நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Sunday, 11 October 2009

தேடுகிறேன்!

அப்பாவைக் காண
வெகுநாள் ஆசை
ஆனாலும் என்மனதில்- அவர்
முழு உருவும் கிடைக்கவில்லை.


அன்றொரு நாள் சந்தையில்
அவர் பின்புறம் கண்டேன்
இன்னொரு நாள் பேரூந்தில் - அவர்
விரைவதைக் கண்டேன்.


ஒரு நாள் ரயில்வே தரிப்பில்
மங்கலாய்த் தெரிந்தார்
ஓடிப் போய்ப் பார்த்த போது - அவர்
உருவின்றிப் போனார்.


அன்று நான் வானொலியில்
அவர் குரலைக் கேட்டேன்
மும்முரமாய்த் தேடியதில்-அவர்
முடிச் சுருளைப் பார்த்தேன்.


கண்ணா மூச்சி விளையாட்டில்
கதி கலங்கிப் போனேன்
இன்னும் நான் தேடுகிறேன்- அவர்
சிரிக்கும் கண்களதை..

46 comments:

ஹேமா said...

ஜெஸி என்ன இப்பிடி ஒரு ஏக்கம்.ஒவ்வொரு வரியிலுமே அப்பா.அப்பாவின் தேடல் நெருக்கமாக.மனதை நெகிழவைக்கிறது.

யாழினி said...

கவிதை நன்றாக உள்ளது ஜெஸ்வந்தி! எழுத்துக்களை, வரிகளை நன்றாக கோர்த்துள்ளீர்கள்.

அபுஅஃப்ஸர் said...

உங்கப்பாவை பார்க்கவேயில்லையா?

வரிகள் சிந்திக்க வைத்தன‌

இராயர் அமிர்தலிங்கம் said...

நீங்கள் அப்பா செல்லமா?
கவிதை அருமை!!

பிரியமுடன்...வசந்த் said...

முகச்சாடைகளில் நினைவுபடுத்துகிறார் அப்பா

நன்றி....

பா.ராஜாராம் said...

மக்கா,தாமதத்திற்கு மன்னியுங்கள்.வேலைதான்.

என்ன அருமையான கவிதை ஜெஸ்.அப்பான்னா இளகி போய் விடுவேன்.கோர்வைகளுக்கு அப்பாற்பட்டதான மனசு கையில் கிடைக்கிறது.அசந்து தூங்கும் போது வழிந்தூறும் வானிமாதிரி.ஏந்தி,ஏந்தி,ஏந்தி,கொண்டே இருக்கிறேன்.

அப்பா அப்பாதான் ஜெஸ்.

Anonymous said...

ada jes kavithaiyil vizhinthittaya neeyum?

கவிக்கிழவன் said...

அப்பாவின் பிரிவோ ?
அருமை என்று சொல்வதை விட ஒரு பிழையின் எக்கம் என்று சொல்லாம்

R.Gopi said...

//அப்பாவைக் காண
வெகுநாள் ஆசை
ஆனாலும் என்மனதில்- அவர்
முழு உருவும் கிடைக்கவில்லை.//

ஆரம்பமே ஒரு சோகத்திற்கு வித்திடுகிறதே ஜெஸ்...

//அன்றொரு நாள் சந்தையில்
அவர் பின்புறம் கண்டேன்
இன்னொரு நாள் பேரூந்தில் - அவர்
விரைவதைக் கண்டேன்.//

வாவ்... சோகம் தான்... இருப்பினும் உங்கள் எழுத்து நடை சபாஷ் சொல்ல வைக்கிறது...

//ஒரு நாள் ரயில்வே தரிப்பில்
மங்கலாய்த் தெரிந்தார்
ஓடிப் போய்ப் பார்த்த போது - அவர்
உருவின்றிப் போனார்.//

அடடா.. என்னே ஒரு ஏமாற்றம்...

//அன்று நான் வானொலியில்
அவர் குரலைக் கேட்டேன்
மும்முரமாய்த் தேடியதில்-அவர்
முடிச் சுருளைப் பார்த்தேன்.//

ம்ம்ம்... இவ்வளவு ஆர்வமா தேடி என்னாச்சோ... மேலும் படிக்கலாம்...

//கண்ணா மூச்சி விளையாட்டில்
கதி கலங்கிப் போனேன்
இன்னும் நான் தேடுகிறேன்- அவர்
சிரிக்கும் கண்களதை.//

என்னே விதியின் விளையாட்டு... என்ன சோதனை நிறைந்த வாழ்க்கை...

நல்லா எழுதி இருக்கீங்க ஜெஸ்...... வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

என்னை ரொம்ப நெகிழவைத்த கவிதை ஜெஸ்வந்தி.

ஜெஸ்வந்தி said...

//ஹேமா said...
ஜெஸி என்ன இப்பிடி ஒரு ஏக்கம்.ஒவ்வொரு வரியிலுமே அப்பா.அப்பாவின் தேடல் நெருக்கமாக.மனதை நெகிழவைக்கிறது.//

வாங்க ஹேமா . வரவுக்கு நன்றி. நலந்தானா? எழுத இதை விட வேறு விடயம் எதுவும் தெரியவில்லை.

ஜெஸ்வந்தி said...

//யாழினி said...
கவிதை நன்றாக உள்ளது ஜெஸ்வந்தி! எழுத்துக்களை, வரிகளை நன்றாக கோர்த்துள்ளீர்கள்.//

நன்றி யாழினி. உங்களுக்குக் பிடித்ததில் மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி said...

//அபுஅஃப்ஸர் said...

உங்கப்பாவை பார்க்கவேயில்லையா?
வரிகள் சிந்திக்க வைத்தன‌//

வாங்க அபுஅஃப்ஸர். அப்படி இல்லை. இது தந்தையை இழந்த ஒரு பிள்ளையின் ஏக்கம்.
எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பொருந்தும்.

ஜெஸ்வந்தி said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
நீங்கள் அப்பா செல்லமா?
கவிதை அருமை!!//

அடடே, எப்பிடிக் கண்டு பிடித்தீர்கள்? கல்யாண சாப்பாடு கிடைக்க வில்லை. கடைசி பலகாரம் வரும் என்று பார்த்தேன் .அதுவும் இல்லை. போட்டோ தன்னும் வருமா?

ஜெஸ்வந்தி said...

//பிரியமுடன்...வசந்த் said...
முகச்சாடைகளில் நினைவுபடுத்துகிறார் அப்பா . நன்றி....//

கருத்துக்கு நன்றி வசந்த். உன் அப்பாவை நினைவு படுத்தி விட்டேனா?

ஜெஸ்வந்தி said...

//பா.ராஜாராம் said...
மக்கா,தாமதத்திற்கு மன்னியுங்கள்.வேலைதான்.
என்ன அருமையான கவிதை ஜெஸ்.அப்பான்னா இளகி போய் விடுவேன்.கோர்வைகளுக்கு அப்பாற்பட்டதான மனசு கையில் கிடைக்கிறது.அசந்து தூங்கும் போது வழிந்தூறும் வாணி மாதிரி .ஏந்தி,ஏந்தி,ஏந்தி,கொண்டே இருக்கிறேன்.
அப்பா அப்பாதான் ஜெஸ்.//

தாமதமானாலும் வருவீர்கள் என்று தெரியும் நண்பரே. கவிதை சொல்வது என் ஏக்கம் மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்தும் தான்.

நேசமித்ரன் said...

தீக்குச்சி மருந்தளவே
பேருந்தின் கூரைப் பிடியில்
முழங்கையில் தெரிந்த மச்சம்

தங்கையின் பாவாடைபோல்
வாசலில் தொங்கும் திரை கீழ்
ஊர்வலக் காலின் ஒன்றில்
பெயர்ந்திருக்கும் பெரு விரல்
நகமும்

திரை அரங்கின் இடைவெளிப் பொழுதில்
கடைசியாய் திறக்கும் கதவில் கசிகின்ற
வெளிச்சம் போல கனவிலே தெரிந்த
தகப்பன்

அடை காக்கும் சிறகாய் இமை
கனாக் காக்கிறதே ஜெசி .....

க.பாலாஜி said...

ஏக்கத்தின் வெளிப்பாடாய் ஒரு விதை....வார்த்தைகளின் கோர்வை நன்றாக இருக்கிறது....

கவிநயா said...

அழகான வெளிப்பாடு ஜெஸ்வந்தி. பா.ராஜாராம் அவர்களின் பின்னூட்டத்தையும் ரசித்தேன்.

ஜெஸ்வந்தி said...

//தமிழரசி said...
ada jes kavithaiyil vizhinthittaya neeyum?//

வாங்க தமிழ். கதை யதார்த்தமாக எழுதவேண்டாம் என்று தமிழரசி சொன்னதால் இப்போ நான் கவிதை என்று சொல்லிக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

Shan Nalliah / GANDHIYIST said...

Fathers of everyone have both positive and negative sides! We forgive and forget negative actions and appreciate and carry on with us with positive sides! Those who never got a chance to meet their fathers.....VERY SAD! UNDESCRIBABLE!!
FATHERS SHD BE WITH THEIR CHILDREN DURING YOUNG AGES ATLEAST!!!

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

கவிதை நெகிழ்வா இருக்கு ஜெஸ், தேடுதலின் ஆழத்தை அழகா சொல்லி இருக்கிங்க.

ஜெஸ்வந்தி said...

R.கோபி said ...
//வாவ்... சோகம் தான்... இருப்பினும் உங்கள் எழுத்து நடை சபாஷ் சொல்ல வைக்கிறது...//
//அடடா.. என்னே ஒரு ஏமாற்றம்...//
//ம்ம்ம்... இவ்வளவு ஆர்வமா தேடி என்னாச்சோ... மேலும் படிக்கலாம்...//
//என்னே விதியின் விளையாட்டு... என்ன சோதனை நிறைந்த வாழ்க்கை...//
//நல்லா எழுதி இருக்கீங்க ஜெஸ்...... வாழ்த்துக்கள்...//

வாங்க கோபி. நீங்கள் இப்படி வரி வரியாக ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி said...

நேசமித்ரன் said ...
// தீக்குச்சி மருந்தளவே
பேருந்தின் கூரைப் பிடியில்
முழங்கையில் தெரிந்த மச்சம்

தங்கையின் பாவாடைபோல்
வாசலில் தொங்கும் திரை கீழ்
ஊர்வலக் காலின் ஒன்றில்
பெயர்ந்திருக்கும் பெரு விரல்
நகமும்

திரை அரங்கின் இடைவெளிப் பொழுதில்
கடைசியாய் திறக்கும் கதவில் கசிகின்ற
வெளிச்சம் போல கனவிலே தெரிந்த
தகப்பன்

அடை காக்கும் சிறகாய் இமை
கனாக் காக்கிறதே ஜெசி .....//

வாங்க கவிஞரே! பின்னூட்டம் கவிதையாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
//தங்கையின் பாவாடைபோல்
வாசலில் தொங்கும் திரை கீழ்
ஊர்வலக் காலின் ஒன்றில்
பெயர்ந்திருக்கும் பெரு விரல்
நகமும்//

சூப்பர் வரிகள் .ரசித்தேன்.

ஜெஸ்வந்தி said...

//க.பாலாஜி said...
ஏக்கத்தின் வெளிப்பாடாய் ஒரு விதை....வார்த்தைகளின் கோர்வை நன்றாக இருக்கிறது....//

வாங்க பாலாஜி. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி said...

//கவிநயா said...
அழகான வெளிப்பாடு ஜெஸ்வந்தி. பா.ராஜாராம் அவர்களின் பின்னூட்டத்தையும் ரசித்தேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிநயா. உண்மைதான் பா.ரா.தரும் உவமானங்கள் ரசனைக்குரியவை.

ஜெஸ்வந்தி said...

//கவிக்கிழவன் said...
அப்பாவின் பிரிவோ ?
அருமை என்று சொல்வதை விட ஒரு பிள்ளையின் ஏக்கம் என்று சொல்லாம்//

வாங்க யாதவன். சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி said...

//Shan Nalliah / GANDHIYIST said...
Fathers of everyone have both positive and negative sides! We forgive and forget negative actions and appreciate and carry on with us with positive sides! Those who never got a chance to meet their fathers.....VERY SAD! UNDESCRIBABLE!!
FATHERS SHD BE WITH THEIR CHILDREN DURING YOUNG AGES ATLEAST!!!//

Thanks for the comment Shan. It is true.

ஜெஸ்வந்தி said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

கவிதை நெகிழ்வா இருக்கு ஜெஸ், தேடுதலின் ஆழத்தை அழகா சொல்லி இருக்கிங்க.//

வரவுக்கும் உங்கள் நெகிழ்வான கருத்துக்கும் நன்றி ஷ‌ஃபிக்ஸ்.

சென்ஷி said...

அருமை ஜெஸ்வந்தி!

ஊடகன் said...

நல்லா இருந்தது, ஒரு பெண்ணின் மனதில் ஒளிந்து கிடக்கும் பாசம்...........

ஜெஸ்வந்தி said...

//சென்ஷி said...
அருமை ஜெஸ்வந்தி! //
உங்கள் கருத்துக்கு நன்றி சென்ஷி

ஜெஸ்வந்தி said...

//ஊடகன் said...
நல்லா இருந்தது, ஒரு பெண்ணின் மனதில் ஒளிந்து கிடக்கும் பாசம்...........//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும், என் வலையத்தைத் தொடர்வதற்கும் நன்றி ஊடகன்.

கவிதை(கள்) said...

ஆண்களுக்கு அம்மாவும்
பெண்களுக்கு அப்பாவும்
இதய துடிப்புகள்

இழந்தால் ஈடு செய்ய முடியாது

வாழ்த்துக்கள் தோழி

விஜய்

இராயர் அமிர்தலிங்கம் said...
This comment has been removed by the author.
இராயர் அமிர்தலிங்கம் said...

நிச்சயதார்த்தம் மட்டுமே முடிந்துள்ளது
ஜனவரி 27 தேதி திருமணம்,கண்டிப்பாக நீங்கள் வர வேண்டுகிறேன்
மிக்க நன்றி
அன்புடன்
இராயர்

கவிநயா said...

ஜெஸ்வந்தி, இங்கே வந்து பாருங்களேன்...

http://kavinaya.blogspot.com/2009/10/2009.html

இராயர் அமிர்தலிங்கம் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

கலா said...

சகோதரி நீங்கள் அப்பாவை மட்டும்
தேடுகிறீகள்,நான் தேடுபவர்கள்
எண்ணில் அடங்காது .நிஐத்தில்
தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் அவர்கள்
நினைவுகளுடன் பித்து பிடிக்காமல்.......

ஓவ்வொரு தேடலுக்கும் முற்றுப்
புள்ளி ஏது?உலகத்தில் இல்லாத என்
அப்பாவை நினைக்க வைத்தன
உங்கள் வரிகள்.

ஜெஸ்வந்தி said...

//கவிதை(கள்) said...
ஆண்களுக்கு அம்மாவும்
அப்பாவும்
இதய துடிப்புகள்
இழந்தால் ஈடு செய்ய முடியாது
வாழ்த்துக்கள் தோழி
விஜய் //
வாங்க விஜய், உங்கள் முதல் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி said...

இராயர் அமிர்தலிங்கம்
======================
மகிழ்ச்சி. மெயில் பாருங்கோ.

ஜெஸ்வந்தி said...

//கவிநயா said...
ஜெஸ்வந்தி, இங்கே வந்து பாருங்களேன்...

http://kavinaya.blogspot.com/2009/10/2009.html//

நன்றி கவிநயா. விரைவில் எழுதுகிறேன்.

ஜெஸ்வந்தி said...

//கலா said...
சகோதரி நீங்கள் அப்பாவை மட்டும்
தேடுகிறீகள்,நான் தேடுபவர்கள்
எண்ணில் அடங்காது .நிஐத்தில்
தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் அவர்கள்
நினைவுகளுடன் பித்து பிடிக்காமல்.......
ஓவ்வொரு தேடலுக்கும் முற்றுப்
புள்ளி ஏது?உலகத்தில் இல்லாத என்
அப்பாவை நினைக்க வைத்தன உங்கள் வரிகள்.//

வாங்க கலா. மனதை நெகிழ வைத்து விட்டீர்கள். உண்மைதான் தோழி. சுனாமியில் முழுக் குடும்பத்தையும் இழந்த பலரை நான் சந்தித் திருக்கிறேன். அவர்கள் நிலையில் இருந்து கலங்கி இருக்கிறேன். தேடலுக்கு முடிவில்லை தான் தோழி.

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

r.selvakkumar said...

இழப்புகள்தான் தேடல்களை ஆரம்பித்து வைக்கின்றன. நன்றாகத் தேடுங்கள். யாருமே மறைவதில்லை. நமக்குள் முளைக்கிறார்கள்.

ஜெஸ்வந்தி said...

//S.A. நவாஸுதீன் said...
நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!//

நன்றி நவாஸ் .