தோழி கவிநயா என்னை இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார். தீபாவளி திருநாளை யொட்டி , அது சம்பந்தமாக ஒரு சில கேள்விகள் இங்கே.
இந்தத் தொடரை சதங்கா ஆரம்பித்திருக்கிறார்.
1. உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
என்னைப் பற்றி 32 கேள்வி பதில்களில் நிறையவே சொல்லி விட்டேன். நான் பிறப்பினால் கத்தோலிக்க சமயத்தில் பிறந்தாலும், சமயத்தால் மனிதர்களையும் திருநாள்களையும் பிரிப்பது கிடையாது. என் கணவர் இந்து என்பதால் எங்கள் வீட்டில் பல திருநாட்கள் கொண்டாடுவது வழக்கம். ஆனால் என் கணவரின் சகோதரர் பல வருடங்களுக்கு முன்னால் இந்தத் திருநாள் அன்று அகால மரணம் அடைந்த காரணத்தால் இந்தத் திரு நாள் மட்டும் நாங்கள் வீட்டில் கொண்டாடுவது கிடையாது.
2. தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?
தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது தீபங்களும் பலகாரங்களும் தான்.
சின்ன வயதில் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் எதுவும் கிடையாவிட்டாலும் , நண்பர்கள் வீட்டில் வாழைக் குத்திகளைத் தோண்டி விளக்கு வைத்ததும், அவர்களைப் பார்த்து எங்கள் வீட்டிலும் அகல் விளக்குகள் வாங்கி அலங்கரித்ததும் .....பல வருடங்களின் பின்பும் இனிமையாக மனதை நிறைத்து நிற்கிறது.
3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
இங்கிலாந்த்தில் தான் இருக்கிறேன். வேறு எங்கு போவது?
4. தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
இங்கு எல்லோரும் அடக்கமாகத்தான் கொண்டாடுகிறார்கள். பலகாரம் மட்டும் தான். வாழ்த்துக் கூடத் தொலை பேசியிலும், மெயிலிலும், text இலும் தான் தெரிவித்துக் கொள்கிறார்கள். வாழ்க்கை இயந்திர மயமாகி விட்டதற்கு இதெல்லாம் அறிகுறிகள். எனக்குத் தெரிய புத்தாடை எடுப்பது எல்லாம் கிடையாது.
5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
திருநாள் கொண்டாடுபவர்களே புத்தாடை எடுப்பது கிடையாது. நான் புத்தாடை வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
6. உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்களா ?
நான் செய்யவும் இல்லை. வாங்கவும் இல்லை. நண்பர் வீட்டில் இருந்து வந்த பலகாரங்களை ருசி பார்த்தோம்.
7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
இங்குள்ளவர்களுக்கும், நெருங்கிய சொந்தக்களுக்கும் தொலைபேசி வாழ்த்துக்கள். மற்ற நண்பர்களுக்கு மின்னஞ்சல்.
8. தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா ?
உண்மையைச் சொன்னால் எல்லோரும் வழமை போல் தொலைக் காட்சி , ப்ளோக், face book என்று இருக்கிறார்கள். பலகாரம் கொறிப்பது மட்டும் எக்ஸ்ட்ரா.
9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
அப்படி எல்லாம் செய்வது கிடையாது.
10. நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் ப்ளோக் விபரம் என்ன?
யாரை அழைப்பது என்று தெரியவில்லை. இந்தப் பதிவைப் படிக்கும் எவரும் இதைத் தொடர விரும்பினால் தொடருங்கள்.
இப்போ இந்த தொடருக்கான விதிமுறைகள்:
1. கேள்விகளுக்கு உங்கள் வலைத்தளத்தில் புதிய பதிவில் பதிலளியுங்கள்.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.
.
17 comments:
திறந்த மனசுடன்,அருமையான பதில்கள் ஜெஸ்..தீபாவளி வாழ்த்துக்கள்!
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்
கொண்டாடுவதில்லையானாலும் அழைப்பை ஏற்று பதிவிட்ட அன்பிற்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி.
நீங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவரா??
பதிவிற்கு மிக்க நன்றி
iniya deepavali vazhthukkal...anaithu kelvigalukum pathigal velipadaiyaga erunthadhu jes...
அடுத்து ஒரு தொடர்பதிவா? ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
வெளிப்படையான பதில்கள். வாழ்த்துக்கள் ஜெஸ்
தீபாவளி கொண்டாடது ஏன் என்று கேட்டு இருந்தேன்... விடை கிடைத்தது...
கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்... இப்போ, நெனச்சு என்ன பிரயோஜனம்....
சாரி ஜெஸ்.....
ஜெஸி தொடரா... வேண்டாம் விடுங்கோ.ஓடிப்போறேன்.
கருத்துச் சொன்ன. ஓட்டுப் போட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
//R.Gopi said...
தீபாவளி கொண்டாடது ஏன் என்று கேட்டு இருந்தேன்... விடை கிடைத்தது...
கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்... இப்போ, நெனச்சு என்ன பிரயோஜனம்.... சாரி ஜெஸ்.....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா. கவிநயா வலயத்தில் என்னிடம் நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு நீங்கள் சொன்ன பின்பு தான் தெரிந்தது. நீங்கள் கேட்டது தெரியாமலே நான் காரணம் சொல்லி விட்டேன். கவலைப் படாதீர்கள்.
தீபாவளி சிறப்பு பேட்டி பார்த்த மாதிரி கேள்வி பதில்கள் இருந்தன :-)
கருத்துக்கு நன்றி உழவன்.
அருமையான பதில்கள்!
தீபாவளி நினைவுடனான வருத்தமான நிகழ்வுக்கு வருந்துகிறேன்.
//அருமையான பதில்கள்!
தீபாவளி நினைவுடனான வருத்தமான நிகழ்வுக்கு வருந்துகிறேன்.//
என் எண்ணமும் இதுவே.
கட்சீ கேள்விய இப்படி ஓப்பன் சாய்ல விட்டுட்டீங்களே :)
//ராமலக்ஷ்மி said...
அருமையான பதில்கள்!
தீபாவளி நினைவுடனான வருத்தமான நிகழ்வுக்கு வருந்துகிறேன்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
//சதங்கா (Sathanga) said...
/அருமையான பதில்கள்!
தீபாவளி நினைவுடனான வருத்தமான நிகழ்வுக்கு வருந்துகிறேன்.//
என் எண்ணமும் இதுவே.
கடைசி கேள்விய இப்படி ஓப்பன் சாய்ல விட்டுட்டீங்களே :) //
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. மன்னிக்கவும் தோழி. அனேகமாக என் வலயத்தைத் தொடரும் நண்பர்கள் குடும்பத்தை விட்டு வேலைக்காக வெளியூரில் இருக்கிறார்கள். அவர்களைத் தெரிந்து அவர்கள் மனச் சங்கடங்களை அதிகரிக்க நான் விரும்ப வில்லை. எவராவது குதூகலமாகக் கொண்டாடினால் நிச்சயம் இந்தத் தொடரைத் தொடர்வார்கள் என்று நினைத்தேன். கோபிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
Post a Comment