நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 26 June 2009

நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்!

தூரத்தில் செல்லும் இரயில் சத்தம் என் தூக்கத்தைக் கெடுத்ததால் விழித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் இப்பிடித்தான் சின்னச் சின்னச் சத்தத்துக்கெல்லாம் என் தூக்கம் கெட்டுப் போகிறது. ஆழ்ந்த தூக்கம் என்றால்தானே விழிப்பது கடினம். மனம் நிறையப் பாரத்தை வைத்துக் கொண்டு அங்கலாய்த்துக் கிடப்பவளுக்கு எங்கே ஆழ்ந்த தூக்கம் வரப் போகிறது. ஜன்னலூடாகப் பார்க்கையில் இன்னும் விடியவில்லை என்று தோன்றுகிறது. முகட்டைப் பார்த்தபடி பழையதை அசை போடுவதை விட எழுந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்தாலும் அது அயர்ந்து தூங்கும் என் மகள் பாரதியை எழுப்பிவிடும் என்ற கவலையில் அவள் பக்கம் திரும்புகிறேன். அந்த மங்கிய வெளிச்சத்தில் மெய் மறந்து தூங்கும் கள்ளம் கபடமற்ற அவள் முகத்தை இப்போதான் முதன்முறை பார்ப்பவள்போல் பார்க்கிறேன். இந்த வருடம் அவளுக்கு இருபத்தியாறு வயதாகி விட்டது. அப்படி இவளைக் கரை சேர்க்கப் போகிறேன் என்ற அடிப்பு என் நெஞ்சைக் கனக்க வைத்து என் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு அதி காலையில் என் கணவர் நெஞ்சைப் பிடித்தபடி என்னைத் துயில் எழுப்பியபோது அத்தனை அவசரமாக இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறார் என்று நான் கனவிலும் நினைத்திருக்க வில்லை. எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது. அந்தத் திடீர் பிரிவு எனக்குத் தந்த அதிர்ச்சி என்னைச் சிறிது காலம் நடைப் பிணமாக ஆக்கி விட்டது. இழவு வீட்டில் குத்துக் கல்லாக அவர் உடலருகில் நான் இருந்ததைப் பற்றி இந்த ஊரே வாய் கிழியக் கதைத்து ஓய்ந்து விட்டது. ஆனால் மெல்ல மெல்ல அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு நான் வாய் விட்டு அழ ஆரம்பித்தபோது நான் ஏன் அழுகிறேன் ? என்று எனக்கே புரியாமல் போனது.

அவருடன் நான் வாழ்ந்த வாழ்க்கை அடிக்கடி என் மனதை ஆக்கிரமித்து அல்லல் படுத்துகிறது. ஊராரயும் உறவினர்களையும் பொறுத்த மட்டில் நாங்கள் பல வருடம் ஒற்றுமையாய் வாழ்ந்த அந்நியோனிய தம்பதிகள். ஆனால் நான் வாழ்ந்தேனா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் சொல்வேன் . என் உணர்ச்சிகளை மறைத்து என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறேன் என்று நாடகமாட நான் கற்றுக் கொண்டேன். அதை விட வேறு நல்ல வழி எனக்குத் தெரியவில்லை.

என் பெற்றோரால் எங்கள் திருமணம் நிச்சயிக்கப் பட்டபோது , அவருக்கு இல்லாத குடிப் பழக்கமும் , பெண் சேர்க்கையும் அவர்கள் மனதில் பெரிய ஒரு இடத்தை இலகுவில் பிடித்துக் கொண்டது. ஆனால்கல்யாணமாகி , பெற்றோரைப் பிரிந்து, பல காத தூரத்தில் ,என் மாமனார் வீட்டில் முதல் மருமகளாக நான் குடியேறிய போது என்னைப் பல விடயங்கள் பலமாகத் தாக்கத் தொடங்கின. ஒரு பட்டாம் பூச்சியாகப் பறந்து திரிந்த நான் ஒரு கூட்டுக்குள் அடை பட்டுப் போன உணர்ச்சியில் தினம் தினம் அழுந்திப் போனேன். எனக்கும் ஆசைகளுண்டு எனக்கும் எண்ணங்கள் உண்டு என்ற நினைவே புறக் கணிக்கப் பட்டு ,என் கணவர் எடுக்கும் முடிவுகளுக்கு ' ஆமா' போட்டு என் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மடியத் தொடங்கின. அது போதாதென்று , அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே அவர் தாயாரின் முடிவுகள் என்பதை அறிந்தபோது ,அவற்றிற்கு மாற்று முடிவே கிடையாது என்பதை உணர்ந்தபோது என் வயிற்றுக்குள் பர பர வென்று கரப்பான் பூச்சிகள் ஓடத் தொடங்கின.

பெண்ணை நல்ல இடத்தில் கொடுத்து விட்டோம் என்று பூரித்த பெற்றவர்களைக் கவலைப் படுத்த முடியாமல், அடிக்கடி அவர்கள் வரும்போது உங்கள் பெண் சந்தோஷமாக இருக்கிறாள் என்று காட்ட அவர்கள் முன் நடிக்கத் தொடங்கியது இன்னும் மனதில் நிற்கிறது. வருடங்கள் ஓட அந்த வாழ்க்கை பழகிப் போனது. 'உனக்கு என்ன பிடிக்கும்?'' என்று கேட்க மாட்டாரா! என்று ஏங்கித் தவித்த மனம், எதுவும் எதிர்பாராமல் வாழப் பழகிக் கொண்டது. கடவுள் கிருபையால் மகனும் மகளும் என்று குடும்பம் பெருக அவர்களை வளர்ப்பதில் என் ஆசைகள் மங்கிப் போய்விட்டன.

திடீரென இவர் மறைந்தபோது என் மகன் இருக்கின்றான் என்ற துணிவில் நான் சிறிது சிறிதாக என்னைத் தேற்றிக் கொண்டேன். ஆனால் அவர் பிரிந்து ஒரு வருடம் ஓடமுதல் அவன் தான் விரும்பிய ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு , சாவகாசமாக என் முன் வந்து நின்ற போது, விக்கித்துப் போனேன். அது மட்டுமல்லாமல் தனிக் குடித்தனம் போகிறேன் என்று என்னையும் பாரதியையும் அவன் நட்டாற்றில் விட்டுப் போனபோது அப்பிடியே உடைந்து போனேன். வேறு வழியின்றி பாரதி வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்த பின் , அவள் உழைப்பில் நாங்கள் இருவரும் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கும் நிலையில், நான் அவள் கல்யாணத்தைப் பற்றி எப்படி நினைத்துப் பார்க்க முடியும். எப்படி எனக்குத் தூக்கம் வரும்?

எனக்கு நினைவிருக்கிறது. எங்களுக்குக் கல்யாணமாகி இரண்டு வருடங்களின் பின்பு நான் என் மகன் ராஜாவைக் கருத் தரித்த போது , பல்வேறு உணர்ச்சிகளால் கொந்தளித்து , குமுறியழுது 'இப்படி அம்மா பிள்ளை ஆம்பிள்ளைகளைப் படைக்காதே ' என்று என்னைப் படைத்த ஆண்டவினிடம் பலமுறை முறையிட்டேன். அந்த உணர்ச்சிக் குமுறல்கள் அந்த ஆண்டவனுக்குக் கேட்டதோ என்னவோ ! ஆனால் நிச்சயம் என் உதரத்தில் இருந்த என் மகனுக்கு கருவிலேயே நன்றாகக் கேட்டிருக்கிறது. இப்போதான் உதரத்தில் இருக்கும் குழந்தை பாட்டெல்லாம் கேட்கும் என்கிறார்களே! அதனால்தான் பெற்றவள் உயிருடன் இருக்கிறாளா? என்று அறியக் கூட நேரமில்லாமல் கட்டியவளே கதியென்று போய் விட்டான்.

இதில் விசித்திரம் என்னவென்றால் என் கணவர் ராஜாவைப் போல் இருந்திருந்தால் அப்போ நான் ' கொடுத்து வைத்தவள் என்று நினைத்திருப்பேனோ? என்னவோ?இப்போ அவன் என மகனாக இருப்பதால் அந்த வேதனையைத் தாங்க முடியாமல் அழுகிறேன். இது எந்த விதத்தில் நியாயம். ஆண்டவன் எவர் முறைப்பாட்டைக் கேட்பான்? என் பிள்ளையை எனக்குக் குடு என்று அழும் தாய்க்கா? இல்லை , என் கணவரை முழுதாக எனக்குக் கொடு என வேண்டும் மனைவிக்கா?

யோசித்துப் பார்க்கையில் ஆண்டவன் என அலறலைக் கேட்டு நான் விரும்பிய ஒரு ஆண் மகனாய் என மகனை எனக்குக் கொடுத்திருக்கிறான் என்பது புரிகிறது.
இந்த இரண்டு சந்ததிக்கிடையில் அடிபட்டுப் போனவள் நானாக இருந்தாலும் ,என் அழுகைக்கிடையில் ஏதோ ஒன்று எனக்கு நிம்மதியை அளித்துச் சிரிக்க வைக்கிறது.


.

57 comments:

செண்பகநாதன் said...

உங்களது கதை நன்றாக தொடங்கி, பிறகு கதைக்குரிய வெளியை அடையாமல் முடிந்திருந்திருக்கிறது. உரைநடை கவிதை தன்மையை கொண்டிருக்கிறது.
இது உங்களது தொடக்க முயற்சியா?
ஆனாலும் உணர்வு பூர்வமாக உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள்.

Kavinaya said...

அழுது கொண்டே சிரிக்கும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள் ஜெஸ்வந்தி. அவர்கள் மன நிலையை நன்றாக படம் பிடித்திருக்கிறீர்கள்.

மயாதி said...

கதைய பற்றி நமக்கு அறிவு குறைவு !

சோ நோ கமண்ட்ஸ்

ஆனால் எனக்கு பிடிச்சிருக்கு !

மயாதி said...

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_21.html

did u read this?

Rajeswari said...

ரொம்ப அருமையா இருந்துச்சு உணர்வுகள்

tamilraja said...

பல்லாயிரக்கணக்கான பெண்களின் இதயம் புலம்பும் மவுன மொழியை ஏதோ மிக அருகில் இருந்துகேட்பது போன்ற உணர்வை கொடுத்தது.இந்த கதை
ஒரு வேலை என்தாயும் மருமகளாகி என் தந்தையின் வீட்டுக்கு வந்த பொது இப்படித்தான் மனதுக்குள் புலம்பி இருப்பாளோ என்று என்ன வைக்கிறது.....
அருமை!!!!

நான் இன்றிலிருந்து உங்களை தொடர்கிறேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//செண்பகநாதன் said...
உங்களது கதை நன்றாக தொடங்கி, பிறகு கதைக்குரிய வெளியை அடையாமல் முடிந்திருந்திருக்கிறது. உரைநடை கவிதை தன்மையை கொண்டிருக்கிறது.
இது உங்களது தொடக்க முயற்சியா?
ஆனாலும் உணர்வு பூர்வமாக உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள்.//

உங்கள் உண்மையான கருத்துக்கு நன்றி நண்பரே. இந்த வளையத்தில் தான் முதல் முதல் எழுதத் தொடங்கியிருக்கிறேன். தமிழில் கடிதம் எழுதியே பல வருடங்கள் ஆகின்றன. தமிழில் எழுதவேண்டும் என்ற ஆவல்தான் இந்த பதிவுகள். உங்கள் கவிதை தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கும் நன்றிகள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கவிநயா said...
அழுது கொண்டே சிரிக்கும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள் ஜெஸ்வந்தி. அவர்கள் மன நிலையை நன்றாக படம் பிடித்திருக்கிறீர்கள்.//

வாங்க கவிநயா, நீங்கள் தரும் ஊக்கத்துக்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மயாதி said...
//கதைய பற்றி நமக்கு அறிவு குறைவு !
சோ நோ கமண்ட்ஸ்//

இங்கு மட்டும் என்ன கொட்டிக் கிடக்குதா?

//ஆனால் எனக்கு பிடிச்சிருக்கு !//

அது போதும். நன்றி நண்பா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மயாதி said...
http://konjumkavithai.blogspot.com/2009/06/blog- post_21.html
did u read this?//

முதல் படிக்கல. ஆனால் இப்போ படிச்சாச்சு. கருத்தும் போட்டாச்சு. என்னவோ கலக்குங்க!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Rajeswari said...
ரொம்ப அருமையா இருந்துச்சு உணர்வுகள்//

வாங்க ராஜேஸ்வரி, உங்கள் கருத்துக்கு நன்றி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//tamilraja said...
பல்லாயிரக்கணக்கான பெண்களின் இதயம் புலம்பும் மவுன மொழியை ஏதோ மிக அருகில் இருந்துகேட்பது போன்ற உணர்வை கொடுத்தது.இந்த கதை ஒரு வேலை என்தாயும் மருமகளாகி என் தந்தையின் வீட்டுக்கு வந்த பொது இப்படித்தான் மனதுக்குள் புலம்பி இருப்பாளோ என்று என்ன வைக்கிறது.....
அருமை!!!!
நான் இன்றிலிருந்து உங்களை தொடர்கிறேன்//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. நீங்கள் என் வலையத்தைத் தொடர்வதில் மகிழ்ச்சி. எனது மே மாதப் பதிவுகளையும் படியுங்கள்.

இராயர் said...
This comment has been removed by the author.
இராயர் said...

http://pengalpathivugal.blogspot.com/
konjam visit panni parunga

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...

http://pengalpathivugal.blogspot.com/
konjam visit panni parunga//

நன்றி இராயர், நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது. என் கதைக்கு நீங்கள் இன்னும் கருத்துப் போடவில்லை. மறந்து விட்டீர்களா?

நேசமித்ரன் said...

//இந்த இரண்டு சந்ததிக்கிடையில் அடிபட்டுப் போனவள் நானாக இருந்தாலும் ,என் அழுகைக்கிடையில் ஏதோ ஒன்று எனக்கு நிம்மதியை அளித்துச் சிரிக்க வைக்கிறது//

உணர்வுகளை மொழிபெயர்த்திருக்கும் விதம்
வெகு நேர்த்தி

இராயர் said...

உண்மையில் இது கதை தானா? என்னவென்றால் இது உண்மை சம்பவம் போலவே இருக்கிறது,தினசரி நாளிதழில் அன்றாடம் வரும் செய்தி போலவே உள்ளது.

மனதை வாட்டி விட்டது என்றே சொல்லலாம்.
இது போன்ற நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது(கனவில் கூட)

நன்றி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நேசமித்ரன் said...

// உணர்வுகளை மொழிபெயர்த்திருக்கும் விதம்
வெகு நேர்த்தி//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
உண்மையில் இது கதை தானா? என்னவென்றால் இது உண்மை சம்பவம் போலவே இருக்கிறது,தினசரி நாளிதழில் அன்றாடம் வரும் செய்தி போலவே உள்ளது.
மனதை வாட்டி விட்டது என்றே சொல்லலாம்.
இது போன்ற நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது(கனவில் கூட)//

உண்மையாய் நடப்பவற்றை எழுதினால் தானே யதார்த்தமாய் இருக்கும்.
உங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kannan said...

ஜெஸ்வந்தி, மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதி வாருங்கள். வாழ்த்துக்கள்.

செண்பகநாதன் said...

எனது கவிதைகளை தொடர்ந்து வாசித்து கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிக்க நன்றி! உங்களை பற்றி கூறுங்கள்.

bala said...

இந்த மௌனத்தின் ராகம் கானக அமைதியை போன்று கவனம் கலைக்ககூடியது. முயற்சிகள் தொடரட்டும் . அப்படியே கவனம் ஈர்க்க எழுதுவது எப்படி என்று ஒரு பதிவு இட்டு விடுங்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Kannan said...
ஜெஸ்வந்தி, மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதி வாருங்கள். வாழ்த்துக்கள்.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//செண்பகநாதன் said...
எனது கவிதைகளை தொடர்ந்து வாசித்து கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிக்க நன்றி! உங்களை பற்றி கூறுங்கள்.//

உங்கள் கவிதைகள் அபாரம் நண்பரே! எப்படிப் படிக்காமல் இருக்க முடியும். என்னைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. பல வருடங்களாக கணக்காளராக வேலை செய்கிறேன். அண்மையில் நண்பர் ஒருவர் இணையத்தில் தமிழில் எழுதும் முறையைக் காட்டியதால் ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//bala said...
இந்த மௌனத்தின் ராகம் கானக அமைதியை போன்று கவனம் கலைக்ககூடியது. முயற்சிகள் தொடரட்டும் . அப்படியே கவனம் ஈர்க்க எழுதுவது எப்படி என்று ஒரு பதிவு இட்டு விடுங்கள்//

உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி. நான் ஏதோ பொழுது போக்கக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் கிறுக்குவது எப்படியென்று சொல்லிக் கொடுக்கச் சொல்கிறீர்கள்...ஹ ஹ ஹா

பா.ராஜாராம் said...

மிக நல்லா இருக்கு ஜெஸ் தொடருங்கள்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

Anonymous said...

பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத் தான் தெரியுமுன்னு சொல்வாங்க...உண்மைத் தான் போலும் அப்படியே படம் பிடிச்ச மாதிரி இருக்கு கதை....உங்களை அறியும் ஆவலோடு வந்தேன்.. கதை கனக்கச் செய்து விட்டது மனதை...

// என் உணர்ச்சிகளை மறைத்து என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறேன் என்று நாடகமாட நான் கற்றுக் கொண்டேன். அதை விட வேறு நல்ல வழி எனக்குத் தெரியவில்லை.//

எத்தனை நிசர்னமான உண்மை இது... எனோ எனக்கு வலிக்கிறது...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தமிழரசி said...
பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத் தான் தெரியுமுன்னு சொல்வாங்க...உண்மைத் தான் போலும் அப்படியே படம் பிடிச்ச மாதிரி இருக்கு கதை....உங்களை அறியும் ஆவலோடு வந்தேன்.. கதை கனக்கச் செய்து விட்டது மனதை...

// என் உணர்ச்சிகளை மறைத்து என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறேன் என்று நாடகமாட நான் கற்றுக் கொண்டேன். அதை விட வேறு நல்ல வழி எனக்குத் தெரியவில்லை.//
எத்தனை நிசர்னமான உண்மை இது... எனோ எனக்கு வலிக்கிறது...//

உங்கள் அழகான கருத்துக்கு என் நன்றி.

ivingobi said...

Dear friend....
ithu pala pengalin nilai endru kelvip padum pothu manathu Ganakkindrathu....

appuram puthiyathaga ezhuthuvathaga sonnathu thaan nambum badiyaaga illai.....

ivingobi said...

எங்கோ படித்த வரிகள்
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முலாமை வெல்லாது

மு ya லாமை endru varavaendum.....
plz change dta.....

Ungalranga said...

முகத்தின் புன்னகை, கழுத்தில் பொன் நகை,மனதில் பாலையாக வாழும் பெண்களிடையே நானும் வாழ்ந்திருக்கிறேன்.

ம்ம்,நல்ல கதை ஜெஸ்வந்தி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ivingobi said...
Dear friend....
ithu pala pengalin nilai endru kelvip padum pothu manathu Ganakkindrathu....
appuram puthiyathaga ezhuthuvathaga sonnathu thaan nambum badiyaaga illai....//

Thanks for following my blog and for your comments. Thanks a lot for pinpointing the spelling mistake. I didn't notice it all these time.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ரங்கன் said...
முகத்தின் புன்னகை, கழுத்தில் பொன் நகை,மனதில் பாலையாக வாழும் பெண்களிடையே நானும் வாழ்ந்திருக்கிறேன்.
ம்ம்,நல்ல கதை ஜெஸ்வந்தி.//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்கன்.

ப்ரியமுடன் வசந்த் said...

கதை கேளு கதை கேளு ஜெஸ்வந்தி கதை கேளு


நல்லாயிருக்குங்க கதை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// பிரியமுடன்.........வசந்த் said...

கதை கேளு கதை கேளு ஜெஸ்வந்தி கதை கேளு
நல்லாயிருக்குங்க கதை//

பாட்டுப் பாடியதற்கும் உங்கள் வருகைக்கும் நன்றி வசந்த்

அ.மு.செய்யது said...

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இப்படி ஆயிரமாயிரம் வலிகள்.

புதைத்து வைக்கப்பட்ட மனப்போராட்டங்களை நேர்த்தியாக காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.

என்னை பாதித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

நட்புடன் ஜமால் said...

சீக்கிரமாக அடுத்த பதிவிடுங்கள்

இந்த பதிவின் அருமையை வெகு லேட்டாக வந்து உணர்ந்து இருக்கேன், இனி சீக்கிரம் வாறேன் ...

பாலமுருகன் said...

என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி ஜெஸ்வந்தி. ஆனால் உங்கள் பின்னூட்டத்திற்கு என் தளத்திலேயே பதிலளிப்பது எப்படி என்று இந்த மரமண்டைக்கு தெரியவில்லை . ஆகட்டும் என்னையும் பொருட்டாய் மதித்த , தங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி . தொடர்ந்து எழுதுவேன் . ஓய்வாய் உணரும்போது என் தளத்திற்கு வாருங்கள் . பின்னூட்டத்திற்கு பதிலளிப்பது எப்படி என்று குறிப்பிடுங்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அ.மு.செய்யது said...
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இப்படி ஆயிரமாயிரம் வலிகள்.
புதைத்து வைக்கப்பட்ட மனப்போராட்டங்களை நேர்த்தியாக காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.
என்னை பாதித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.//

உங்கள் முதல் வருகைக்கும் ரசனைக்கும் என் நன்றிகள் நண்பரே! பெரிய எழுத்தாளர்கள் தரும் ஊக்கம் மகிழ்ச்சி தருகிறது. என் வலையத்தைத் தொடர்வதற்கும் நன்றி.
முதல் முதலாக என் வலையத்துக்கு வந்தவர்கள் மனம் பாதிக்கப் பட்டும், மனம் கனத்தும் வெளியேறுகிறார்கள் என்று நினைக்கும் போது, இனிமேல் இப்பிடி சோகக் கதை எழுத வேண்டாம் என்று தோன்றுகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...

சீக்கிரமாக அடுத்த பதிவிடுங்கள்
இந்த பதிவின் அருமையை வெகு லேட்டாக வந்து உணர்ந்து இருக்கேன், இனி சீக்கிரம் வாறேன் ...//

வாங்க ஜமால்! ஆரம்பதிலிருந்தே என் வலையத்தைத் தொடர்பவர் நீங்கள். இந்தப் பதிவுக்குத்தான் பிந்தி வந்திருக்கிறீர்கள். நீங்கள் என் பதிவுகளுக்குத் தந்த ஊக்கம் தான் என்னை எழுத வைக்கிறது. நன்றி நண்பரே!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பாலமுருகன் said...
என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி ஜெஸ்வந்தி. ஆனால் உங்கள் பின்னூட்டத்திற்கு என் தளத்திலேயே பதிலளிப்பது எப்படி என்று இந்த மரமண்டைக்கு தெரியவில்லை . ஆகட்டும் என்னையும் பொருட்டாய் மதித்த , தங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி . தொடர்ந்து எழுதுவேன் . ஓய்வாய் உணரும்போது என் தளத்திற்கு வாருங்கள் . பின்னூட்டத்திற்கு பதிலளிப்பது எப்படி என்று குறிப்பிடுங்கள்//

வருகைக்கு நன்றி. அது என்ன ' என்னையும் பொருட்டாய் மதித்து' என்று ஏதோ சொல்கிறீர்கள்? அப்படியில்லை . உங்களிடமும் திறமை இருக்கிறது என்று நம்புங்கள்.
உங்கள் தளத்தில் , உங்கள் கேள்விக்குப் பதில் போட்டிருக்கிறேன்.

Radhakrishnan said...

அடக்கடவுளே! இது கதையா? உண்மையா? எனப் படிப்பவரை ஒருநிமிடம் புரட்டிப் போடும் வகையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துநடை! மனித உணர்வுகளை அப்படியேப் படம் பிடித்திருக்கும் விதமும் மிகவும் அருமை.

இது ஒரு எழுத்தின் வெற்றி என்றே கருதலாம். மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
அடக்கடவுளே! இது கதையா? உண்மையா? எனப் படிப்பவரை ஒருநிமிடம் புரட்டிப் போடும் வகையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துநடை! மனித உணர்வுகளை அப்படியேப் படம் பிடித்திருக்கும் விதமும் மிகவும் அருமை.
இது ஒரு எழுத்தின் வெற்றி என்றே கருதலாம். மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.//

உங்கள் முதல் வருகைக்கும் இந்த அதீத புகழ்ச்சிக்கும் நன்றி நண்பரே!
அதுசரி, இந்தச் சின்ன விடயத்துக்கெல்லாம் கடவுளைக் கூப்பிடலாமோ?
அவர் எத்தனை பிஸியாக இருப்பார் என்பது என் கதை படித்த உங்களுக்குத் தெரியவேணுமே! ஹா ஹா ஹா

பா.ராஜாராம் said...

ஜெஸ்...
வீட்டிற்கு வந்தேன்...
வீடு போயிருப்பதாக
சொன்னார்கள்.
வீட்டிலேயே இருங்களேன்
வருகிறேன்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
ஜெஸ்...
வீட்டிற்கு வந்தேன்...
வீடு போயிருப்பதாக
சொன்னார்கள்.
வீட்டிலேயே இருங்களேன்
வருகிறேன்...//

என்னங்க இது! இப்பிடிப் புதிர் போடுறீங்க? நான் இந்த வீட்டில் இருந்தால் மற்ற வீட்டில் அத்தனையும் பார்க்க ஆள் வேணுமே!.

பா.ராஜாராம் said...

ஜெஸ்...நான் உங்கள் வீடு
வந்திருந்தேன்...(என்ன..புதிது
ஒன்றும் எழுத காணோம்)
நீங்கள் என் வீடு போயிருப்பதாக
சொன்னார்கள்.என் வீட்டிலேயே
இருங்களேன்(அலையை வேண்டாமே)
நான் அங்கு வருகிறேன்.
போதுமா...
வந்துட்டு போனேன் ஜெஸ்!...
அவ்வளவுதான்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பா.ராஜாராம் said...

ஜெஸ்...நான் உங்கள் வீடு
வந்திருந்தேன்...(என்ன..புதிது
ஒன்றும் எழுத காணோம்)
வந்துட்டு போனேன் ஜெஸ்!...
அவ்வளவுதான்...//

இப்போ தான் புரியுது கவிஞரே! விரைவில் அடுத்த பதிவிடுவேன். நேரத்தை யாரிடமாவது கடனுக்கு வாங்கலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனது பழைய பதிவுகளைப் படித்து விட்டீர்களா?

R.Gopi said...

Madam

This is my first visit to your blog. I read the story..... Nalla arumaiyaana nadai.....

Niraiya ezhudhungal.......... Vaazhthukal......

Time kedaikkarappo nammalaiyum konjam vandhu etti paarunga.

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.com

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...
Madam
This is my first visit to your blog. I read the story..... Nalla arumaiyaana nadai.....
Niraiya ezhudhungal.......... Vaazhthukal......
Time kedaikkarappo nammalaiyum konjam vandhu etti paarunga.
www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! ஒருமுறை உங்கள் வலையத்துக்கு வந்தேன். நிறைய பதிவுகள் இருக்கிறது .இப்போ எனக்கு நேரமில்லை. நான் நிச்சயம் திரும்ப வருவேன்.

ஆபிரகாம் said...

நல்ல எழுத்து நடை.! இது உண்மையான சம்பவமாக இருக்க கூடதேன வேண்டிக்கொள்கிறது மனசு!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஆபிரகாம் said...
நல்ல எழுத்து நடை.! இது உண்மையான சம்பவமாக இருக்க கூடதேன வேண்டிக்கொள்கிறது மனசு!//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எழுதும் போது நானும் அப்படித்தான் வேண்டிக் கொண்டேன். ஆனால் இப்படி எத்தனையோ இடங்களில் நடக்கிறது.

செண்பகநாதன் said...

எனது எழுத்துகளை தொடர்ந்து வாசித்தும் கருத்துகள் தெரிவிப்பதற்கும் நன்றி!
நிழலோடிய சுவடு பற்றி கேட்டிருந்தீர்கள். அது காதல் பிரிவு குறித்த உணர்வு அது.

SUFFIX said...
This comment has been removed by the author.
SUFFIX said...

வலைச்சரத்தின் மூலம் வந்து கதையை படிச்சுக்கிரேனுங்க!! கதைக்கு எடுத்துக்கொன்ட கரு, நெகிழ்ச்சி அளிக்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
வலைச்சரத்தின் மூலம் வந்து கதையை படிச்சுக்கிரேனுங்க!! கதைக்கு எடுத்துக்கொன்ட கரு, நெகிழ்ச்சி அளிக்கிறது.//

உங்கள் முதல் வருகைக்கும் வலைச் சரத்தில் என்னை அறிமுகப் படுத்திய தமிழரசிக்கும் என் நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள்.

கண்ணகி said...

manathodu pesum illam.

anpudan kannaki