இந்த மாதம் 22 ந் திகதி உலகத் தண்ணீர் தினமாகப் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. இந்த வருடம் மக்களிடையே சுத்தமான நீரின் அவசியத்தை உணர்த்தும் முகமாக பல நாடுகளில் பல இயக்கங்கள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. பதிவுலகில் எனக்கு முன்னரே பலர் இந்தத் தலைப்பில் எழுதி விட்டாலும் இன்னும் எழுத பல விடயங்கள் இருக்கின்றன என்பது தெரிகிறது.
இன்றைய மனித குலத்தை எதிர் நோக்கும் பிரச்சனையில் நீர்த் தட்டுப் பாடு பாரிய பிரச்சனையாகக் கருதப் படுகிறது. நீரில்லையெனில் உயிரில்லை. அதனால் இதனால் விளையக் கூடிய அபாயங்களை பலரும் அறிந்து ,மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி உண்டாகி, எமது வாழ்க்கை முறைகளை எமது வருங்காலச் சந்ததிகளின் நலன் கருதி நாம் மாற்றியமைக்கா விட்டால், இன்னும் ஒரு சில வருடங்களில் உலகச் சனத் தொகையில் பாதி, நீருக்குத் திண்டாடும் நிலைமை வரலாமெனக் கணக்கிடுகிறார்கள்.
இதில் சுவாரசிய விடயமென்னவென்றால் ,எமது இயற்கை வளமான நீர் ,மனிதர் அறிந்த காலத்திலிருந்து ஒரே அளவில்தான் இருக்கிறது. ஆனால் பல்வேறு வடிவங்களில், நீராகவோ,பனிக் கட்டியாகவோ , நீராவியாகவோ மாறிக் கொண்டு இருக்கிறது. வளர்ந்து வரும் சனத் தொகையும் , அதன் விளைவால் அதிகரித்த விவசாய நிலங்களும், விஞ்ஞான வளர்ச்சியும், அது விளைவித்த இரசாயனக் கழிவுகளும் எனப் பல காரணிகளினால் குடிப்பதற்கு ஒரு துளி நீர் இல்லாமல் இறக்கும் நிலைமைக்கு பல கோடி மக்கள் தள்ளப் பட்டுள்ளார்கள். இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு குவளை நீரில்லாமல் ஒரு வருடத்தில் சுமார் இரண்டு மில்லியன் குழந்தைகள் இறக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய உண்மையாகும்.
வளர்ந்து வரும் நாடுகளில் குழாய்கள் பழுதடைவதாலும், சட்ட ரீதியில்லாத நீர் விநியோகங்களாலும், வேணுமென்றே செயற்படும் நாட்டுப் பற்றல்லாத மக்களின் செயல்களாலும், ஊழல்களாலும் ,காலநிலை மாற்றத்தால் விளைந்த வரட்சியினாலும் விலை மதிப்பில்லா எமது இயற்கை வளமான நீர் போதுமான அளவில் சாதாரண மக்களுக்குக் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர். கிட்டத்தட்ட மில்லியன் பெண்களும் குழந்தைகளும் பல மணி நேரம்
பல மைல்கள் நடந்து குடி நீர் சுமக்கிறார்கள். சுத்தமான நீர் கிடையாத காரணத்தால் பல நோய்களால் பாதிக்கப் பட்டு பணபலம் குறைந்த நாடுகள் பொருளாதார உயர்வு காண முடியாமல் அல்லல் படுகின்றன.
குடி நீர் வளமும் , முறையான கழிவகற்றும் முறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாகக் காணப் படுகிறது. மேலேயுள்ள வரைபு உலக சராசரி நீர் வசதிக்கும் , வளர்ந்து வரும் நாடுகளின் வசதிக்குமான ஒரு ஒப்பீடாகும்.
நீர் மாசடைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1 . point source -மாசுகள் நேரடியாக நீர் வட்டத்தை அடைவது
2. non -point source -மறை முகமாக நீர் மாசடைவது.
அனேகமாக பல நாடுகளில் அரசாங்கங்களினாலும், வெவ்வேறு அமைப்புகளினாலும், மாசுக்கள் தொழிற்சாலைகளால் கடல் நீரில் நேரடியாகக் கலக்கப் படுவது இப்போது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மறை முகமாக மாசுகள் நீரை வந்தடைவதைத் தடுப்பது மிகக் கடினமான விடயம். எனவே சாதாரண மக்களுக்கு இந்த வகையான மாசடைதல் பற்றிய அறிவை ஊட்டுதல் மிகவும் முக்கியமாகும்.
1. கிருமி நாசினிகள்
இவை மண்ணின் மேலாக மழை நீரினால் அடித்துச் செல்லப் பட்டு குளங்களிலும், கடலிலும் கலக்கின்றன.இதனால் நீரை மாசாக்குவதுடன், நீர் வாழ் உயிரினங்களின் அழிவுக்கும், இரசாயனப் பொருட்கள் உணவுச் சங்கிலியில் சேர்வதற்கும் வழி வகுக்கின்றன.
2 இயற்கை/ செயற்கை உரம்
இவை நீர் வாழ் அல்காக்களையும், நீர்த் தாவரங்களையும் துருதமாக வளரப் பண்ணி, நீர் ஓடும் பாதைகளை அடைக்கின்றன. இதனால் சூரிய ஒளி நீரின்ஆழத்தைச் சென்றடையாமல் தடுக்கப் படுகின்றது.இதனால் உயிரினங்கள் இறந்து, அவை அழுகும்போது நீரிலுள்ள பிராண வாயுவை உபயோகிப்பதால்,சில பகுதிகளில் நீரில் எந்த உயிரினங்களும் வாழ முடியாத பிரதேசங்களை ( Dead Zone )உருவாக்குகின்றன.
3. எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்கள்
எண்ணெய்க் கப்பல்கள் கடலில் தாழும் போதெல்லாம் அந்தச் செய்தி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகி ,அதன் விளைவால் கடல் நீர் மாசுபட்டு விட்டதென்பதை பலரும் அறிந்து கொண்டோம். ஆனால் நாளாந்தம் எங்கள் காரிலிருந்தும், பெற்றோல் பங்கர்களிலிருந்தும் ,தொழிற்சாலைகளிலிருந்தும் ,கப்பல்களிலிருந்தும் வழிந்தோடும் பெற்றோலியப் பொருட்கள் கடலை யடைந்து உண்டாக்கும் அபாயம் அதைவிட பன்மடங்கானது என்பதை பலரும் அறிய மாட்டோம்.
4. தொழிற்சாலைகளினால் வெளிவரும் இரசாயனக் கழிவுகள்.
கதிர் வீச்சுள்ள (radio active substance)அபாயகரமான பக்க விளைவுப் பொருட்கள் ஆழ் நிலத்தில் சுரங்கங்களில் ( underground injection wells) தாக்கப் படுகின்றன. இவை நில நீரைச் சென்றடையும் அபாயமும் எம்மை எதிர் நோக்கியுள்ளது.
5. உலோகச் சுரங்கங்கள்.
நிலத்தின் அடியில் பாதுகாப்பாக அடைக்கப் பட்டிருக்கும் பலவகை உலோகங்கள், சுரங்கங்கள் அமைக்கும் போது வெளிப் படுத்தப் பட்டு, மழை நீரினால் அடித்துச் செல்லப் பட்டு நீர்ச் சக்கரத்தை அடைகிறது. தங்கச் சுரங்கங்களில் இருந்து சயனைற் கழுவிக் செல்லப் படுவதால் இது ஒரு பாரிய பிரச்சனையாகும்.
6. பிளாஸ்டிக்
சுத்தமாகிய நீரை குறைந்த விலையில் விநியோகிக்க மனிதன் பிளாஸ்டிக் போத்தல்களில் அதை அடைத்து தண்ணீர் பஞ்சத்தைக் குறைத்தான். அந்தப் பிளாஸ்டிக் இப்போ அவனைக் 'குண்டு வெடி' போல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
குடித்து விட்டு மனிதர் வீசியெறிந்த போத்தல்களும் , மற்றும் மீன் வலை போன்ற பல பிளாஸ்டிக் பொருட்களும் சமுத்திரங்களின் அடியில் பல மைல்களுக்கு ஒரு குப்பைப் பிரதேசங்களை ( gabbage patch) உருவாக்கியுள்ளன. இந்த பிளாஸ்டிக் நாளடைவில் நுண்ணிய துகள்களாகி நீர்வாழ் உயிரினங்களால் உண்ணப் பட்டு அவற்றின் எமன்களாகின்றன. இறக்க முன் வலையில் பிடிபடும் மீன்கள் மிக இலகுவாக எங்கள் உணவுச் சக்கரத்தில் பிளாஸ்டிக்கை சேர்க்கின்றன. இவை புற்று நோயை உண்டாக்குமென மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Sea creatures that are killed by plastic readily decompose but the plastic does not. It remains in the eco- system to kill again and again .உலக அளவில் பெரிதாக எதுவும் எம்மால் செய்ய முடியாவிட்டாலும் நம்மால் செய்யக்கூடிய சில முயற்சிகள்
1 தண்ணீரை அளவோடு பாவியுங்கள்.
எங்கள் மேலதிக பாவனை .பிறருக்கு தண்ணீர் தட்டுப் பாட்டை உண்டாக்கி விடும்.
2 உங்கள் வீட்டில் பின் முற்றத்திலோ , வாய்க்காலிலோ அல்லது கழிவறையிலோ .என்ன எறிகிறீர்கள் என்று அவதானியுங்கள்.எண்ணெய் ,பெயிண்ட் போன்றவற்றை நீர்ச் சக்கரத்தில் சேர வழி வைக்காதீர்கள்.
3 விவசாயம் செய்பவர்கள் சரியான அளவில் இரசாயனக் கலவைகளை உபயோகியுங்கள்.
4 .. வீட்டுத் தோட்டங்களில் மரங்களை நாட்டுங்கள். அவை இரசாயனப் பொருட்களை வடித்தெடுக்கும் வடியைப் போன்றவை.
5. குளங்கள், நதிகள், கடல்களில் குப்பையைக் கொட்டாதீர்கள். கடற்கரையில் நீங்கள் எறியும் குப்பைகள் ஒரு நாள் நீங்கள் குடிக்கும் நீரிலோ அல்லது உங்கள் சந்ததி குடிக்கும் நீரிலோ வந்து சேரப்போகிறது.
இன்று சுத்தமான நீரென நீங்கள் கடையில் வாங்கிக் குடிக்கும் போத்தல் நீர், இந்த உலகில் மில்லியன் வருடங்களுக்கு முன்னரே இருந்திருக்கிறது. அது பல தாவரங்களின் தண்டு வழியாக ஓடியிருக்கிறது. பல வாகனங்களைக் கழுவியிருக்கிறது. நீங்கள் நனைந்து மகிழ்ந்த மழையாக இருந்திருக்கிறது. மாட்டுக்குக் குடிக்க வைத்த நீராக இருந்திருக்கிறது. ஒருவேளை கோவிலில் சாமியைக் குளிப்பாட்டிய நீராகவும் இருந்திருக்கும். மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ட்ய்னசோ அருந்திய நீராகக் கூட இருக்கலாம் . யாருக்குத் தெரியும்?
இந்த உண்மையை எல்லோரும் உணர்ந்தோமானால் எம்மைச் சுற்றயுள்ள காற்றையோ, மண்ணையோ, நீரையோ மாசடைய விட மாட்டோம்.
'' வினை விதைத்தால் வினை அறுப்போம்
தினை விதைத்தால் தினை அறுப்போம்''
ஒரு நாள் உங்கள் பிள்ளைகளோ , பேரப் பிள்ளைகளோ உங்களிடம் வந்து ''அப்பு/ஆச்சி , இன்னும் சில வருடங்களில் இப்படியெல்லாம் ஆகப் போகுது என்று உங்கள் காலத்தில் கண்டு பிடித்தார்களே! அதைத் தடுக்க நீ என்ன செய்தாய்?'' என்று கேட்கும்போது வெட்கித் தலை குனிந்து நிற்காமல் இருப்பதற்காகவேனும் எம்மை மாற்றிக் கொண்டு, '' உங்களுக்கு சுத்தமான நீர் கிடைப்பதற்காக நான் இத்தனை செய்தேன் '' என்று தலை நிமிர்ந்து , மார் தட்டிச் சொல்ல எங்களைத் தயார் படுத்திக் கொள்வோம்.
உலக வங்கியின் அண்மைய மதிப்பீடின்படி உலகம் முழுவது தேவையான குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் US$ 600 பில்லியன் தேவைப்படும் எனத் தெரிகிறது.
தண்ணீருக்காக பல நாடுகளில் குழந்தைகள் படும் பாட்டையும் முன்னேறிய நாடுகளில் மக்கள் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு அள்ளித் தெளிக்கும் பணத்தையும் ஒப்பிட்டு ஒரு வீடியோ பார்த்தேன். அதனை உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன்.
என்னை இத்தொடருக்கு அழைத்த தோழி மாதேவிக்கு என் மனமார்ந்த நன்றி.
அவரது விரிவான பதிவை இங்கே நீங்களும் படிக்கலாம்.
உங்கள் கருத்துகளையும் நண்பர்களுக்குச் சொல்வதற்கு நான் கலகலப் பிரியா, கவிநயா இருவரையும் அழைக்கிறேன்.
.
39 comments:
aawwww... ty jeswanthi... shall write something... let me read your post first... (itho vanthutten..)
அடேங்கப்பா ஒரு assignment எழுதிட்டீங்க... இனிமே நாம என்ன எழுத போறோம்.. பார்ப்போம்.. :)
விரிவாக எழுதி அசத்திட்டீங்க. இத்தனை விளக்கங்களுக்கு பின்னும், நீங்கள் நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் தகவல்கள் சேகரித்திரிப்பது தெரிகிறது. பாராட்டுக்கள்.
ஒரு டாக்டர் பட்டமே தரலாம் .நிறைய தகவல்கள் .வாழ்த்துக்கள்.....
சமூக நோக்குடன் எழுதப்பட்ட 'சத்தமான ராகம்'.
நல்லெண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்.
சிரத்தையுடன் தகவல்களைச் சேகரித்து தந்திருக்கும் பதிவு சிந்திக்க வைக்கும் ஜெஸ்வந்தி. வாழ்த்துக்கள்.
ஏகப்பட்ட தகவல்கள்.. நன்றி
மிக விரிவாகவும், நிறைந்த தகவல்களுடன் உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது.
"கோவிலில் சாமியைக் குளிப்பாட்டிய நீராகவும் இருந்திருக்கும். மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ட்ய்னசோ அருந்திய நீராகக் கூட இருக்கலாம். "
நல்ல கருத்து.
அறிவுருத்தலுடன் கூடிய சிறப்பான பதிவு ஜெஸ்ஸம்மா...
//'' வினை விதைத்தால் வினை அறுப்போம்
தினை விதைத்தால் தினை அறுப்போம்''
//
:(
நிறைந்த தகவல்களுடன் மிகவும் விரிவாக,சிறப்பாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
நல்லா எழுதியிருக்கிங்க ...
நாம தான் முயற்சி செய்யனும்.
நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்..நன்றி.வாழ்த்துக்கள்
விரிவான,தேவையான பதிவு ஜெஸி
நன்றி.
ஜெஸ்ஸியக்கா,
இந்த உலகத்துல யாருக்குமே பிடிக்காத ஒன்னு அறிவுரை.
நம்ம தாத்தா வள்ளுவன் சொல்லியே 2000 வருஷமாச்சி. ஒருத்தரும் கேட்ட மாதிரி தெரியலியே.
என்னமோ போங்க. நம்ம விதைக்குற வினைய நம்ம சந்ததிங்க அறுவடை செய்யப்போறாங்களேன்னு தான் வருத்தமாயிருக்கு.
அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி
இதுபற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை.
//கலகலப்ரியா said...
அடேங்கப்பா ஒரு assignment எழுதிட்டீங்க... இனிமே நாம என்ன எழுத போறோம்.. பார்ப்போம்.. :) //
இன்னும் எழுதாமல் இருக்கும் விடயம் நிறைய இருக்கு பிரியா. திரும்ப எழுதினால் கூட பரவாயில்லை. சொல்லும் விதமும், படிக்கும் மனிதர்களும் வெவ்வேறாக இருக்குமே!
//Blogger Chitra said...
விரிவாக எழுதி அசத்திட்டீங்க. இத்தனை விளக்கங்களுக்கு பின்னும், நீங்கள் நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் தகவல்கள் சேகரித்திரிப்பது தெரிகிறது. பாராட்டுக்கள்.//
நன்றி சித்ரா. அண்மையில் BBC program ஒன்று பார்த்தேன்.அதில் நான் சேகரித்த விடயங்களைத்தான் எழுதினேன். படங்களுக்கு மட்டும் தான் கொஞ்சம் தேட வேண்டியிருந்தது.
//தருமி said...
சமூக நோக்குடன் எழுதப்பட்ட 'சத்தமான ராகம்'.
நல்லெண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்.//
உங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தருமி.
// ஜெய்லானி said...
ஒரு டாக்டர் பட்டமே தரலாம் .நிறைய தகவல்கள் .வாழ்த்துக்கள்.....//
இது எத்தனை பாரிய விடயமென்பதை தெரிவிக்கும் விதத்தில் எழுதிய பதிவு.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஜெய்லானி .
//ராமலக்ஷ்மி said...
சிரத்தையுடன் தகவல்களைச் சேகரித்து தந்திருக்கும் பதிவு சிந்திக்க வைக்கும் ஜெஸ்வந்தி. வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றி தோழி. உங்களது தண்ணீர் தினப் பதிவும் படித்தேன்.விபரமாக இருந்தது . சில தகவல்கள் சிலருக்குப் புதிதாக இருக்கலாம். எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று விடாமல் விளக்கமாகச் சொல்ல நினைத்தேன்.
//அண்ணாமலையான் said...
ஏகப்பட்ட தகவல்கள்.. நன்றி //
நன்றி அண்ணாமலையான்.
//Dr.எம்.கே.முருகானந்தன் said...
மிக விரிவாகவும், நிறைந்த தகவல்களுடன் உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது.
"கோவிலில் சாமியைக் குளிப்பாட்டிய நீராகவும் இருந்திருக்கும். மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ட்ய்னசோ அருந்திய நீராகக் கூட இருக்கலாம். "
நல்ல கருத்து.//
வாங்க டாக்டர். வந்து படித்ததற்கு மிக்க நன்றி.தெரிந்து செய்பவர்களைத் திருத்த முடியாவிட்டாலும் தெரியாமல் செய்பவர்களுக்கு தகவல் கொடுப்பது மிகவும் முக்கியம் என்று தோன்றியது.
ஜெஸ்வந்தி, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அப்பா எவ்வளவு விபரங்கள் ஜெஸ்!!
கிரேட்!
#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.
########
// பிரியமுடன்...வசந்த் said...
அறிவுருத்தலுடன் கூடிய சிறப்பான பதிவு ஜெஸ்ஸம்மா...//
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிப்பா.
// மாதேவி said...
நிறைந்த தகவல்களுடன் மிகவும் விரிவாக,சிறப்பாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி மாதேவி.
// நட்புடன் ஜமால் said...
நல்லா எழுதியிருக்கிங்க ... நாம தான் முயற்சி செய்யனும்.//
வாங்க ஜமால். மனிதர் திருந்தா விட்டால் அரசாங்கம் 'புதுமை' செய்ய முடியாது.
//மங்கை said...
நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்..நன்றி.வாழ்த்துக்கள் //
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மங்கை.
// கலா said...
விரிவான,தேவையான பதிவு ஜெஸி. நன்றி.//
வாங்க கலா. மிக்க நன்றி.
//சத்ரியன் said...
ஜெஸ்ஸியக்கா,
இந்த உலகத்துல யாருக்குமே பிடிக்காத ஒன்னு அறிவுரை.
நம்ம தாத்தா வள்ளுவன் சொல்லியே 2000 வருஷமாச்சி. ஒருத்தரும் கேட்ட மாதிரி தெரியலியே. என்னமோ போங்க. நம்ம விதைக்குற வினைய நம்ம சந்ததிங்க அறுவடை செய்யப்போறாங்களேன்னு தான் வருத்தமாயிருக்கு.//
தெரிந்தும் தப்பு செய்பவர்களைத் திருத்த முடியாது சத்ரியன். தெரியாமல் பண்ணுகிறவர்களுக்கு விபரம் சொல்லிப் பார்க்கலாம். நம்ம சந்ததி படப் போகும் பாட்டை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
//றமேஸ்-Ramesh said...
அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ்.
//உழவன்" "Uzhavan" said...
இதுபற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை.//
கருத்துக்கு நன்றி உழவரே. நீங்கள் அனுப்பிய மெயிலும் இதே கருத்தை ஆழமாக வலியுறுத்தி இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
// பா.ராஜாராம் said...
அப்பா எவ்வளவு விபரங்கள் ஜெஸ்!! கிரேட்! //
கருத்துக்கு மிக்க நன்றி பா. ரா. நலந்தானே?
http://kalakalapriya.blogspot.com/2010/03/blog-post_29.html
அன்புக்கு நன்றி ஜெஸ்வந்தி...
GREAT.......!!!
Thanks for the link Priya. I have already read it.
Thanks for your comment Shan.
Post a Comment