என் பிரிய மகள் பிரியங்காவை -நான்
பிரசவித்த நாள் தொடங்கி- அவள்
செய்து விட்ட சில்மிசங்கள்
மெய்யாகவே நினைவிருக்கு.
முத்துப்போல் ஒரு பல் வந்ததும்
முதற்சொல் 'மூவா' என்பதும்-அவள்
முதலடி யெடுத்து வைத்ததும்
குறிப்பெடுத்து வைத்திட்டேன்.
காலம் பறந்து விட்டது
குடும்பம் பெருகி விட்டது
சேர்ந்து வந்த சுமைகள் எல்லாம்-என்
சிந்தை நிறைந்து நின்றது.
கிடு கிடுவென படியிறங்கும்
சுட்டி மகள் அனிதாவை
திடுக்கிட்டுப் பார்க்கிறேன்-இவள்
நடக்கத் தொடங்கியதறியாமல்.
.
48 comments:
என் பிரிய மகள் பிரியங்கா
சுட்டி மகள் அனிதாவை
ரெண்டு பொண்னா?
அழகு ஜெஸ்..
இந்த புகைப்படங்களை எங்கு மக்கா எடுக்கிறீர்கள்?மனதை கவ்வுகிறது!
இதே போல் சென்ற வாரம் ஒரு புகைப்படம் எடுத்தேன் ஹாஜரை - முதன் முதலில் மாடிப்படி தானா ஏறிய போது.
---------
பிரியங்கா வந்திருந்த வேலை வேறு சிந்தனைகள் இருக்க வாய்ப்பு மிகக்குறைவு ஆனால் அனிதா வந்திருக்கும் சமயம் வேலைகளும் ஜாஸ்தி சிந்தனைகள் சென்றவிடங்களும் ஜாஸ்தி அதனால இருக்கும் - இது ஒன்றும் மிகப்பெரிய குற்றமில்லை. - இதோ உங்கள் அந்த பிரியங்காவின் மேல் வைத்த அன்பு போலவே அனிதா மீது இருப்பதற்கு உங்கள் இந்த கவிதையே சாட்சி.
மிக அழகு..
!! SUPPER !!
:)))
அருமையான கவிதை!
ஏன் இந்த பாரபட்சம்
காரனம் சொல்ல வில்லையே?
இது சகஜம்தான் ஜெஸ். இதற்காக அன்பில் குறையிருக்குமோ என்று அஞ்சத்தேவையில்லை. குறையவும் செய்யாது என்பதற்கு இந்தக்கவிதயே சாட்சி.
//அண்ணாமலையான் said...
என் பிரிய மகள் பிரியங்கா
சுட்டி மகள் அனிதாவை
ரெண்டு பொண்னா?//
வாங்க அண்ணாமலையான். நீங்கள் புதியவர் அல்லவா? எனக்கு மூன்று பெண்கள் நண்பரே.
//பா.ராஜாராம் said...
அழகு ஜெஸ்..இந்த புகைப்படங்களை எங்கு மக்கா எடுக்கிறீர்கள்?மனதை கவ்வுகிறது!//
வாங்க ராஜாராம். என் படங்கள் எல்லாம் கூகிள் தாத்தா தந்ததுதான்.
பாசத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க
ஜெஸ்ஸம்மா
அந்த குழந்தையின் ஜொள் பளீர்....
100 பின் தொடர்பவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஜெஸ்ஸம்மா...
//நட்புடன் ஜமால் said...
இதே போல் சென்ற வாரம் ஒரு புகைப்படம் எடுத்தேன் ஹாஜரை - முதன் முதலில் மாடிப்படி தானா ஏறிய போது.//
இதெல்லாம் பொக்கிஷங்கள் ஜமால்.
---------
,//பிரியங்கா வந்திருந்த வேலை வேறு சிந்தனைகள் இருக்க வாய்ப்பு மிகக்குறைவு ஆனால் அனிதா வந்திருக்கும் சமயம் வேலைகளும் ஜாஸ்தி சிந்தனைகள் சென்றவிடங்களும் ஜாஸ்தி அதனால இருக்கும் - இது ஒன்றும் மிகப்பெரிய குற்றமில்லை. - இதோ உங்கள் அந்த பிரியங்காவின் மேல் வைத்த அன்பு போலவே அனிதா மீது இருப்பதற்கு உங்கள் இந்த கவிதையே சாட்சி.//
அன்பில் பார பட்சம் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு ஒதுக்கிய நேரம் தான் பார பட்சமாகி விட்டது. கருத்துக்கு மிக்க நன்றி ஜமால்.
//Rajeswari said...
மிக அழகு..//
கருத்துக்கு நன்றி ராஜேஸ்வரி.
//Sivaji Sankar said...
!! SUPPER !!
:))) //
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர்.
//இராயர் அமிர்தலிங்கம் said...
அருமையான கவிதை!
ஏன் இந்த பாரபட்சம்
காரனம் சொல்ல வில்லையே?//
வாங்கோ இராயர். எங்கே ஆளைக் கானோம் என்று நினைத்தேன்.கவிதையைப் படியுங்கோ. கேள்விக்குப் பதில் புரியும். பிந்திப் பிறந்ததது தான் ஒரே காரணம்.
ரொம்ப சந்தோஷம்..
//S.A. நவாஸுதீன் said...
இது சகஜம்தான் ஜெஸ். இதற்காக அன்பில் குறையிருக்குமோ என்று அஞ்சத்தேவையில்லை. குறையவும் செய்யாது என்பதற்கு இந்தக்கவிதயே சாட்சி.//
வாங்க நவாஸ். கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.
//பிரியமுடன்...வசந்த் said...
பாசத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க ஜெஸ்ஸம்மா
அந்த குழந்தையின் ஜொள் பளீர்....//
வாங்க வசந்த். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.
//100 பின் தொடர்பவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஜெஸ்ஸம்மா...//
என் வலயத்தையும் 100 பேர் தொடர்கிறார்கள் பாருங்கள். நம்ப முடியவில்லை....
படமும் அழகு; உங்கள் கவிதையும் அழகு.
ஜெஸி அழகு படம்.முதல் குழந்தையில் இருக்கும் ஆர்வமும் அக்கறையும் இரண்டாவது குழந்தையில் இருப்பதில்லையா ?அல்லது குடும்ப பாரம் கூடக் கூடச் சோர்வா?
”முதல் குழந்தையில் இருக்கும் ஆர்வமும் அக்கறையும் இரண்டாவது குழந்தையில் இருப்பதில்லையா ?அல்லது குடும்ப பாரம் கூடக் கூடச் சோர்வா?”
நிச்சயம் இல்லே. எந்த தாய்க்கும் பாசத்தில், அக்கறையில் எண்ணிக்கை வித்தியாசம் இல்லை. கவிதைக்காக சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
தாயின் அன்பின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கப் போவதில்லை. ஜெஸ்வந்தி அக்கா.
கவிதை மிக அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..
//அம்பிகா said...
படமும் அழகு; உங்கள் கவிதையும் அழகு.//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ம்ம்.. என்ன சொல்ல வர்றீங்க..? நல்லா இருக்கு..:)
///கிடு கிடுவென படியிறங்கும்
சுட்டி மகள் அனிதாவை
திடுக்கிட்டுப் பார்க்கிறேன்-இவள்
நடக்கத் தொடங்கியதறியாமல்.///
ம்ம் இருப்பதை இயல்பாய் சொல்லி இருக்கீங்க ..!
முதல் அனுபவம் எப்போதும் நினைவில் நிற்க கூடியது..!
அதனால் அடுத்தது நமக்கு வியப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்..!
ஆனால்...! அதை பாரபட்சம் என்று எப்படி சொல்வது...!
காலங்கள் உருண்டோடும் போது அதனுடன்
நாங்களும் அடித்துப் பிடித்து உருளுகின்றோம்
பல காரணங்கள் சொல்லலாம்.....
நாம்
நவநாகரீக உலகத்தில் போக்கில் முதல் இருந்த
அன்பு,பாசம்,அரவணைப்பு,பராபரிப்பு,நோட்டம்,
எதிர்பார்ப்பு,காத்திருப்பு,கவனிப்பு,அக்கரை எல்லாவற்றையும்
தொலைத்து ...ஆசை,மோகம் இதற்கு..{மேலும்,மேலும் பணம் தேவை
கணவன்,மனைவி உழைக்க வேண்டும்}மேல் கண் வைத்து
சுழலும் போது பெற்ற கண்மணிக்காய்... ஒதுக்க நேரமில்லை.
பல சுமைகள் மத்தியில்......
இயந்திரமாய் இயந்திரகெதியில் குடும்பம்,சூழ்நிலை,சுற்றமென
{நேரமின்மையால்}மறந்து ,மரத்து சுழல்வதை...சுட்டும் வரிகள்
இது பாராபட்சமில்லை....கவனிப்பின்மை
ஒருதாய் ஆணும்,பெண்ணுமாய்{உழைப்பு}
மாறிமாறி அல்லாடும் போது...தொலைந்தது ,தொலைத்தது
கவனிப்பைத்தான்
நன்றி தங்கமே! உங்கள் தாய்மைச் சிந்தனைக்கு!!
பாரபட்சமல்ல; இன்றைய வாழ்க்கைச் சூழல்
இதை பாராபட்சமோ எனக் குற்ற உணர்வாக எடுத்துக் கோள்ளத் தேவையில்லை என்றாலும் கூட அப்படி எடுக்கும் போது அங்கும் தாய்மைதான் மிளிர்கிறது. அருமையான் கவிதை. புகைப்படமும் அழகு. வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி.
//ஹேமா said...
ஜெஸி அழகு படம்.முதல் குழந்தையில் இருக்கும் ஆர்வமும் அக்கறையும் இரண்டாவது குழந்தையில் இருப்பதில்லையா ?அல்லது குடும்ப பாரம் கூடக் கூடச் சோர்வா?//
முதல் குழந்தை உங்கள் முழு நேரத்தையும் பெறும் அதிஸ்டம் பெறுகிறது. குடும்பம் பெருக கடைசிக் குழந்தை உங்கள் நேரத்தின் ஒரு பங்கைத் தான் பெறுகிறது. உங்கள் நேரத்தைப் பல விடயங்களில் பங்கிடும் போது சில விடயங்கள் தப்பித் தான் போய் விடுகின்றன. நான் எப்படி இதைத் தப்ப விட்டேன் என்று வருந்துவது என் வழக்கம். அதைத் தான் இந்தக் கவிதையில் சொன்னேன். அக்கறை, ஆர்வம் எல்லாம் ஒன்றுதான்.
//அண்ணாமலையான் said...
”முதல் குழந்தையில் இருக்கும் ஆர்வமும் அக்கறையும் இரண்டாவது குழந்தையில் இருப்பதில்லையா ?அல்லது குடும்ப பாரம் கூடக் கூடச் சோர்வா?”
நிச்சயம் இல்லே. எந்த தாய்க்கும் பாசத்தில், அக்கறையில் எண்ணிக்கை வித்தியாசம் இல்லை. கவிதைக்காக சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன்.//
சரியாகச் சொன்னீர்கள் அண்ணாமலையான். 'தொடர்ந்துவந்த பல சுமைகள் என் சிந்தை நிறைத்ததால் அவள் எழுந்து நடந்ததை கவனிக்க மறந்து விட்டேன் என்று திடுக்கிட்டுப் போனேன்.' என்று தான் கவிதை சொல்கிறது. அக்கறை இல்லை என்று யார்சொன்னார்கள்.
//tamiluthayam said...
தாயின் அன்பின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கப் போவதில்லை. ஜெஸ்வந்தி அக்கா.//
வாங்க தம்பி. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//கமலேஷ் said...
கவிதை மிக அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..//
வாங்க கமலேஷ் .உங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
//கலகலப்ரியா said...
ம்ம்.. என்ன சொல்ல வர்றீங்க..? நல்லா இருக்கு..:)//
என்னம்மா இது? புரியாத கவிதை நன்றாக இருக்கு என்று கருத்துப் போட்டிருக்கிறாய்.
ஹ ஹ ஹா.
//ஜீவன் said...
///கிடு கிடுவென படியிறங்கும்
சுட்டி மகள் அனிதாவை
திடுக்கிட்டுப் பார்க்கிறேன்-இவள்
நடக்கத் தொடங்கியதறியாமல்.///
ம்ம் இருப்பதை இயல்பாய் சொல்லி இருக்கீங்க ..!
முதல் அனுபவம் எப்போதும் நினைவில் நிற்க கூடியது..!
அதனால் அடுத்தது நமக்கு வியப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்..!
ஆனால்...! அதை பாரபட்சம் என்று எப்படி சொல்வது...!//
ஒரு தாய்க்கு எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரித் தானே! அந்தப் பிள்ளையின் இடத்தில் இருந்து பார்த்தால் இது பார பட்சம் தானே?
இது நல்லா இருக்கு ... ஆனால் இன்னும் செதுகியிருக்கலாம் ... கவிமொழியாக இல்லாமல் வெறும் statement ஆக இருப்பது ஒரு குறையே
பிள்ளைகளின் எண்ணிக்கை கூடுகையில் நேரமும் பகிர்ந்தளிக்கப் பட வேண்டியதாகிறது இயற்கைதான் ஜெஸ்வந்தி. ஆனால் தாயுள்ளம் இப்படித்தான் வருந்தும். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
கவிதை அழகு - படமும் அழகு, கருத்தும் அழகு ..தலைப்புதான்.............
//Kala said...
காலங்கள் உருண்டோடும் போது அதனுடன்
நாங்களும் அடித்துப் பிடித்து உருளுகின்றோம்
பல காரணங்கள் சொல்லலாம்.....
நாம்
நவநாகரீக உலகத்தில் போக்கில் முதல் இருந்த
அன்பு,பாசம்,அரவணைப்பு,பராபரிப்பு,நோட்டம்,
எதிர்பார்ப்பு,காத்திருப்பு,கவனிப்பு,அக்கரை எல்லாவற்றையும்
தொலைத்து ...ஆசை,மோகம் இதற்கு..{மேலும்,மேலும் பணம் தேவை
கணவன்,மனைவி உழைக்க வேண்டும்}மேல் கண் வைத்து
சுழலும் போது பெற்ற கண்மணிக்காய்... ஒதுக்க நேரமில்லை.
பல சுமைகள் மத்தியில்......
இயந்திரமாய் இயந்திரகெதியில் குடும்பம்,சூழ்நிலை,சுற்றமென
{நேரமின்மையால்}மறந்து ,மரத்து சுழல்வதை...சுட்டும் வரிகள்
இது பாராபட்சமில்லை....கவனிப்பின்மை
ஒருதாய் ஆணும்,பெண்ணுமாய்{உழைப்பு}
மாறிமாறி அல்லாடும் போது...தொலைந்தது ,தொலைத்தது
கவனிப்பைத்தான்
நன்றி தங்கமே! உங்கள் தாய்மைச் சிந்தனைக்கு!!//
வாங்க கலா. என் குட்டிக் கவிதைக்கு நீங்கள் தந்த அழகான விளக்கம் என்னை வியக்க வைக்கிறது. இதை விட அழகாக என்னால் எழுத முடியாது. நன்றிதோழி.
//" உழவன் " " Uzhavan " said...
பாரபட்சமல்ல; இன்றைய வாழ்க்கைச் சூழல்//
வாங்க உழவன். உண்மைதான் நண்பரே! யோசிக்க வேண்டிய விடயமல்லவா!
//ராமலக்ஷ்மி said...
இதை பாராபட்சமோ எனக் குற்ற உணர்வாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் கூட அப்படி எடுக்கும் போது அங்கும் தாய்மைதான் மிளிர்கிறது. அருமையான் கவிதை. புகைப்படமும் அழகு. வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி.//
நீங்கள் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி தோழி.
//Nundhaa said...
இது நல்லா இருக்கு ... ஆனால் இன்னும் செதுக்கியிருக்கலாம் ... கவிமொழியாக இல்லாமல் வெறும் statement ஆக இருப்பது ஒரு குறையே//
வாங்க நந்தா. உங்கள் வெளிப்படையான கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எதுகை மோனை ஒன்றையும் காணோம் என்கிறீர்களா? இனிமேல் முயற்சிக்கிறேன்.
//கவிநயா said...
பிள்ளைகளின் எண்ணிக்கை கூடுகையில் நேரமும் பகிர்ந்தளிக்கப் பட வேண்டியதாகிறது இயற்கைதான் ஜெஸ்வந்தி. ஆனால் தாயுள்ளம் இப்படித்தான் வருந்தும். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//
வாங்க கவிநயா. புரிதலுக்கு நன்றி தோழி.
//Chitra said...
கவிதை அழகு - படமும் அழகு, கருத்தும் அழகு ..தலைப்புதான்.............//
வாங்க சித்ரா. தலைப்பு தப்பாகத் தெரிகிறதா? ஒருவருக்கு ஒன்று செய்து மற்றவருக்கு அது செய்யாவிட்டால் அதை என்னவென்று சொல்வோம்? பாரபட்சம் என்றுதானே? அதைத் தான் தலைப்புசொல்கிறது.
கவிமொழி என்று நாம் சொன்னதை தயவு செய்து எதுகை மோனை என்று மட்டும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் ... I was stressing more on the form or formlessness of poetic language that you clothe your poems with ...
//Nundhaa said...
கவிமொழி என்று நாம் சொன்னதை தயவு செய்து எதுகை மோனை என்று மட்டும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் ... I was stressing more on the form or formlessness of poetic language that you clothe your poems with ...//
வாங்க நந்தா. ஏதோ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள். உண்மையில் எனக்கு இதெல்லாம் தெரியாது. உங்கள் profile இல் படித்தேன்.'' எப்போதும் உன்னைவிட மேலே ஒருவன் இருப்பான். உன்னைவிடக் கீழும் ஒருவன் இருப்பான்'' என்று எழுதியிருக்கிறீர்கள். நான் இரண்டாவது ரகம் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.
ஜெஸி,
அதானே..? ஏன்?
Post a Comment