நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday, 4 January 2010

தேவதை தந்த புத்தாண்டுப் பரிசு !

மாதமிருமுறை மலரும் 'தேவதை' சஞ்சிகை , 'வலையோடு விளையாடு ' என்ற பிரிவில் தரும் பெண் வலைப் பதிவர்களின் அறிமுகங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வரிசையில் அவர்கள் பொங்கல் சிறப்பிதழில் என்னை அறிமுகம் செய்திருக்கிறார்கள். (ஜனவரி 1-14 ) இதழ் வருடம் பிறந்ததும் வெளியாகிவிட்டதால் இதனை அவர்கள் எனக்குத் தந்த புத்தாண்டுப் பரிசாகக் கருதுகிறேன். சிறப்பாக அறிமுகம் செய்து, பெண்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கம் தரும் தேவதைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

திரு . நவநீதம் அவர்கள் என்னை அக்டோபர் மாதம் மெயிலில் தொடர்பு கொண்டு தங்கள் சஞ்சிகையில் அறிமுகம் செய்ய எனது புகைப் படமும் , என்னைப் பற்றிய விபரங்களும் கேட்ட போது நான் இந்த 'தேவதை ' என்ற சஞ்சிகையை அறிந்திராததால் அவற்றை அனுப்ப மிகவும் தயங்கினேன். பின்னர் அவர் தந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள நினைத்த போது , தற்செயலாக அவர் ஒரு எண்ணை அதில் தவற விட்டதால் எனக்கு இணைப்புக் கிடைக்க வில்லை. அதனால் தான் இப்போ புத்தாண்டில் முதல் அறிமுகம் கிடைக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன். எனது வலையத்தைச் சல்லடை போட்டு, அவர் தந்த இந்த அழகான அறிமுகத்துக்கும் தொகுப்புக்கும் முதலில் நன்றி சொல்கிறேன்.
சஞ்சிகையில் வெளிவந்த பக்கங்களை இங்கே இணைத்துள்ளேன். முடிந்தால் சஞ்சிகையை வாங்கிப் படியுங்களேன்.
.

26 comments:

SUFFIX said...

வாழ்த்துக்கள் ஜெஸ்!! உண்மையில் அழகிய புத்தாண்டு பரிசு தான்.

அன்புடன் அருணா said...

ஊங்கொத்து ஜெஸ்வந்தி!

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி!

அண்ணாமலையான் said...

மிக்க மகிழ்ச்சியான செய்திதான்... என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.....

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி

கலகலப்ரியா said...

wow...! great news jeswanthi.. glad to see you too.. ;)... மனமார்ந்த பாராட்டுக்கள்..! அப்புறம் வந்து மீதி படிச்சுக்கறேன்..!

கலகலப்ரியா said...

moderation.. test..?!

BONIFACE said...

வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு..!

பிரியமுடன்...வசந்த் said...

ஜெஸ்ஸம்மா சொல்லவேயில்ல....!

ரொம்ப சந்தோஷம் இந்தாங்க பிடிங்க ரோஜா பூங்கொத்துக்கள்...!

http://www.bloom.com.my/MyMall/pic/bloom/item/Rose_Hand_Bouquet_21-b.JPG

ஹேமா said...

மகிழ்ச்சியான செய்தி ஜெஸி.வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

great ஜெஸ்!..

சந்தோசமாய்,நிறைவாய் இருக்கு.

சந்தோசமான,நிறைவான,ஆரோக்யமான,பெயின் கில்லர் இல்லாத வருடமாய் இருக்கட்டும் மக்கா,2010!

நட்புடன் ஜமால் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அரங்கப்பெருமாள் said...

உண்மையிலே புத்தாண்டு பரிசுதான். வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் டா....இது எங்களுக்கு புத்தாண்டின் முதல் இனிய செய்தி.....

என்னையும் நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது இந்த தேவதை... இங்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்....

கவிக்கிழவன் said...

வாழ்த்துக்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அம்பிகா said...

நல்வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி!

ரோஸ்விக் said...

நல்வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி! :-)

Chitra said...

Congratulations! Nice to way to start a new year.

kamalesh said...

ஊங்களுக்கு கிடைத்திருப்பது மிக பெரிய அங்கீகாரம் தோழி..அதற்க்கு முழு தகுதியும் உங்களிடம் இருக்கிறது...மேலும் மேலும் உங்களுக்கு இது போன்ற நல்ல அங்கீகாரம் வந்து கொண்டேதான் இருக்கும்...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சத்ரியன் said...

//ஜெஸ்ஸி, வாழ்த்துகள்!

திகழ் said...

வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி said...

வருகை தந்த , வாழ்த்துச் சொன்ன, ஓட்டுப் போட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.

" உழவன் " " Uzhavan " said...

மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்களும் :-)

மாதேவி said...

உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி.

ஜிஜி said...

Congrats Jes.