நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday 12 May 2009

கண்ணீர் வெள்ளம்


வண்ண வண்ணக் கண்ணழகன்-என்
எண்ணம் எல்லாம் நிறைந்திட்டான்.
கண்ணன் ராதை என்றெண்ணி -நான்
விண்ணை மண்ணில் கண்டிட்டேன்.

சுற்றிச் சுற்றி வந்து நின்றான்-என்
உற்றம் உறவும் மறக்க வைத்தான் .
கொற்றம் அவனே என்றெண்ணி- நான்
சுற்றுச் சூழல் மறந்து விட்டேன்.

கண்ணன் மனதில் கள்ளமடி- அவன்
எண்ணம் எல்லாம் குற்றமடி.
வண்ணம் எல்லாம் கலைந்ததெடி- இந்தப்
பெண்ணின் கண்ணீர் வெள்ளமடி.


.

6 comments:

கார்க்கிபவா said...

முதல் பின்னூட்டம் போடுவதில் மகிழ்ச்சி. வலையுலகிற்கு வரவேற்கிறேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் வரவுக்கு நன்றி

புதியவன் said...

முதல் பதிவு கவிதையோடு தொடங்கியிருக்கீங்க...தொடர்ந்து எழுதுங்கள்...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துக்கு நன்றி புதியவன்

அன்புடன் அருணா said...

நிறைய எழுதுங்க ஜெஸ்வந்தி!
அன்புடன் அருணா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் ஆதரவிற்கு நன்றி அருணா