அண்மையில் மெயிலில் எனக்கு வந்த இந்தக் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப் பட்டது. இப்படியான பாரிய விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தையானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரிசோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள் மூடப் பட்டன. அவர் ஆபரேசன் தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதது.
இத்தனை முயற்சிகளால் உயிர் பிழைத்த அந்த மனிதரின் உயரம் 78 cm ( இரண்டரை அடி ) மட்டுமே. அன்றிலிருந்து படுக்கையில் வாழ்ந்த இந்த துரதிஸ்ட மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென்று எவரும் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் தன்னம்பிக்கை யிழக்கவில்லை. தனது கைகள் பலம் பெறும் வண்ணம் தேகாப்பியாசம் செய்யத் தொடங்கினார். தனது அன்றாடத் தேவைகளை முடிந்த அளவில் தானே செய்ய முனைந்தார். பல் துலக்குவது , முகங் கழுவுவது போன்றவற்றை அவரே செய்தார்.
இவரது விடா முயற்சி பற்றியறிந்த சீன புனர் வாழ்வு ஆய்வுக் கழகம் இவரை நடக்க வைக்கும் முயற்சி யிலிறங்கியது. எவருதவியுமில்லாமல் நடக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட உபகரணமொன்று கண்டு பிடிக்கப் பட்டது. ஒரு முட்டை வடிவில் அமைக்கப் பட்ட ஒரு உறையினால் உடம்பின் கீழ்ப் பாகம் தாங்கப் பட்டு , அதனுடன் இரண்டு பயோனிக் கால்கள் ( bionic legs ) பொருத்தப் பட்டன. பலரையும் பிரமிக்க வைத்து இந்த மனிதர் அடியெடுத்து நடப்பதைப் படத்தில் பாருங்கள்.
பன்னிரண்டு வருடங்கள் கட்டிலில் வாழ்ந்த இந்த மனிதர் 2007 ஆம் ஆண்டு நடை பயில்வதைப் பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை. இதை மருத்துவ தொழில் நுட்ப விந்தை என்று மட்டும் கருதி விட முடியாது. அந்த மனிதர் முகத்தில் தெரியும் பிரகாசமும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் .......அந்த மனவலிமைதான் முக்கிய காரணமென்பதை எனக்குச் சொல்லாமல் சொல்கிறது.
சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவில் வரவேண்டுமென்று தோன்றுகிறது. உங்களுடன் இதைப் பகிர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி.
ஆதாரம் : http://www.metro.co.uk/weird/56500-miracle-man-walks-again
.
27 comments:
நிச்சயம் இவர் ஒரு வாழும் சரித்ரம்
உடலில் ஊனம இருந்தாலும் மனதில் ஊனம் இல்லை இவர் அனைவருக்கும் ஒரு பாடமாக இருப்பார்
ஆகா,.... ஆழமான தன்னம்பிக்கை நல்ல பகிர்வுங்க
ஆ.ஞானசேகரன்
தன்(நன்)னம்பிக்கை. பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெஸ்
இவரை பற்றி நவம்பர் 17, 2009ல் நான் எழுதிய ஒரு பதிவு இதோ...
SELF-CONFIDENCE (ABSOLUTELY UNBELIEVABLE)
http://jokkiri.blogspot.com/2009/11/self-confidence-absolutely-unbelievable.html
க்ரேட்!!!
ஏற்கெனவே படித்திருக்கிறேன் ஜெஸ்வந்தி.மன் சோர்வாகு்ம் போது புத்துணர்ச்சி அளிக்கும் டானிக் இவர்!
எனக்கும் மெயிலில் வந்தது. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி ஜெஸ்.
தன்னம்பிக்கைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
தன்னம்பிக்கைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
தன்னம்பிக்கைக்கு ஆதாரம்...
//தமிழரசி said...
தன்னம்பிக்கைக்கு மிகச்சிறந்த உதாரணம்.//
வழிமொழிகிறேன்...! அருமையான பகிர்வு ஜெஸ்வந்த்..!
பிரமிக்க வைக்கும் தன்னம்பிக்கை.. கொஞ்சம் வெட்கமும்.. நல்லா இருக்கற நான் எவ்ளோ ஈசியா எஸ்கேப் ஆகறேன்.. நைஸ்
ஐயோ கடவுளேன்னு நினைச்சாலும்...அவரது தன்னம்பிக்கை பாராட்ட வேண்டியது.அவரது முகத்தில்தான் எவ்வளவு சந்தோஷம்.
ஜெஸி..! மனதில் நட்டுவிட்ட பதிவு
எல்லா அங்கங்களும் சரியாய் இருப்பவர்களிடம்...
எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டால் போதும்...!
ஏதோ சாகாமல் இன்னும் உயிருடன் உலாவுகிறேன்
என்பார்கள்{ஒரு சிலர் }
அப்படியானவர்களுக்கு இவர் பாடமாய்
அமையட்டும்!!
எவ்வளவு மகிழ்ச்சி அந்த முகத்தில்!
அவர் தன்னம்பிக்கை அவரை மேலும்
ஊக்கப்படுத்தும் இதில் ஐயமில்லை.
கடவுளும் துணை இருக்கட்டும்!!
மிக்க நன்றி ஜெஸி.
அருமை.
நெகிழ வைக்கும் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
அவருக்கு வணக்கங்கள்...
மின்மடல் மூலம் அறிந்திருக்கிறேன்.
//சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவில் வரவேண்டுமென்று தோன்றுகிறது.//
எல்லோருக்குமேதான்.
மிக நல்ல பகிர்வு ஜெஸ்வந்தி.
இது 2007 இல் நடந்த விடயமென்பதால் முன்னரே வலையத்தில் எவரும் எழுதியிருக்கலாமென்று எனக்குத் தோன்றியது. ஆனால் என்னைப் போல் பலருக்கும் இது வியப்பளித்த புதிய செய்தியாக இருந்ததில் மகிழ்ச்சி.படித்துக் கருத்திட்ட ஓட்டுப் போட்ட அனைவருக்கும் நன்றி.
நல்ல பகிர்வு
பகிர்வதில் உங்களுக்கு நிகர் நீங்கதான் ஜெஸ்
நல்லூழ் செய்து கொள்வது பிறப்பால் அல்ல என்பதை சொல்லும் இடுகை இது
மனதுக்குத் தெம்பூட்டும் பதிவு அக்கா.
25 வருடங்களாய், படுக்கையை விட்டு ஒரு அங்குலம் கூடப் பிறர் உதவியின்றி, நகர முடியாத நான், முதன் முதலாய் ஒரு பட்டனை அழுத்தி, நகரத் துவங்கிய போது, அடைந்த அந்த சந்தோஷக் கணம் நினைவுக்கு வருகிறது.
எனக்கு மின்சார நாற்காலி வாங்கிக் கொடுத்து, ஆனந்தத்தில் ஆழ்த்திய பதிவுலகக் கர்ணர்களுக்கு (கடவுள்களுக்கு) என் கண்ணீர் கலந்த நன்றிகளை இதயம் நிறைந்து பிதற்றுகிறேன்.
இறைவன் அனைவருக்கும் நலமருளப் பிரார்த்திக்கிறேன்.
@ +Ve Anthony Muthu
இந்தப் பதிவிடும் போது மனதில் உன்னைத் தான் நினைத்துக் கொண்டேன். உனக்குள்ள தன்னம்பிக்கையும் என்னை மலைக்க வைத்ததும் உண்மைதான். கடவுள் துணையிருப்பார். சிரித்தவண்ணமிருப்பா.
super jai
தன்னம்பிக்கைக்கு இவர் ஒரு உதாரணம்.நல்ல பதிவு...
ஜெஸ்ஸி,
நம்பிக்கை...யின் உன்னத பகிர்வு.
தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
உடல்ல குறையிருந்தாலும் உள்ளத்தில உறுதி இருந்தா எதையும் சாதிக்கலாம்…?
அவரது தன்னம்பிகையைக்கண்டு வியந்துபோனேன்...
பகிர்வுக்கு நன்றிங்க.
Post a Comment