நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Wednesday 19 August 2009

பர்மா அதிசயம்


பர்மாவில் எடுக்கப்பட்ட ,ஒரு அருவிக்கருகில் அமைந்த ,மலையடிவாரக் காட்சியை இந்தப் புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள். இதை எவரும் இலகுவாக எடுத்துவிட முடியாது. இந்தப் புகைப் படத்தை வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும், சூரியக் கதிர்கள் ஒரு குறித்த கோணத்தில் அந்த மலையில் படும்போது தான் எடுக்க முடியும். இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்று புரிகிறதா?
இப்போ உங்கள் தலையை இடது பக்கம் சரித்து , இந்தப் படத்தைத் திரும்பவும் பாருங்கள்........புரிகிறதா?
இதே படத்தை நான் நேராகத் திருப்பி இருக்கிறேன் பாருங்கள்.......





பிற்குறிப்பு.

இந்தப் படம் கொரியாவில் சிறுவர் புத்தகத்தில் வரையப் பட்ட ஒரு ஓவியம் என்பதும் இப்படி ஒரு மலையடிவாரம் கிடையாதென்பதையும் ஒரு வாசகர் எனக்கு அறியத் தந்த floraipuyal என்ற பதிவருக்கு என் நன்றி.
மேலதிக விபரங்களுக்கு
http://www.hoax-slayer.com/burma-rock-formation.html


.

38 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எந்த வித சீர்படுத்தும் வேலையும் இதில் இல்லையென நம்புகிறேன். மிக வித்தியாசமும் அபூர்வமுமான படம் தான்.

பா.ராஜாராம் said...

ஆஹா...என்ன அழகு.முகத்தின் சாயல் கூட"பர்மா"களையில் இருப்பது போல் இருக்கு.ஜெஸ்...எங்கிருந்து எடுக்கிறீர்கள் இதெல்லாம்.இப்படி படங்களாய் போட்டுட்டு நம்ம,"கல்யாணம் காட்சின்னு" ஓடிர்ரதாக்கும்.உங்கள் பதிவுகளுக்கு வெயிட்டிங் மேடம்..

தமிழ் அமுதன் said...

ada...!ada....!!adada....!!! asathaththuthu....!!!!!

sakthi said...

அருமையான புகைப்படம் ஜெஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

கடவுளா மனிதனா

அருமையான அதிசயமான புகைப்படம்

அப்துல்மாலிக் said...

தேடிப்புடிச்சி எடுத்திருங்காங்க தத்ரூபபா எடுத்தவருக்கு வாழ்த்துக்கள்

வெளியிட்டது நல்லது

azhagan said...

Photoshop!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எந்த வித சீர்படுத்தும் வேலையும் இதில் இல்லையென நம்புகிறேன். மிக வித்தியாசமும் அபூர்வமுமான படம் தான்.//

உங்கள் முதல் வரவுக்கு நன்றி யோகன்.

ஹேமா said...

ஜெஸி என்னமாதிரி அருமையா இருக்கு.அற்புதமா அதிசயமா இருக்கு.இது இயற்கையா இப்பிடியே இருந்திருக்குமா.இல்லை செதுக்கி எடுத்து தண்ணீருக்குள் நிழல் வரும்படி செய்ற்கையாக செய்திருப்பார்களா !

Sudhahar R said...

// இந்தப் புகைப் படத்தை வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும், சூரியக் கதிர்கள் ஒரு குறித்த கோணத்தில் அந்த மலையில் படும்போது தான் எடுக்க முடியும்//

Please dont spread rumors like this and mislead people. its obvious that its a photoshop work.

அ.மு.செய்யது said...

இது ஒரு அதிசயம் தான்.

காத்திருந்து புகைப்படம் எடுத்த அந்த போட்டோகாரருக்கு பாராட்டுகளும்,
பகிர்வுக்கு நன்றிகளும் !!!

R.Gopi said...

ஜெஸ்...

இது ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்த மெயிலில் இருந்த பல ஃபோட்டோஸ்ல இதுவும் ஒண்ணு...

நல்லா இருக்கு.... திரும்பியும் ரெஃப்ரெஷ் பண்றபோது.....

நட்புடன் ஜமால் said...

நன்றி பகிர்தலுக்கு.

எடுத்துவரும் மிக இரசனை உள்ளவர்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பா.ராஜாராம்
------------
வாங்க நண்பரே! என்ன இப்படி குட்டைப் போட்டு உடைக்கிறீர்கள்? பதிவுகள் எழுதும் நேரமோ, சிந்தனையோ தற்சமயம் கிடையாது பாருங்கோ. ஏதோ கிடைத்ததைப் போட்டு சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.
ஜீவன்
------
வாங்க நண்பரே! ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறதா? இது உண்மையோ ,பொய்யோ தெரியாது எனக்கு. ஆனால் ஆச்சரியப் பட வைக்கிறது.
sakthi
------
வாங்க தோழி. நலந்தானே? நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி.

பிரியமுடன்...வசந்த்
-------------------
வாங்க வசந்த். ஏதோ மெயிலில் வந்த படத்தைப் போட்டிருக்கிறேன். உங்களைப் போல் கற்பனா சக்தி நமக்குக் கிடையாதப்பா.

S.A. நவாஸுதீன் said...

வாவ். அருமை ஜெஸ்வந்தி. நிஜமென்றால் நிச்சயம் அதிசயம்தான்

NONO said...

//வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும்//
எங்கையோ உதைக்கிறமாதிரி இருக்கு அனேகமாக photoshop வேலையாய் இருக்கலாம்!!

kanavugalkalam said...

meega arumaiyaka iruku..........

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அபுஅஃப்ஸர்
===========
வருகைக்கு நன்றி நண்பரே! நானும் இதை ரசித்தேன்.

azhagan
=======
photoshop வேலையாக இருக்கலாம். பர்மாவில் இருக்கும் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஜெஸி என்னமாதிரி அருமையா இருக்கு.அற்புதமா அதிசயமா இருக்கு.இது இயற்கையா இப்பிடியே இருந்திருக்குமா.இல்லை செதுக்கி எடுத்து தண்ணீருக்குள் நிழல் வரும்படி செய்ற்கையாக செய்திருப்பார்களா !//

எப்படி இருக்கிறீர்கள் தோழி? இந்தப் படம் எனக்கு மெயிலில் வந்தது. அதன்படி rock mountain என்று இருக்கிறது. இதைப் படித்த சில நண்பர்கள் இது photoshop வேலையாக இருக்கும் என்று நம்புகிறார்கள். உண்மை ,பொய் தெரியவில்லை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Sudhahar R said...
// இந்தப் புகைப் படத்தை வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும், சூரியக் கதிர்கள் ஒரு குறித்த கோணத்தில் அந்த மலையில் படும்போது தான் எடுக்க முடியும்//
Please dont spread rumors like this and mislead people. its obvious that its a photoshop work.//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி நண்பரே! புரளி கிளப்புவது என் நோக்கமல்ல. இந்தப் புகைப் படம் எனக்கு மெயிலில் வந்தது. மிகவும் ஆச்சரியப்பட்டேன். நண்பர்களுடன் பகிர எண்ணினேன். போடோஷோப் ஆக இருக்கலாம் என்றும் நினைத்தேன். இப்படி பிரசுரிக்கும் போது யாராவது பர்மாவில் இருந்தும் இதனைப் படிக்க முடியுமல்லவா? உண்மை பொய் தெரிய முடியும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//NONO said...
//வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும்//
எங்கையோ உதைக்கிறமாதிரி இருக்கு அனேகமாக photoshop வேலையாய் இருக்கலாம்!!//

இருக்கலாம் நண்பரே! ஆனாலும் அதிசயப்படாமல் இருக்க முடிய வில்லை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
வாவ். அருமை ஜெஸ்வந்தி. நிஜமென்றால் நிச்சயம் அதிசயம்தான்//

வருகைக்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி நண்பரே!

தேவன் said...

அருமையான படம் ஜெஸ்வந்தி அவர்களே ! இயற்கையை நினைக்கையில் உண்மையில் பெருமிதம்.
உங்கள் இப்பதிவிற்கு நன்றி.

நிகழ்காலத்தில்... said...

படத்தை பார்த்து பிரமித்தேன்

உண்மையா பொய்யா என்று ஆராயவில்லை

நல்ல பகிர்வு

வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//kanavugalkalam said...
meega arumaiyaka iruku..........//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Kesavan said...
அருமையான படம் ஜெஸ்வந்தி அவர்களே ! இயற்கையை நினைக்கையில் உண்மையில் பெருமிதம்.
உங்கள் இப்பதிவிற்கு நன்றி.//

வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் என் நன்றி நண்பரே!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நிகழ்காலத்தில்... said...
படத்தை பார்த்து பிரமித்தேன்
உண்மையா பொய்யா என்று ஆராயவில்லை
நல்ல பகிர்வு
வாழ்த்துக்கள்//

உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

நேசமித்ரன் said...

Jesi

mudhalpadathiloru korilla kurangu neeriletti paarpadhu [polavumirukkiradhu enakku...!]

ithaithaan kurangu buththi endru solgiraargalo ?:(

nalla pagirvu nandri!

Unknown said...

20 August 2009 05:17
Kesavan said...

அருமையான படம் ஜெஸ்வந்தி அவர்களே ! இயற்கையை நினைக்கையில் உண்மையில் பெருமிதம்.
உங்கள் இப்பதிவிற்கு நன்றி.

---
அண்ணன் மற்ற கமெண்ட் களை படிக்காமலே பினூட்டம் போடுறாரு.

Floraipuyal said...

இது முன்பே மின்னஞ்சலில் வந்த ஒரு பொய்ச்செய்தி. உண்மையில் இப்படம் குழந்தைகள் பொத்தகம் ஒன்றில் வரையப்பட்டது.

http://www.hoax-slayer.com/burma-rock-formation.html

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said..
Jesi, mudhalpadathiloru korilla kurangu neeriletti paarpadhu [polavumirukkiradhu enakku...!]
ithaithaan kurangu buththi endru solgiraargalo ?:(
nalla pagirvu nandri!//

வாங்க நேசா! வரவுக்கு நன்றி. நீங்கள் காண்பதை என்னால் காண முடியவில்லை. ஒரே படத்தை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அதன் அழகு பெருகி விடுகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//C said...
Kesavan said...
அருமையான படம் ஜெஸ்வந்தி அவர்களே ! இயற்கையை நினைக்கையில் உண்மையில் பெருமிதம்.
உங்கள் இப்பதிவிற்கு நன்றி. /
-----------------------------
அண்ணன் மற்ற கமெண்ட் களை படிக்காமலே பினூட்டம் போடுறாரு.//

இந்தப் படத்தின் முழுக் கதை தெரிந்த பின்னர் அதனை என் பதிவில் பின் குறிப்பாக இணைத்துள்ளேன் நண்பரே! அதனால் எல்லோரும் படிக்கும் வாய்ப்பு உண்டு. சரிதானே

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//FloraiPuyal said...
இது முன்பே மின்னஞ்சலில் வந்த ஒரு பொய்ச்செய்தி. உண்மையில் இப்படம் குழந்தைகள் பொத்தகம் ஒன்றில் வரையப்பட்டது.

http://www.hoax-slayer.com/burma-rock-formation.html//

உங்கள் முதல் வரவுக்கும் நீங்கள் தந்த தகவலுக்கு என் மனமார்ந்த நன்றி. எனது பதிவில் இந்த லிங்கை சேர்த்துள்ளேன். அதன் முலம் அனைவரும் இது ஒரு ஓவியம்தான் என்று அறிந்து கொள்வார்கள்.

ஆ.ஞானசேகரன் said...

அற்புதம்

Anonymous said...

nice picture da என் ப்ரண்டு இதை எனக்கு மெயில் பண்ணியிருந்தார்.. ஜெஸ் உன்னை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கேன் என்னுடைய தீக்குள் விரலை வைத்தால் பதிவில்..எழுதவும்....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வருகைக்கு நன்றி ஞானசேகரன் .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...
This comment has been removed by the author.
ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தமிழரசி said...
nice picture da என் ப்ரண்டு இதை எனக்கு மெயில் பண்ணியிருந்தார்.. ஜெஸ் உன்னை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கேன் என்னுடைய தீக்குள் விரலை வைத்தால் பதிவில்..எழுதவும்....//

நன்றி தோழி. இன்னும் ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. எழுதுகிறேன் ஆனால் தாமதமாகும். மன்னிக்கவும்.