நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Friday 7 August 2009

கோபம்


ஒரு போதகர் தன் சீடர்களிடம் ஒருநாள் '' நீங்கள் கோபப்படும் போது ஏன் உரத்துக் கத்துகிறீர்கள்? என்று எப்போதாவது சிந்தித்தீர்களா? '' என்று கேட்டார். சில நிமிடங்களின் பின்னர் ஒருவர் '' நாங்கள் கோபப் படும்போது எங்கள் அமைதியை இழக்கிறோம். அதனால் தான் சத்தமாகக் கத்துகிறோம் '' என்று சொன்னார்.
போதகர் அந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளவில்லை. '' நீங்கள் அமைதியை இழந்தாலும் கேட்பவர் பக்கத்தில் இருக்கும் போது நீங்கள் அவர் காது கிழியக் கத்துவது ஏன்? ஏன் நீங்கள் அதே விடயத்தை கத்தாமல் , மெல்லிய குரலில் சொல்லக் கூடாது ?'' என்று திரும்பவும் கேட்கிறார். எவருக்கும் சரியான பதில் தெரியவில்லை.
அவர் தந்த விளக்கம் இதுதான் . இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் கோபப்படும் போது அவர்களது மனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகித் தூரத்தில் போகின்றன. அதனால்தான் அந்தத் தூரத்தைத் தாண்டி நீங்கள் சொல்லும் சொற்கள் மற்றவரைச் சென்றடைய எங்களையறியாமல் எங்கள் குரலை உயர்த்துகிறோம். எங்கள் கோபம் அதிகரிக்க , அதனால் மனங்களின் இடைவெளி மேலோங்க , அதற்கேற்ப எமது குரலும் மேலோங்குகிறது.

இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது. காதல் முற்றிப் போய் விட்டால் அங்கு வார்த்தைகளே தேவையில்லாமல் போய் விடுகிறது. மௌனமே ஒரு மொழியாகி விடுகிறது . இது அவர்கள் மனங்களின் நெருக்கத்தைக் காட்டுகிறது.

என்ன அழகான விளக்கம் இது. நீங்கள் ஆத்திரப்பட்டுப் பேசும்போது மற்றவர் மனங்களைத் தூரத்தில் விலக்கும் வார்த்தைகளை பாவிக்காதீர்கள்.


.

43 comments:

sakthi said...

இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது.

இது தான் மேட்டரா?? தெரியாம போயிற்றே

ராமலக்ஷ்மி said...

அருமையான விளக்கம் ஜெஸ்வந்தி!

ஹேமா said...

ஜெஸி விளக்கம் அருமை.என்றாலும் கோபம் வரும்போது அமைதியாக இருந்துந்து விடுவதே நல்லது.மௌனம்தான் சிறந்த மொழி.

ஏன் வீட்ல ஏதாவது சண்டையோ-கோவமோ.
ஞானம் தூள் பறக்குது.

Anonymous said...

உண்மைத் தான் ஜெஸ்..வார்த்தைகளை பகிர்தலும் ஒரு கலையே.... நான் பொதுவா கத்தவே மாட்டேன் இருந்தாலும் மத்தவங்களுக்கு சொல்ல பயன்படும் இந்த கருத்து நன்றிடா...

S.A. நவாஸுதீன் said...

அருமையான விளக்கம் ஜெஸ். ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க. நன்றி

குடந்தை அன்புமணி said...

அருமையான விளக்கம் ஜெஸ்வந்தி. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வது இந்தவித நெருக்கத்தினால்தானோ...

துபாய் ராஜா said...

//இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது. காதல் முற்றிப் போய் விட்டால் அங்கு வார்த்தைகளே தேவையில்லாமல் போய் விடுகிறது. மௌனமே ஒரு மொழியாகி விடுகிறது . இது அவர்கள் மனங்களின் நெருக்கத்தைக் காட்டுகிறது.//


//இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் கோபப்படும் போது அவர்களது மனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகித் தூரத்தில் போகின்றன. அதனால்தான் அந்தத் தூரத்தைத் தாண்டி நீங்கள் சொல்லும் சொற்கள் மற்றவரைச் சென்றடைய எங்களையறியாமல் எங்கள் குரலை உயர்த்துகிறோம். எங்கள் கோபம் அதிகரிக்க , அதனால் மனங்களின் இடைவெளி மேலோங்க , அதற்கேற்ப எமது குரலும் மேலோங்குகிறது.//

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய அழகான, அற்புதமான விளக்கம்.

பகிர்விற்கு நன்றி.

SUFFIX said...

மெளனத்தில் தொடங்கும் மோகம், அதே மெளனத்தால் அடங்கும் கோபம். கோபத்தை அமைதியால் வென்றிடலாம்!! நல்லா எழுதி இருக்கீங்க ஜெஸ்.

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

இப்படி ஒரு விளக்கமா - மிக அருமைங்க.

இராயர் said...

காதலர்கள் கண்ணால் பேசிக்கொள்வது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

###நீங்கள் ஆத்திரப்பட்டுப் பேசும்போது மற்றவர் மனங்களைத் தூரத்தில் விலக்கும் வார்த்தைகளை பாவிக்காதீர்கள்.###

இனிமேல் பேசும் போது பார்த்துக்கொள்கிறோம்

நன்றி

அப்துல்மாலிக் said...

இரு மனங்களும் தூர சென்றுவிட்டால் குரல் ஒலி அதிகரிக்கிறது.. இதுலேர்ந்து தெரிவது கோபப்படுபவர் ஒருவர் அட்க்கிவாசித்தால் மனதும் அமைதியாகிடுது என்பதுதானே

நல்ல விளக்கம்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//sakthi said...

இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது.
இது தான் மேட்டரா?? தெரியாம போயிற்றே//

வாங்க சக்தி, இந்த விடயம் முதலே தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பிர்கள்? அறிய மிக ஆவல் தோழி. ஹா ஹா ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ராமலக்ஷ்மி said...
அருமையான விளக்கம் ஜெஸ்வந்தி!//

வாங்க தோழி, ரசனைக்கு நன்றி. உங்கள் கவிதை வந்து படித்தேன். மிகவும் அழகு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...
ஜெஸி விளக்கம் அருமை.என்றாலும் கோபம் வரும்போது அமைதியாக இருந்துந்து விடுவதே நல்லது.மௌனம்தான் சிறந்த மொழி.
ஏன் வீட்ல ஏதாவது சண்டையோ-கோவமோ.
ஞானம் தூள் பறக்குது.//

என்ன தோழி இது? என் எழுத்துக்கும் என் வீட்டுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்?
என்னுடன் யாரும் கோபப் பட்டால் நான் மௌன விரதம் இருந்து அவர்களைப் பைத்தியம் பிடிக்க வைத்து விடுவேன். அது ஒரு நல்ல டெக்னிக் , ஆனால் எனக்கு இயல்பில் வந்து விட்டது.

நேசமித்ரன் said...

இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம்

அற்புதமான விளக்கம்.

நன்றி ஜெஸ்வந்தி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//தமிழரசி said...
உண்மைத் தான் ஜெஸ்..வார்த்தைகளை பகிர்தலும் ஒரு கலையே.... நான் பொதுவா கத்தவே மாட்டேன் இருந்தாலும் மத்தவங்களுக்கு சொல்ல பயன்படும் இந்த கருத்து நன்றிடா...//

நான் சத்தம் போட்டு சண்டை பிடிப்பதில்லை தமிழ். நமக்கு இந்த விடயத்தில் ஒற்றுமை பாருங்கோ. மௌனம் காத்து என் கோபத்தைத் தெரிவிப்பேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
அருமையான விளக்கம் ஜெஸ். ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க. நன்றி//

என் காதில் விழுந்து , நான் ரசித்த விடயங்கள் இவை. நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//குடந்தை அன்புமணி said...
அருமையான விளக்கம் ஜெஸ்வந்தி. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வது இந்தவித நெருக்கத்தினால்தானோ...//

அதேதான் அன்புமணி. அதில் என்ன சந்தேகம்.' தில்லானா மோகனாம்பாள்' திரைப் படம் பார்த்திர்களா.?'

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//துபாய் ராஜா said...
எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய அழகான, அற்புதமான விளக்கம்.//

பகிர்விற்கு நன்றி.மிகவும் ரசித்தீர்கள் என்று தெரிகிறது நண்பரே. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...
ஆஹா!
இப்படி ஒரு விளக்கமா - மிக அருமைங்க.//

வாங்க ஜமால். நீங்கள் ரசித்ததையிட்டு மகிழ்ச்சி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
மெளனத்தில் தொடங்கும் மோகம், அதே மெளனத்தால் அடங்கும் கோபம். கோபத்தை அமைதியால் வென்றிடலாம்!! நல்லா எழுதி இருக்கீங்க ஜெஸ்.//

நீங்கள் அழகாக விடயத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...
காதலர்கள் கண்ணால் பேசிக்கொள்வது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் //
என்ன இராயர் இது? கண்ணால் பேசும்போது சத்தம் வருகிறதா? அப்போ அவர்கள் மனம் மிக நெருக்கத்தில் இருக்கிறதென்று அர்த்தம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அபுஅஃப்ஸர் said...
இரு மனங்களும் தூர சென்றுவிட்டால் குரல் ஒலி அதிகரிக்கிறது.. இதுலேர்ந்து தெரிவது கோபப்படுபவர் ஒருவர் அட்க்கிவாசித்தால் மனதும் அமைதியாகிடுது என்பதுதானே. நல்ல விளக்கம்//

வாங்க நண்பரே! நன்றாகப் புரிந்திருக்கிறது. அடுத்த தரம் கோபம் வரும்போது இதனை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said...
இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம்
அற்புதமான விளக்கம். நன்றி ஜெஸ்வந்தி//

வாங்க நண்பரே! ஆர்வத்துடன் என் பதிவுகளைப் படிப்பதற்கு நன்றி. எனக்குத் தெரிந்தவைகளை நண்பர்களுடன் பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே!

R.Gopi said...

//இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது. காதல் முற்றிப் போய் விட்டால் அங்கு வார்த்தைகளே தேவையில்லாமல் போய் விடுகிறது. மௌனமே ஒரு மொழியாகி விடுகிறது . இது அவர்கள் மனங்களின் நெருக்கத்தைக் காட்டுகிறது.//

காதலர்களின் மௌனம் வாய்மொழியாகும் போது, நாணம் அவர்களது தாய்மொழியாகிறது.....

நல்லா எழுதி இருக்கீங்க ஜெஸ்வந்தி..... வாழ்த்துக்கள்....

Ungalranga said...

சூப்பர்..
நமக்கு எவ்ளோ கோவம் வந்தாலும் கத்துவது இல்லை..

அமைதியா அந்த இடத்தை விட்டு போய்டுவேன்..
அப்புறமா அவங்களை கூப்பிட்டு பேசி சமாதானம் பண்ணி,

உஸ்ஸப்பா..சுயபுராணம் எதுக்கு?

நல்ல பதிவு..
நிச்சயமாய் கடுப்பாகுறவங்க இதை கவனிக்கணும்!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//R.Gopi said..
.காதலர்களின் மௌனம் வாய்மொழியாகும் போது, நாணம் அவர்களது தாய்மொழியாகிறது.....
நல்லா எழுதி இருக்கீங்க ஜெஸ்வந்தி..... வாழ்த்துக்கள்...//

வாங்க கோபி, ரசனைக்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ரங்கன் said...
சூப்பர்..
நமக்கு எவ்ளோ கோவம் வந்தாலும் கத்துவது இல்லை..அமைதியா அந்த இடத்தை விட்டு போய்டுவேன்..அப்புறமா அவங்களை கூப்பிட்டு பேசி சமாதானம் பண்ணி,
உஸ்ஸப்பா..சுயபுராணம் எதுக்கு?
நல்ல பதிவு..நிச்சயமாய் கடுப்பாகுறவங்க இதை கவனிக்கணும்!!//

வாங்க ரங்கா, நீங்க அமைதி என்று தெரிகிறது. கடுப்பானவங்களுக்கு எழுதின பதிவுப்பா.

பா.ராஜாராம் said...

அழகான,தேவையான பகிர்வு ஜெஸ்..

Shan Nalliah / GANDHIYIST said...

Great!But you shd write more short stories! or poems! Then you can publish books of your own!
please visit & comment:
http://sarvadesatamilercenter.blogspot.com

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...

அழகான,தேவையான பகிர்வு ஜெஸ்..//

Thanks for your comment.How is your story going?
I am in Germany now and won't be able to comment on your blog for few days.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Shan Nalliah / GANDHIYIST said...

Great!But you shd write more short stories! or poems! Then you can publish books of your own!
please visit & comment:
http://sarvadesatamilercenter.blogspot.com//

Thanks for the comments. I am on holiday and will read and comment your article on my return.

Kavinaya said...

அட, ஆமாம்! அழகான விளக்கம். பகிர்தலுக்கு நன்றி ஜெஸ்வந்தி.

Sanjai Gandhi said...

அட அட.. :)

கிறுக்கன் said...

அருமையான விளக்கம். இது உங்கள் சிந்தனையாக இருந்தாலும். வேறு யாராவதாக இருந்தாலும் நன்றாக உள்ளது. இந்த விளக்கம் சிலருக்கு பொருந்தும். சிலருக்கு பொருந்தாமல் போகிறது. வெவ்வேறு இரண்டு மனிதர்கள், காதலர்கள், இரண்டு நண்பர்கள் போன்றவர்களுக்கு இது பொருந்தும். தந்தை மகனை ஏன் படிக்காமல் ஊர் சுற்றுகிறாய் என்று சத்தம் போடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது தந்தை மகனை வெறுக்கிறார் என்றா பொருள். மாறாக அது தன் மகன் மேல் வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது. அதே போல் தாய் தன பிள்ளைகள் மேல் அன்பு இருக்கும். எப்போதாவது சத்தம் போட்டு அதட்டுவாள். ஏன் அடிக்கடி கூட சத்தம் போடுவாள். அதற்காக அந்த பெண்ணுக்கு தன பிள்ளைகள் மேல் பற்று இல்லாமல் ஆகிவிடுமா. மாறாக அதுவும் அவர்கள் மேல் உள்ள அன்பு தான் அது. இதுபோல் சில உறவுகளுக்கு இந்த விளக்கம் ஒத்துவராது.அதற்காக நீங்கள் சொன்ன விளக்கம் பொய்யென்று எனக்கு தோன்ற வில்லை. முன்பு சொன்னது போல சிலருக்கு அது சரிதான்.

இராயர் said...

tonight i will goto india for annual vacation

keep write good things

take care

thanks for ur wishes

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கவிநயா said...
அட, ஆமாம்! அழகான விளக்கம். பகிர்தலுக்கு நன்றி ஜெஸ்வந்தி.//

வாங்க தோழி, வரவுக்கு நன்றி. உங்கள் பதிவுகள் எதுவும் இன்னும் படிக்கல. நான் ஊரில் இருக்கவில்லை. விரைவில் உங்கள் வீடு வருகிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//SanjaiGandhi said...
அட அட.. :)//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வழி போக்கன் said...
தந்தை மகனை ஏன் படிக்காமல் ஊர் சுற்றுகிறாய் என்று சத்தம் போடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது தந்தை மகனை வெறுக்கிறார் என்றா பொருள். மாறாக அது தன் மகன் மேல் வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது. அதே போல் தாய் தன பிள்ளைகள் மேல் அன்பு இருக்கும். எப்போதாவது சத்தம் போட்டு அதட்டுவாள். ஏன் அடிக்கடி கூட சத்தம் போடுவாள். அதற்காக அந்த பெண்ணுக்கு தன பிள்ளைகள் மேல் பற்று இல்லாமல் ஆகிவிடுமா. மாறாக அதுவும் அவர்கள் மேல் உள்ள அன்பு தான் அது. இதுபோல் சில உறவுகளுக்கு இந்த விளக்கம் ஒத்துவராது.அதற்காக நீங்கள் சொன்ன விளக்கம் பொய்யென்று எனக்கு தோன்ற வில்லை. முன்பு சொன்னது போல சிலருக்கு அது சரிதான்.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. நீங்கள் சொல்வதும் உண்மைதான்.
ஆனாலும் தந்தை மகனைக் கண்டிக்கும் போதும், கத்தும் போது அவர்கள் மனம் தூரத்தில் தான் போகிறது. அதே விடயத்தை தந்தை நயமாகக் கூறும் போது அவர்கள் மனங்கள் நெருங்கிவிடும் என்பது என் எண்ணம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

விளக்கம் நல்லாதான் இருக்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்.

இரசிகை said...

remmmmmmmmmmmmmmmmmmmmmba pidichchathu:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இரசிகை said...

remmmmmmmmmmmmmmmmmmmmmba pidichchathu:)//

உங்கள் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி தோழி.