நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday, 16 June 2009

பெண்களைப் பகைக்காதீர்கள் !!

( நான் ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச் சுவை இது. பலரும் ரசிக்க தமிழில் எழுதியுள்ளேன்)

ஒரு தம்பதிகள் ஓட்டு ரோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். மனைவி வாகனத்தை 60 மைல் வேகத்தில் ஓட்டிக் கொண்டிருக்கிறாள். கணவர் அவளைத் திரும்பிப் பார்த்துத் தெளிவான குரலில் பேசத் தொடங்கினார். 'எனக்குத் தெரியும் , நீ என்மேல் அளவில்லாத அன்பு வைத்திருக்கிறாய். நாங்கள் பதின் நான்கு வருடங்கள் தம்பதிகளாய் வாழ்ந்து விட்டோம். ஆனால் இப்போ என் மனம் மாறி விட்டது. எனக்கு உன்னிடமிருந்து விவாகரத்து வேண்டும்.'

மனைவி எதுவும் சொல்லவில்லை. மெதுவாக காரின் வேகத்தைக் கூட்டுகிரார். கணவர் துணிவுடன் தொடர்கிறார். ''என்னுடன் கதைத்து என் முடிவை மாற்றலாம் என்று நினைக்காதே! ஏனென்றால் கடந்த இரண்டு வருடங்களாக உனது நண்பியுடன் எனக்குத் தொடர்புண்டு. எல்லாவகையிலும் அவள் எனக்குப் பொருத்தமானவள் என்று எனக்குப் புரிகிறது .'' இப்பவும் மனைவி அமைதியாக இருக்கிறார். காரின் வேகம் மேலும் கூடுகிறது. கணவர் நிறுத்தவில்லை. ' என் வீடு என் உழைப்பில் வாங்கியது. அதனால் நீதான் வெளியேற வேண்டும்' என்கிறார்.
காரின் வேகம் இப்போ 80 மைலைத் தாண்டிவிட்டது. மனைவியின் பதிலை எதிர்பார்த்து '' உனக்கு எங்கள் சொத்தில் என்ன வேண்டும் ?'' என்று கேட்கிறார். மனைவி இப்போ வாய் திறக்கிறார். '' எனக்குத் தேவையான எல்லாம் என்னிடம் இருக்கிறது. உங்களிடம் இருந்து எதுவும் எனக்குத் தேவையில்லை '' என்று நிதானமாக சொல்கிறாள். எகத்தாளமாகச் சிரித்தபடி '' உன்னிடம் என்னதான் இருக்கிறது ?'' என்று கணவர் கேட்கிறார்.
காரை திசை திருப்பி ஒரு பாரிய சுவரில் மோதுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு கணவர் பக்கம் திரும்பி '' என்னிடம் ' எயர் பாக்' (air bag) இருக்கிறது என்கிறாள்.

படிப்பினை.
பெண்களை அன்பினால் அடிமைப் படுத்தலாம். . ஆனால் சுரண்டிப் பார்த்தால் ஆளே இல்லாமல் பண்ணி விடுவார்கள்.ஜாக்கிரதை!!!


.

17 comments:

விஷ்ணு. said...

// பெண்களை அன்பினால் அடிமைப் படுத்தலாம். . ஆனால் சுரண்டிப் பார்த்தால் ஆளே இல்லாமல் பண்ணி விடுவார்கள்.ஜாக்கிரதை!!! //

அய்யயோ பயமுடுத்துறீங்களே..

இராயர் அமிர்தலிங்கம் said...

Excellent
but i'm fear

நட்புடன் ஜமால் said...

பெண்களை அன்பினால் அடிமைப் படுத்தலாம். . ஆனால் சுரண்டிப் பார்த்தால் ஆளே இல்லாமல் பண்ணி விடுவார்கள்.ஜாக்கிரதை!!!
\\

இதத்தான் ஜோக்குன்னு சொன்னியளா

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

கவிநயா said...

//பெண்களை அன்பினால் அடிமைப் படுத்தலாம். . ஆனால் சுரண்டிப் பார்த்தால் ஆளே இல்லாமல் பண்ணி விடுவார்கள்.ஜாக்கிரதை!!!//

:)))

கலையரசன் said...

பெரியபுள்ளதனமால்ல இருக்கு...
குட்...குட்...
கலக்குங்க...

எங்கிருந்துங்க புடிக்கிரிங்க இந்த மாதிரி ஜோக் ச?
நல்லாயிருக்கு!!

நாங்களும் ஒன்னு போட்டுருகோம்..
http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

sury said...

// '' என்னிடம் ' எயர் பாக்' (air bag) இருக்கிறது என்கிறாள்.//

'காய‌மே இது பொய்ய‌டா, இது
காற்ற‌டைத்த‌ வெறும் பைய‌டா' என‌
க‌ண‌வ‌ர் க‌ண் க‌ல‌ங்கி வாய் புதைத்துத் த‌ன் இல்லாள்
காலில் விழும் காட்சி . அக்
காணாத‌ காட்சி அடுத்த‌ நிக‌ழ்ச்சியோ ?

சுப்புர‌த்தின‌ம்.

புதியவன் said...

மனைவியை பகைக்காதீர்கள் என்று
தலைப்பு வைத்திருந்தால் இன்னும்
பொருத்தமாக இருந்திருக்கும்...

ஜெஸ்வந்தி said...

நட்புடன் ஜமால் said...

பெண்களை அன்பினால் அடிமைப் படுத்தலாம். . ஆனால் சுரண்டிப் பார்த்தால் ஆளே இல்லாமல் பண்ணி விடுவார்கள்.ஜாக்கிரதை!!!//

இதத்தான் ஜோக்குன்னு சொன்னியளா?//

மனதில் கனம் இல்லாதவர்களுக்கு இது ஒரு ' நகைச் சுவை '.உள்ளவர்களுக்கு இது 'திகில் '
அடடே நீங்கள் இரண்டாவது ரகமோ? ..ஹ ஹ ஹ

ஜெஸ்வந்தி said...

//sury said...
// '' என்னிடம் ' எயர் பாக்' (air bag) இருக்கிறது என்கிறாள்.//

'காய‌மே இது பொய்ய‌டா, இது
காற்ற‌டைத்த‌ வெறும் பைய‌டா' என‌
க‌ண‌வ‌ர் க‌ண் க‌ல‌ங்கி வாய் புதைத்துத் த‌ன் இல்லாள் காலில் விழும் காட்சி . அக் காணாத‌ காட்சி அடுத்த‌ நிக‌ழ்ச்சியோ?//

சார், உங்களுக்கு என் கதையே விளங்கவில்லை போலிருக்கிறது. மனைவி காலில் விழுவதற்கு அவர் முதலில் உயிருடன் இருக்க வேண்டுமல்லவா?

ஜெஸ்வந்தி said...

//புதியவன் said...

மனைவியை பகைக்காதீர்கள் என்று
தலைப்பு வைத்திருந்தால் இன்னும்
பொருத்தமாக இருந்திருக்கும்...//

அப்படி வைக்கலாம் என்றுதான் முதலில் யோசித்தேன் .ஆனால் காதலிகளை சேர்க்கவேண்டும் என்பதால் தான் பொதுவாக பெண்கள் என்று தலைப்பிட்டேன். ரகசியமாக காதலிகள் வைத்த வேட்டுக்கள் பற்றி தினம் தினம் பத்திரிகையில் படிக்கிறேன் புதியவன்.

ஜெஸ்வந்தி said...

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

//படிப்பினை.
பெண்களை அன்பினால் அடிமைப் படுத்தலாம். . ஆனால் சுரண்டிப் பார்த்தால் ஆளே இல்லாமல் பண்ணி விடுவார்கள்.ஜாக்கிரதை!!! //

:))

ரங்கன் said...

அவன் உண்மைய சொன்னதுக்கு இது தேவைதான்.

நல்ல ஜோக்.. !!

ஜெஸ்வந்தி said...

//ரங்கன் said...
அவன் உண்மைய சொன்னதுக்கு இது தேவைதான்.
நல்ல ஜோக்.. !!//

என்ன ரங்கன், ஆண் வர்க்கத்துக்கு இப்பிடி support பண்ணிறீங்க? கவனம்.

பாலமுருகன் said...

காமெடி என்னன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே

ஜெஸ்வந்தி said...

//பாலமுருகன் said...
காமெடி என்னன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே//

உங்களுக்கு உண்மையில் புரியவில்லையா ? அல்லது என்னிடம் கமெடி பண்ணுகிறீர்களா நண்பரே.