நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday, 6 November 2009

ஒரு பிறப்பு


பெண்ணென்று ஒரு பிறப்பு

பெருமைதான் என்பார்

கண்ணென்று காத்து

கணவனிடம் ஒப்படைப்பார்


எங்கிருந்தோ வந்த சொந்தம்

எப்போதும் இனிப்பதில்லை

பெற்ற மனம் கலங்காது

பெண்ணவள் காத்திடுவாள்.


கழுதைக்குத் தெரியுமா

கத்பூர வாசனைதான்

புழுதியில் எறிந்து விட்டான்

புழுப்போல நினைத்து விட்டான்.


வாய் திறந்து பேசாது

வரும் பாதை அறியாது

ஏன் இந்தப் பிறப்பென்று

ஏங்குகிறாள் ஒரு மாது.




34 comments:

ஹேமா said...

ஜெஸி நீங்களும் என்னைச் சொல்லிச் நீங்களும் சத்தம்போடத் தொடங்கிட்டீங்களா !

ஜெஸி தாயை மதிப்பவன் தன் தாரத்தையும் மதிப்பான்.எல்லோரும் அப்படியல்லத்தானே.

பா.ராஜாராம் said...

என்ன ஆச்சு? :-(

ப்ரியமுடன் வசந்த் said...

//எங்கிருந்தோ வந்த சொந்தம்

எப்போதும் இனிப்பதில்லை//

ஏன் அப்படி ஜெஸ்?

எங்கிருந்தோ வந்தவள் தானே கடைசிவரையிலும் வருகிறாள் என்று ஆண்கள் நினைப்பதுண்டு..

R.Gopi said...

மிக மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது ஜெஸ்....

படிப்பதற்கு சுவாரசியம்தான்.. ஆயினும், படித்ததும், மனசு வலிப்பதை மறுப்பதற்கில்லை...

(நல்ல வேளை போன பதிவில் கேட்டது போல், இதில் நான் ஏதும் கேட்கவில்லை...)

தேவன் said...

/// புழுதியில் எறிந்து விட்டான்
புழுப்போல நினைத்து விட்டான். ////

இருக்கும் பொருளின் அருமை ( பெருமை ) தெரியாது !!

இந்த மனிதர்க்கு !!

அப்துல்மாலிக் said...

பெண் பாதுகாக்கப்படவேண்டியது, போற்றப்படவேண்டியது..

மனது வலிக்கிறது கேவலம்கெட்ட பெண்மையை புரிந்துக்கொள்ளப்படாத ஒருசில ஆண்களால்

S.A. நவாஸுதீன் said...

கவிதையாய் மட்டும் பார்க்கிறேன். ஆனால் ஏன் இத்தனை கோபம் ஜெஸ்

இராயர் said...

மனைவி என்பவள் இரண்டாம் தாய்தானே?


அருமையான கவிதை
நன்றாக கவிதை எழுதும் திறன் வந்துவிட்டது போலும்

SUFFIX said...

உணர்வுப்பூர்வமா எழுதி இருக்கீங்க ஜெஸ்.

க.பாலாசி said...

கவிதை நல்லாருக்கு....கவலையா இருக்கே....இந்த நிலையும் கடந்துபோகும்....

Admin said...

அருமையான வரிகள்

நேசமித்ரன் said...

என்ன ஆச்சு ஆளைக் காணோம் ?

வந்ததும் இப்பிடி ஒரு கவிதை (?)

நலமே விளையும்
நன்னிலம் விழுந்த விதை

அன்புடன் அருணா said...

என்ன இப்பிடி ஜெஸ்வந்தி !

தமிழ் அமுதன் said...

ஆயிரந்தான் இருந்தாலும் பெத்த தாய போல வருமா ?
பெத்தது பெத்ததுதான் கட்டுனது கட்டுனதுதான் .!

இப்படியெல்லாம் நாங்களும் சொல்லலாம்..!
ஆனா சொல்லமாட்டோம்ல...!
அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு ஆயுச ஓட்டிடுவோம்ல...!

கலகலப்ரியா said...

mmm..

thiyaa said...

அருமை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஜெஸி நீங்களும் என்னைச் சொல்லிச் நீங்களும் சத்தம்போடத் தொடங்கிட்டீங்களா !
ஜெஸி தாயை மதிப்பவன் தன் தாரத்தையும் மதிப்பான்.எல்லோரும் அப்படியல்லத்தானே.//

வாங்க ஹேமா. இது தோற்று வியாதி தானோ!எல்லாரும் அப்பிடி என்று நான் எங்கே சொன்னேன்? வில்லங்கத்தில் மாட்டி விடாதீர்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
என்ன ஆச்சு? :-(//

இதுக்கு என்ன கருத்து? ஏன் மொக்கை போடுகிறேன் என்று கேட்கிறீர்களா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்...வசந்த் said...
//எங்கிருந்தோ வந்த சொந்தம்
எப்போதும் இனிப்பதில்லை//
ஏன் அப்படி ஜெஸ்?
எங்கிருந்தோ வந்தவள் தானே கடைசிவரையிலும் வருகிறாள் என்று ஆண்கள் நினைப்பதுண்டு..//

என்னப்பா வசந்த்? எப்போதும் இனிப்பதில்லை என்றுதானே சொன்னேன். 'ஒருபோதும் ' என்று சொல்லவில்லையே! ஈன இப்படித் தப்பாக எடுத்து சண்டைக்கு வருகிறீர்கள். ஹ ஹ ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...
மிக மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது ஜெஸ்....
படிப்பதற்கு சுவாரசியம்தான்.. ஆயினும், படித்ததும், மனசு வலிப்பதை மறுப்பதற்கில்லை...
(நல்ல வேளை போன பதிவில் கேட்டது போல், இதில் நான் ஏதும் கேட்கவில்லை...)//

வாங்க கோபி. கருத்துக்கு நன்றி. இந்த முறை தப்பி விட்டீர்கள் என்று சொல்கிறீர்களா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கேசவன் .கு said...
/// புழுதியில் எறிந்து விட்டான்
புழுப்போல நினைத்து விட்டான். ////
இருக்கும் பொருளின் அருமை ( பெருமை ) தெரியாது !!
இந்த மனிதர்க்கு !//

வாங்க கேசவன். சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அபுஅஃப்ஸர் said...
பெண் பாதுகாக்கப்படவேண்டியது, போற்றப்படவேண்டியது..
மனது வலிக்கிறது கேவலம்கெட்ட பெண்மையை புரிந்துக்கொள்ளப்படாத ஒருசில ஆண்களால்//

சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலரைத்தான் குறிப்பிட்டேன். உங்கள் கருத்துக்கு நன்றி அபுஅஃப்ஸர்.

வால்பையன் said...

பெண்கள் முந்திகிட்டு அவனுகளை தூக்கி எறிஞ்சிட்டா சரியாயிரும்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
கவிதையாய் மட்டும் பார்க்கிறேன். ஆனால் ஏன் இத்தனை கோபம் ஜெஸ்//

கவிதையாய் மட்டும் பார்ப்பதற்கு நன்றி நவாஸ். கரு சற்றுக் காரமாக இருந்தால் தானே சுவையாக இருக்கும். மற்றப் படி கோபம் எல்லாம் ஒன்றும் இல்லை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
மனைவி என்பவள் இரண்டாம் தாய்தானே?
அருமையான கவிதை
நன்றாக கவிதை எழுதும் திறன் வந்துவிட்டது போலும்//

வாங்க இராயர். சரியாகச் சொன்னீர்கள். நீண்ட இடைவெளி விட்டு விட்டேன். நீண்ட பதிவு எழுதும் நிலைமையில் இப்போ நான் இல்லாததால் எப்பவோ நான் கிறுக்கி வைத்திருந்த இந்தக் கவிதையைப் பிரசுரித்தேன். அவ்வளவுதான். வாசிக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்ற துணிவில் எழுதுகிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...
என்ன ஆச்சு ஆளைக் காணோம் ?
வந்ததும் இப்பிடி ஒரு கவிதை (?)

நலமே விளையும்
நன்னிலம் விழுந்த விதை//

வாங்க நேசா. ஆளைக் காணவில்லை என்று கண்டு பிடித்து விட்டீர்கள். இங்கே பாடசாலை விடுமுறை வந்தது தான் காரணம். உங்கள் பதிவுகள் சில இன்னும் படிக்க நேரம் கிடைக்க வில்லை. மன்னிக்கவும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அன்புடன் அருணா said...
என்ன இப்பிடி ஜெஸ்வந்தி !//

என்ன அருணா? தப்புத் தப்பாக எழுதுகிறேனா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஜீவன் said...
ஆயிரந்தான் இருந்தாலும் பெத்த தாய போல வருமா ?
பெத்தது பெத்ததுதான் கட்டுனது கட்டுனதுதான் .!

இப்படியெல்லாம் நாங்களும் சொல்லலாம்..!
ஆனா சொல்லமாட்டோம்ல...!
அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு ஆயுச ஓட்டிடுவோம்ல...!//

வாங்க நண்பரே! இதுதானே கூடாதென்பது. சின்ன ஒரு கவிதைக்கு கட்சி கட்டிக் கொண்டு வருவது. ஒரு பெண்ணைப் பற்றியும் ஒரு மாதைப் பற்றியும் தான் என் கவிதை சொல்லுது ஜீவன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கலகலப்ரியா said...
mmm..//

கல கலப்பாக என்னவும் சொல்விர்கள் என்று பார்த்தால் இப்பிடி ம்ம் ம்ம் சொல்கிறீர்களே!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தியாவின் பேனா said...

அருமை//

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தியாகுவின் பேனா .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//க.பாலாசி said...

கவிதை நல்லாருக்கு....கவலையா இருக்கே....இந்த நிலையும் கடந்துபோகும்....//

வாங்க பாலாசி. ஹ ஹ ஹா கடந்து போகணும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சந்ரு said...
அருமையான வரிகள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
உணர்வுப்பூர்வமா எழுதி இருக்கீங்க ஜெஸ்.//

கருத்துக்கு நன்றி ஷ‌ஃபிக்ஸ்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வால்பையன் said...
பெண்கள் முந்திகிட்டு அவனுகளை தூக்கி எறிஞ்சிட்டா சரியாயிரும்!//

வாங்க வால். உண்மைதான் . இதை ரகசியமாய் சொல்ல வேண்டும்.