பூக்கள் மேலே,பூக்கள் மேலே
பறந்து போய், பறந்து போய் ,
தேனதைக் குடித்து, தேனதைக் குடித்து
சிகப்பு மஞ்சள் கருப்பு வெள்ளை
பொட்டுக்கள் பார் , பொட்டுக்கள் பார்
பட்டது பார், பட்டது பார்
இந்தப் பாட்டு உங்களுக்கு நினைவிருக்கிறதா? பட்டாம்பூச்சி பாடல் நினைவுக்கு வந்து என்னை அந்த சிறு பிராயத்துக்குக் கொண்டு சென்று விட்டது.
அதுமட்டுமல்லாமல், அந்தப் பட்டாம் பூச்சிபோல் நாமும் பறக்க மாட்டோமா ? என்ற ஏக்கத்தையும் கொண்டு வந்து விட்டது. நான் தான் தப்பிப் போய் பெண்ணாய்ப் பிறந்து விட்டேனே.!
நீங்கள் என்னைத் திட்டுவதற்கு முன்பு விடயத்திற்கு வருகிறேன். என் ரசிகை கவிநயா (. உண்மையைச் சொல்லப் போனால்,அவர் என் கதையில் வந்த புரட்சிக் கதா நாயகனின் ரசிகை) எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். நான் இந்த வலையத்திற்கு கால் வைத்து இரண்டு வாரத்தில் மனமுவந்து ஒரு அழகான பட்டாம்பூச்சி ஒன்றை என் பக்கம் பறக்க விட்டிருக்கிறார், என் எழுத்து அவரைக் கவர்ந்ததை நினைத்து நான் பெரிமிதம் அடைகிறேன்.கவினயாவுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பட்டாம்பூச்சியை நான் பலர் வலையங்களில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இது யார் யாருக்குக் கொடுப்பாங்க ? ஏன் கொடுப்பாங்க ? என்ற கேள்விகள் மனதில் ஓடிய போதிலும், இப்போதானே இந்த வலையத்தை ஆரம்பித்திருக்கிறேன்! சாவகாசமாகத் தெரிந்துகொள்வோம் என்று நினைத்திருந்தேன். அதற்குத் தேவையே இல்லாமல் கவிநயா பண்ணிட்டாங்க. இப்போ இந்தப் பட்டாம்பூச்சி விருது விடயம் நன்றாகப் புரிகிறது. ஆனாலும் இதை யார் முதலில் ஆரம்பித்தார்கள்? என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது. இதில் அழகான அம்சம் என்னவென்றால் ' யான் பெற்ற இன்பம் வையகம் பெற' என மற்றவைகளுக்குப் பட்டாம்பூச்சியைப் பறக்க விடுவதுதான். உங்களுக்குத் தெரியுமோ! என்னவோ! இங்கிலாந்து மக்கள் பாரம்பரியத்தில் இந்தப் பட்டாம்பூச்சி பறக்க வைத்தல் ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. இப்போதுகூட திருமணங்களிலும் ,வேறு நினைவு கூரும் வைபவங்களிலும் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுகிறார்கள். இல்லாவிட்டால் திருமணப் புகைப் படங்களில் பட்டாம் பூச்சி பறப்பது போல் பின்திரை போடுகிறார்கள்.
நான் பெற்ற ஒற்றைப் பட்டாம்பூச்சியை, வித்தை செய்து மூன்றாக்கி, புதிய பிளாக்கர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வெவ்வேறு திக்கில் பறக்க விடுகிறேன். அவை செட்டை அடித்துப் பறக்கும் திசை ..இதோ ...இதோ
.
' இவன்' ......பனித்துளியாய்
http://panithuliyaai.blogspot.com/
.
இவன் என்னும் மோகன் இராஜேந்திரன் நல்ல அழகான கவிதைகள் வடிக்கிறார். இந்த விருது இவரை நிச்சயம் ஊக்குவிக்கும் என்று எண்ணுகிறேன்.
.
' மயாதி' .... கொஞ்(ச)சும் க(வி)தைகள்
http://konjumkavithai.blogspot.com/
.
புத்தம் புதிய கவி இவர். இவரது கவிதைகள் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மே மாதத்தில் மட்டும் 58 பதிவுகள் எழுதியிருக்கிறார் என்றால் பாருங்களேன். இவர் தொடாத தலைப்பே கிடையாது. புதுமையாய் இவர் சூட்டிய வலையத்தின் தலைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது
.
'ஹேமா ........வானம் வெளித்த பின்னும்
http://kuzhanthainila.blogspot.com/
மிக அருமையான கவிதைகள் எழுதுகிறார். அண்மையில் அவர் எழுதிய ' தவிடு தின்னும் தமிழன்' கவிதை என் மனதைத் தொட்டது. அதில் ஒரு தமிழிச்சியின் வலி தெரிகிறது. ஏன் இவருக்கு விருது எவரும் தரவில்லை என்று ஆச்சரியமாகக் கூட இருக்கிறது.
அப்பாடா!! பறக்க விட்டாச்சு!!
, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் அவற்றிடம் செய்தியாக அனுப்பியுள்ளேன்
நான் விட்டதும் பட்டாம் பூச்சிகள் பறந்து விட்டன. ஆனால் அது தொட்டுப் போன என் நெஞ்சில் ,விட்டுப் போன தடயங்கள், பல வண்ணப் பொட்டுக்களாக இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே!!!
நன்றி நன்றி நன்றி கவிநயா
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்
***
நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!
.
21 comments:
நன்றி
இந்த ஒற்றை வார்த்தையில் ஒரு கோடி அர்த்தங்களை கோர்த்து வைத்திருக்கிறேன்....
எல்லாமே நன்றியின் சாராம்சம்.
ஜெஸ்வந்தி
மனமார்ந்த வாழ்த்துக்கள்
nesamithran.blogspot.com
வாழ்த்துகள்
பெற்றவருக்கும்
பகிர பெற்றவருக்கும்.
வாழ்த்துகள்...
வாங்க மயாதி,நன்றி நான் தான் சொல்ல வேண்டும். நான் ரசித்த உங்கள் கவிதைகளுக்கு.
வாழ்த்துச் சொன்ன ஜமால், கவிஞன், வழிப்போக்கன் அனைவருக்கும் என் நன்றிகள்
வாழ்த்துகள் ஜெஸ்வந்தி, உங்களுக்கும், நீங்கள் பகிர்ந்தளித்தவர்களுக்கும் :) இங்கிலாந்தில் பட்டாம்பூச்சியின் சிறப்பை பற்றி புதிதாய் தெரிந்து கொண்டேன். உங்கள் அன்பிற்கும், கவிஞர்களின் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி!
எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி...
உங்களிடமிருந்து பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி கவிநயா
வாழ்த்துக்களுக்கு நன்றி புதியவன்.
வாழ்த்துக்கள், கொடுத்த உங்களுக்கும் பெற்ற மூவருக்கும். மயாதி, ஹேமா இருவரும் அறிமுகம் உண்டு. மோகன் அவர்களின் லின்க் அவருடைய பெயரிலேயே கொடுக்கலாமே நீங்கள்!.
S.A. நவாஸுதீன் said...
//வாழ்த்துக்கள், கொடுத்த உங்களுக்கும் பெற்ற மூவருக்கும். மயாதி, ஹேமா இருவரும் அறிமுகம் உண்டு. மோகன் அவர்களின் லின்க் அவருடைய பெயரிலேயே கொடுக்கலாமே நீங்கள்!.//
உங்கள் முதல் வருகைக்கும் என் வலையத்தைத் தொடர்வதற்கும், வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.' இவன் ' என்ற புனை பெயரில் தான் மோகன் தன் ' பனித்துளியாய்' வலையத்தை இயக்குகிறார். அதனால் தான் அப்படி பதிவு செய்தேன். வேற்றுமை எதுவும் கிடையாது.
ஜெஸ்வந்தி said...
மோகன் அவர்களின் லின்க் அவருடைய பெயரிலேயே கொடுக்கலாமே நீங்கள்!.//
உங்கள் முதல் வருகைக்கும் என் வலையத்தைத் தொடர்வதற்கும், வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.' இவன் ' என்ற புனை பெயரில் தான் மோகன் தன் ' பனித்துளியாய்' வலையத்தை இயக்குகிறார். அதனால் தான் அப்படி பதிவு செய்தேன். வேற்றுமை எதுவும் கிடையாது.
நான் உங்களுக்கு புரியும்படி கேட்க்காதது என் தவறுதான்.
நான் மோகனுடைய வலைத்தலத்தின் லின்க் (link) கேட்டேன்.
நாS.A. நவாஸுதீன் said...
// நான் மோகனுடைய வலைத்தலத்தின் லின்க் (link) கேட்டேன்.//
Ha Ha sorry.I didn't understand the question.It was a good joke.
His link is http://panithuliyaai.blogspot.com
I am going to include his link oon the front page of my blog now.
வாழ்த்துகள்.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா. உங்கள் வலையத்துக்கு வருகை தந்தேன் . அழகாக கவிதை எழுதுகிறீர்கள்.
பட்டாம் பூச்சி வாழ்த்துக்கள்!
நீங்கள் விருது வழங்கியவர்களின் இனைப்புக்களைனையும் இனைத்திருந்தால் அவர்களின் தளம்செல்ல சுலபமாக இருக்கும்!
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஆபிரகாம், நான் இப்போ மூவரது லிங்கையும் என் பதிவில் சேர்த்துள்ளேன். கருத்துக்கு நன்றி.
miga azhagaana manasu jesvanthi,ungalukku!niraya anbum vaazhthukkalum!
வாங்க நண்பரே! உங்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி.
மற்றப் பதிவுகளையும் படியுங்கள். உங்கள் வருகையினால் உங்கள் கவிதைகளையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
Post a Comment