(இது ஒரு உண்மைக் கதை. கூடு விட்டுக் கூடு பாய்ந்து , பெயர்களையும் மாற்றி விட்டிருக்கிறேன்)
என் அறை ஜன்னல் திரைச் சீலையை மெல்ல விலக்கி , பக்கத்துக் கூடத்தில் என்ன நடக்கிறது என்று நோட்டமிடுகிறேன். நான் அங்கு வரக் கூடாதென்று அம்மா கட்டளை போட்டுப் போய்விட்டாள். பெரியவர்கள் கதைக்கும் போது நான் அங்கு வாய் பார்க்கக் கூடாதாம். ஒவ்வொரு முறையும் இவள் இப்படிக் கட்டளை போட்டு சும்மா இருக்கும் எனக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறாள். நான் அங்கு போகாவிட்டாலும் ஒட்டுக் கேட்பதும் ஒழித்திருந்து பார்ப்பதும் எனக்குச் சகஜமாகி விட்டது.
இன்று என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு ஓரளவு தெரியும். காலையில் அம்மம்மா மிகவும் கவலையாக எங்களிடத்தில் சொன்னாள். நந்தினி இன்று ஊருக்குப் போகப் போகிறாள். அவளைக் கூட்டிப் போக அவளது தகப்பன் இன்று ஊரிலிருந்து வருகிறார். இவள் அதுதான் ஒரு வாரமாக மூக்கைச் சிந்தியபடி இருக்கிறாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நந்தினிக்கு இன்னும் இரண்டே வாரத்தில் கல்யாணமாம். அதற்கு இவள் சந்தோஷப் படவல்லவா வேண்டும்? அதற்கு மாறாக ' நான் இங்கேயே உன்னோட இருக்கிறேன் ஆத்தா' என்று என் அம்மம்மா விடம் முனகிக் கொண்டு இருக்கிறாள். எனக்கு இவள் போவதில் எந்த வருத்தமும் கிடையாது. சரியாகச் சொல்லப் போனால் ஆனந்தம் என்றுகூடச் சொல்லலாம். ' நீ என்னைப் படுத்தியது போதும். உன்னைக் கட்டப் போற அந்த மடையனைப் போய்ப் படுத்து ' என்று மனதுக்குள் அவளைத் திட்டிக் கொள்கிறேன்.
கூடத்தில் அம்மாவும், அம்மம்மாவும் கதிரையில் இருக்கிறார்கள் .கதவடியில் சுவரில் முதுகைச் சாய்த்தபடி நிலத்தில் நந்தினியின் அப்பா சம்மணம் கட்டியிருக்கிறார். அவர் பக்கத்தில் ஒரு சின்னப் பொண்ணு ஒன்றும் இருக்குது.
ஒருவேளை அது இவளின் தங்கையாக இருக்கலாம் என் நினைத்துக் கொள்கிறேன். ஊதிவிட்டால் மனிதன் விழுந்து விடுவான் போல ஒரு தோற்றம் . பல இடங்களில் கிழிந்து , ஒட்டுப் போட்ட ஒரு பழுத்த வேட்டி, முழுதாக நரைத்த தலை. அந்த மனிதரைப் பார்க்க எனக்குக் கவலையாக இருக்கிறது. இவரை இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன். நந்தினியின் அம்மா சுகமில்லாமல் இருந்த போது அவளைக் கூட்டிப் போக வந்திருந்தார். இந்த இரண்டு வருடத்தில் பத்து வயது கூடியது மாதிரி மாறிப் போய்விட்டார். பாவம் அவருக்கு ஐந்து பெண் பிள்ளைகளாம். அவரும் அவர் மனைவியும் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்தார்களாம். இப்போ அவர் மனைவி முடியாமல் படுக்கையில் இருக்கிறாளாம். நந்தினி குடும்பத்தில் மூத்தவளாம். என் அம்மா வேலைக்குப் போவதால் , எங்களைக் கண்காணிக்கவும் ,அம்மம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்கவும் , அம்மா படிப்பித்த பாடசாலை கன்னியாஸ்திரிகள் மூலம் நந்தினி எங்கள் வீட்டுக்கு வேலைக்காரியாக அறிமுகமானாள். ஒருவருடம் என்று வந்தவள் இப்போ மூன்று வருடத்துக்கு மேலாக இருந்து விட்டாள்.
நந்தினி கறுப்பென்றாலும், நல்ல முகவெட்டு. எந்த நேரமும் சிரித்த முகம். பார்த்தவுடனே அவளை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போய் விட்டது. எந்த வேலையையும் ஓடி ஓடித் தான் செய்வாள். அம்மம்மாவை மிகவும் அன்பாகக் கவனித்துக் கொண்டாள். அவள் எங்கே போனாலும் இவளும் நானும் வருகிறேன் என்று ஒட்டிக் கொள்வாள். வந்ததும் அவளாகவே அம்மம்மாவை 'ஆத்தா' என்று கூப்பிடத் தொடங்கி விட்டாள். என்னைத் 'தம்பி' என்று கூப்பிடுவாள். எனக்குப் பிடித்த மாசிச் சம்பல் தினம் செய்து தருவாள். ஆனாலும் இவள் மேல் எனக்குக் கொள்ளை ஆத்திரம். ஏன் தெரியுமா? இவள் வந்த பின்பு நான் வீட்டில் அடி வாங்குவது அதிகமாகி விட்டது. என்ன தப்புச் செய்தாலும் உடனே அம்மம்மாவிடம் போட்டுக் குடுப்பாள். பிறகு சொல்ல வேண்டுமா? அம்மம்மா முருங்கைக் கிளையொன்றை முறித்துக் கொண்டு வந்து விடுவாள்.
ஒருமுறை நானும் பக்கத்து வீட்டு ரவியும் சேர்ந்து , முத்து அக்கா வீட்டு மரத்திலேறி கள்ளமாக மாம்பழம் பிடுங்கினோம். இவள் அதனை எப்படியோ மோப்பம் பிடித்து வத்தி வைத்து விட்டாள். அதுகூடப் பரவாயில்லை. அன்று நான் சுற்றிச் சுற்றியோடி அடி பலமாய்ப் படாமல் தப்பித்துக் கொண்டேன். ஆனால் பிறிதொரு நாள் , அம்மாவும் , அப்பாவும், சித்தியும் படம் பார்க்கப் புறப்பட்ட போது நானும் வருவேன் என்று அடம் பிடித்தேன். அம்மா கண்டிப்புடன் ,' இந்தப் படம் பார்க்க உனக்கு வயது பத்தாது' என்று சொல்லி வீட்டில் விட்டுப் போனபோது ஆத்திரம் தாங்க முடியாமல் நான் ஆசையாக விளையாடும் பொருட்களை எல்லாம் போட்டு உடைத்தேன். அதோடு விடாமல் என் புத்தம் புதுச் சட்டையொன்றை , என் ஆத்திரம் தீருமட்டும் தூள் தூளாக வெட்டிப் போட்டேன். பின்னர் அவர்கள் வருமுன் எல்லாத் துண்டுகளையும் பொறுக்கியெடுத்து குப்பையில் எறிந்து விட்டேன். இதனை இந்த நந்தினி எப்படிக் கண்டு பிடித்தாள் என்று எனக்குத் தெரியாது. அடுத்த நாள் எனக்குச் செம அடி வாங்கித் தந்து விட்டாள். அந்த நாளிலிருந்து நான் அவளிடம் மிகவும் கவனம். என்ன செய்வதென்றாலும் அவள் பக்கம் ஒரு கண் வைத்துக் கொள்வேன்.
( தொடரும்)
.
38 comments:
தொடருமா?
உண்மைக்கதைன்னு வேற சொல்லிட்டீங்க. காத்திருக்கிறோம்.
அருமையா போகுதே கதை!! ம்..
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!!
சுவாரஸியமான கதையோட்டம்.
நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
Super........
Part-II Eppo??
Eagerly waiting ....... Unmai kadhai vera!!!
நந்தினி தான் வில்லியோ!
விருவிருப்பாத்தான் போகுது ...
யப்பாடி எவ்ளோ பெரிய கதை
தொடரட்டும்ம் நந்தினி யாருன்னு தெரியும்?
//குடந்தை அன்புமணி said...
தொடருமா?
உண்மைக்கதைன்னு வேற சொல்லிட்டீங்க. காத்திருக்கிறோம்.//
வாங்க அன்புமணி, என்ன அப்பிடிக் கேட்டிட்டீங்க? நிச்சயம் தொடர்வேன்.
சுவாரஸ்யமா கதை சொல்றீங்க !
சஸ்பென்ஸ் வில்லி யார்?
காத்திருக்கிறோம் தொடர்ச்சிக்கு......
//கலையரசன் said...
அருமையா போகுதே கதை!! ம்..
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!!//
கருத்துக்கு நன்றி நண்பரே! உங்களித் திரும்பவும் வரவைக்கத் தான் இந்த 'தொடரும்.'
//அ.மு.செய்யது said...
சுவாரஸியமான கதையோட்டம்.
நெக்ஸ்ட் மீட் பண்றேன்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. நிச்சயம் வாங்க.
அழகான நடை ஜெஸி
துவக்கம் முதல் கடைசி வரை...
தொடருங்கள் காத்திருக்கின்றோம்....
//R.Gopi said...
Super........
Part-II Eppo??
Eagerly waiting ....... Unmai kadhai vera!!!//
நன்றி கோபி, கதை கேட்க நல்ல விருப்பமா ? விரைவில் தொடருவேன்.
//நட்புடன் ஜமால் said...
நந்தினி தான் வில்லியோ!
விருவிருப்பாத்தான் போகுது ...//
வாங்க ஜமால், இப்போ என்னை நினைவிருக்கா? என் கதையில் வில்லி வருவதாக யார் சொன்னா? நிறைய தமிழ் படம் பார்ப்பீர்களோ?ஹா ஹா ஹா
//பிரியமுடன்.........வசந்த் said...
யப்பாடி எவ்ளோ பெரிய கதை
தொடரட்டும்ம் நந்தினி யாருன்னு தெரியும்?//
வரவுக்கு நன்றி வசந்த். அது என்ன நந்தினியைத் தெரியும் என்று புதிர் போட்டுக் கொண்டு.......ஒரு தொடரும் போட்டு உங்கள் கற்பனைக் குதிரையை நான் தட்டி எழுப்பியிருக்கிறேன்.
//நேசமித்ரன் said...
சுவாரஸ்யமா கதை சொல்றீங்க !
சஸ்பென்ஸ் வில்லி யார்?
காத்திருக்கிறோம் தொடர்ச்சிக்க//
கருத்துக்கு நன்றி நண்பரே.! எனக்கு உங்களைப் போல் கவிதை எழுதத் தெரியாது. இப்பிடி கதை சொல்லிப் பார்க்கிறேன்.
என் கதையில் வில்லி கிடையாது நண்பரே. நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்.
//sakthi said...
அழகான நடை ஜெஸி
துவக்கம் முதல் கடைசி வரை...
தொடருங்கள் காத்திருக்கின்றோம்....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி. இந்தக் கதை சொல்லும் வல்லமை என் அம்மம்மாவிடம் நான் படித்தது.
ஜெஸ்...தெளிவாய்..தேர்ந்த நடையில்
வட்டார உச்சரிப்புகளுடன்..வாசகனை
கடத்தி செல்கிறீர்கள்..
"இந்த ஸ்டாப்பில் பஸ் நிக்காது...
போலாம்...ரைட்ட்ஸ்.."என
போய்க்கொண்டே இருங்கள்!
வாங்க ஜமால், இப்போ என்னை நினைவிருக்கா? \\
என்ன ஜெஸ்வந்தி இப்படி கேட்டுப்புட்டியள் ...
ஆரம்பமே விறுவிறுப்பு. தொடருங்கள். வாழ்த்துக்கள்!
ஜெஸ்சு கதை விருவிருப்பா இருக்கு..உண்மை சம்பவத்தைக் கூட இப்படி சஸ்பென்ஸா சொல்லமுடியுமா? தாமதிக்காத சீக்கிரமா அடுத்த பகுதி தொடரட்டும் எனென்றால் நான் ஒரு மறதி கேஸ்சு....
kathai nalla iruku
ithula velli nandini mathiri theyalaye
lostla nandinium ஜெஸ்வந்தி um firnds aka poranga parunga
//பா.ராஜாராம் said...
ஜெஸ்...தெளிவாய்..தேர்ந்த நடையில்
வட்டார உச்சரிப்புகளுடன்..வாசகனை
கடத்தி செல்கிறீர்கள்..
"இந்த ஸ்டாப்பில் பஸ் நிக்காது...
போலாம்...ரைட்ட்ஸ்.."என
போய்க்கொண்டே இருங்கள்!//
வாங்க நண்பரே! கதை பாதி கூட எழுதவில்லை, பதிவு நீண்டதாகி விட்டது. அதனால் தான் நிறுத்தினேன். இப்போ பலரின் கற்பனை வளத்தை அறிந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். இன்று வேலையில் இருக்கிறேன். கருத்துப் போடலாம். கதையெல்லாம் எழுத முடியாது.
நாளை தொடர்கிறேன்.
//நட்புடன் ஜமால் said...
/வாங்க ஜமால், இப்போ என்னை நினைவிருக்கா? \
என்ன ஜெஸ்வந்தி இப்படி கேட்டுப்புட்டியள் ...//
தப்பாய் நினைக்காதேங்கோ! உங்களுக்கு விசிறிகள் அதிகம். இப்படி நினைவூட்டிக் கொள்ளும் எண்ணம் தான்.
//ராமலக்ஷ்மி said...
ஆரம்பமே விறுவிறுப்பு. தொடருங்கள். வாழ்த்துக்கள்!//
வாங்க ,வாங்க .ரசனைக்கு என் நன்றி.
//தமிழரசி said...
ஜெஸ்சு கதை விருவிருப்பா இருக்கு..உண்மை சம்பவத்தைக் கூட இப்படி சஸ்பென்ஸா சொல்லமுடியுமா? தாமதிக்காத சீக்கிரமா அடுத்த பகுதி தொடரட்டும் எனென்றால் நான் ஒரு மறதி கேஸ்சு....//
வாங்க தமிழ்-அரசி. இந்த வாரம் உங்களுக்கு பின்னூட்டம் போடவும் நேரம் இருக்கா? எனக்கு கொஞ்சம் பொறாமையாய் இருக்கு. என் கதையை நாளை வரை நினைவில் வைத்திருங்கோ. முடிவு எழுதி விடுவேன்.
அதுசரி, உங்கள் வலைச்சரத்திற்கு என்ன ஆச்சு? 'கனிகள்' பதிவு திறக்க முடியவில்லை.
//gayathri said...
kathai nalla iruku
ithula velli nandini mathiri theyalaye
lostla nandinium ஜெஸ்வந்தி um firnds aka poranga parunga//
வாங்க காயத்ரி, உங்கள் கருத்துக்கு நன்றி. இது உண்மைக் கதை என்று போட்டிட்டேனே! இல்லாவிட்டால் கதையை நீங்கள் சொன்னது போல் மாற்றி விட்டிருப்பேன். ஹா ஹா
தோழி,உங்கள் பக்கம் இன்றுதான் முதன்முறையாக வருகிறேன்.அழகாய் இருக்கிறது உங்கள் இல்லம்.
அன்பு நன்றியும் கூட.நீங்கள் தந்த பட்டாம் பூச்சி விருது மனதோடு படபடத்தபடி.மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டேன் தோழி.
உங்கள் தொடர்கதை வாசித்தேன்.உண்மைக்கதையை இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்.தொடரும் என்று போட்டு இன்னும் வரவைத்து விட்டீர்கள்.வருவேன் இன்னும்.
//ஹேமா said...
தோழி,உங்கள் பக்கம் இன்றுதான் முதன்முறையாக வருகிறேன்.அழகாய் இருக்கிறது உங்கள் இல்லம். அன்பு நன்றியும் கூட. நீங்கள் தந்த பட்டாம் பூச்சி விருது மனதோடு படபடத்தபடி.மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டேன் தோழி.//
உங்கள் முதல் வருகைக்கும் அன்புக்கும் நன்றி.தோழி. நான் ஊரில் உங்க இடத்துக்குப் பக்கத்தில் நல்லூரில் பிறந்தவள்.அந்த நாட்டு வாசனை தான் என்னை உங்கள் வலையப் பக்கம் ஈர்த்தது.
// உங்கள் தொடர்கதை வாசித்தேன்.உண்மைக்கதையை இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்.தொடரும் என்று போட்டு இன்னும் வரவைத்து விட்டீர்கள்.வருவேன் இன்னும்.//
திரும்பி வரவைக்க ஒரு நல்ல திட்டம். நிச்சயம் வாங்க.
விறுவிறுப்பாக இருக்கு,அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்...
//Mrs.Menagasathia said...
விறுவிறுப்பாக இருக்கு,அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்...//
உங்கள் முதல் வருகைக்கு நன்றி தோழி..தொடரைப் படிக்க திரும்பவும் என் வீட்டுக்கு வாங்க.
கதை அருமை !!
//இயற்கை said...
கதை அருமை !!//
நன்றி தோழி. நிச்சயம் திரும்ப வாங்க.
உண்மை கதையா? சட்டு புட்டுனு அடுத்த பாகத்துக்கு போங்க . ரொம்ப நல்லா இருக்கு
//பாலமுருகன் said...
உண்மை கதையா? சட்டு புட்டுனு அடுத்த பாகத்துக்கு போங்க . ரொம்ப நல்லா இருக்கு//
வாங்க பாலா, சட்டுப் புட்டுன்னு எழுதிக் கொண்டிருக்கிறேன் நண்பரே! திரும்ப வந்து படிங்க.
உங்களது கதை யதார்த்த நடையுடன் நன்றாக உள்ளது.
//செண்பகநாதன் said...
உங்களது கதை யதார்த்த நடையுடன் நன்றாக உள்ளது.//
ஊக்கத்துக்கு நன்றி நண்பரே.
Great...you are a natural writer,good story-teller..!!!please write more...about people,places!!!Your observations,experiences,feelings,facts etc!
//Shan Nalliah / GANDHIYIST said...
Great...you are a natural writer,good story-teller..!!!please write more...about people,places!!!Your observations,experiences,feelings,facts etc!//
Thanks for your comment. I am starting to believe that I am a story-teller. The stories that I wrote so far tell you the things I believe and my feelings. In each story I was somewhere there.
Post a Comment