நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 11 March 2010

சிற்பமாய் உன்னுருவம் ..நீ சொல்லாத வார்த்தைகள்
சொன்ன அர்த்தங்கள் அதிகம்
நீ சொல்லித் தீர்த்தவை
என் நெஞ்சிலே தஞ்சம் .


உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்
உன்னை வெறுக்க முனைந்தால்
முள்ளாய்க் குத்துது மஞ்சம்.

அற்பமாய் எனை நினைத்து
நீ கொட்டிய வார்த்தைகள்
என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம் .


.

22 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை ஜெஸ்வந்தி!

இராயர் அமிர்தலிங்கம் said...

""உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்""

அருமையான வரிகள்

Madurai Saravanan said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Chitra said...

உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்
உன்னை வெறுக்க முனைந்தால்
முள்ளாய்க் குத்துது மஞ்சம்.


............வார்த்தை பூக்களை நேர்த்தியாய் தேர்வு செய்து தொடுக்கப்பட்ட பூ(பா)மாலை.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு ஜெஸ்வந்தி...

பிரியமுடன் பிரபு said...

அருமையான கவிதை

Anonymous said...

//அற்பமாய் எனை நினைத்து
நீ கொட்டிய வார்த்தைகள்
என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம்//

இது தான் காதல் நெஞ்சம்....வசவையும் கவியாக்கும் இந்த காதல்...

யாதவன் said...

ஜெஸ்வந்தி!

நல்லா கவிதை
பாடல் போல் உள்ளது
வார்த்தைகளின் ஜாலம் அழகு
தேர்ந்தெடுத்த சொற்கள் இனிது

கலா said...

அற்பமாய் எனை நினைத்து
நீ கொட்டிய வார்த்தைகள்
என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம் .\\\\\\\

இதைத்தான் இரு தலைக் கொள்ளி எறும்பாக என்பார்கள்...

ஒரு பெண்ணின் அவஸ்த்தை! மெல்லவும்
முடியாமல்.... விழுங்கவும் முடியாமல்...
தத்தளிப்பது.

வளைத்தால் வளைவதும்
வளைத்துக் கொடுப்பதும் தான்
பெண்ணிணமா??

ஜெஸி பாவம் உங்கள் கவி நாயகி
ரொம்பக் கஷ்ரபடுகிறார்

சிநேகாவை ரொம்பபபபப்பபபப்
பிடிக்குமோ!? நன்றி

ஜெஸ்வந்தி said...

//ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை ஜெஸ்வந்தி!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

ஜெஸ்வந்தி said...

//இராயர் அமிர்தலிங்கம் said...

""உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்""
அருமையான வரிகள் //

வாங்க இராயர். கருத்துக்கு மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்]]


அருமைங்க ...

ஜெஸ்வந்தி said...

//Madurai Saravanan said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள் //

வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் நன்றி சரவணன்.

ஜெஸ்வந்தி said...

//Chitra said...

.........வார்த்தை பூக்களை நேர்த்தியாய் தேர்வு செய்து தொடுக்கப்பட்ட பூ(பா)மாலை.//

சித்திராவுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி said...

//கலகலப்ரியா said...
நல்லாருக்கு ஜெஸ்வந்தி...//

நன்றி பிரியா.

ஜெய்லானி said...

///என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம் .///

நல்ல வரிகள்,

ஜெஸ்வந்தி said...

//பிரியமுடன் பிரபு said...

அருமையான கவிதை //

நன்றி பிரியமுடன் பிரபு.

ஜெஸ்வந்தி said...

//தமிழரசி said...
//அற்பமாய் எனை நினைத்து
நீ கொட்டிய வார்த்தைகள்
என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம்//

இது தான் காதல் நெஞ்சம்....வசவையும் கவியாக்கும் இந்த காதல்...//

காதலைப் பற்றி தமிழரசி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். கருத்துக்கு நன்றி தமிழ்.

ஜெஸ்வந்தி said...

//யாதவன் said...

ஜெஸ்வந்தி!
நல்ல கவிதை
பாடல் போல் உள்ளது
வார்த்தைகளின் ஜாலம் அழகு
தேர்ந்தெடுத்த சொற்கள் இனிது //

கவிதை உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி said...

கலா said
//ஒரு பெண்ணின் அவஸ்த்தை! மெல்லவும்
முடியாமல்.... விழுங்கவும் முடியாமல்...
தத்தளிப்பது.
வளைத்தால் வளைவதும்
வளைத்துக் கொடுப்பதும் தான்
பெண்ணிணமா??
ஜெஸி பாவம் உங்கள் கவி நாயகி
ரொம்பக் கஷ்ரபடுகிறார்
சிநேகாவை ரொம்பபபபப்பபபப்
பிடிக்குமோ!? நன்றி //

வாங்க கலா. கவிதை பிடிச்சிருக்கா?
சினேகாவை ரொம்பப் பிடிக்கும். அதுதான் படம் போட்டேனே!

ஜெஸ்வந்தி said...

//நட்புடன் ஜமால் said...

{உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்]]
அருமைங்க ...//

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜமால்.

ஜெஸ்வந்தி said...

//ஜெய்லானி said...

///என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம் .///
நல்ல வரிகள்,//

ரசித்த வரிகளைத் தெரிவித்ததற்கு நன்றி ஜெய்லானி.