நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday, 30 March 2010

எனக்குப் பிடித்த பெண்கள்

பெண்கள் தினத்தை யொட்டி ஆரம்பிக்கப் பட்ட ஒரு சங்கிலித் தொடர் பதிவிது. இன்னும் வலையுலகில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இங்கு உங்களுக்குப் பிடித்த பத்துப் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். நான் இம்முறை தப்பி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்புடன் பா.ரா. மாட்டி விட்டு விட்டார்.


பிடித்த பெண்கள் என்றதும் மனதில் அம்மம்மா, அம்மா, என் பெண்கள் தான் வருகிறார்கள். ஆனால் இந்தத் தொடருக்கு சில விதி முறைகள் இருப்பதால் அவர்களைப் பற்றிச் சொல்ல முடியாதாம்.

அதனால் முதலில் விதி முறைகளைப் பார்ப்போம்.

1.. உறவினர்களுக்கு இங்கு இடமில்லையாம்.

2.. வரிசை முக்கியமில்லையாம் ( நல்லதாய்ப் போய் விட்டது. இல்லாவிட்டால் அதற்கு வேறு திண்டாட வேண்டும்.)

3.. வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் நல்லமாம். ( முயற்சிக்கிறேன்.


ரோசா பார்க்ஸ் -----மனித உரிமைப் போராளி
(Civil Right activist )

பஸ் வண்டியில் பயணித்தபோது தனது இருக்கையை ஒரு வெள்ளை அமெரிக்கனுக்குத் துணிவுடன் தர மறுத்ததினால் பெரும் புரட்சி செய்தவர்.அதன் காரணத்தினால் கைது செய்யப் பட்டு , தண்டம் கட்டச் சொல்லப் பட்ட போது மனித உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கிப் போராடியவர். சுதந்திரத்திற்காக போராடும் எவருக்கும் இவர் ஒரு எடுத்துக் காட்டு. 2005 ஆம் ஆண்டு தனது 92 ஆவது வயதில் இவர் இறந்து போனாலும் இவர் பெயர் இன்னும் நிலைத்து நிற்கிறது.

கல்பனா
சாவ்லா

Kalpana Chawla -Aero Space Engineer)

விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி. தனது இருபதாவது வயதில் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கே விண்வெளிப் பொறியியலாளராகக் கற்றுத் தேர்ந்தவர். இரண்டாவது தடவை இவர் பயணித்த விண்கலம் வெடித்துச் சிதறியதால் உலகை உலுக்கி வெற்றி மரணம் அடைந்தவர்.


தாயார் தெரேசா - சமூக சேவகி
(Mother Teresa )

இவரைப் பற்றி அறியாதவரில்லை. சுருக்கமாகச் சொன்னால் பெண்மைக்கே பெருமை தேடித் தந்த தன்னலமற்ற சேவகி. தனது எண்பத்தி ஏழாவது வயதில் இறக்கும் வரை மனித குலத்துக்கு தொண்டாற்றுவதையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்.






சுதா சந்திரன்
- நாட்டிய தாரகை. நடிகை
(Sutha Chandran )



இவர் ஒரு காலை விபத்தில் இழந்த பின்னரும் தளராமல், பொய்க் கால் பூட்டி தனது நடனக் கலையைத் தொடர்ந்தவர். இவர் கதை படமாக்கப் பட்ட ' மயூரி '' படத்தில் அந்தப் பாத்திரத்தில் அவராக நடித்து நடிகை யானவர். அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.




மனோரமா - நகைச்சுவை நடிகை

(Manorama)

தனது தனித்துவமான நடிப்பினால் பல சந்ததிகளை மகிழ்வித்தவர்.
சிரிக்க வைக்க மட்டுமல்ல, கலங்க வைக்கவும் என்னால் முடியும் என பல முறை நிரூபித்தவர்









ரீனா ரேர்நெர்
(Tina Turner)- --- பாடகி, நடன மாது, நடிகை )


''Queen of the rock 'n' roll''

தற்போது இவரின் வயது 70 . சுமார் 50 வருடங்களாக கலையுலகில் தனக்கென ஒரு பெயர் பதித்தவர். இவரது 200 மேற்பட்ட இவரது இசைத் தட்டுக்கள் இன்றுவரை விற்பனை யாகியுள்ளன. எட்டு முறை கிராமி விருது பெற்றவர்.




ஒப்ராஹ்
வின்பிரே

Oprah Winfrey '' Successful and beautiful African American Icon''

'' Respected and admired public figure today ''

இவரை எந்தத் துறையில் சேர்ப்பது என்று திண்டாட்டமாக விருக்கிறது. நடிகை, வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் ,பெயர் பெற்ற தொலைக் காட்சி அமைப்பாளர். இவரது ' ஒப்ராஹ் வின்பிரே ஷோ' (Oprah Winfrey TV Show) மிகப் பிரசத்தமானது. மிசிசிப்பியில் மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்து தனது ஒன்பதாவது வயதில் ஒரு உறவினரால் கற்பழிக்கப் ,பட்டு பல விதமாக இன்னல் பட்ட இந்தப் பெண் தனது பிபிலிய நம்பிக்கையினாலும், ஆழ்ந்து கற்ற அறிவினாலும் , வாழ்க்கை தந்த ஒப்பற்ற அனுபவத்தினாலும், ஒப்பிட முடியாத விவாதத் திறமையினாலும் உலகப் புகழ் பெற்றுச் சிகரத்தை அடைந்தவர். இவரைப் பற்றிச் சொல்லப் போனால் ஒரு கட்டுரையே எழுத வேண்டியிருக்கும்.



தாயார் மற்றில்டா --கன்னியாஸ்திரி

Mother matilda

சின்ன வயதில் எனக்குக் கல்வி கற்றுத் தந்த என் அபிமான ஆசிரியை. அன்பையும் கண்டிப்பையும் ஒரே நேரத்தில் காட்ட முடியும் என்பதை இவரிடம் கற்றுக் கொண்டேன். என் மனதில் படிந்திருக்கும் இவர் முகத்தை உங்களுக்குக் காட்ட ,என்னிடம் அவர் படம் எதுவும் இல்லை என்பது பெரும் கவலை.



பி. சுசீலா-------- எனது அபிமானப் பாடகி




தனது தெய்வீகக் குரலால் பல மனங்களை ஈர்த்தவர். நான் மட்டும் விதி விலக்கா? என்ன ?
குளியலறையில் மட்டும் நானும் அவராக மாறப் பிரயத்தனம் பண்ணுவேன். கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி ..........






நி. ரவீந்திரன் --என் ஆருயிர் தோழி



முற்பிறப்பில் நான் செய்த பலனால் எனக்கு இப்பிறப்பில் அறிமுக மான என் தோழி. அன்பினால் என்னைக் கட்டிப் போட்டவள். நான் துவண்ட போதெல்லாம் தோள் தந்தவள்.
இந்தப் பொல்லாத உலகில் இருக்கப் பிடிக்காமலோ என்னவோ இந்த உலகை விட்டு அவசரமாகப் புறப்பட்டவள்.




பத்துப் பெண்களைப் பற்றிச் சொல்லியாச்சு. இனி இந்தத் தொடரை எழுத அன்புடன் அருணாவையும், அண்ணாமலையானையும் அன்புடன் அழைக்கிறேன்.









21 comments:

தமிழ் உதயம் said...

சுதா சந்திரன் - நாட்டிய தாரகை. நடிகை(Sutha Chandran )


மறந்த பெயர்.
மறக்க கூடாத நபர்.
தன்னம்பிக்கைக்கு மிகப் பெரிய உதாரணம்.

இராகவன் நைஜிரியா said...

அழகான தொகுப்பு

நேசமித்ரன் said...

தேர்ந்த ஆளுமைகளின் நேர்த்தியான தொகுப்பு

துறை சார்ந்த விடிவெள்ளிகள்
நிறைவான வரிசையில்

Chitra said...

அருமையாக நீங்கள் தொகுத்துள்ள விதமே, அசத்தல். பாராட்டுக்கள்.

சத்ரியன் said...

ஜெஸ்ஸி,

உங்கள் மனம் கவர்ந்த (பிடித்த)அனைத்து பெண்களும் எனக்கௌம் பிடிக்கும்.

குறிப்பாக,

சுதா சந்திரனை அவரது தன்னம்பிக்கைக்காக பெரிதும் பிடிக்கும்.

அம்பிகா said...

தேர்வுகள் அருமை. பி.சுசீலா பற்றிய குறிப்பும் அருமை.

ஹுஸைனம்மா said...

சுதா சந்திரன் - எப்படி மறந்தது? சாதனைப் பெண், எவ்வளவு வியந்திருக்கிறோம், எத்தனை பேருக்கு தூண்டுகோல் அவர், இல்லையா? நன்றி.

பா.ராஜாராம் said...

அருமையான, ஆளுமையான தொகுப்பு ஜெஸ்!

ஆக,ஆண்களை பேசலை...பிடிதாவுல பேசலாம் என்பது கேட்க்கிறது...) நல்லாருங்கோ! :-))

கலா said...

உவாவ்... ஜெஸி
மிக அருமை அத்தனை பேரையும்
எனக்கும் மிகப் பிடிக்கும்
பொருத்தமானவர்களும் கூட...

உங்கள் தோழியை நினைத்து மனக்
கவலை ஜெஸி

அனைத்தும் பிரமாதம் நன்றி

அண்ணாமலையான் said...

அழகான தொகுப்பு....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி தமிழ் உதயம்.
நன்றி இராகவன் நைஜீரியா
நன்றி நேசமித்திரன்
நன்றி சித்ரா
நன்றி சத்ரியன்
நன்றி அம்பிகா
நன்றி ராஜாராம்
நன்றி கலா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி ஹுஸைனம்மா.
நன்றி அண்ணாமலையான்

தமிழ் அமுதன் said...

தொகுப்பு அருமை.!

sury siva said...

அன்பு, அறிவு,ஆக்கம், இன்பம், ஈகை, உழைப்பு, ஊக்கம்,
எழில், ஏற்றமுடனோர் எழுச்சி, பிறர்
ஐயுறா வாழ்வு, ஈசனின்
ஒளிப்பிழம்பாய்
ஓங்கு புகழுடன்
பெளர்ணமி நிலவாய்
பரிணமித்திருப்பதை
என் சொல்ல !! என்னே சொல்ல !!

பெண்ணினத்திற்குப்
பெருமை சேர்க்கும்
பொற்றாமரைகள் இவர்கள்.

மீனாட்சி பாட்டி.

கலகலப்ரியா said...

good selection... :D

R.Gopi said...

நல்ல தேர்வு ஜெஸ்ஸ்ஸ்....

மனோரமா தவிர எல்லாருமே ஓகே தான்...

தத்துபித்துனு ஒளர்றதுல மனோரமாவுக்கு இணை அவரே...

சுதா சந்திரன் நல்ல தேர்வு...

வாழ்த்துக்கள் ஜெஸ்....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...

நல்ல தேர்வு ஜெஸ்ஸ்ஸ்....
மனோரமா தவிர எல்லாருமே ஓகே தான்...
தத்துபித்துனு ஒளர்றதுல மனோரமாவுக்கு இணை அவரே...
சுதா சந்திரன் நல்ல தேர்வு...
வாழ்த்துக்கள் ஜெஸ்....//
வாங்க கோபி.உங்களுக்கு மனோரமாவைப் பிடிக்காதா.? தத்துப் பித்தென்று உளறியே ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் அவர். மீதி அனைவரையும் பிடித்ததில் மகிழ்ச்சி. உங்களுக்குப் பிடித்த ரஜனியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி ஜீவன்
நன்றி மீனாச்சிப் பாட்டி
நன்றி கலகலப் பிரியா

கவிதன் said...

உலகப்புகழ் பெற்ற பெண்களை வகைப்படுத்தியிருக்கீங்க ..... எனக்கு நல்ல்லா தெரிஞ்ச மற்றும் பிடிச்ச அன்னை தெரசா , மனோரமா ஆச்சி அப்புறம் நம்ம கல்பனா சாவ்லா இடம் பெற்றிருக்காங்க ...... அருமையா இருக்கு பதிவு.

ராஜ நடராஜன் said...

அருமையான தேர்வு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி கவிதன்.

நன்றி ராஜ நடராஜன் .