நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Wednesday, 31 March 2010

நம்புங்கள் -இது உண்மை

இந்தியாவைச் சேர்ந்த சஞ்சு என்ற மனிதர் பிறந்ததிலிருந்து ஒரு பெரிய வயிற்றுடன் தான் இருந்தார். ஆனால் காலம் செல்லச் செல்ல அதன் அளவு பெரிதாகிக் கொண்டே போனது. 1999 ஆம் ஆண்டு அவரது 36 ஆவது வயதில், மூச்சு எடுக்க முடியாத நிலைமையில் இவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். இவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இது அவர் வயிற்றில் வளரும் ஒரு பெரிய கட்டியினால் என்று அனுமானித்தார்கள். அந்தக் கட்டி வளர்ந்து பிரிமென் தகட்டை அமுக்குவதால் அவரால் மூச்செடுக்க முடியவில்லை என்றும் தீர்மானித்தார்கள். இதனால் அக்கட்டியை அகற்ற அவசரச் சத்திர சிகிச்சை ஏற்பாடானது.


இந்த
சத்திர சிகிச்சையைச் செய்த டாக்டர் Mehta ஒரு மருத்துவ விந்தையைக் கண்டார். அவரது வயிற்றிலிருந்து இரண்டு கால்கள், பல எலும்புகள், கைகள் ,நீண்ட நகங்களுடன் விரல்கள் , என பல உடல் பாகங்களை அகற்றினார்கள்.
அவரது இரட்டைப் பிறவி ( twin brother) பிறப்பிலிருந்தே அவர் வயிற்றில் ஒரு ஒட்டுண்ணியாக வளர்ந்த விந்தை அதன் பின்னர் தெரிய வந்தது. உலகத்தில் இப்படியான சம்பவங்கள் பல இடங்களில் இதற்கு முன்னரே நடந்திருந்தாலும் இத்தனை வருடங்களுக்குப் பின்னர் அறிய வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படியான கற்பங்கள் 500,000 க்கு ஒன்றுதான் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளனவாம்.

இவ்வாறாக ஒரு கருவைச் சுற்றி மற்றைய கரு வளரும் நிலையை '' Fetus in fetu'' என்று அழைக்கிறார்கள்.


.

12 comments:

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

இதுவரை அறிந்திடாத தகவல்...! ஆச்சர்யம் அளிக்கிறது...!

தமிழ் உதயம் said...

இதே மாதிரியான ஒரு செய்தியை - நான் பல வருஷங்கள் முன் கேள்வி பட்டிருக்கிறேன்.

குலவுசனப்பிரியன் said...

எனக்கு புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி

நேசமித்ரன் said...

உங்களுக்கு மட்டும் எப்படித்தான் கிடைக்குமோ விநோத தகவல்கள்!!!!

பகிர்வுக்கு மிக்க நன்றி

sury said...

http://en.wikipedia.org/wiki/Fetus_in_fetu

இந்த தொடர்பில் இது போல் இன்னும் பல நிகழ்வுகளையும் காணவும்.

ஆண்டவன் படைப்பில் ஏற்படும் ஒரு சில விபரீதங்கள் ( departures from routines )
அதனால் அல்லல் உறும் மானிடர்கள் !!

இவையெல்லாம் கூட வினைப்பயனா !!
தெரியவில்லை.

அது சரி. தொந்தி கணபதிக்கு கூடத்தான் வயிறு பருத்து இருக்கிறது !!
ஒரு வேளை ???

சுப்பு ரத்தினம்.

கலா said...

ஐய்யய்யோ....ஜெஸி இப்படியெல்லாமா?
பார்க்கவே பயமாக இருக்கின்றது
என்ன விந்தை! நன்றிடா செல்லம்
கண்டு பிடித்து காட்டியதற்கு,!

அம்பிகா said...

விந்தையான தகவல். பகிர்வுக்கு நன்றி.

ஜெய்லானி said...

படிக்கும் போதே பயமா இருக்கு. பாவம்

மங்குனி அமைச்சர் said...

இதென்ன கொடுமை

R.Gopi said...

குழந்தையை கூடவே சுமந்தவர்...

பதிவு எப்போதும் போலவே கலக்கல்..

ரொம்ப நாள் கழிச்சு வந்ததால இப்போ சொல்றேன்... டெம்ப்ளேட் நல்லா இருக்கு...

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
###########

கவிதன் said...

பிரமிப்பாக இருக்கிறது..... அருமையான பகிர்வு ஜெஸ்வந்தி !!!