நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday 22 June 2009

கேள்வி பிறந்தது அன்று!. பதில் கிடைத்தது இன்று!

என் நண்பர் மயாதி என்னை இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்து உங்களிடம் மாட்டி விடடிருக்கிறார்.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


இந்தப் பெயர் வரவில்லை. எனக்குப் பிடித்த பெயர்-அதனால் நானே இந்த வலையத்துக்காக வைத்துக் கொண்டது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

தினம் தினம் அழும் பழக்கம் உண்டு. அதனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. மகிழ்ச்சி என்றாலும் ,கவலை என்றாலும் உணர்ச்சி வசப்படும் போது கண்கலங்குவது என் பழக்கம். சுருக்கமாய்ச் சொன்னால் ' ஒரு தொட்டாச் சுருங்கி'

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும். அழகாக குண்டு குண்டாக இருக்கும். கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து சரியாக வராது என்று சொல்வார்களே! கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

4).பிடித்த மதிய உணவு என்ன?

பசிக்குத்தான் உணவு. எதுவானாலும் சுவைத்துச் சாப்பிடுவேன். என் நண்பிகள் நான் தண்ணீரைக் கூட சுவைத்து அருந்துவதை பார்த்துச் சிரிப்பார்கள்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. நட்பாக நீண்ட காலம் எடுப்பேன். தேடிய நட்பை சாகும் வரை காப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள் தான். அதன் பின்னர் பாவனை, குரல்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : எதுவானாலும் நேருக்கு நேர் சொல்வது..பிரச்சனையை உடனுக்குடன் தீர்ப்பது.

பிடிக்காதது : பிறர் செய்யும் கெடுதியை மன்னித்தாலும் மறக்க முடியாதது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: நான் சொல்வது அத்தனையையும் நம்பும் அப்பாவித்தனம்.
பிடிக்காதது: பிறரை நம்பும் அப்பாவித்தனம்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

காலம் சென்ற என் அப்பா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

தெரியாமல் தான் கேட்கிறேன். இது என்ன கேள்வி ?என்றாலும் சொல்லித் துலைக்கிறேன்.
கருப்பு நிற பாவாடையும் ஊதா நிற சட்டையும்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப்பது .....கணிணி திரை...
கேட்பது ....'யாரோ யாரோடு' பாடல் அலைபாயுதே படத்திலிருந்து.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கோல்ட் நிறமாக... அப்போதான் மங்கள செய்தி எழுத உபயோகிப்பார்கள்.

14.பிடித்த மணம்?
எனக்குப் பிடித்த சென்ட் மணம் ..Anais Anais


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?


' செண்பகநாதன்'.........வலையம் ' உபாலி பக்கங்கள்'
என்னைப் பின் தொடரும் நண்பர்களில் இவர் இன்னும் இந்தப் பதிவுக்கு அழைக்கப் படவில்லை என்று நம்புகிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

மயாதி

என்னைப் பொறுத்தவரையில் எல்லா பதிவுகளுமே எனக்குப் பிடித்திருந்தது. ...பேய்க் கவிதைகள் உட்பட .....

17. பிடித்த விளையாட்டு?

விளையாட்டு பிடிக்காது.

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்.. கார் ஓட்டும் போது...தூரப் பார்வை குறைவு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதை அசை போட வைக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

'ராமன் தேடிய சீதை'

21.பிடித்த பருவ காலம் எது?

எல்லாக் காலத்திலும் பிடித்த விடயங்கள் இருக்கின்றன. அதனால் தெரிந்தெடுக்க முடியாது.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

'The Shack' by WM Paul Young

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் மாற்றுவதில்லை. யாரும் மாற்றினால் நன்றி சொல்லிக் கொள்வேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்: நீரோடும் ' சல சல' என்ற சத்தம்.
பிடிக்காதது: இடி முழக்கம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கனடா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஏதோ ஒன்று இருக்கணும்....அப்படித்தான் எனக்குத் தோணுது.இல்லையென்றால் என் நண்பர்கள் என்னுடன் வருடக் கணக்காக ஒட்டிக் கொண்டிருக்க மாட்டார்களே!

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கைத் துரோகம் -என்னால் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத விடயம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
இன்னுமா தெரியல? இந்த 'ஜெஸ்வந்தி ' தான். இந்த வலையம் ஆரம்பித்த பிறகு நான் நானாகவேயில்லை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கனடா-அமெரிக்க எல்லையில் அமைந்த 'நயாகரா நீர் வீழ்ச்சி'. மெய்மறக்க வைக்கும் தலமது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நல்ல மகளாய் , நல்ல மனைவியாய், நல்ல தாயாய் , நல்ல பாட்டியாய் , நல்ல பூட்டியாய்.............பேராசைதான் ..நீங்களும் எனக்காக கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கோ!

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

(ஒரு பட்டியலே இருக்கு. ஒரே காரியம் என்று கேட்டால் என்னத்தைச் சொல்வது.
இந்தக் கேள்வி எழுதின மனிதருக்கு அனுபவம் போதாது என்று நினைக்கிறேன்)
சரி ...ஒன்று சொல்கிறேன்
'பாலிய தோழிகளுடன் மணிக் கணக்கில் தொலை பேசியில் கதைப்பது'

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

(ஒரு வரியென்று எல்லை போட்டால் எப்படிச் சொல்வது?)
வாழ்க்கையென்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் 'இன்பம்' ' துன்பம்' என்ற வெவ்வேறு மணிகளினால் கோக்கப் பட்ட மணிச்சரம்.


.

35 comments:

நட்புடன் ஜமால் said...

எதார்த்தமா சொல்லியிருக்கீங்க

தண்ணீர் அருந்தும் விடயம் சிறு புன்னகையை வரச்செய்தது ...

jothi said...

என்னை மாதிரி வளவள வென்று சொல்லாமல் நச் நச்சென்று சொல்லி இருக்கீர்கள். உங்கள் மத்த பதிவுகளையும் வந்து பார்க்கிறேன்

வழிப்போக்கன் said...

good answers....
:)))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...
எதார்த்தமா சொல்லியிருக்கீங்க//

நன்றி ஜமால்.
//தண்ணீர் அருந்தும் விடயம் சிறு புன்னகையை வரச்செய்தது ...//

நீங்கள் புன்னகையுடன் நிறுத்தி விட்டீர்கள். நேரில் பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//jothi said...
என்னை மாதிரி வளவள வென்று சொல்லாமல் நச் நச்சென்று சொல்லி இருக்கீர்கள். உங்கள் மத்த பதிவுகளையும் வந்து பார்க்கிறேன்//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் பதில்களையும் இப்போ படித்தேன். நல்ல பதில்கள்.

sakthi said...

அழகான ரசனையான பதில்கள் !!!

sakthi said...

'பாலிய தோழிகளுடன் மணிக் கணக்கில் தொலை பேசியில் கதைப்பது'

எனக்கு மிக பிடித்த பதில்

எதார்த்தமாய்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//sakthi said...
அழகான ரசனையான பதில்கள் !!!//

நன்றி சக்தி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வழிப்போக்கன் said...

good answers....
:))) //

Thanks for your comment.

மயாதி said...

wait...

மயாதி said...

சும்மா நகைச்சுவைக்காக சொல்கிறேன் , இருந்தாலும் நீங்கள்
கோபப் பட்டுத் திட்டலாம்


1.எனக்கும் பிடிச்ச பெயர்
2.அழுமூஞ்சி
3.யோதிகாட கண் மாதிரி குண்டு குண்டா இருக்குமா?
4.நானும் சிலவேளை தண்ணியை சுவைத்து சாப்பிடுவேன், அது வேற தண்ணி
5.நம்ம அவுட்
6.ஏதோ குளிக்கிறீங்க ! அது போதும்
7.கண்ணாடி போட்டிருந்தால்?
8.எதுக்கும் நாங்கள் கவனமாக இருப்பது நல்லது போல
9.அப்பா உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சா ? இன்றைக்கு நான் தண்ணி குடிக்கும் போது சுவைச்சுத்தான் குடிப்பன்
10.நோ காமண்ட்ஸ்

11.பரவாய் இல்லை பாவடை சட்டையை மறக்க வில்லை
12.அதுதானே கல்யாணம் முடிஞ்சுது , இனியும் ஏன் இந்த பாட்டு
13.எத்தனை கரட கோல்ட் ?
14.செயற்கை?
15.உங்கள் விருப்பம்
16.பொய் சொல்லாதே
17.எல்லாம் வினை
18.ஸ்டைலுக்கு போடுற என்று உண்மைய சொல்ல வேண்டியதுதானே
19.கவனம் , அசை போட்டுக் கொண்டு இருந்தால் தப்பா நினைப்பாங்க
20.நோ காமண்ட்ஸ்
21.காலங்களை வென்றவள்
22.முடியல
23.சோம்பேறி
24.திரும்பவும் தண்ணிய?
25.எந்த வீடு?
26.என்ன திறமை
27.என்னது ?
28.அது எங்களுக்குத் தெரியும்
29.காதல் நயாகரா?
30ஏன் இன்னும் சொல்லுங்களேன்? நல்ல ஆவியாய், நல்ல மறு பிறவியாய்
31பாவம் தோழி

32தத்துவம்?


உண்மையில் உங்கள் பதில்கள் நீங்கள் ஒரு பண்பான தமிழ் பெண் என்பதைக் காட்டுகின்றன
வாழ்த்துக்கள்

Kavinaya said...

// இது என்ன கேள்வி ?என்றாலும் சொல்லித் துலைக்கிறேன்.//

:)))

இயல்பான பதில்கள்...

ராமலக்ஷ்மி said...

அருமையான பதில்கள் ஜெஸ்வந்தி. ரொம்ப ரசித்துப் படித்தேன்:)!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மயாதி, கருத்துப் படித்தேன். இப்போ நேரம்மில்லை. பிறகு வாறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிநயா said...
// இது என்ன கேள்வி ?என்றாலும் சொல்லித் துலைக்கிறேன்.//

:)))

இயல்பான பதில்கள்...//

Thanks Kavinaya.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ராமலக்ஷ்மி said...
அருமையான பதில்கள் ஜெஸ்வந்தி. ரொம்ப ரசித்துப் படித்தேன்:)!//

வாங்க, உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

குடந்தை அன்புமணி said...

யதார்த்தமான இயல்பான பதில்கள்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மயாதி said...
சும்மா நகைச்சுவைக்காக சொல்கிறேன் , இருந்தாலும் நீங்கள் கோபப் பட்டுத் திட்டலாம்//

கேட்டுத் திட்டு வாங்கிற நண்பரை நான் இப்பதான் காண்கிறேன்.

//2.அழுமூஞ்சி //

தப்பு- அது என் பட்டப் பெயர் கிடையாது.

//3.யோதிகாட கண் மாதிரி குண்டு குண்டா இருக்குமா?//

கண்டு பிடிச்சுட்டேன்! நீங்க ஜோதிகா விசிறி தானே?

//4.நானும் சிலவேளை தண்ணியை சுவைத்து சாப்பிடுவேன், அது வேற தண்ணி//

கருமம்,கருமம்.

//5.நம்ம அவுட்
6.ஏதோ குளிக்கிறீங்க ! அது போதும்
7.கண்ணாடி போட்டிருந்தால்?
8.எதுக்கும் நாங்கள் கவனமாக இருப்பது நல்லது போல
9.அப்பா உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சா ? இன்றைக்கு நான் தண்ணி குடிக்கும் போது சுவைச்சுத்தான் குடிப்பன்//

அறுவை தாங்கல .

//10.நோ காமண்ட்ஸ் //

இது நல்ல கருத்து.

//11.பரவாய் இல்லை பாவடை சட்டையை மறக்க வில்லை
12.அதுதானே கல்யாணம் முடிஞ்சுது , இனியும் ஏன் இந்த பாட்டு
13.எத்தனை கரட கோல்ட் ?//

மக்குப் பயல்.

//14.செயற்கை?//

கழுதைக்குத் தெரியுமா....

//15.உங்கள் விருப்பம்//

அப்பாடா..

//16.பொய் சொல்லாதே//

பொய் தான். ஒத்துக்கிறேன்

//18.ஸ்டைலுக்கு போடுற என்று உண்மைய சொல்ல வேண்டியதுதானே//

you are right.

//19.கவனம் , அசை போட்டுக் கொண்டு இருந்தால் தப்பா நினைப்பாங்க//

அறுவை மன்னன்.

//20.நோ காமண்ட்ஸ்//

அப்பாடா

//23.சோம்பேறி//

ஆமா

//25.எந்த வீடு?//

பிறந்த வீடு தான். பெண்களுக்குத் தான் பெரிய வீடு, சின்ன வீடு கிடையாதே!

//26.என்ன திறமை//

கண்டு பிடிச்சா பரிசு உண்டு.

//28.அது எங்களுக்குத் தெரியும்//

தெரியுமா? உங்க சாத்தான் பெயர் ' மயாதி'தானோ?

//30 ஏன் இன்னும் சொல்லுங்களேன்? நல்ல ஆவியாய், நல்ல மறு பிறவியாய்//

ஆமா, கடவுளை வேண்டிக் கொள்ளுங்கோ.!

//32 தத்துவம்? //

எங்கோ சுட்டது.

//உண்மையில் உங்கள் பதில்கள் நீங்கள் ஒரு பண்பான தமிழ் பெண் என்பதைக் காட்டுகின்றன
வாழ்த்துக்கள்//

நல்ல பிள்ளையாய் இதை மட்டும் எழுதினால் என்ன? நன்றி மயாதி.

மயாதி said...

mudiyala....

மயாதி said...

கொலை விழும்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//குடந்தை அன்புமணி said...
யதார்த்தமான இயல்பான பதில்கள்!//

வாங்க அன்புமணி , உங்கள் கருத்துக்கு நன்றி.

மயாதி said...

//26.என்ன திறமை//

கண்டு பிடிச்சா பரிசு உண்டு.//

கண்டு பிடிச்சுட்டேன்! பொய் சொல்லுறதுதானே !

இல்லை என்று இன்னொரு பொய் சொல்லி ஏமாற்றாமல் , மரியாதையா பரிசை அனுப்பவும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மயாதி said...
mudiyala....//

நல்ல டாக்டராகப் பார்த்துக் காண்பியுங்கள். உங்கள் வைத்தியம் சரிவராது.

செண்பகநாதன் said...

உங்களது பேட்டி நன்றாக உள்ளது. முக்கியமாக, வாழ்க்கையென்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் ‘இன்பம்’ ‘துன்பம்’ ...... என்ற வரி மிகவும் நிதர்சனமானது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//செண்பகநாதன் said...
உங்களது பேட்டி நன்றாக உள்ளது. முக்கியமாக, வாழ்க்கையென்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் ‘இன்பம்’ ‘துன்பம்’ ...... என்ற வரி மிகவும் நிதர்சனமானது//

நன்றி நண்பரே. உங்கள் பேட்டியை விரைவில் எதிபார்க்கிறேன்.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//ஜெஸ்வந்தி//

நல்லாதான்யா இருக்கு.. இதுக்கு என்னங்க அர்த்தம். சும்மா தெரிஞ்சுக்கதான்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஷோபிகண்ணு said...

//ஜெஸ்வந்தி//
நல்லாதான்யா இருக்கு.. இதுக்கு என்னங்க அர்த்தம்.
சும்மா தெரிஞ்சுக்கதான்..//

அப்படீன்னு ஒரு மலர் இருப்பதாக சொன்னாங்க.... அழகான பெயரென்றும் சொன்னாங்க ...வச்சுக்கிட்டேன்....
உங்கள் வருகைக்கு நன்றி.

இராயர் said...

அனைத்து பதில்களும் கவிதை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
அனைத்து பதில்களும் கவிதை//

என்ன ராயர், இப்படிச் சொல்லிப் போட்டியள்.எனக்குக் கவிதை வராதே!
வருகைக்கு நன்றி.

செண்பகநாதன் said...

உங்களுக்கு எனது சமீபத்திய கவிதை தொகுப்பான ‘முற்றத்தில் தொலைந்து போன இறகுத்தாத்தா’ ஈமெயில் மூலம் அனுப்பி வைத்தேன். கிடைத்ததா? வாசித்ததும் உங்கள் கருத்தை தெரியுங்கள்.
நன்றி

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
அனைத்து பதில்களும் கவிதை//

என்ன ராயர், இப்படிச் சொல்லிப் போட்டியள்.எனக்குக் கவிதை வராதே!
வருகைக்கு நன்றி.//

ஹலோ நான் அப்பவே சொன்னேனே , பொய் சொல்லுறதுதான் உங்கள் தனித் திறமை என்று?
பரிசு எங்கே?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மயாதி said...

ஹலோ நான் அப்பவே சொன்னேனே , பொய் சொல்லுறதுதான் உங்கள் தனித் திறமை என்று?
பரிசு எங்கே?//

ஐயோ ,ஐயோ பரிசு பரிசென்று பெரிய தொல்லையாப் போச்சு.
மெயில் இல அனுப்பியிருக்கிறேன் பாருங்கோ.

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

//மயாதி said...

ஹலோ நான் அப்பவே சொன்னேனே , பொய் சொல்லுறதுதான் உங்கள் தனித் திறமை என்று?
பரிசு எங்கே?//
ஐயோ ,ஐயோ பரிசு பரிசென்று பெரிய தொல்லையாப் போச்சு.
மெயில் இல அனுப்பியிருக்கிறேன் பாருங்கோ.//

இதுதான் பெரிய அறுவை பாருங்கோ..
தாங்கல , முடியல சாமி..

நன்றி நண்பி..

R.Gopi said...

//26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஏதோ ஒன்று இருக்கணும்....அப்படித்தான் எனக்குத் தோணுது.இல்லையென்றால் என் நண்பர்கள் என்னுடன் வருடக் கணக்காக ஒட்டிக் கொண்டிருக்க மாட்டார்களே!//

*********

Super Answer....... Good........

//உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கனடா-அமெரிக்க எல்லையில் அமைந்த 'நயாகரா நீர் வீழ்ச்சி'. மெய்மறக்க வைக்கும் தலமது.//

********

Poyidanum pola irukke.... Try pannuvom.....

//30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நல்ல மகளாய் , நல்ல மனைவியாய், நல்ல தாயாய் , நல்ல பாட்டியாய் , நல்ல பூட்டியாய்.............பேராசைதான் ..நீங்களும் எனக்காக கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கோ!//

Good..... Kandippaa vendikkaren....

//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

(ஒரு வரியென்று எல்லை போட்டால் எப்படிச் சொல்வது?)
வாழ்க்கையென்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் 'இன்பம்' ' துன்பம்' என்ற வெவ்வேறு மணிகளினால் கோக்கப் பட்ட மணிச்சரம்.//

Fantastic answer........

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...
Super Answer....... Good......//..

உங்கள் முதல் வருகைக்கும் ரசனையான கருத்துகளுக்கும் நன்றி.கோபி.
( நானும் ரஜனி விசிறி பாருங்கோ)
//உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கனடா-அமெரிக்க எல்லையில் அமைந்த 'நயாகரா நீர் வீழ்ச்சி'. மெய்மறக்க வைக்கும் தலமது.//

Poyidanum pola irukke.... Try pannuvom....//

நீர்வீழ்ச்சியை நேரே போய் பார்க்க முடியாவிட்டால் இணையத்தில் படங்களையும் அதன் பற்றிய விபரங்களையும் படியுங்கோ. அப்போ புரியும்.