நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday, 7 December 2009

புரிதல்

நீண்ட நேரம் தொலைபேசியில்
நீயிருந்த போதினிலே
மெய்மறந்து கிறுக்கிவிட்ட
காகிதத்தில் உன் பெயர்தான்.


எப்போதும்
அவசரம்
ஏதோ ஒரு பிரச்சனை
நேரம் பஞ்சமாகவில்லை
மற்றவர்கள் வரும்போது.


குடும்பம் என்றால் என்னவென்றும்
மனைவியைப் புரிவது
எப்படியென்றும்
அறிவுரை சொல்கிறாய் நண்பனுக்கு.


மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.


காலம் உனக்காகக்
காத்திருக்காது
கரைந்து கொண்டிருப்பது
நம் வாழ்க்கை.


( இது உரையாடல் சமூகக் கலை இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )


.

89 comments:

கலகலப்ரியா said...

ம்ம்... நடப்பது எதுவாகிலும்... நல்லதுதான்.. can feel you sis..

தண்டோரா ...... said...

நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

பாசாங்கில்லாத இல்லாத சொற்களால் நீங்கள் எழுதியிருக்கும் இந்த வரிகளில் சொல்லியிருக்கும் வலி என்னவோ செய்து விட்டது மனசை

மெய்யென்றால் வலி தீரட்டும்

பொய்யெனில் கவிதை அற்புதம்

ஹேமா said...

ஜெஸி கவிதை இயல்பாய் ஆனால் ஒருவித ஏக்கம், ஆதங்கம் ,வலி சொல்கிறதே !

S.A. நவாஸுதீன் said...

வலி வரிகளில் மட்டும் இருக்கட்டும். வாழ்க்கையில் வேண்டாம்.

அருமை ஜெஸ்

SUFFIX said...

இயல்பாய் இருக்கிறது அனைத்து வரிகளும். ஒருவருக்கு ஒருவர் உணர்வுகளை பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவத்தை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள் ஜெஸ்.

Dr.Rudhran said...

neatly written

பூங்குன்றன்.வே said...

//மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//

மனதை துளைத்த வரிகள்.அருமை.

ரங்கன் said...

அழகான வரிகள்,
ஆழமான கருத்து..

அழகான கவிதை..வாழ்த்துக்கள்!!

பின்னோக்கி said...

காலத்திற்கு ஏற்ற கவிதை. நல்லாயிருக்கு.

Anonymous said...

அண்ணா

'அடியே சொல்' எனச் கேளுங்கள் பெண்ணிவள் சொல்ல கேட்டுப்பாருங்கள் காதலை கடந்த வந்த நாட்களிலும் இருந்து வந்த காதலை உணர்வீர்கள்...

ராமலக்ஷ்மி said...

//'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//

அருமை ஜெஸ்வந்தி, கவிதையில் கொட்டிக் கிடக்கும் உணர்வுகளும். வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

அருமை அருமை! பூங்கொத்து!

ஜெனோவா said...

மிக அருமையான கவிதை .. ( இது கவிதையாக மட்டுமே இருந்துவிட மனம் விழைகிறது )
வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

புரிதலற்ற வாழ்க்கை.. புரிகிற மாதிரி அருமையாய் எளிமையாய் கவிதை..

தேவன் மாயம் said...

மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//

மனம் மடைதிறந்தார்ப் போல்.... என்ன சொல்வது!!

காவிரிக்கரையோன் MJV said...

நல்ல கவிதை. உண்மையெனில் உரைத்தவருக்கு சீக்கிரம் விளங்கட்டும். பொய்மை எனில் உங்கள் கருத்துக்கள் கச்சிதம்.

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க, வாழ்த்துகள்.

ஜெஸ்வந்தி said...

//கலகலப்ரியா said...
ம்ம்... நடப்பது எதுவாகிலும்... நல்லதுதான்.. can feel you sis..//

வாங்க பிரியா. கலகலப்பாக ஏதும் சொல்வீர்கள் என்று பார்த்தால் இப்படி மனசைத் தொட்டு விட்டீர்களே.

ஜெஸ்வந்தி said...

//தண்டோரா ...... said...
நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தண்டோரா .

ஜெஸ்வந்தி said...

//நேசமித்ரன் said...

பாசாங்கில்லாத இல்லாத சொற்களால் நீங்கள் எழுதியிருக்கும் இந்த வரிகளில் சொல்லியிருக்கும் வலி என்னவோ செய்து விட்டது மனசை
மெய்யென்றால் வலி தீரட்டும்
பொய்யெனில் கவிதை அற்புதம்//

வாங்க கவிஞரே! உங்களிடமிருந்து வந்த அற்புதம் என்ற வார்த்தை எனக்குப் பெரிய விருது. நன்றி நேசன்.

ஜெஸ்வந்தி said...

//ஹேமா said...

ஜெஸி கவிதை இயல்பாய் ஆனால் ஒருவித ஏக்கம், ஆதங்கம் ,வலி சொல்கிறதே !//

வாங்க தோழி. ஏக்கம் ,ஆதங்கம், வலி எல்லாமே தெரிந்தால் தான் உணர்ச்சியுள்ள கவிதை.
நான் சொல்வது சரிதானே?

கவிநயா said...

நுண்ணிய உணர்வுகளையும் இயல்பாய் எளிமையாய் சொல்லி விடூவதில் வல்லவராய் இருக்கிறீர்கள். படங்களும் பொருத்தம். வாழ்த்துகள் ஜெஸ்வந்தி.

Chitra said...

ஆழமான கவிதை வரிகள். அருமை.

" உழவன் " " Uzhavan " said...

//மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட//
 
இந்த வரிகளுக்குக் காட்சி அமைத்துப் பார்க்கிறேன்.. அட.. :-)

ஜெஸ்வந்தி said...

//S.A. நவாஸுதீன் said...
வலி வரிகளில் மட்டும் இருக்கட்டும். வாழ்க்கையில் வேண்டாம்.
அருமை ஜெஸ்//

ஹ ஹ ஹா. நன்றி நவாஸ்.

ஜெஸ்வந்தி said...

//SUFFIX said...
இயல்பாய் இருக்கிறது அனைத்து வரிகளும். ஒருவருக்கு ஒருவர் உணர்வுகளை பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவத்தை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள் ஜெஸ்.//

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி Suffix.

ஜெஸ்வந்தி said...

//Dr.Rudhran said...

neatly written //

உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டாக்டர்.

D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க வாழ்த்துகள்

சத்ரியன் said...

//மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//

ஜெஸி,

பெண் மனம். அருமை.!

இதில் நண்பர்கள் யாருக்கும் சேதி ஒன்னும் இல்லைதானே?

கலா said...

\\\\குடும்பம் என்றால் என்னவென்றும்
மனைவியைப் புரிவது
எப்படியென்றும்
அறிவுரை சொல்கிறாய் நண்பனுக்கு.\\\\\\இதைத்தான்!” படிக்கிறது தேவாரம்
இடிக்கிறது சிவன் கோயில்”
என்பது.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் என்கிறார்கள்!

இப்படிக் கணவன்மார்கள் கிடைப்பது
யார் கொடுத்த வரம்??

ஜெஸி அத்தனை வரிகளும் துன்பத்தின்,
வேதனையில் விளைந்த உணர்சிகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கலா said...

\\\நீண்ட நேரம் தொலைபேசியில்
நீயிருந்த போதினிலே
மெய்மறந்து கிறுக்கிவிட்ட
காகிதத்தில் உன் பெயர்தான்.\\\

அந்தப் பெண் கணவனைத் தவிர வேறு
யாரையும் தன் மனதிலும்.நினைவிலும்,
எழுத்திலும் கூட நினைக்கத் தோன்றவில்லை

ஸ்ரீஇராம ஜெயம் மாதிரி ....கணவனின் பெயரை
நினைக்கும் ஒரு பெண்ணின் எண்ணத்தை
அழகாகச் சொல்கின்ற வரிகள் அருமை.

ஜெஸ்வந்தி said...

//ரங்கன் said...
அழகான வரிகள்,
ஆழமான கருத்து..
அழகான கவிதை..வாழ்த்துக்கள்!!//

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரங்கா.

ஜெஸ்வந்தி said...

///பூங்குன்றன்.வே said...

//மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//
மனதை துளைத்த வரிகள்.அருமை.///

உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி பூங்குன்றன். மனதைத் துளைத்த வரிகளை அருமை என்கிறீர்களே! ஹ ஹ ஹா

ஜெஸ்வந்தி said...

//பின்னோக்கி said...
காலத்திற்கு ஏற்ற கவிதை. நல்லாயிருக்கு.//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பின்னோக்கி.

ஜெஸ்வந்தி said...

//தமிழரசி said...

அண்ணா
'அடியே சொல்' எனச் கேளுங்கள் பெண்ணிவள் சொல்ல கேட்டுப்பாருங்கள் காதலை கடந்த வந்த நாட்களிலும் இருந்து வந்த காதலை உணர்வீர்கள்...//

ஹ ஹ ஹா .வாங்க தமிழ். உங்க அண்ணா இதைப் படிப்பார் என்றால் நான் இங்கு எழுத முடியுமா சொல்லுங்கள்.

ஜெஸ்வந்தி said...

///ராமலக்ஷ்மி said...
//'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//

அருமை ஜெஸ்வந்தி, கவிதையில் கொட்டிக் கிடக்கும் உணர்வுகளும். வாழ்த்துக்கள்!///

வாங்க தோழி. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

அரங்கப்பெருமாள் said...

//அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//

மனசுல வச்சுக்காதீங்க, சொல்ல நினைச்சத சொல்லிடனும்.இல்லன்னா மனம் பாரமா இருக்கும்.

அருமையான கவிதை.

சந்தான சங்கர் said...

காலம் உனக்காகக்
காத்திருக்காது
கரைந்து கொண்டிருப்பது
நம் வாழ்க்கை.//

நீ உன் நேரங்களை
கரைத்துக்கொண்டிருக்கின்றாய்
நான் உன் நினைவுகளில்
கனத்துக்கொண்டிருக்கின்றேன்.
ஒற்றை சொல்லில்
உதிர்வேனோ
உறைவேனோ....!!

வாழ்த்துக்கள் தோழி..

ஜெஸ்வந்தி said...

//அன்புடன் அருணா said...
அருமை அருமை! பூங்கொத்து!//

வாங்க அருணா. வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஜெஸ்வந்தி said...

//ஜெனோவா said...
மிக அருமையான கவிதை .. ( இது கவிதையாக மட்டுமே இருந்துவிட மனம் விழைகிறது )
வாழ்த்துக்கள்//
வரணும் ஜெனோவா. உங்கள் முதல் வரவிலேயே காட்டும் அன்பு மனதைத் தொடுகிறது.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஜெஸ்வந்தி said...

//ரிஷபன் said...
புரிதலற்ற வாழ்க்கை.. புரிகிற மாதிரி அருமையாய் எளிமையாய் கவிதை..//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷிபன்.

ஜெஸ்வந்தி said...

///தேவன் மாயம் said...

மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//
மனம் மடைதிறந்தார்ப் போல்.... என்ன சொல்வது!!///

என்ன டாக்டர் இது? மௌனமாய் நிற்கிறாள் அங்கே! நீங்கள் மனம் மடை திறந்தது போல் என்கிறீர்கள்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தேவா.

ஜெஸ்வந்தி said...

//காவிரிக்கரையோன் MJV said...
நல்ல கவிதை. உண்மையெனில் உரைத்தவருக்கு சீக்கிரம் விளங்கட்டும். பொய்மை எனில் உங்கள் கருத்துக்கள் கச்சிதம்.//

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. உண்மை, பொய் என்று எதையும் பிரிக்க முடியாது. உண்மை பாதி, பொய் பாதி தான் கவிதையாகிறது.

ஜெஸ்வந்தி said...

//யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க, வாழ்த்துகள்.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாத்ரா.

ஜெஸ்வந்தி said...

//கவிநயா said...
நுண்ணிய உணர்வுகளையும் இயல்பாய் எளிமையாய் சொல்லி விடூவதில் வல்லவராய் இருக்கிறீர்கள். படங்களும் பொருத்தம். வாழ்த்துகள் ஜெஸ்வந்தி.//

வாங்க தோழி. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி said...

//Chitra said...

ஆழமான கவிதை வரிகள். அருமை.//

கவிதையின் ஆழம் புரிந்ததில் மகிழ்ச்சி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.

ஜெஸ்வந்தி said...

///" உழவன் " " Uzhavan " said...

//மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட//
இந்த வரிகளுக்குக் காட்சி அமைத்துப் பார்க்கிறேன்.. அட.. :-)///

வாங்க உழவன். காட்சி அமைப்பு வேறு செய்கிறீர்களா? அடுத்த கவிதைக்கு படம் தேடித் தரச் சொல்கிறேன்..

ஜெஸ்வந்தி said...

//D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க வாழ்த்துகள்//

வாழ்த்துக்களுக்கு நன்றி அசோக்.

ஜெஸ்வந்தி said...

/சத்ரியன் said...

//மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//

ஜெஸி,
பெண் மனம். அருமை.!
இதில் நண்பர்கள் யாருக்கும் சேதி ஒன்னும் இல்லைதானே?//

வாங்க சத்ரியன். கருத்துக்கு மிக்க நன்றி. நான் யாருக்கும் எந்த சேதியும் சொல்லவில்லை நண்பரே!.தொப்பி பொருத்தமாக இருந்தால் போட்டுக் கொள்ளுங்கள்.ஹ ஹ ஹா

ஜெஸ்வந்தி said...

///அரங்கப்பெருமாள் said...
//அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//
மனசுல வச்சுக்காதீங்க, சொல்ல நினைச்சத சொல்லிடனும்.இல்லன்னா மனம் பாரமா இருக்கும்.
அருமையான கவிதை.///

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரங்கப் பெருமாள்.

ஜெஸ்வந்தி said...

//சந்தான சங்கர் said...

காலம் உனக்காகக்
காத்திருக்காது
கரைந்து கொண்டிருப்பது
நம் வாழ்க்கை.//

நீ உன் நேரங்களை
கரைத்துக்கொண்டிருக்கின்றாய்
நான் உன் நினைவுகளில்
கனத்துக்கொண்டிருக்கின்றேன்.
ஒற்றை சொல்லில்
உதிர்வேனோ
உறைவேனோ....!!
வாழ்த்துக்கள் தோழி..///

வரணும் சந்தான சங்கர். என் கவிதையின் சுருக்கத்தை நீங்கள் சொல்லி விட்டீர்கள். கருத்துக்கு மிக்க நன்றி.

ஜெஸ்வந்தி said...

//கலா said...

\\\\குடும்பம் என்றால் என்னவென்றும்
மனைவியைப் புரிவது
எப்படியென்றும்
அறிவுரை சொல்கிறாய் நண்பனுக்கு.\\\\\\

இதைத்தான்!” படிக்கிறது தேவாரம்
இடிக்கிறது சிவன் கோயில்”
என்பது.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் என்கிறார்கள்!
இப்படிக் கணவன்மார்கள் கிடைப்பது
யார் கொடுத்த வரம்??
ஜெஸி அத்தனை வரிகளும் துன்பத்தின்,
வேதனையில் விளைந்த உணர்சிகள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
வாங்க கலா. உங்கள் உணர்வு பூர்வமான கருத்துக்கு மிக்க நன்றி.
நான் இங்கு சொல்ல வந்த கருத்து வேறு. அந்தப் பெண்ணின் சின்னச் சின்ன உணர்வுகள் கணவருக்கு தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரையில் அவர் தன் மனைவியைப் புரிந்து கொண்டு விட்டதாக நினைத்து தன் நண்பருக்கு அறிவுரை வேறு சொல்கிறார்.
வாழ்த்துக்கும் நன்றி கலா.

ஜெஸ்வந்தி said...

///கலா said...

\\நீண்ட நேரம் தொலைபேசியில்
நீயிருந்த போதினிலே
மெய்மறந்து கிறுக்கிவிட்ட
காகிதத்தில் உன் பெயர்தான்.\\

அந்தப் பெண் கணவனைத் தவிர வேறு
யாரையும் தன் மனதிலும்.நினைவிலும்,
எழுத்திலும் கூட நினைக்கத் தோன்றவில்லை
ஸ்ரீஇராம ஜெயம் மாதிரி ....கணவனின் பெயரை
நினைக்கும் ஒரு பெண்ணின் எண்ணத்தை
அழகாகச் சொல்கின்ற வரிகள் அருமை.///
ஹ ஹ ஹா. இப்படி நீங்கள் எடுத்துக் கொண்டீர்களா.? நான் இந்தப் பந்தியில் சொல்லாத சில வரிகள் இருக்கின்றன. வாசகர்களின் கற்பனைக்கு அதை விட்டிருந்தேன். இங்கே நீங்கள் சொன்னது பாதி தான். சொல்லாததை சொல்கிறேன்.
தான் மெய் மறக்கும் போது தன் கணவரின் பெயரைக் கிறுக்குவது போல, தன் கணவர் மெய் மறந்து கிறுக்கிய காகிதத்தில் தன் பெயர் இருக்கும் என்று எதிர் பார்த்து ஏமாந்து விடுகிறாள் அவள். இப்படி ஒரு சின்ன விடயம் இவளுக்கு ஒரு ஏமாற்றம் தரும் என்று அறியாத அந்தக் கணவன் அவளை முற்றும் புரிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.இப்போ புரிகிறதா?

thenammailakshmanan said...

//மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.//

அருமை ஜெஸ்வந்தி
வெற்றியடைய வாழ்த்துக்கள்

சக்தி த வேல் said...

நல்லா இருக்கு..! நண்பரே...!

ஜெஸ்வந்தி said...

//thenammailakshmanan said...

/மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட./

அருமை ஜெஸ்வந்தி
வெற்றியடைய வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

ஜெஸ்வந்தி said...

//சக்தி த வேல் said...
நல்லா இருக்கு..! நண்பரே...!//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

வி.என்.தங்கமணி, said...

// அப்படியே கொட்டிவிட.//
நெற்றியடியாகச் சொல்கிறீர்கள்.
வார்த்தைக்கு வலு அதிகம்தான்.
நன்றி ஜெய் வாழ்க வளமுடன்.

Vishnu... said...

கவிதை மிக அருமை ..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களோடு

விஷ்ணு ..

S.A. நவாஸுதீன் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெஸ்

ஜெஸ்வந்தி said...

//வி.என்.தங்கமணி, said...

/ அப்படியே கொட்டிவிட./
நெற்றியடியாகச் சொல்கிறீர்கள்.
வார்த்தைக்கு வலு அதிகம்தான்.
நன்றி ஜெய் வாழ்க வளமுடன்.//
வாங்க தங்கமணி. உண்மைதான் .வார்த்தைகளுக்கு வலு அதிகம் தான்.அதைத்தான் என் கவிதையும் சொல்கிறது. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

ஜெஸ்வந்தி said...

//Vishnu... said...

கவிதை மிக அருமை ..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களோடு//

வாங்க விஷ்ணு. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஷ்ணு.

ஜெஸ்வந்தி said...

//S.A. நவாஸுதீன் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெஸ்//

வாங்க நவாஸ். வாழ்த்துக்களுக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

மக்கா,கலக்குறீங்களே..

ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

’சொல்’ என்று சொன்னால் கொட்டி விடுவீர்கள் என சொல்லியே இங்கு கொட்டி விட்டீர்கள் கெட்டி நீங்கள்

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...

மக்கா,கலக்குறீங்களே..
ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்.வெற்றி பெற வாழ்த்துக்கள்!//

வாங்க ராஜாராம். எப்போ வந்து படிக்கப் போகிறீர்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.உங்க பாணியில் எழுதச் சொல்லி நீங்க தந்த ஆலோசனை தான் இந்தக் கவிதையாக வந்தது. வாழ்த்துக்கள் உங்களுக்குத்தான்மக்கா.

ஜெஸ்வந்தி said...

//நட்புடன் ஜமால் said...

’சொல்’ என்று சொன்னால் கொட்டி விடுவீர்கள் என சொல்லியே இங்கு கொட்டி விட்டீர்கள் கெட்டி நீங்கள்//

வாங்க ஜமால். காணாமல் போன ஜமால் என் வலயத்தில் எட்டிப் பார்ப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னைக் கெட்டி என்று சொன்ன முதல் வாசகர் நீங்கள். மறக்க முடியாத நாள் ஆக்கி விட்டீர்கள். ஹ ஹஹா

சக்தி த வேல்..! said...
This comment has been removed by the author.
சக்தி த வேல்..! said...

எழுபதாவது பின்னூட்டமும் என்னுடையது..! பரிசு உங்களுக்குத்தான்..!

R said...

Nalaruku.. uhikka mudikirathu..

ஜெஸ்வந்தி said...

//சக்தி த வேல்..! said...
எழுபதாவது பின்னூட்டமும் என்னுடையது..! பரிசு உங்களுக்குத்தான்..!//

பரிசு பெரிய விடயமில்லை நண்பரே, உங்களுக்கு பிடித்ததே போதும் எனக்கு.

ஜெஸ்வந்தி said...

//R said...
Nalaruku.. uhikka mudikirathu..//

பெயர் தெரியாத பதிவரே! வலை உலக்குக்குப் புதியவர் என்று அறிகிறேன். உங்கள் வரவு நல் வரவாகட்டும்.

Vidhoosh said...

very beautiful poem. best of luck.\
-vidhya

தியாவின் பேனா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி said...

//Vidhoosh said...
very beautiful poem. best of luck.\
-வித்யா//

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி வித்யா.

ஜெஸ்வந்தி said...

//தியாவின் பேனா said...
வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி தியாகுவின் பேனா.

பிரியமுடன்...வசந்த் said...

ஜெயிப்பீங்க ஜெஸ்ஸம்மா

உங்கள் உணர்வுகள் கவிதையா வந்துருக்கு...

ரொம்ப பிடித்தது...வாழ்த்துக்கள்...!

ட்ரீட் கொடுக்கணும் சரியா...?

ஜெஸ்வந்தி said...

//பிரியமுடன்...வசந்த் said...

ஜெயிப்பீங்க ஜெஸ்ஸம்மா
உங்கள் உணர்வுகள் கவிதையா வந்துருக்கு...
ரொம்ப பிடித்தது...வாழ்த்துக்கள்...!
ட்ரீட் கொடுக்கணும் சரியா...?//

ஹ ஹ ஹா. உங்கள் ரசனைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி வசந்த்.

Nundhaa said...

என்னமோ போங்க

ஜெஸ்வந்தி said...

//Nundhaa said...

என்னமோ போங்க//

எனக்கு நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்று புரிய வில்லையே.!அலுத்துக் கொண்டது போல் தோன்றுகிறது.

Nundhaa said...

அலுப்பு தான் எனினும் வெற்றி பெற வாழ்த்துகள் ... உங்கள் சமீபத்திய கவிதைக்கு என் பின்னூட்டத்தைப் பார்க்கவும்

ஜெஸ்வந்தி said...

கவிதை அலுப்பாக இருந்தாலும் வெற்றி பெற வாழ்த்தும் உங்கள் நல்ல மனதுக்கு நன்றி.

விவசாயி said...

//காலம் உனக்காகக
காத்திருக்காது
கரைந்து கொண்டிருப்பது
நம் வாழ்க்கை//

kavithai thannai mulumaiyaga velipaduthi nirkathunnu engyo padicha ninavu....ana unga kavithaiya padikkum pothu athu romba sarinnu paduthu....evlo aalamana varigal.... valthukkal jeswanthi...

ஜெஸ்வந்தி said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

rohinisiva said...

//காலம் உனக்காகக
காத்திருக்காது
கரைந்து கொண்டிருப்பது
நம் வாழ்க்கை//-otumotha pen samugathen korikaiyai, kuraiyai solivitergal! thanks mam!
good job!

prize next, but i insist every man, should read this!

நாவிஷ் செந்தில்குமார் said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

ராம்குமார் - அமுதன் said...

நல்ல கவிதை... பல பெண்களின் மனக்குமுறலை படம்பிடித்த கவிதை.... வாழ்த்துக்கள்...

ஜெஸ்வந்தி said...

நன்றி rohinisiva ,நாவிஷ் செந்தில்குமார் ,ராம்குமார் - அமுதன்