நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday, 30 December 2010

வியக்க வைக்கும் வீதிகள் 2Skippers Road

இந்த வீதி நியுசிலாந்தில் உள்ளது .மிகவும் அகலம் குறைந்த இந்த வீதி மலைப்பாறையில் பல திடீர் வளைவுகளுடன் செல்கிறது. இந்தப் பாதையில் இரண்டுவாகனங்கள் ஒன்றையொன்று கடப்பது மிகவும் கடினம். பாதையோர பள்ளத்தாக்குகள் மிகவும் அபாயகரமானவை. ஓட்டுனர் சிறிது கவனம் குறைந்தாலும்உயிர் தப்ப முடியாது. கிட்டத்தட்ட இந்தப் பாதையை அமைக்க 22 வருடங்கள்எடுத்தது. அத்துடன் இந்தப் பாதை சீனாவை சார்ந்த வேலையாட்களால் கட்டிமுடிக்கப் பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.


Winter Road


உலகில் பல இடங்களில் , நதிகளின் மேல் உறைந்த பனிப் படலத்தின் மேல் பாதைகள் அமைப்பது ( Ice Roads) வழிமுறையில் இருந்தாலும் கனடாவிலிருக்கும் இந்த வீதி மிகப் பிரபலமானது.இதுவே உலகில் மிக நீண்ட ஐஸ் விதியாகும். இந்த வீதி கனடாவின் வடக்குப்பகுதியை கிழக்குப் பகுதியுடன் இணைக்கின்றது.பனிக் காலத்தில்இப்பகுதியிலுள்ள ஏரிகளும் ,நதிகளும் பனிக் கட்டியாகி ஒரு படலமாக உறைந்துவிடுவதால் , வருடத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தை உண்டுபண்ண , கிட்டத்தட்ட பூச்சியத்திலிருந்து 30 தொடக்கம் 70 டிகிரி பரனைற் கீழுள்ள கடுங் குளிரில் மனிதர்களால் இந்தப் பாதை அமைக்கப் படுகின்றது . இந்தப் பாதைமுக்கியமாக வடக்கில் எடுக்கப் படும் விலை மதிப்புள்ள உலோகங்களையும் ,ரத்தினங்களையும் கிழக்குக்குக் கொண்டு வரவே முதலில் அமைக்கப் பட்டது.ஆனால் இப்போது பனிக் காலத்தில் அமைக்கப் படும் இந்தப் பாதையில் வடக்குப்பகுதிக்கு உணவுகளும் ,மற்றும் அத்தியாவசிய பொருட்களும் குறைந்த செலவில்எடுத்துச் செல்லப் படுகின்றன. மற்றைய பத்து மாதங்களிலும் இப்பகுதிக்குபோக்கு வரத்து விமானப் பாதை மட்டுமே.


ஜனவரி மாதம் 2000 ஆண்டு டீஸல் கொண்டு சென்ற ஒரு பாரிய வண்டியொன்றுமச்கேன்சி நதியில் மூழ்கியது .அதிஸ்டவசமாக வாகன ஓட்டுனர் காப்பாற்றப்பட்டார். இது வரை சுமார் 20 க்கு உட்பட்ட விபத்துக்கள் இந்த வீதியில் நடைபெற்றாலும் எந்த உயிரிழப்பும் இந்தப் பாதையில் நடை பெறாதது இதன்மகிமையாகும்.Sichuan Tibet High way

ஆதாரம்

சீனாவிலுள்ள இந்த வீதி செங்க்டு ( Chengdu) என்ற இடத்திலிருந்து Tibet (திபெத் )வரை நீள்கிறது. இந்த வீதியில் நடைபெறும் மண் சரிவுகளும் , மலைகளிலிருந்து உருண்டு விழும் கற்களும், வெள்ளப் பெருக்கெடுப்புகளும் சீனாவில் வாகன விபத்துகளின் பெரும் பங்கை வகிக்கின்றது. 2412 கிலோ மீட்டர் நீளமான இந்த வீதி சுமார் 4000-5000 மீட்டர் உயரமான 14 மலைகளையும், பல நதிகளையும், அபாயகரமான காடுகளையும் கடந்து செல்கின்றது. இதில் பயணிப்பவர்கள் மிக அற்புதமான காட்சிகளை ரசிக்கக் கூடியதாயிருக்கும். மொத்த வீதியையும் கடந்து செல்ல சுமார் 15 நாட்கள் செல்லும். பயணிகள் இந்த 15 நாட்களில் பலவிதமான காலநிலையுள்ள பிரதேசங்களைக் கடந்து செல்வார்கள். அவர்கள் கண் முன்னாலே வெப்பநிலை குறைந்து ,இலையுதிர் காலம் வந்து , பனி கொட்டும் கடும் குளிர் பிரதேசமாகிப் போவதைப் பார்ப்பது மிகவும் ஒரு அற்புதமான அனுபவமாக விருக்கும்.15 comments:

Anonymous said...

ஜெஸ் முதல் மூன்று படங்கள் அற்புதம் அதிலும் மூன்றாவது பாதை ஆத்தி பார்க்கும் போதே கண் சுத்துது..உலகில் இருக்கும் அழகை இரசிக்க கண்டிப்பா ஒரு பிறவி போதாதுன்னு நினைக்கிறேன்...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..

எம்.எம்.அப்துல்லா said...

gr8 pictures.

sury said...

//.மிகவும் அகலம் குறைந்த இந்த வீதி மலைப்பாறையில் பல திடீர் வளைவுகளுடன் செல்கிறது. இந்தப் பாதையில் இரண்டுவாகனங்கள் ஒன்றையொன்று கடப்பது மிகவும் கடினம். பாதையோர பள்ளத்தாக்குகள் மிகவும் அபாயகரமானவை. ஓட்டுனர் சிறிது கவனம் குறைந்தாலும்உயிர் தப்ப முடியாது//

oru savaal for new year.

அந்த சின்ன வழியிலே எல்லா தமிழ்பதிவர்களும்
ஒன்று கூடி ஜெஸ்வந்தி மேடத்துக்கு
ஹாப்பி ந்யு இயர் சொல்லுவோம்.

சுப்பு ரத்தினம்.

ராமலக்ஷ்மி said...

தேடிப்பிடித்து தந்திருக்கும் படங்களுக்கும் விவரங்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி. இரண்டாவது படம் வியக்கவும் விதிர்விதிர்க்கவும் வைக்கிறது:))!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

பா.ராஜாராம் said...

ஜெஸ் மக்கா, நல்லாருக்கீங்களா?

இப்படியே 'படம் போட்டு பாகம் குறிச்சு' பொழுதை ஒப்பேத்தி விட திட்டமாக்கும்? உங்கள் சிறுகதைகள் என்னாச்சு?

பா.ராஜாராம் said...

புது வருடத்தில் நிறைய சிறுகதைகள் எழுதுவீர்களாம், சரியா? அன்பு நிறை புத்தாண்டு வாழ்த்துகள் மக்கா!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

R.Gopi said...

ஜெஸ்.....

பார்த்தாலே ஒதறுதுல்ல... டைப் ரக படங்கள்...

எப்படி தான் எல்லாரும் பயமில்லாம போறாங்களோ!!

ஃபோட்டோஸ் மற்றும் அருமையான விளக்கங்கள்...

தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெஸ்...

HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

கோலிவுட் - டாப்-20 நடிகர்கள் http://edakumadaku.blogspot.com/2010/12/20.html

கவிநயா said...

பாதையெல்லாம் பயங்கரமா இருக்கு. சிரத்தையுடன் சேகரித்து பகிர்ந்த படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.

அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜெஸ்வந்தி!

கே. பி. ஜனா... said...

படங்கள் அற்புதம்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பதிவுலகில் பாபு said...

ஆஹா!! சாலைகள் ஒவ்வொன்றும் பார்க்கவே மலைப்பா இருக்குங்க.. அழகாக விசயங்களைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி..அ

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அபாயகரமான பாதைகளைப் பார்த்ததுமே தலையை சுற்றீயது ஜெஸ்..

சந்தான சங்கர் said...

ஜெஸ்வந்தி இல்லை இது
ஐஸ்வந்தி......!!!!

உறைந்ததில் பயணம்
பயணமும் உறையலாம்!!

மலைக்க வைக்கும்
மலை பயணம்,

வியக்க வைக்கும்
விந்தை வழிகள்

என்னமோ போங்க
படம் புடிச்சு காட்டிடீங்க

பார்த்தால் பாதையும்
சுத்துது தலையும்
சுத்துது..சந்தான சங்கர்.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

So thrilling!!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Thanks Ravikumar.