நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday 19 October 2009

சாக்கடை





அன்பினால் அரவணைத்து
உன்னைக் கண்போல் காத்திருந்தேன்
என்னவன் நீயென்று
உன் உயிருடன் கலந்திருந்தேன்

ஆசையால் வசப்பட்டு
அந்நியனாய்ப் போய்விட்டாய்
பித்துப் பிடித்துப் போய்
பின் முதுகில் குத்தி விட்டாய்.

கண்களுக்குள் கைவிட்டு
கரு விழியைக் கொய்து விட்டாய்
நெஞ்சுக்குள் வெடி வைத்து
வஞ்சகம் செய்து விட்டாய்.

சமுத்திரமாய் நானிருக்க
சாக்கடைக்குள் ஏன் விழுந்தாய்?
சதியென்று நீ அறிந்தும்
மதி கெட்டு ஏன் போனாய்.?


.

45 comments:

R.Gopi said...

டைட்டிலும் அந்த படமும், அதை விட இந்த பதிவும்

பகீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

என்னாச்சு ஜெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........

இது என்ன திடீர்னு நம்பிக்கை துரோகம் பற்றிய சுளீர் பதிவு.... சாட்டை அடியின் வலி பலமாக இருக்கிறதே....

நர்சிம் said...

//கண்களுக்குள் கைவிட்டு
கரு விழியைக் கொய்து விட்டாய்//

..

கலா said...

ஏனம்மா இவ்வளவு கொடுரமான{படத்தில்}
கண்.கண்ணால் பார்க்கவே முடியவில்லை.

ஏமாற்றுபவர்கள் ஆண்கள் மட்டுமல்ல...
பெண்களும் இருக்கின்றார்கள், காதலை,
அன்பை இழந்து வஞ்சிக்கப்பட்ட ஒரு
வஞ்சியின் மனக் குமுறல்.{கவி}காயப்பட்டவர்கள்
கண்ணில் பட்டால் .....படம் பிடித்துக் காட்டும்.
முன் நடந்தவைகளை...
மலருக்கு மலர் தாவுவது சிலரின் குணம்.

நேசமித்ரன் said...

ஜெஸ் தீ பறக்குது போங்க
படமும் அப்பாடி !!!

ஹேமா said...

ஜெஸி ஏன் இவ்வளவு கவலை.படம் பயங்கரமா இருக்கு.சாக்கடைக்குள்ள விழட்டும் விடுங்க தோழி.அப்பத்தான் சமுத்திரத்தின் அருமை தெரியும்.

வால்பையன் said...

யாரோ ரொம்ப காயப்படுத்திட்டாங்க போல!

காலம் அதற்கு மருந்து போடும்!

இராயர் said...

உங்களிடமிருந்து இதை நிச்சயமாக எதிர் பார்க்கவில்லை !!!!
ரொம்ப கவலை அளிக்கும் கவிதை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...
டைட்டிலும் அந்த படமும், அதை விட இந்த பதிவும்
பகீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
என்னாச்சு ஜெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........
இது என்ன திடீர்னு நம்பிக்கை துரோகம் பற்றிய சுளீர் பதிவு.... சாட்டை அடியின் வலி பலமாக இருக்கிறதே....//

என்னப்பா இது.? கவிதை எழுத விட மாட்டிர்களா? மகாராசா ஆரம்பித்து வைத்து அத்தனை பேரும் எனக்கு என்னாச்சு என்று கேள்விமேல் கேள்வி.
பேசாமல் பிளாக்கை மூடிட்டு போகப் போகிறேன். ஹா ஹா ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நர்சிம் said...

//கண்களுக்குள் கைவிட்டு
கரு விழியைக் கொய்து விட்டாய்//
..//
வரவுக்கு நன்றி நர்சிம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கலா said...
ஏனம்மா இவ்வளவு கொடுரமான{படத்தில்}
கண்.கண்ணால் பார்க்கவே முடியவில்லை.
ஏமாற்றுபவர்கள் ஆண்கள் மட்டுமல்ல...
பெண்களும் இருக்கின்றார்கள், காதலை,
அன்பை இழந்து வஞ்சிக்கப்பட்ட ஒரு
வஞ்சியின் மனக் குமுறல்.{கவி}காயப்பட்டவர்கள்
கண்ணில் பட்டால் .....படம் பிடித்துக் காட்டும்.
முன் நடந்தவைகளை...
மலருக்கு மலர் தாவுவது சிலரின் குணம்.//

வாங்க கலா. கருத்துக்கு நன்றி.ஆண்கள் மட்டும் தான் ஏமாற்றுகிறார்கள் என்று நான் சொன்னேன? இந்தக் கவிதை, ஒரு ஏமாற்றப் பெண்ணின் குமுறல். அவ்வளவுதான்.
கருவிழியைக் கொய்தால் படம் எப்படி இருக்கும் என்று தேடித் படம் எடுத்தேன். பயங்கரமாக இருந்தால் சொல்லுங்கள். வேறு படம் மாற்றி விடுகிறேன்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...
ஜெஸ் தீ பறக்குது போங்க
படமும் அப்பாடி !!! //

வாங்க நேசன்.நல்ல வேளை நீங்களும் ஆறுதல் சொல்லிப் போகவில்லை.
படம் எழுத்துக்குப் பொருந்த வில்லையா?

ப்ரியமுடன் வசந்த் said...

யம்மே..என்னாச்சு,,,

திடீர்ன்னு தூள் கிளப்புறீங்க

படம் சார்ப்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஜெஸி ஏன் இவ்வளவு கவலை.படம் பயங்கரமா இருக்கு.சாக்கடைக்குள்ள விழட்டும் விடுங்க தோழி.அப்பத்தான் சமுத்திரத்தின் அருமை தெரியும்.//

வாங்க வாங்க ஹமா.! நீங்களுமா! இது சும்மா ஒரு கவிதை. அவ்வளவுதான். நல்ல வேளை என் கணவருக்கு இந்த ப்லோக் படிக்கிற கெட்ட பழக்கம் கிடையாது. இல்லையென்றால் நான் இன்று அம்போ தான். ஹா ஹா ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வால்பையன் said...
யாரோ ரொம்ப காயப்படுத்திட்டாங்க போல!
காலம் அதற்கு மருந்து போடும்! //

வாங்க வால்பையன். யாரும் என்னைக் காயப் படுத்த வில்லையப்பா.
காலம் மருந்து போடும் என்ற கதையில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு வால்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
உங்களிடமிருந்து இதை நிச்சயமாக எதிர் பார்க்கவில்லை !!!!
ரொம்ப கவலை அளிக்கும் கவிதை//

வாங்க நண்பரே. மொத்தமாய் ஆண்களைச் சாடினேன் என்றா நினைக்கிறீர்கள்.
இல்லை , நீங்கள் தான் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தப்பான வழியில் போகும் ஒரு நண்பரைச் சிந்திக்க வைக்க நான் எடுத்த முயற்சி இது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்...வசந்த் said...
யம்மே..என்னாச்சு,,,
திடீர்ன்னு தூள் கிளப்புறீங்க
படம் சார்ப்...//

வாடாப்பா வசந்த்! எல்லாரும் வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போறாங்க.
நீ வந்து தூள் கிளப்பிறேன் என்கிறாய்.

R.Gopi said...

//என்னப்பா இது.? கவிதை எழுத விட மாட்டிர்களா? மகாராசா ஆரம்பித்து வைத்து அத்தனை பேரும் எனக்கு என்னாச்சு என்று கேள்விமேல் கேள்வி.
பேசாமல் பிளாக்கை மூடிட்டு போகப் போகிறேன். ஹா ஹா ஹா//

ஆஹா... நான் தான் மொத‌ல்ல "டெர்ரர" இஷ்டார்ட் ப‌ண்ணினேனா... சாரிங்கோ...

ஒரு ப்ர‌ஸ‌ன்ட் போட்டுட்டு பின்னாடி ப‌க்க‌ம் வ‌ழியா எஸ்கேப் ஆயிட‌றேன்...

சாரிங்கோ...வ‌ரேங்கோ...

velji said...

/கண் போல் காத்திருந்தேன்... நீயோ கருவிழியை கொய்துவிட்டாய்/

துரோக வலியின் போட்டோகாப்பி!

Jackiesekar said...

வால் போட்ட கமென்டுக்கு உங்க விளக்கம் நல்லா இருந்தது...

S.A. நவாஸுதீன் said...

கவிதை எழுதிட்டு இந்தப்படம் போட்டீங்களா இல்லை இந்தப் படம் பார்த்துட்டு கவிதை எழுதுனீங்களா? ரெண்டுமே செமையா இருக்குப்பா.

//கண்களுக்குள் கைவிட்டு
கரு விழியைக் கொய்து விட்டாய்//

அழுத்தம் ரொம்ப ஜாஸ்திங்கோ

நர்சிம் said...

//என்னப்பா இது.? கவிதை எழுத விட மாட்டிர்களா? மகாராசா ஆரம்பித்து வைத்து அத்தனை பேரும் எனக்கு என்னாச்சு என்று கேள்விமேல் கேள்வி.
பேசாமல் பிளாக்கை மூடிட்டு போகப் போகிறேன். ஹா ஹா ஹா//

இதே தான் எனக்கும் நடந்தது துரோகம் குறித்த ஒரு கவிதையில். கொஞ்ச நாள் எங்கயாவது மலைப்ப்ரதேசம் போயிட்டுவாங்கன்னு மெயில்லெல்லாம் வேற..ஹும்..

Ungalranga said...

ஆ...ம்ம்........ஆறுதல் எல்லாம் சொல்ல போறதில்லை..உன்னை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்..!!

அதே போல.. கவிதையும் படமும் செம அருமை..!!
நல்லா நல்லா..நல்லா..இருக்கே!!!

பா.ராஜாராம் said...

"ஆகா!இதுவல்லவோ கண்கள்!என்ன அருமையான கண்ணீர்!கண்ணீரையும் விட பேசும் கவிதைகள்தான் எவ்வளவு விசாலமாய்,நிறைவாய்,மனசெல்லாம் பூரித்து விட்டதே"

என்றா பின்னூட்டம் போட முடியும் இந்த படத்துக்கும் இப்படியான கவிதைக்கும்?என்ன,ஏதுன்னு கேட்க்கத்தான் செய்வோம்.சிரிச்சு மழுப்ப வேணாம் ஜெஸ்.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.சும்மா கவிதைதாம்பா!
(உங்கள் பதிலையும் நானே போட்டாச்சு!)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//velji said...
/கண் போல் காத்திருந்தேன்... நீயோ கருவிழியை கொய்துவிட்டாய்/
துரோக வலியின் போட்டோகாப்பி!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Velji .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//jackiesekar said...
வால் போட்ட கமென்டுக்கு உங்க விளக்கம் நல்லா இருந்தது...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி jackiesekar .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
கவிதை எழுதிட்டு இந்தப்படம் போட்டீங்களா இல்லை இந்தப் படம் பார்த்துட்டு கவிதை எழுதுனீங்களா? ரெண்டுமே செமையா இருக்குப்பா.
//கண்களுக்குள் கைவிட்டு
கரு விழியைக் கொய்து விட்டாய்/
அழுத்தம் ரொம்ப ஜாஸ்திங்கோ//

கவிதை எழுதிவிட்டுத்தான் படம் எடுத்தேன். முதல் போட்ட படத்துக்கு வந்த கமெண்ட் பார்த்ததும் மாற்றி இந்தப் படம் போட்டேன். முதல் படத்தில் கண்ணீருக்குப் பதிலாய் இரத்தம் வழிந்தது. சின்னப் பசங்க பயப்பிட்டதால மாற்ற வேண்டியதாகி விட்டது.
அழுத்தம் ஜாஸ்தியாக இருக்க வேண்டிய விடயம் இதுவல்லவா. கருத்துக்கு நன்றி நவாஸ்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நர்சிம் said...
/ இதே தான் எனக்கும் நடந்தது துரோகம் குறித்த ஒரு கவிதையில். கொஞ்ச நாள் எங்கயாவது மலைப்ப்ரதேசம் போயிட்டுவாங்கன்னு மெயில்லெல்லாம் வேற..ஹும்../

கருத்துக்கு நன்றி நர்சிம். அப்பாடா என்றிருக்கிறது. எனக்கு மெயில் எல்லாம் வரவில்லை. தப்பித்தேன் என்று சொல்லுங்கள். ஆனாலும் முகம் தெரியாமல் என்மேல் இத்தனை கரிசனை உள்ள நண்பர்கள் உலகெல்லாம் பரந்து கிடக்கிறார்கள் என்று நினைக்க உள் மனதில் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ரங்கன் said...
ஆ...ம்ம்........ஆறுதல் எல்லாம் சொல்ல போறதில்லை..உன்னை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்..!!
அதே போல.. கவிதையும் படமும் செம அருமை..!!
நல்லா நல்லா..நல்லா..இருக்கே!!! //

வாங்க ரங்கன். அடடே ! ஐயாவுக்கு நம்ம வலயத்துக்கு வர நேரம் கிடைச்சதே பெரிய காரியம். அதுக்குள்ளே கருத்து வேற போட்டிருக்கிறீர்கள். எனக்கென்னமோ அந்த ' நல்லா நல்லா நல்லா இருக்கே ' சரியாகப் படவில்லை. உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
"ஆகா!இதுவல்லவோ கண்கள்!என்ன அருமையான கண்ணீர்!கண்ணீரையும் விட பேசும் கவிதைகள்தான் எவ்வளவு விசாலமாய்,நிறைவாய்,மனசெல்லாம் பூரித்து விட்டதே"

என்றா பின்னூட்டம் போட முடியும் இந்த படத்துக்கும் இப்படியான கவிதைக்கும்?என்ன,ஏதுன்னு கேட்க்கத்தான் செய்வோம்.சிரிச்சு மழுப்ப வேணாம் ஜெஸ்.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.சும்மா கவிதைதாம்பா!
(உங்கள் பதிலையும் நானே போட்டாச்சு!)//

ஒட்டு மொத்தமாக எல்லாரும் சேர்ந்து என்னைக் கவிதை எழுத விடாமல் செய்யும் சதி இது. எனக்கு புரிந்து போச்சு. என் பதிலையும் நீங்க போட்டாச்சே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said...

ஆஹா... நான் தான் மொத‌ல்ல "டெர்ரர" இஷ்டார்ட் ப‌ண்ணினேனா... சாரிங்கோ...

ஒரு ப்ர‌ஸ‌ன்ட் போட்டுட்டு பின்னாடி ப‌க்க‌ம் வ‌ழியா எஸ்கேப் ஆயிட‌றேன்...

சாரிங்கோ...வ‌ரேங்கோ...//

திரும்பி வந்து கருத்துப் போட்டதற்கு நன்றி கோபி. சாரி எல்லாம் நண்பர்களுக்கிடையில் வரக் கூடாது பாருங்கோ. எனக்கு ஒன்றென்றால் ,இத்தனை பேர் ஆறுதல் சொல்ல இருக்கிறார்கள் என்ற தெம்பு எனக்கு வந்திடிச்சு.
,

butterfly Surya said...

கவிதை அருமை.

கண்கள் அருமையிலும் அருமை.

☀நான் ஆதவன்☀ said...

:) நல்லாயிருக்குங்க

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//butterfly Surya said...
கவிதை அருமை.
கண்கள் அருமையிலும் அருமை.//

வாங்க சூர்யா . கருத்துக்கு மிக்க நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/☀நான் ஆதவன்☀ said...
:) நல்லாயிருக்குங்க//

வாங்க ஆதவன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

டவுசர் பாண்டி... said...

வலையுலகத்தில் இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலப்பா !

சந்தான சங்கர் said...

கண்(கள்)
வடித்த
கவலை(கள்)

சத்ரியன் said...

//சமுத்திரமாய் நானிருக்க
சாக்கடைக்குள் ஏன் விழுந்தாய்?
சதியென்று நீ அறிந்தும்
மதி கெட்டு ஏன் போனாய்.?//

ஜெஸி,

சங்கடப்படுத்தும் வரிகள்!

வெறும் கற்பனை மட்டும்தான் என்றால் , கவிதைக்கு பாராட்டுகள்.

நிஜமாக .....?

இராயர் said...

நாங்க அடுத்த பதிவுக்கு ரெடி
நீங்க ரெடியா?
ஆகையால் சீக்கிரம் எழுதுங்கள்,காத்திருக்கிறோம்!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//டவுசர் பாண்டி... said...
வலையுலகத்தில் இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலப்பா !//

ஆனால் எனக்கு இந்த ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தாங்க முடியுமப்பா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சந்தான சங்கர் said...
கண்(கள்)
வடித்த
கவலை(கள்)//

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சத்ரியன் said...
//சமுத்திரமாய் நானிருக்க
சாக்கடைக்குள் ஏன் விழுந்தாய்?
சதியென்று நீ அறிந்தும்
மதி கெட்டு ஏன் போனாய்.?//

ஜெஸி,
சங்கடப்படுத்தும் வரிகள்!
வெறும் கற்பனை மட்டும்தான் என்றால் , கவிதைக்கு பாராட்டுகள்.
நிஜமாக .....?//

வாங்க சத்ரியன். இது கவிதைதான். பாராட்டை நிஜமாக எடுத்துக் கொள்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
நாங்க அடுத்த பதிவுக்கு ரெடி
நீங்க ரெடியா?
ஆகையால் சீக்கிரம் எழுதுங்கள்,காத்திருக்கிறோம்!!!//

வாங்க இராயர். நானும் ரெடிதான். எழுதிக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் படிக்கலாம்.இப்பிடி ரசிகர்கள் இருக்கும் போது எழுதாமல் இருப்பேனா?

Anonymous said...

சதக் சதக்... சப்தமில்லாமல்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Anonymous said...

சதக் சதக்... சப்தமில்லாமல்//

ஹஹா ஹா ,அழகான கருத்து நண்பரே.

"உழவன்" "Uzhavan" said...

//நெஞ்சுக்குள் வெடி வைத்து
வஞ்சகம் செய்து விட்டாய்//

கண்களையே கொய்துவிட்ட பின்பு, இந்த வரிகள் தேவையில்லை என்வே எண்ணுகிறேன்இந்த வரிகள் தேவையில்லை என்றுதான் எண்ணுகிறேன். அருமை