நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday, 8 November 2009

நண்பிக்கு ஒரு கடிதம்





சின்ன மகள் அருகில் வந்து
சொன்னதையே சொல்கிறாள்.
என்ன சொல்லி என்ன பயன்
எனக்கு எங்கே நினைவிருக்கு?

பேரப் பிள்ளை கதை கேட்க
பேந்தப் பேந்த முழிக்கிறேன்.
பாதிக் கதை சொல்லி விட்டேன்
மீதிக் கதை நினைவில் இல்லை .

குளிர் பானப் பெட்டியருகில்
குனிந்தபடி நிற்கிறேன்.
பாலை எடுக்க வந்தேனா?
இல்லை வைக்க வந்தேனா?

மெல்ல மெல்ல நடந்து சென்று
கதவருகில் வருகிறேன்.
காற்று வாங்க வந்தேனா?
கதவைச் சாத்த வந்தேனா?

உனக்கு கடிதம் எழுதவென்று
உற்சாகமாய் வருகிறேன்
முன்னர் இதை எழுதினேனா?
முற்றாகவே மறந்து போச்சு.

வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?



.

44 comments:

ராமலக்ஷ்மி said...

//குளிர் பானப் பெட்டியருகில்
குனிந்தபடி நிற்கிறேன்.
பாலை எடுக்க வந்தேனா?
இல்லை வைக்க வந்தேனா?//

இது இப்போவே இருக்கு:). அப்போ இன்னும் வயசானால் மத்ததும்:(?

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஜெஸ்வந்தி.

S.A. நவாஸுதீன் said...

கவிதை, எளிய நடையில் அருமை ஜெஸ்வந்தி

சத்தியமூர்த்தி said...

வயது, மறதி பற்றி அழகான கவிதை. தலைப்பு தான் ஒட்டவில்லை.

M Bharat Kumar said...

Hello

I really like it...Good one...Everyone man / woman will go old...It reminded me of my grand parents

V.N.Thangamani said...

கவிதை நடை அழகு. முதுமையின் எதார்த்தம் எளிமையாய் பின்னப்பட்டிருக்கிறது,
நன்றி. இவன் வி.என் தங்கமணி www.vnthangamani.blogspot.com

Kala said...

உங்களுக்கு......ஓஓஓ இவ்வளவு
மறதியா?பாவம் உங்க.............
ஆமாஆஆ நான் என்ன சொல்ல
வந்தேன்......அடடா ???

Shan Nalliah / GANDHIYIST said...

We all shd go through this stage before leaving this world naturally!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ராமலக்ஷ்மி said...

//குளிர் பானப் பெட்டியருகில்
குனிந்தபடி நிற்கிறேன்.
பாலை எடுக்க வந்தேனா?
இல்லை வைக்க வந்தேனா?//
இது இப்போவே இருக்கு:). அப்போ இன்னும் வயசானால் மத்ததும்:(?
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஜெஸ்வந்தி.//

வாங்க ராமலக்ஷ்மி. என்ன சொல்ல.? இதுதான் இயற்கை.
நன்றி தோழி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
கவிதை, எளிய நடையில் அருமை ஜெஸ்வந்தி//

கருத்துக்கு நன்றி நவாஸ்.

☀நான் ஆதவன்☀ said...

:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சத்தியமூர்த்தி said...
வயது, மறதி பற்றி அழகான கவிதை. தலைப்பு தான் ஒட்டவில்லை.//

உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சத்தியமூர்த்தி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//M Bharat Kumar said...
Hello

I really like it...Good one...Everyone man / woman will go old...It reminded me of my grand parents//

Thanks for your visit and comment.

நேசமித்ரன் said...

:)

இன்னும் கொஞசம் கொஞசமே எடிட் பண்ணி இருக்கலாம்

மத்த படி நல்லா இருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

//வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?//

நல்ல விதமா முடிச்சுருக்கீங்க..தொடருங்கள்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/வி.என்.தங்கமணி, said...
கவிதை நடை அழகு. முதுமையின் எதார்த்தம் எளிமையாய் பின்னப்பட்டிருக்கிறது,
நன்றி. //

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கமணி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Kala said...
உங்களுக்கு......ஓஓஓ இவ்வளவு
மறதியா?பாவம் உங்க.............
ஆமாஆஆ நான் என்ன சொல்ல
வந்தேன்......அடடா ???//

என்ன கலா? இது தொற்று வியாதி இல்லையம்மா. என்னிடம் இருந்து நிச்சயம் உங்களுக்குத் தொற்றியிருக்காது. ஹ ஹ ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah / GANDHIYIST said...

We all shd go through this stage before leaving this world naturally!//

Thanks for your comments shan. Some people don't go thorough this stage and they are really lucky.

Kavinaya said...

இயல்பா, எளிமையா, அருமையா இருக்கு ஜெஸ்வந்தி.

இராயர் said...

very touching kavidhai!!
nice one

ஹேமா said...

வயதின் முதிர்வையும் அதனால் ஏற்படும் மறதியையும் சொல்லியிருக்கும் விதம் அழகு ஜெஸி.படம் தெளிவில்லாவிடாலும் இயல்பாயிருக்கு.தலைப்புதான் ஏனோ பொருத்தமில்லாமல் இருக்கு.

பா.ராஜாராம் said...

எனக்கு இந்தா கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்!..

//குளிர் பானப் பெட்டியருகில்
குனிந்தபடி நிற்கிறேன்.
பாலை எடுக்க வந்தேனா?
இல்லை வைக்க வந்தேனா?

மெல்ல மெல்ல நடந்து சென்று
கதவருகில் வருகிறேன்.
காற்று வாங்க வந்தேனா?
கதவைச் சாத்த வந்தேனா?//

இந்தா ரெண்டு பாராவிலும் அழகான கவிதை இருக்கு...

இராயர் said...

இயல்பான கவிதை
வாழ்த்துக்கள்

R.Gopi said...

பதிவை படித்து விட்டு எதற்காக பின்னூட்ட பகுதிக்கு வந்தேன்
ம‌ற்ற‌ க‌மெண்டுக‌ளை ப‌டிக்க‌வா, இல்லை நானும் ஏதாவ‌து க‌மெண்ட் போட‌வா??

Anonymous said...

மறதியில் மலர்ந்த கவிதை மனம் வீசுதடி பெண்ணே....

ஊடகன் said...

ரொம்ப அழகான இயல்பான கவிதை.....
வாழ்த்துக்கள்........

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...
:)
இன்னும் கொஞசம் கொஞசமே எடிட் பண்ணி இருக்கலாம்
மத்த படி நல்லா இருக்கு//

வாங்க நேசன், எங்கே எடிட் பண்ணவேண்டும் என்று சொல்லித் தந்திருக்கலாம்.
அடுத்த முறை சொல்லுங்கள். நண்பர்களிடம் நான் அதைத் தான் எதிர் பார்க்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கவிநயா said...

இயல்பா, எளிமையா, அருமையா இருக்கு ஜெஸ்வந்தி.//

வாங்க கவிநயா, வாழ்த்துக்கு நன்றி தோழி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...

very touching kavidhai!!
இயல்பான கவிதை
வாழ்த்துக்கள்//

வாங்க இராயர். கவிதை பிடித்ததில் மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
எனக்கு இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்!..//

வாங்க ராஜா, எனக்கும் பிடித்திருக்கு நண்பரே. இப்பவே சொல்வதெல்லாம் சொல்லிவிட வேண்டும். பிறகு மறந்து போய் விட்டால்....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...
பதிவை படித்து விட்டு எதற்காக பின்னூட்ட பகுதிக்கு வந்தேன்
ம‌ற்ற‌ க‌மெண்டுக‌ளை ப‌டிக்க‌வா, இல்லை நானும் ஏதாவ‌து க‌மெண்ட் போட‌வா??//

என்ன கோபி இது? நீங்களும் நம்ம கேஸ் தானா? இந்த வயதிலா? அடப் பாவமே!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தமிழரசி said...

மறதியில் மலர்ந்த கவிதை மணம் வீசுதடி பெண்ணே....//

உன் கருத்தே கவிதையாய் கலக்குதே தமிழ் !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/ஊடகன் said...
ரொம்ப அழகான இயல்பான கவிதை.....
வாழ்த்துக்கள்........//

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஊடகன். தொடர்ந்து வாருங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்...வசந்த் said...
//வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?//

நல்ல விதமா முடிச்சுருக்கீங்க..தொடருங்கள்..//

வாங்க வசந்த். முடிவு பிடிச்சிருக்கா.? நான் முகவரியைத் தொலைத்துவிட்டுத் திண்டாடுவதா? ஹி ஹி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
வயதின் முதிர்வையும் அதனால் ஏற்படும் மறதியையும் சொல்லியிருக்கும் விதம் அழகு ஜெஸி.படம் தெளிவில்லாவிடாலும் இயல்பாயிருக்கு.தலைப்புதான் ஏனோ பொருத்தமில்லாமல் இருக்கு.//

வாங்க ஹேமா. சிறிய படத்தை பெரிதாக்கியத்தில் தெளிவில்லாமல் போய்
விட்டது. முழுக் கவிதையும் நண்பிக்கு எழுதிய கடிதம் தான். அது தெளிவாக நான் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

தமிழ் அஞ்சல் said...

அறுபதிலும் ரசிக்க பல விஷயங்கள் ...கவிதை அருமை!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//திருப்பூர் மணி Tirupur mani said...
அறுபதிலும் ரசிக்க பல விஷயங்கள் ...கவிதை அருமை!//

வாங்க திருப்பூர் மணி. ரசனைக்கும் வயதிற்கும் தொடர்பே கிடையாதே! உங்கள் கருத்துக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?]]

முகவரி மறந்தாலும் - தொலைத்தாலும்

முகம் மறக்கா நட்பு சிறப்பே

லதானந்த் said...

கவிதை நன்றாயிருக்கிறது - உங்கள் பெயரும்தான்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...

/வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?/
முகவரி மறந்தாலும் - தொலைத்தாலும்

முகம் மறக்கா நட்பு சிறப்பே//
சரியான விடயத்தைப் பிடித்திருக்கிறிர்கள். அதைத் தான் சொல்ல வந்தேன். என்ன மறந்தாலும் நண்பியை மறக்கவில்லை என்பது தான் கவிதையின் அர்த்தம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//லதானந்த் said...

கவிதை நன்றாயிருக்கிறது - உங்கள் பெயரும்தான்.//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லதானந்த். எனக்குப் பிடித்த பெயர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

விஜய் said...

முதுமையின் வலி கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்

சத்ரியன் said...

//வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?..///

ஜெஸ்வந்தி,

இயல்பான சொற்கள். அழகான சொற்கோர்வை.

அசந்து விட்டேன். இந்த அழகிய கவிதையில்..!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கவிதை(கள்) said..
முதுமையின் வலி கவிதை
வாழ்த்துக்கள்
விஜய்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஜய்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சத்ரியன் said...
//வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்கு?
கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ
உன் முகவரியை எங்கே வைத்தேன்?..///

ஜெஸ்வந்தி,
இயல்பான சொற்கள். அழகான சொற்கோர்வை.
அசந்து விட்டேன். இந்த அழகிய கவிதையில்..!//
வாங்க சத்ரியன் . உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.