நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday 11 June 2009

சிறுவர்களுடன் ஜாக்கிரதை !

இவை நான் எங்கோ படித்து ரசித்த நகைச்சுவைத் துணுக்குகள். நீங்களும் ரசியுங்கள்.

ஒரு பாலர் வகுப்பில் சித்திர வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆசிரியை அவர்கள் வரைவதை அவதானித்தபடி வகுப்பைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சிறுமி வரைவது என்னவென்று அவருக்குப் புரியாததால் ,'' நீ என்ன சித்திரம் வரைகிறாய்?' என்று கேட்டார். சிறுமி அதற்கு ' நான் கடவுளை வரைகிறேன்' என்று பதிலளித்தாள். ஆசிரியை விடவில்லை. ' கடவுள் எப்படியிருப்பார் என்று எவருக்கும் தெரியாது' என்றார்.
சிறுமி தன் கவனத்தை சித்திரத்தை விட்டு அகற்றாமல் 'இன்னும் சில நிமிடங்களில் எல்லோருக்கும் தெரிந்து விடும்' என்று பதில் சொன்னாள்.
==========================================================

ஒரு ஆசிரியை பாடசாலையில் எடுத்த வகுப்புப் புகைப் படத்தின் பிரதியை எல்லா மாணவர்களும் வாங்கும் வண்ணம் உற்சாகம் கொடுத்தார். அந்த முயற்சியில் அவர் 'பல வருடங்கள் ஓடிய பின் இந்தப் புகைப் படங்களை நீங்கள் பார்க்கும்போது இதோ இது மதன்-டாக்டர் ஆக இருக்கிறான், இது பாலா - இவன் லாயராக இருக்கிறான் ' என்று நினைவு கூருவீர்கள் என்கிறார். வகுப்பின் பின் வரிசையிலிருந்து ஒரு கீச்சுக் குரல் ' இது டீச்செர் -செத்துப் போய் விட்டார்.' என்றது.

===========================================================

பாடசாலையில் மதிய உணவின் பின் பரிமாறுவதற்கு ஒரு கூடையில் ஆப்பிள் பழங்களைப் போட்டு ' ஒன்று மட்டும் எடுங்கள் - கடவுள் அவதானிக்கிறார் ' என்று அதன் முன் ஒரு துண்டும் எழுதி வைத்திருந்தார்கள். அதே மேசையின் மறு பக்கத்தில் இனிப்புப் பலகாரம் வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு துண்டு வைக்க மறந்து போனார்கள். ஒரு சிறுவன் அதற்கு முன் வைத்த நோட்டில் இப்படி எழுதியிருந்தான், 'வேணுமான அளவுக்கு அள்ளிக் கொள்ளுங்கள் .கடவுள் ஆப்பிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.'


.

14 comments:

வினோத் கெளதம் said...

//வகுப்பின் பின் வரிசையிலிருந்து ஒரு கீச்சுக் குரல் ' இது டீச்செர் -செத்துப் போய் விட்டார்.' என்றது.//

Super..:)))

கலையரசன் said...

ஹ!.. ஹா.. ஹா..
நல்லா இருக்குங்க தோழி!!

புதியவன் said...

//இன்னும் சில நிமிடங்களில் எல்லோருக்கும் தெரிந்து விடும்' என்று பதில் சொன்னாள்.//

இந்த பதில் மிகவும் நெகிழ்வாக இருந்தது...

முரளிகண்ணன் said...

மிக அருமை. ரசித்து சிரித்தேன்

சித்து said...

மூன்றுமே முக்கனிகளை போன்று அருமையாக இருந்தது.

Raman Kutty said...

//'வேணுமான அளவுக்கு அள்ளிக் கொள்ளுங்கள் .கடவுள் ஆப்பிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.'
//

நச்..

ராமலக்ஷ்மி said...

சிரித்துக் கொண்டிருக்கிறேன் ஜெஸ்வந்தி:))! குழந்தைகளின் குறும்புக்குத்தான் எல்லையேது:)?

ராமலக்ஷ்மி said...

ஜெஸ்வந்தி நீங்கள் இன்னும் உங்கள் வலைப்பூவினை தமிழ்மணத்தில் இணைக்கவில்லை என நினைக்கிறேன். ஆவன செய்யுங்களேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரசித்தவர்களுக்கும் கருத்துச் சொன்னவர்களுக்கும் என் நன்றிகள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ராமலக்ஷ்மி said...

//ஜெஸ்வந்தி நீங்கள் இன்னும் உங்கள் வலைப்பூவினை தமிழ்மணத்தில் இணைக்கவில்லை என நினைக்கிறேன். ஆவன செய்யுங்களேன்.//

உங்கள் கருத்துக்கு நன்றி .மெல்ல மெல்லக் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.விரைவில் ஆவன செய்வேன்.

தேவன் மாயம் said...

ஒரு பாலர் வகுப்பில் சித்திர வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆசிரியை அவர்கள் வரைவதை அவதானித்தபடி வகுப்பைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அதில் ஒரு சிறுமி வரைவது என்னவென்று அவருக்குப் புரியாததால் ,'' நீ என்ன சித்திரம் வரைகிறாய்?' என்று கேட்டார். சிறுமி அதற்கு ' நான் கடவுளை வரைகிறேன்' என்று பதிலளித்தாள். ஆசிரியை விடவில்லை. ' கடவுள் எப்படியிருப்பார் என்று எவருக்கும் தெரியாது' என்றார்.
சிறுமி தன் கவனத்தை சித்திரத்தை விட்டு அகற்றாமல் 'இன்னும் சில நிமிடங்களில் எல்லோருக்கும் தெரிந்து விடும்' என்று பதில் சொன்னாள்.///

நல்ல ஜோக்! தமிழ்மணத்துக்கு வாங்க!

இராயர் said...

Reallay superb!!!!

Kavinaya said...

தலைப்பு பொருத்தம். ரசித்தேன் :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கருத்துச் சொன்ன தேவா, கவிநயா, ராயர் அனைவருக்கும் நன்றி.