக் குறிக்கும்
நடு விரல் உங்களைக் குறிக்கும்
நான்காவது விரல்(மோதிர) உங்கள் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும்
சின்ன விரல் உங்கள் பிள்ளைகளைக் குறிக்கும்.
*****

நான் சொல்வது போலச் செய்யுங்கள். உங்கள் இரண்டு கைகளிலும் நடுவிரலை மடித்து, உள்ளங் கைகள் ஒன்றையொன்று நோக்கியவண்ணம் இறுக இணைத்துக் கொள்ளுங்கள். ( கீழேயுள்ள படத்தில் உள்ளதுபோல் மடிக்கப் படாத விரல்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும்.)இப்போ மற்ற விரல்களை அசைக்காமல் பெருவிரலை (பெற்றோரைக் குறிக்கும் ) மட்டும் விலக்குங்கள். அவை ஒன்றிலிருந்து ஒன்று விலகும். ஏனெனில் உங்கள் பெற்றோர் உங்களோடு வாழ்க்கை முழுதும் இருக்கப் போவதில்லை. என்றோ ஒரு நாள் உங்களை விட்டுப் பிரியப் போகிறவர்கள்.

இப்போ முதல் போலவே எல்லா விரல்களும் இணைந்திருக்க ஆள்காட்டி விரலை(சகோதரரைக் குறிக்கும்) மட்டும் விலக்குங்கள். இதுவும் இலகுவாகப் பிரியும். ஏனெனில் உங்கள் சகோதரர்கள் அவர்களுக்கென தனிக் குடும்பம் வந்ததும் உங்களிடமிருந்து பிரிந்து விடுவார்கள்.

இப்போ அதை போல எல்லா விரல்களையும் இணைத்து ,சின்ன விரலை (பிள்ளைகளை குறிக்கும்)
ஒன்றிலிருந்து ஒன்று விலக்குங்கள். அதுவும் முடியும். பிள்ளைகள் தங்கள் குடும்பம் என்று வந்ததும் உங்களை விட்டுப் பிரிந்து விடுவார்கள்.

கடைசியாக, முன்பு போல எல்லா விரல்களும் இணைந்திருக்க மோதிர விரலை(உங்கள் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும்) மட்டும் விலக்கப் பாருங்கள். ...ம்ம் ம்ம் முடியவே முடியாது. ஆச்சரியமாக இருக்கிறதா?
ஏனென்றால் கணவனும் மனைவியும்தான் இன்பமோ, துன்பமோ ,வாழ்க்கை பூராய் இணைந்திருக்கப் போகிறவர்கள்!!


இதை நான் முதலில் படித்த போது எந்தச் சிந்தனையும் இல்லாமல் , காரணம் கேட்கத் தோன்றாமல், நான் அணிந்திருந்த கல்யாண மோதிரத்திற்கு ஏதோ ஒரு சக்தி வந்தது போல் உணர்ந்தேன். இதை என் நண்பர்கள் எல்லோருடனும் பகிர்வதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி.28 comments:

நட்புடன் ஜமால் said...

சுவாரஸ்யமான பகிர்தல் ...

ஜீவன் said...

supper! ;;))

நேசமித்ரன் said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

தெரிந்ததுன்னாலும் அதை சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க
நல்ல விஷயம்

sakthi said...

நல்ல பகிர்வு சகோ!!!!

அபுஅஃப்ஸர் said...

ஆஹா சூப்பருங்கோ, கலக்கல்

//கணவனும் மனைவியும்தான் இன்பமோ, துன்பமோ ,வாழ்க்கை பூராய் இணைந்திருக்கப் போகிறவர்கள்!!

//

ஆமோதிக்கிறேன்

வண்ணத்துபூச்சியார் said...

ஜெஸ்வந்தி. இது சிறிது நாளுக்கும் எனக்கும் ஈமெயிலில் வந்தது. பதிவாக இடலாம் என்று எண்ணியிருந்தேன்..

அவ்வ்வ்வ்..

ஷ‌ஃபிக்ஸ் said...

புதிய விளக்கம், பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி

குடந்தை அன்புமணி said...

அட... சூப்பரா இருக்குங்க... பகிர்ந்து கொண்டமைக்கு நின்றி.

S.A. நவாஸுதீன் said...

அட. ரொம்ப சரியா இருக்கே. என்னமா யோசிக்கிறாங்கப்பா. சரி அந்த மாதிரி நம்ம ஊர் மெட்டிக்கும் எதாவது ஸ்பெஷல் இருக்கா?

ஜெஸ்வந்தி said...

//நட்புடன் ஜமால் said...
சுவாரஸ்யமான பகிர்தல் ...//

நன்றி ஜமால்.

ஜெஸ்வந்தி said...

//ஜீவன் said...
supper! ;;))//

வாங்க ஜீவன். ரசித்ததற்கு நன்றி. நான் அண்மையில் உங்கள் வலையத்துக்கு வந்து உங்கள் மீள்பதிவு கதை படித்தேன். மிகவும் அழகாக எழுதுகிறீர்கள்.

ஜெஸ்வந்தி said...

//நேசமித்ரன் said...
நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
தெரிந்ததுன்னாலும் அதை சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க .நல்ல விஷயம்//

வாங்க நேசன். உங்களுக்கு முன்னரே தெரிந்த விடயமா? எனக்கு இப்போதான் தெரியும்.
மெயிலில் ஆங்கிலத்தில் வந்தது. உடனே வலயத்தில் போடும் நினைவும் கூடவே வந்து விட்டது.

ஜெஸ்வந்தி said...

//sakthi said...
நல்ல பகிர்வு சகோ!!!!//

வாங்க சக்தி. நன்றிடா

ஜெஸ்வந்தி said...

//அபுஅஃப்ஸர் said...
ஆஹா சூப்பருங்கோ, கலக்கல்
/கணவனும் மனைவியும்தான் இன்பமோ, துன்பமோ ,வாழ்க்கை பூராய் இணைந்திருக்கப் போகிறவர்கள்!!/
ஆமோதிக்கிறேன்//

வாங்க நண்பரே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி said...

//வண்ணத்துபூச்சியார் said...
ஜெஸ்வந்தி. இது சிறிது நாளுக்கும் எனக்கும் ஈமெயிலில் வந்தது. பதிவாக இடலாம் என்று எண்ணியிருந்தேன்......அவ்வ்வ்வ்..//

அப்பிடியா, நான் முந்திட்டேனே! இதிலெல்லாம் காலங் கடத்தக் கூடாது பாருங்கோ.

ஜெஸ்வந்தி said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
புதிய விளக்கம், பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி//

வாங்க நண்பரே! புதிதாக அறிந்து கொண்டீர்கள் என்பதில் மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி said...

//குடந்தை அன்புமணி said...
அட... சூப்பரா இருக்குங்க... பகிர்ந்து கொண்டமைக்கு நின்றி.//

வாங்க அன்புமணி, உங்கள் மனைவிக்கும் தெரியப்படுத்துங்கள் .

ஜெஸ்வந்தி said...

//S.A. நவாஸுதீன் said...
அட. ரொம்ப சரியா இருக்கே. என்னமா யோசிக்கிறாங்கப்பா. சரி அந்த மாதிரி நம்ம ஊர் மெட்டிக்கும் எதாவது ஸ்பெஷல் இருக்கா?//

நல்ல கேள்வி கேட்டிங்க , போங்கோ. கல்யாணமான பொண்ணுங்கள அறிந்து கொள்ள அவர்கள் தாலியைப் பார்ப்பதை விட அவர்கள் காலில் உள்ள மெட்டியைப் பார்த்து ஆண்கள் அறிந்து கொள்வது இலகு அல்லவா? எங்கோ படித்த நினைவு.

ஹேமா said...

ஜெஸி,உண்மையாவா!நான் இதையெல்லாம் நம்புறது குறைவு.ஆனாலும் யாரோ விரல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கினம்.சரி...சரி.விரல்கள் கட்டாயம் சாப்பிடத் தேவை.நன்றி விரல்களுக்கு.ஜெஸிக்கும்.

பா.ராஜாராம் said...

ஆமாம்தான் ஜெஸ்...நல்ல பகிர்வு!

அனுஜன்யா said...

வாவ், இது தான் நான் முதல் முறை கேள்விப்படுவது. Thanks for sharing.

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

அற்புதமான பகிர்வு. என்னைப் போலவே பலரும் அறிந்திராத விளக்கம் என்பதைப் பின்னூட்டங்கள் சொல்கின்றன. நன்றி ஜெஸ்வந்தி!

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...
ஆமாம்தான் ஜெஸ்...நல்ல பகிர்வு!//

உங்கள் வரவுக்கு நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி said...

//அனுஜன்யா said...
வாவ், இது தான் நான் முதல் முறை கேள்விப்படுவது. Thanks for sharing.//

வாங்க அனுஜன்யா, உங்கள் முதல் வரவுக்கு நன்றி. நீங்கள் முதல் முறை என்மூலம் அறிந்ததையிட்டு மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி said...

//ராமலக்ஷ்மி said...
அற்புதமான பகிர்வு. என்னைப் போலவே பலரும் அறிந்திராத விளக்கம் என்பதைப் பின்னூட்டங்கள் சொல்கின்றன. நன்றி ஜெஸ்வந்தி!//

வாங்க தோழி, நலமா? பட்டாம் பூச்சி கொண்டுவந்த உங்கள் நட்பு எனக்கு தொடர்ந்து ஊக்கம் தருகிறது. நன்றி.

இராயர் அமிர்தலிங்கம் said...

கண்டிப்பா என்னோடைய (வரபோகும் ) மனைவியுடன் சொல்லுவேன்
ரொம்ப நன்றி
தாமதமாக படித்ததிற்கு

ஜெஸ்வந்தி said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
கண்டிப்பா என்னோடைய (வரபோகும் ) மனைவியுடன் சொல்லுவேன் //

நீங்க சொல்ல மறந்தால் நான் அப்போ நினைப்பூட்டுகிறேன் இராயர்.

இராயர் அமிர்தலிங்கம் said...

அதற்குள்ளே பதில் வந்துவிட்டது