நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday 5 January 2010

ஜெய்பூர் முழங்கால் மூட்டு

ஆக்ராவைச் சேர்ந்த கமலின் கதை உங்களுக்குத் தெரியுமா? ஒரு விபத்தில் காலை இழந்த இந்தப் பையன் உலகப் பிரசித்தம் அடைந்து விட்டான். அவன் கதை அறிய ஆவலிருந்தால் தொடர்ந்து படியுங்கள்.

முன்னேறிவரும் நாடுகளில், காலை இழக்கும் துரதிஸ்டசாலிகள் பல்லாண்டுகளாக ' ஜெய்பூர் கால்' ( Jaipur Foot) என அழைக்கப் படும் பொய்க்கால் பொருத்தப் பட்டு நடக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த செயற்கைக் கால் ஜெய்ப்பூரில் செய்யப் பட்டதால் இந்தப் பெயரைப் பெற்றது. அத்துடன் மிக மலிவானதால் பலராலும் பயன்பெறவும் முடிகிறது. ஆனால் முழங்கால் மூட்டுக்கு மேலாகக் காலை இழந்தவர்கள் இந்தக் காலை உபயோகிக்க முடியாது. அப்படியானவர்கள் விலை அதிகமான டைட்டானியம் ( titanium replacement) மூட்டு ஒன்றைப் பாவித்தே ஜெய்பூர் காலை இணைக்க முடியும். இந்த விசேட மூட்டின் விலை கிட்டத்தட்ட பத்தாயிரம் அமெரிக்க டாலர்களாகும். அதை விட விலை குறைவான மூட்டுகள் சில இருந்தாலும், அவை சரிவர இயங்குவதில்லை. அதனால் இத்தகைய துரதிஸ்ட சாலிகள் அனேகமாக வாழ் நாள் முழுவதும் நடக்க முடியாமல் அவதிப் படுகிறார்கள்.





இந்த
விதத்தில் ,ஒரு வாகன விபத்தில் இடது காலை இழந்த 15 வயதுப் பையன் தான் இநதக் கமல். அன்றிலிருந்து ஒரு மூங்கில் கோலை இரு கைகளாலும் ஊன்றி நடக்கக் கற்றுக் கொண்டான். ஆனாலும் அவனால் மற்றவர் உதவியில்லாமல் தன்னைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்கள் இப்படி நடந்ததில் அவனது முதுகெலும்பு வளையத் தொடங்கிவிட்டது. இந்த நிலைமையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ தொழில் நுட்ப பல்கலைக் கழக மாணவர்கள் ,ஜெய்பூர் கால் நிலையத்துடன் சேர்ந்து ஒரு புதிய முழங்கால் மூட்டை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.




அவர்கள்
வடிவமைத்த மூட்டினை பரிசோதிக்க 2008 ம் ஆண்டில் ,ஜெய்ப்பூரில் கமல் இவர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டான். அப்போது அவனுக்கு வயது 17. ஜெய்பூர் காலுடன் சேர்த்துப் பொருத்தப் பட்ட இந்த மூட்டு கமலுக்குப் பொருத்தப் பட்டது. இவர்கள் இந்த மூட்டுக்கு 'ஜெய்பூர் முழங்கால் ' என்று பெயரிட்டார்கள். சில மணி நேரத்திலேயே கமல் எவர் உதவியும் இல்லாமல் நடக்கத் தொடங்கி விட்டான்.



சட்லர் என்பவரும் அவரது குழுவினரும் ஜெய்பூர் பொய்க்கால் நிலையத்தின் ஒத்துழைப்புடன் உருவாகிய அற்புதத்தைப் படத்தில் பார்க்கலாம்

இந்த 'ஜெய்பூர் முழந்தாளின்' மகிமை என்னவென்றால் , அதன் விலை இருபது அமெரிக்க டாலர்கள் தான். அதுமட்டுமல்லாமல் இதனைப் பொருத்தும் போது இயற்கையாக நடக்க முடிகிறது, மேடு பள்ளங்களில் கூட சிரமமின்றி ஏற முடிகிறது. 5 பிளாஸ்டிக் துண்டுகளாலும் ,நடுவில் எண்ணெய் நிறைந்த நய்லோன் துணியாலும் சில நட்டுகளாலும் மிக எளிய முறையில் வடிவமைக்கப் பட்ட இந்த செயற்கை அவையம் , ஒரு பிரமிக்கும் கண்டு பிடிப்பு.




5 மாதத்தின் பின்னர் இநதக் குழு கமலைச் சந்தித்த போது, அவன் இயற்கையாக நடந்து, உடைக்குள் அவன் செயற்கைக் கால் மறைய , ஜெய்பூர் ஆஸ்பத்திரியில்
நோயாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு பணியில் இருப்பதையும் கண்டார்கள்.
இற்றைவரை சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் ஜெய்ப்பூரில் இந்த செயற்கை முழங்காலைப் பெற்று விட்டார்கள்.

டைம்ஸ் சஞ்சிகை 2009 இல் கண்டுபிடிக்கபட்ட 50 உன்னத படைப்புகளில் இதனையும் சேர்த்து பிரசித்தமாக்கி யுள்ளது.


.

17 comments:

sarvan said...

நல்ல பயனுள்ள தகவல்.

அண்ணாமலையான் said...

இத இதத்தான் எதிர்பாத்தேன். இந்த சம்பவத்த உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உங்களுக்கு my hearty congratulations. மிக பிரமாதமான சாதனை...

பூங்குன்றன்.வே said...

நல்ல இடுகைக்கு வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

interesting..! thanks for sharing..!

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வான பகிர்வு

கவி அழகன் said...

டைம்ஸ் சஞ்சிகை 2009 (ஜெஸ்வந்தி பகிர்வு) இல் கண்டுபிடிக்கபட்ட 50 உன்னத படைப்புகளில் இதனையும் சேர்த்து பிரசித்தமாக்கி யுள்ளது.

S.A. நவாஸுதீன் said...

நிஜமாவே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு ஜெஸ். நல்ல பகிர்வு. நன்றி.

கமலேஷ் said...

மிகவும் பயனுள்ள தகவல்... வாழ்த்துக்களும் நன்றிகளும்...

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பகிர்வு ஜெஸ்வந்தி.

சத்ரியன் said...

ஜெஸாஸி,

உண்மையில் மிகப்பயனுள்ள தகவல்.

Chitra said...

கரிசனமிக்க பயனுள்ள தகவல். இடுகைக்கு நன்றி.

கலா said...

ஜெஸி நலமா?பலவற்றைப் படிக்கத்
தவறிவிட்டேன் அவ்வளவு பம்பர வேலை
மன்னிக்கனும்.ஆமா!! எத்தனை நாளைக்குத்தான்
கவிதை விருந்து பலவகையாய்ச் சமைத்துப்
போட்டால்தான் ருசிக்கும்.நல்ல பகிர்வு நன்றி.

குடந்தை அன்புமணி said...

நெகிழ்வான- அதே நேரத்தில் தன்னம்பிக்கை தரும் பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

இந்த அறிய மெட்டீரியலைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமோ...அவரையும் பாராட்டியிருக்கலாமே!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//" உழவன் " " Uzhavan " said...

இந்த அறிய மெட்டீரியலைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமோ...அவரையும் பாராட்டியிருக்கலாமே!!//

செய்தியைத் தொகுத்து தமிழாக்கம் செய்தபோது அவர்கள் பெயர்களைச் சேர்க்கத் தவறிவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இனி சேர்த்து விடுகிறேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

படித்து கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. அண்மையில் டைம்ஸ் சஞ்சிகை பட்டியலில் இந்த உபகரணம் இருந்ததால் அதைப் பற்றி மேலும் அறிய நான் கூகுளில் செய்த ஆராச்சியில் தான் இந்த முழுக் கதையையும் அறிந்தேன்.அப்போதான் என்னைப் போல் பலருக்கும் இந்த விடயம் தெரியாமல் இருந்திருக்கும் என்றுதோன்றியது.

Anonymous said...

பயனுள்ள தகவல் ஜெஸ்...