நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 27 November 2009

கரு சொன்ன கதை இது......


நானுதித்த நாள் முதலாய்
வானிடிந்து போனதுபோல்
உன்னுயிர் துடிப்பது -என்
மனதுக்குக் கேட்கிறது.

கண் விழிக்க முடியாமல்
உன் தரிசனம் கிடையாமல்
கறுப்பறை ஒன்றில் நான்
சிறைப்பட்டுக் கிடக்கிறேன்.

அள்ளி அணைக்க மாட்டாயா?
பிள்ளை நான் ஏங்குகையில் - உன்
விம்மி அழும் சத்தம்- என்னை
எம்பி எழ வைக்கிறது.

நான் ஓடி வரவேண்டும்.
உன் கண்ணைத் துடைக்க வேண்டும்.
என் அம்மா முகம் பார்த்து
நான் என்னை மறக்க வேண்டும்.

அன்று நீ டாக்டரிடம்
சென்றபோது நானறிந்தேன்
என் உயிரைப் பறிப்பதுதான்
உன் உயிர்காக்க வழியென்று.


பிள்ளை என்று நீயுருக
நாளை எண்ணி நானிருக்க
விதி செய்த சதியென்ன ?
மதி கலங்கி மாய்கின்றேன்.

வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.

இன்னொரு பிறப்பெடுத்து
உன்வயிற்றில் உருவெடுப்பேன்.
இக்கணத்தில் இழந்ததையும்
அப்போ நான் அனுபவிப்பேன்.



.

42 comments:

தமிழ் அமுதன் said...

///வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.///

உயிரை உலுக்கி எடுக்கிறது...!
வார்த்தை ஒன்றும் வரவில்லை..!

ராமலக்ஷ்மி said...

நெகிழ வைத்து விட்டீர்கள் ஜெஸ்வந்தி!

Anonymous said...

அருமை.

நேசமித்ரன் said...

மூள தீமூட்டி முற்றும் எரிக்கும் வலியும் கலையும் கரு வலியும் வேறா ?

நெகிழ்த்துகிறது கவிதை

ராம்குமார் - அமுதன் said...

அப்படியே புல்லரிச்சுருச்சு... சொல்ல வேற வார்த்தைகள் ஒன்னுமே இல்ல.... பிரமாதமான கவிதை....

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை ஜெஸ்ஸம்மா...

அன்புடன் அருணா said...

அருமை ஆனாலும் கஷ்டமாக இருக்கிறது

கலா said...

ஜெஸி !கருவும்{படத்தில்} கவிதையும்
மனதை அறுக்கிறது அரத்தால்!
நன்றி

தேவன் மாயம் said...

அருமைங்க!

தேவன் மாயம் said...

பல்லாயிரம் கருக்களின் குரலை கவிதையாக்கியுள்ளீர்கள்!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஜீவன் said...
///வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.///
உயிரை உலுக்கி எடுக்கிறது...!
வார்த்தை ஒன்றும் வரவில்லை..!//

வாங்க ஜீவன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ராமலக்ஷ்மி said...
நெகிழ வைத்து விட்டீர்கள் ஜெஸ்வந்தி!//

நீங்கள் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி தோழி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//pukalini said...
அருமை.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...
மூள தீமூட்டி முற்றும் எரிக்கும் வலியும் கலையும் கரு வலியும் வேறா ?
நெகிழ்த்துகிறது கவிதை//
வாங்க நேசன். வரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி. நீங்கள் அண்மையில் எழுதிய பல பதிவுகள் நான் இன்னும் படிக்கவில்லை. மன்னிக்கவும். நேரம் கிடைக்கும்போதுவருகிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ராம்குமார் - அமுதன் said...

அப்படியே புல்லரிச்சுருச்சு... சொல்ல வேற வார்த்தைகள் ஒன்னுமே இல்ல.... பிரமாதமான கவிதை....//
வாங்க ராம்குமார். உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்...வசந்த் said...

அருமை ஜெஸ்ஸம்மா...//

வாடாப்பா வசந்த். இந்த 'ஜெஸ்ஸம்மா' நல்லாயிருக்கடா .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அன்புடன் அருணா said...
அருமை ஆனாலும் கஷ்டமாக இருக்கிறது//
வாங்க அருணா. உண்மையான விடயங்கள் வலிக்கத்தான் செய்கின்றன தோழி.

சந்தான சங்கர் said...

கலையும்முன்
கலங்க வைத்த
கருவின் கருணை..

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்..உடல் நலம் ஓகேயா?

வேலை பளு.அதான் தாமதம்.

ஹேமா said...

இதுதான் தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு.நெகிழ்வான கவிதை ஜெஸி.

Kavinaya said...

அச்சோ! ஏன் இப்படி? :(

நீங்கள் எழுதியிருக்கும் விதம் உருக்கி விட்டது.

சத்ரியன் said...

//அள்ளி அணைக்க மாட்டாயா?
பிள்ளை நான் ஏங்குகையில் - உன்
விம்மி அழும் சத்தம்- என்னை
எம்பி எழ வைக்கிறது.//

//வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.//

ஜெஸ்வந்தி,

தமிழுக்கு அமுதென்று பேர்.

உண்மை என்பதை இன்றுதான் உணர்ந்தேன் தோழி.

உன் "மெளனராகத்தில்" ! கவிதையாய் உன்னுள் கருவுற்றதில்.!

"உழவன்" "Uzhavan" said...

வலி மிகுந்த கவிதை

R.Gopi said...

ரொம்ப‌ நெகிழ்வா இருக்கு... கூட‌வே ம‌ன‌சு க‌ன‌மாவும், நிரம்ப வலியோடும்.....

என்ன‌ சொல்ற‌துன்னே தெரிய‌ல‌ ஜெஸ்......

Mohan R said...

இன்னொரு பிறப்பெடுத்து
உன்வயிற்றில் உருவெடுப்பேன்.
இக்கணத்தில் இழந்ததையும்
அப்போ நான் அனுபவிப்பேன்.

Kalanga vechuteenga...

Unamaiya irundha enadhu prarthanaigal

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தேவன் மாயம் said...
அருமைங்க!
பல்லாயிரம் கருக்களின் குரலை கவிதையாக்கியுள்ளீர்கள்!!//

வாங்க தேவா. வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சந்தான சங்கர் said...
கலையும்முன்
கலங்க வைத்த
கருவின் கருணை..//

வாங்க சங்கர். உங்கள் கருத்தும் கவிதையாய்.....நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்..உடல் நலம் ஓகேயா?
வேலை பளு.அதான் தாமதம்.//
வாங்க ராஜாராம். வேலைப் பளுவுக்கு மத்தியில் தந்த வரவுக்கு நன்றி. பதிவு போடும் அளவுக்கு நலம்.
உங்கள் அன்புக்கும் தரும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...

இதுதான் தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு.நெகிழ்வான கவிதை ஜெஸி.//

வாங்க ஹேமா. தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி தோழி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கவிநயா said...

அச்சோ! ஏன் இப்படி? :(
நீங்கள் எழுதியிருக்கும் விதம் உருக்கி விட்டது.//
வாங்க கவிநயா. என்னங்க இது ? நான் எழுதிய விதம் மட்டும் அல்ல , இது மனத்தைக் கலக்கும் விடயந்தானே?கருத்துக்கு நன்றி தோழி.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நெகிழ்ச்சியான வரிகள் ஜெஸ்.

//வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.//

கலங்கடிக்கும் வரிகள்

Anonymous said...

ஜீவன் said...
///வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு.///

உயிரை உலுக்கி எடுக்கிறது...!
வார்த்தை ஒன்றும் வரவில்லை


ஆம் வார்த்தைகள் வழி மறிக்கிறது...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சத்ரியன் said...

ஜெஸ்வந்தி,
தமிழுக்கு அமுதென்று பேர்.
உண்மை என்பதை இன்றுதான் உணர்ந்தேன் தோழி.
உன் "மெளனராகத்தில்" ! கவிதையாய் உன்னுள் கருவுற்றதில்.!//
வாங்க சத்ரியன். வரவுக்கும் உங்கள் அதீத பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//உழவன் " " Uzhavan " said...

வலி மிகுந்த கவிதை//
கருத்துக்கு நன்றி உழவரே!' மௌன ராகங்கள் ' இது வரை பல வழிகளைக் கண்டு விட்டது. இதுவும் அதில் ஒன்று.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...

ரொம்ப‌ நெகிழ்வா இருக்கு... கூட‌வே ம‌ன‌சு க‌ன‌மாவும், நிரம்ப வலியோடும்.....
என்ன‌ சொல்ற‌துன்னே தெரிய‌ல‌ ஜெஸ்......//
வாங்க கோபி. வந்து படித்தாலே போதும். சில விடயங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்வு மட்டும் போதும் .கருத்துக்கு நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இவன் said...

/இன்னொரு பிறப்பெடுத்து
உன்வயிற்றில் உருவெடுப்பேன்.
இக்கணத்தில் இழந்ததையும்
அப்போ நான் அனுபவிப்பேன்./
Kalanga vechuteenga...
Unamaiya irundha enadhu பிரார்த்தனைகள்//
நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கிறீர்கள் இவன். நலமா?
இந்தக் கருவுக்கு மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான கருக்களுக்குப் பிராத்தனை வேண்டும் நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

.//. நவாஸுதீன் said...
ரொம்ப நெகிழ்ச்சியான வரிகள் ஜெஸ்.

/வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு./

கலங்கடிக்கும் வரிகள்//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நவாஸ்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

///தமிழரசி said...
//ஜீவன் said...
/வாய் விட்டுச் சொல்லாமல்
சேய் நான் இணங்குகிறேன்.
அம்மா நீ கலங்காதே!
சும்மா எனைக் கலைத்துவிடு./

உயிரை உலுக்கி எடுக்கிறது...!
வார்த்தை ஒன்றும் வரவில்லை//

ஆம் வார்த்தைகள் வழி மறிக்கிறது...///
அடடே! தமிழுக்கே வார்த்தைகள் வராமல் பண்ணி விட்டேனா ?
கருத்துக்கு நன்றி தமிழ்.

Shan Nalliah / GANDHIYIST said...

GOD IS VERY ANGRY WITH HUMANS BECAUSE OF MILLIONS OF ABORTIONS EVERYDAY! MANY MORE SAD RETURNS OF NATURAL DISASTERS!......KALIYAGAM SOON COME TO END WITH TOTAL DESTRUCTION OF THIS LOVELY/BEAUTIFUL WORLD!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah / GANDHIYIST said...
GOD IS VERY ANGRY WITH HUMANS BECAUSE OF MILLIONS OF ABORTIONS EVERYDAY! MANY MORE SAD RETURNS OF NATURAL DISASTERS!......KALIYAGAM SOON COME TO END WITH TOTAL DESTRUCTION OF THIS LOVELY/BEAUTIFUL WORLD!//

அச்சச்சோ! இது என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம்.
'கடவுள் கோபம்' 'கலியுகம்'. வேணாம்பா. என்னை விட்டுடுங்கோ

thiyaa said...

அருமை,
நல்வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தியாவின் பேனா said...
அருமை,
நல்வாழ்த்துகள்//
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தியாகுவின் பேனா.