அண்மையில் பத்திரிகையில் நான் படித்த செய்தியொன்று என்னை அதிர வைத்தது. பெண்கள் தினத்தையொட்டி பலரும் ஆணாதிக்கம் பற்றியும், பெண் அடிமைத்தனம் பற்றியும் சக்கை போடு போடும் இந்த நேரத்தில் இந்தப் பதிவு அவசியம் தேவையென்றும் தோன்றியது. என்னைப் போலவே பலரும் இந்த விடயத்தை முதன் முதலாக அறிந்து மிரண்டு போகலாம். நாகரீகம் என்ற பெயரில் பல வளமான நாடுகளில் நடைபெறும் இந்த அநாகரீகங்கள் நாங்கள் ஒரு கலிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறுகிறது.
ஜப்பானிய உணவான சூஷி ( Sushi) பற்றியறிவீர்களா? சில பிரபல நட்சத்திர ஹோடேல்களில் இந்த உணவு , கிட்டத்தட்ட நிர்வாணமான பெண்ணின் உடல்மேல் பரிமாறப் படுகிறது. ஜப்பானில் பல வருடங்களுக்கு முன்பாகவே இந்த வழக்கம் இருந்தாலும் சரியாக எப்போ இந்தக் காட்டு மிராண்டித் தனம் ஆரம்பித்ததென்பது தெரியவில்லை. இதற்கு காரணமாக Sushi உடல் வெப்ப நிலையில் பரிமாறப் படும் போது அதன் உருசி பேணப் படுவதாகச் சொல்கிறார்கள். ஜப்பானில் தொடங்கிய இந்த வியாதி இப்போ நாகரீகமாக மேற்கத்திய நாடுகளுக்கும் பரவி விட்டது. நான் படித்த செய்தி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப் பட்ட இத்தகைய ஹோட்டல் பற்றியதுதான் .
பேரழகுள்ள மாடல்கள் இந்த வகையில் தங்களைத் தாழ்த்தி ,கேவலம் எச்சி இலையாகி பெண்மையை விலை பேசி விற்கிறார்கள். இதற்காகவே அந்த ஹோடேல்களைத் தேடிச் செல்லும் கேடுகெட்ட பணக் காரக் கும்பல் இந்த உணவைப் பெண்ணுடலில் பரிமாற பத்து மடங்கு அதிகமாகப் பணம் செலுத்துகிறார்கள்.
இதை எதிர்த்துப் போராடும் பல பெண்ணினவாதிகள் இந்த வழக்கத்தை நிறுத்த முயன்றாலும் ரகசிய அறிவித்தல்களோடு வெவ்வேறு நட்சத்திர ஹோடேல்களில் இந்த கேளிக்கை விருந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சீனா மட்டும் இதனை எதிர்த்து சட்டம் கொண்டுவந்து, முற்றாக ஜப்பானிய நிர்வாண Sushi ஹோடேல்களைக் களைந்தெறிந்துள்ளது . மற்றைய நாடுகள் சீனாவைப் பின் தொடர்ந்து எப்போ இதனை சட்ட விரோதமாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
(ஒரு நண்பர் தந்த கருத்தினை ஏற்று இங்கே நான் பிரசுரித்த சில படங்களை அகற்றி அதற்கான இணைப்புகளைத் தந்திருக்கிறேன்.)
http://en.wikipedia.org/wiki/Nyotaimori
http://images.google.co.uk/imgres?imgurl=http://i.dailymail.co.uk/i/pix/2008/10_06/SushiBodyMPA_650x4
.
27 comments:
இப்படியும் பெண்கள்?
இப்படியும் ஒரு பெண்!!
http://abidheva.blogspot.com/2010/03/blog-post_12.html
அதாகப்பட்டது இப்பூலோகத்திலே மிகவும் கேவலமான பிராணி நாமதாங்கோ, ஆற்றறிவின் அற்புதங்கோ.:(
சிங்கையில் சுஷி இருக்கு இப்படியில்லை என்றே நினைக்கிறேன் (போனதில்லை)
நாய்க்கு குரங்குக்கு எல்லாம் சட்ட தைச்சு போடுறான் மனிசன்
அப்படிபட்ட மனிசனா இப்படி
கேவலம் படு கேவலம்
ஆவதும் பெண்ணாலே ! மனிதன் அழிவதும் பெண்ணாலே !!
என்ற என்றோ கேட்ட சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது.
நிற்க. ஒரு நாகரீகம் அழிகிறது என்பதற்கு முதல் அடையாளம் அ ந் நாகரீகத்தில் உள்ள
பெண்கள் தத்தம் கோட்பாடுகளை அல்லது வரையறைகளைத் தாமே முன்வந்து கடப்பதுவே என்
கீதை சொல்லுகிறது.
உங்கள் மன வேதனை எனக்குப் புரிகிறது. இருந்தாலும்
இந்த படமெல்லாம் உங்கள் பதிவில் போட்டுத்தான் ஆகவேண்டுமா !! ஒரு லின்க் கொடுத்து
விட்டிருக்கலாமே !!"நல்லதோ கெட்டதோ உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்." என்று எழுதியிருந்ததால் எனக்குத் தோன்றியதை எழுதிவிட்டேன்.
மீனாட்சி பாட்டி.
உங்கள் கருத்துக்கு நன்றி Suri . இந்த விடயத்தின் ஆழத்தைச் சொல்வதற்கு ஒரு சில படங்கள் தேவை என்று தோன்றியதால் இவற்றை தெரிந்தெடுத்துத் தான் போட்டேன். நீங்கள் சொலதும் சரிதான். இரண்டு படங்களை எடுத்து விட்டு லிங்க் போடுகிறேன். உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி.
psst...
என்னவென்று சொல்ல.. வக்கரித்து போய் விட்டது..
என்னங்க நீங்க? நாங்க வயிற்றின் மத்திய புள்ளியில் முட்டை பொரித்து - பம்பரம் விட்டு - என்னவோ பண்ணிட்டோம். அவங்க அவங்க வசதிப்படி............... இங்கே பொங்கி எழாமல், சகித்து கொள்ளவில்லையா? சகிப்புத் தன்மை பெண்களுக்கு அதிகம். :-(
இந்தச் செய்தியை நானும் சில நாட்களுக்கு முன்னால் சில தினசரிகளில் படித்திருக்கிறேன். பெண்ணை படுக்க வைத்து உணவு பரிமாறுவது போல ஆண்களையும் அப்படிச் செய்யலாமே. செய்ய மாட்டார்கள். அதுதான் ஆணாதிக்க உலகம். இந்த காட்டுமிராண்டிததனத்தை செய்யும் இவர்களை எல்லாம் என்ன செய்வது.
எப்படி எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்குறாங்க :-(
நன்றி தேவன் மாயம்.
நன்றி ஷங்கர்.
நன்றி ஜமால்.
நன்றி கலகலப் பிரியா
நன்றி அருணா
நன்றி யாதவன்.- நம்ப முடியாத விடயம் தான்.
நன்றி உழவன்.
நன்றி ரிஷிபன்.
நன்றி சித்ரா. நீ வேறு வாயைக் கிளறிக் கொண்டு.
//மதுரைக்காரன் said...
இந்தச் செய்தியை நானும் சில நாட்களுக்கு முன்னால் சில தினசரிகளில் படித்திருக்கிறேன். பெண்ணை படுக்க வைத்து உணவு பரிமாறுவது போல ஆண்களையும் அப்படிச் செய்யலாமே. செய்ய மாட்டார்கள். அதுதான் ஆணாதிக்க உலகம். இந்த காட்டுமிராண்டிததனத்தை செய்யும் இவர்களை எல்லாம் என்ன செய்வது.//
இல்லை . ஆண்கள் உடல் மேலும் உணவு பரிமாறும் வழக்கம் ஜப்பானில் உண்டு. அது பிரபலமில்லாமல் போய் விட்டது. இதை ஆணாதிக்கம் என்று சொல்ல முடியாது. அண்மையில் ஒரு ஆங்கில ப்ளாக் இல் படித்தேன். விடுமுறைக்கு ஜப்பான் போகும் அழகான இளம் பெண்கள் ஒரே நாளில் பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழியாகப் பயன் படுத்துகிறார்கள் என்பது தெரிகிறது.
உங்களை உலக தண்ணீர் தினம் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://ramyeam.blogspot.com/2010/03/blog-post.html
ஐயோ இப்படி எல்லாமா கொடுமை நடக்குது. காசுக்காக, புகழுக்காக என்னவெல்லாம் செய்யிறாங்க பாருங்க.
பேரழகுள்ள மாடல்கள் இந்த வகையில் தங்களைத் தாழ்த்தி ,கேவலம் எச்சி இலையாகி பெண்மையை விலை பேசி விற்கிறார்கள்.//
இதுபோன்ற பெண்களால் பெண்யினத்துக்கே கேவலமாக இருக்கிறது..
//மாதேவி said..
.உங்களை உலக தண்ணீர் தினம் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.//
நன்றி தோழி.பதிவு போட்டு விடுகிறேன்.
Blogger// முகுந்த் அம்மா said...
ஐயோ இப்படி எல்லாமா கொடுமை நடக்குது. காசுக்காக, புகழுக்காக என்னவெல்லாம் செய்யிறாங்க பாருங்க.//
உங்கள் முதல் வரவு நல்வரவாகட்டும் முகுந்த் அம்மா. இந்தச் செய்தியை முதலில் படிக்கும் போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பின்னர் கூகிள் விடயங்கள் இந்தப் பழக்கம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது என்பதைச் சொல்கிறது. மேல் மட்ட விடயங்கள் என்பதால் பலரும் அறிய வாய்ப்பில்லை. வேதனை என்ன வென்றால் இது நாகரீகம் என்று மற்றைய நாடுகளும் இதனை சட்ட ரீதியாக எதிர்க்காமல் ,பத்திரிக்கை விளம்பரம் கொடுத்து ஹோட்டல் ஆரம்பிக்க வழிவிடுவதுதான்.
முன்பெல்லாம் உணவு உண்பவர்கள் 'இலைபோல் ' படுத்திருக்கும் பெண்ணுடன் உரையாடவும் அனுமதித்தார்களாம். இப்போ அது மறுக்கப் பட்டு ஆடாமல் அசையாமல் ஒரு தளபாடம் போல் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையாம். படிக்கும் போது இரத்தம்கொதிக்கிறது.
அன்புடன் மலிக்கா said...
//இதுபோன்ற பெண்களால் பெண்யினத்துக்கே கேவலமாக இருக்கிறது..//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. கலிகாலம் இது
ஒன்னும் சொல்லத் தோணலை.
அடப்பாவமே.. :( ம்.. முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்ன்னு ஒரு பாட்டுல வரும்.. இது முன்னோர் சொன்ன அநாகரீகமாவில்ல இருக்கு..
பணம் பத்தும் செய்யும்...
பணம் பாதாளம் வரை பாயும்....
பணம்,பணமென்று உலகில் என்னவெல்லாமோ
நடக்கும் போது இது......
பெண்களுக்கு {குறைந்ததைக் கொடுத்துக்
“குறைக்கச்” சொல்லி } கூடுதலாய் சம்பாதிக்கும்
ஒரு இலாப யுக்திதான் இது.
எதெல்லாம் வியாபாரம் என்று ஒரு கட்டுப்பாடே
இல்லாமல் நாம் கலியுகத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம் ஜெஸி
//சத்ரியன் said..
ஒன்னும் சொல்லத் தோணலை //
உண்மைதான் சத்ரியன். என்ன சொல்லி என்ன பயன்.?
பூர்க்கா போட்டால் பெண் அடிமைத்தனம் என்று கூக்குரல் இப்படி இருந்தால் அநாகரிகம் என்று அலம்பல் என்னதான் அளவுகோல் வைத்தது இருக்கிறீர்கள்?barari123
நான் என்ன சொல்ல?. ஒரு திருக்குறள்தான் ஞாபகத்திற்கு வருது. “நுனிகொம்பர் ஏறினர் அஃதிருந் தூக்கின் உயிர்க் கிறுதியாகி விடும்”. மக்களோட கலாச்சாரமும் அப்படியிருக்கும்னு தோணுது. முதல்ல ஒரு உச்சத்திற்க்கு போகட்டும். பிறகு அங்கிருந்து விழுந்து சாகட்டும்.
Post a Comment