நண்பர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. பதில் கண்டு பிடியுங்கள். உங்கள் மூளைக்கு சில நிமிட வேலைதான். சரியான பதிலை யார் சொன்னார்கள் என்று நான் பின்னர் சொல்கிறேன்.
*************************************************************************************
இரண்டு நண்பர்கள் ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். அப்போ அவர்களைச் சந்திக்க ஒரு விருந்தினர் வந்திருந்தார். மூவரும் இருந்த ஆப்பிள் பழங்களைப் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு நண்பரிடம் 3 ஆப்பிளும், மற்றவரிடம் 2 ஆப்பிளும் இருந்தது. ஒவ்வொரு பழத்தையும் மூன்று துண்டுகளாக வெட்டிச் சரி சமமாகப் பகிர்ந்தார்கள். கதைத்தபடி 5 ஆபிள்களையும் முடித்து விட்டார்கள். சந்திக்க வந்த நண்பர் புறப் பட்ட போது அவர்கள் தனக்குப் பகிர்ந்து தந்த ஆபிள்களுக்கு 5 டாலர் கொடுத்து விட்டுப் போனார். அந்தப் பணத்தை நண்பர்கள் எப்படிப் பகிர்வதென்று தெரியாமல் திக்கு முக்காடினார்கள்.
விட்டு விட்டுப் போன குடையை எடுக்கத் திரும்பி வந்த விருந்தினர், அந்தப் பணத்தை சரியாக அவர்களிடையே பகிர்ந்து கொடுத்து அந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தார். கேள்வி இதுதான். இரண்டு நண்பர்களுக்கும் கிடைத்த டாலர் எவ்வளவு? உங்கள் பதிலை ஆவலுடன் பார்த்திருக்கிறேன்.
.
21 comments:
அதெல்லாம் இருக்கட்டும்.என்னோட பங்கு ஆப்பிளை எங்கே ??!! :))
3 apple ullavaridam 3 dollarum 2 apple vaithu irunthavaridam 2 dollarum koduthu irupar
//துபாய் ராஜா said...
அதெல்லாம் இருக்கட்டும்.என்னோட பங்கு ஆப்பிளை எங்கே ??!! :))//
அடடே ! நீங்கள் சாப்பாட்டு ராமரா? பகிடி இருக்கட்டும். 5 நிமிடம் யோசித்துப் பதில் போடுங்கள்.
நண்பருக்கு 4 டாலர்
மற்றவருக்கு 1 டாலர்
சரியா?
தப்போ?
3 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 4$ மற்றும் 2 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 1$
அனைவரும் சாப்பிட்டது 5 துண்டுகள். 2 ஆப்பிள் வைத்திருந்தவர் 5 சாப்பிட்டுவிட்டு ஒன்றை மட்டும் தந்தார். இன்னொருவர் 5 சாப்பிட்டுவிட்டு 4 துண்டுகள் தந்தார்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
//3 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 4$ மற்றும் 2 ஆப்பிள் வைத்திருந்தவருக்கு 1$//
இது தான் எனது பதிலும்.....
வருகைக்கு புதியவன்.
2 ஆப்பிள் இருந்தவரிடம் $2 டாலரும் 3 ஆப்பிள் இருந்தவரிடம் $3 டாலரும் கொடித்திருப்பார்.
என்ன சரிதானே.
மூன்று ஆப்பிள் வைத்திருந்தவருக்கு நான்கு டாலரும் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தவருக்கு ஒரு டாலரும் கொடுத்திருப்பார்.
இரண்டு ஆப்பில் வைத்திருந்தவர் ஐந்து பீஸ் சாப்பிட்டார்னா ஒண்ணுதான் அவர் கொடுத்திருப்பார். ஆக ஒரு டாலர் போதும் அவருக்கு
//Kesavan said...
வருகைக்கு புதியவன்.
2 ஆப்பிள் இருந்தவரிடம் $2 டாலரும் 3 ஆப்பிள் இருந்தவரிடம் $3 டாலரும் கொடித்திருப்பார்.//
இதே தான் எனது பதில்!! சரியான பதிலுக்கு ஆப்பிள் பழக் கூடை பரிசா?
மூன்று ஆப்பிள்கள் 3$
இரண்டு ஆப்பிள்கள் 2$
சரியா ஜெஸ்வந்தி...
இதே போல இன்னொரு கேள்வி...
3 Friends eat in a Restaurant and the bill was Rs.75/- They decide to pay Rs.25/- each. But the owner gave Rs.5 Discount...
As they could not divide Rs.5/- between those 3 people, he gave Rs.1/- each and kept Rs.2/- with him. Each of the 3 friends, paid Rs.24/- each & Rs.2/- with the Manager, so where is that Rs.1/- gone?
As they could not divide Rs.5/- between those 3 people, he gave Rs.1/- each and kept Rs.2/- with him. Each of the 3 friends, paid Rs.24/- each & Rs.2/- with the Manager, so where is that Rs.1/- gone?
As you said they pay 70/-. 3 people get 1 Rs each, yani 70+3=73, remaining 2 with the manager 73+2=75
4m 1m
இந்த மாதிரி பதிவுகள் போட்டால் கமெண்ட் மாடரேஷன் போடுங்க ஜெஸ்வந்தி.
என்ன ஜெஸி,5 டொலரை பழங்கள் வைத்திருந்தது போலவே 3 பழம் வைத்திருந்தவர் 3 டொலரும்,
2 பழங்கள் வைத்திருந்தவர் 2 டொலருமாக எடுத்துக்கொள்வார்கள்.சரியோ...ஜெஸி அப்ப எனக்கெல்லோ அப்பிள் !
நான் சொல்லவந்ததை எல்லோரும் சொல்லிட்டாங்க
ஆதலா 5 பழக்கூடை ஆப்பிள் எனக்குதான் பார்சல்
என்னது கணக்கா???
அது நமக்கு சுட்டுபோட்டாலும் வராதே சகோதரி
நான் பதிலைச் சொல்லி விடுகிறேன். பல நண்பர்கள் சரியான பதில் சொன்னதினால் மகிழ்ச்சி. எல்லோருக்கும் பாராட்டுகள்.
3 ஆப்பிள் வைத்திருந்த நண்பருக்கு 4 டாலரும், 2 ஆப்பிள் வைத்திருந்த நண்பருக்கு 1 டாலரும் கிடைத்திருக்கும்.
மொத்தமாக 5 ஆப்பிள், 15 துண்டுகள் இருந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் 5 துண்டுகள் கிடைத்திருக்கும். 3 ஆப்பிள் வைத்திருந்த நண்பரிடம் 9 துண்டுகள் இருந்திருக்கும், அவர் உண்ட 5 துண்டுகள் போக மீதி 4 துண்டுகளை விருந்தினருக்குக் கொடுத்தார்.
இரண்டு ஆப்பிள் வைத்திருந்தவரிடம், 6 துண்டுகள் இருந்திருக்கும். அவர் உண்ட 5 துண்டுகள் போக மீதி 1 துண்டை விருந்தினருக்குக் கொடுத்தார்.
நண்பர் Sriram அழகாக விளக்கத்துடன் பதில் தந்திருக்கிறார். கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.
சரி..என்பதில்...என்னாச்சு ஏன் நீங்கள் சொன்னீர்கள் ஜெஸ்...அட போங்க ஜெஸ்..நான் பதில் சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே.என்ன கொடுமை சார் இது.
எங்கோ படித்த வரிகள்
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது
--- நம்ம மஞ்சள் துண்டு மாமுனீ, திருக்குவளை தந்த பெருக்குவலை, சின்ன பெரியார் கலைஞர் கருணாநிதியின் பொன்மொழி இது.
//பா.ராஜாராம் said...
சரி..என்பதில்...என்னாச்சு ஏன் நீங்கள் சொன்னீர்கள் ஜெஸ்...அட போங்க ஜெஸ்..நான் பதில் சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே.என்ன கொடுமை சார் இது.//
வாங்க நண்பரே! நீங்க லேட் ஆக வந்து விட்டீர்கள். நான் கணக்குப் போட்டு நண்பர்களை விரட்டி அடித்து விட்டேனோ ? என்று பயந்து போனேன் பாருங்கோ. ஹா ஹா
//C said...
எங்கோ படித்த வரிகள்
/முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது/
--- நம்ம மஞ்சள் துண்டு மாமுனீ, திருக்குவளை தந்த பெருக்குவலை, சின்ன பெரியார் கலைஞர் கருணாநிதியின் பொன்மொழி இது.//
உங்கள் வரவுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
Post a Comment