நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday 8 March 2010

மீண்டு வந்த ஆலயம்



1960 ஆம் ஆண்டு கட்டலோனியா ( Catalonia) என்ற நகரில் ஏற்பட்ட வரட்சியைப் போக்க அங்கே நீரைக் கொண்டு வந்து தடாகம் அமைப்பதற்காக சான்ட் ரோமா ( Sant Roma) என்ற நகர், திட்டமிடப்பட்டு வெள்ளத்தால் மூழ்கடிக்கப் பட்டது. அப்போது அந்த ஊரில் 1200 பேர் குடியிருந்தார்கள். அவர்களை அவசரமாக வெளியேற்றினார்கள். அந்த நகரம் முழுவதும் நீரில் முழ்கியபோது, பதினோராம் நுற்றாண்டைச் சேர்ந்த, பிரசித்தமான ஒரு கல்லினால் கட்டப்பட்ட தேவாலயமும் முழ்கியது. எல்லா கட்டடங்களும் முற்றாக மூடப் பட்டாலும் தேவாலயத்தில் மணிக் கோபுரம் மட்டும் வெளியே தெரிந்தது.






ஆனால் அண்மையில் 2008 ஆம் ஆண்டு , சுமார் 50 வருடங்களின் பின் பூமி வெப்பமானதால் ஏற்பட்ட அதீத வரட்சியினால், அந்தப் பிரதேசம் குடிக்கத் தண்ணீர் இல்லாத அளவுக்குப் பாதிக்கப் பட்டது. அப்போது அருகிலிருந்த அணை வற்றியதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தேவாலயம் வெளிப் பட்டது. சித்திரை மாதம்( 2008 ) முழுதாக வெளிவந்ததால் ,அந்தக் காட்சியைக் காண உல்லாசப் பயணிகள் படையெடுத்தனர்.





தொலைக் காட்சியில் இந்தச் செய்தியை ஒலி பரப்பி தேவாலயம் வெளிவந்ததை எண்ணியும், உல்லாசப் பயணத் துறை விரிவடிந்ததை நினைத்தும் மகிழ்வதா? அல்லது அங்கே கப்பல்களில் வந்திறங்கிய குடிநீர் போதாமல் மக்கள் படும் அவஸ்தையை நினைத்து கலங்குவதா? என்ற தெரியவில்லை என்றார்கள்.
மொத்தத்தில் இது சொர்க்கமா? நரகமா? என்று தெரியாமல் அங்குள்ள மக்கள் கலங்கினார்கள்.
ஆனால் இப்போ தண்ணீர் தடாகங்கள் கட்டப் பட்டு குடிநீர் பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டது. தேவாலயமும் முற்றாக வெளிப் பட்டுள்ளது.











.

14 comments:

Chitra said...

very interesting..... !!!
Thank you for sharing this news.

தோழி said...

நல்ல தகவல்

ஜெய்லானி said...

நல்ல அருமையான தகவல் ,மற்றும் படங்கள்..

நட்புடன் ஜமால் said...

நல்ல படங்களும் கூட ...

DREAMER said...

அருமையான புகைப்பட பகிர்வு...

-
DREAMER

Rajeswari said...

good news....

thanks for sharing...

//post comment option is not visible properly..since it is light green color//

SUFFIX said...

செய்தியுடன் படங்களும் அருமை ஜெஸ்!!

தமிழ் அமுதன் said...

நல்ல தகவல்...! படங்கள் அருமை..!

தமிழ் நாட்டில் மேட்டூர் அணையில் தண்ணீர் குறையும்போது இதேபோல
ஒரு தேவாலயமும்,ஒரு நந்தி சிலையும் தோன்றும்...!

சத்ரியன் said...

ஜெஸி,

நெகிழ்வான ஒரு பதிவு...!

அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி.

மாதேவி said...

தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான தகவல்

ISR Selvakumar said...

எங்க பிடிச்சிங்க இந்த தகவலை. சுவாரசியம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கருத்துச் சொல்லி,ஓட்டுப் போட்டு தங்கள் ரசனையைத் தெரிவித்த நண்பர்கள் அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//r.selvakkumar said...

எங்க பிடிச்சிங்க இந்த தகவலை. சுவாரசியம்.//

மன்னிக்கவும். தொழில் ரகசியம். சொன்னால் வடை போயிடும்.