நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday 10 August 2010

இனியதொரு பயணம் - 1

இந்த வருட நீண்டகோடை விடுமுறைக்கு எங்கு போகலாம என்றுசிந்தித்துக் கொண்டுஇருந்தபோது என் தங்கைஅனுப்பிய ,'' maltese Islands '' தீவுக்கூட்டமொன்றைப் பற்றியஉல்லாசப் பயணவிபரங்கள அடங்கிய ஒருலிங்க் கவனத்தை ஈர்த்தது.ஆர்வத்துடன் அந்த நாட்டின்விபரங்களைஇணையத்தில் படித்ததும்நிச்சயம் அங்கேபோவதென ஏகமனதாக முடிவெடுத்தும் விட்டோம்.இலங்கை என்னும் தீவில் பிறந்ததாலோ என்னவோ தீவுகளுக்குப் பயணிப்பதில்எனக்கு ஆர்வம் அதிகம்..


சுமார் மூன்றுமாதங்களின் முன்பாகவே எங்கள் பயணச் சீட்டும் , தங்குவதற்கான
ஹோட்டல் வசதிகளும் உறுதி செய்யப் பட்டு விட்டதனால் அந்த தீவுக் கூட்டம்
பற்றி கூகுளில் ஆர்வத்துடன் பலவிடயங்கள்சேகரித்தோம்.நாங்கள் சேகரித்த
சுவாரசியமான விடயங்கள் இவைதான். இந்தத் தீவுக்கூட்டங்கள் மோல்டா ,
கோசோ, கொமினோ என்ற மூன்று தீவுகளைக்கொண்டுள்ளது. இவற்றுள் மோல்டா சற்றுப் பெரியது. ஐரோப்பாவில்இத்தாலியின் கீளேயுள்ள சிசிலி தீவுக்கு 90 கிலோ மீட்டர் கிழக்காக மோல்டாஅமைந்துள்ளது. இந்த மூன்று தீவுகளின் மொத்த சனத் தொகை 500 ,000 க்கும்குறைவாகும். ஒரு தீவிலிருந்து மற்றைய தீவுகளுக்கு 20 நிமிடத்தில் படகுகளில்(ferry ) செல்லலாம். இந்தத் தீவுகள் சுற்றிவர அழகான மணல் கடற் கரைகளால்அலங்கரிக்கப் பட்டுள்ளன. இத்தனை தகவல்களுமே எனக்குப் போதுமானதாகவிருந்தது. ஆனாலும் என் பெண்கள் அங்கே பார்க்க வேண்டிய பிரசித்த மானஇடங்களைப் பட்டியல் போட்டு, எதையும் தவற விடுவதில்லை என்று நேரஅட்டவணை போட்டுவிட்டார்கள்.
திட்டமிட்ட படி இந்த வருடம் ஜூலை மாதம் .எங்கள் பயணம் தொடங்கியது.அதிகாலை ஆறு மணிக்கு லண்டனிலிருந்து எங்கள் விமானம் பறந்தது. மூன்று மணி நேரப் பயணம். காலை நேரத்தில் அந்தத் தீவுகளை விமானத்திலிருந்து பார்த்த பொழுதே அதன் அழகு மெய் மறக்க வைத்தது. நாங்கள் மோல்டா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது ஹோட்டல் மூலம் ஒழுங்கு செய்யப் பட்ட வாகனம்
எங்களுக்காகக் காத்திருந்தது. ண்டன் கால நிலைக்கு நாங்கள் பழகி விட்டிருந்ததால் அன்றைய 30 டிகிரி வெப்பநிலை சற்றுப் பய முறுத்தியது. ஆனாலும் எங்களை எதிர் கொண்ட வாகன ஓட்டுனரின் நகைச் சுவையும், லண்டனிலிருந்துவிடுமுறைக்குச் சென்று அந்த நாட்டை விட்டு நீங்க மனமில்லாமல் அங்கேயேதங்கி விட்ட அவரது கதையும், அந்த வெட்கையை மறக்க வைத்து விட்டது.நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் கோல்டன்
பே ( Golden Bay) என்ற வடக்கேயுள்ள ஒருகடற் கரையோரத்தில் அமைந்திருந்தது. விமான நிலையத்திலிருந்து எங்கள்பயணம் சுமார் 40 நிமிடங்கள். பரந்து, விரிந்து கிடந்த வரண்ட கல்லுப் பூமியும் , மிக அரிதாக தெட்டுத் தெட்டாகக் கிடந்த கள்ளிச் செடிகளும் ,நாங்கள் இணையத்தில் கண்ட அழகான மோல்டா இதுதானா ?என்று எங்களைத் திகைக்க வைத்தது

மோல்டா 300 சதுர கிலோ மீட்ர் பரப்பளவைக் கொண்டிருந்து ஐரோப்பாவின் மிகச் சிறிய தீவென பெயரெடுத்தாலும் ,அதன் மலைகளும், பள்ளத் தாக்குகளும் பக்கத்து நகரைஅடைவதற்கு ஒரு மலையிலிருந்து சுற்றிச் சுற்றி இறங்கி மற்ற மலையை சுற்றிச் சுற்றி ஏற வேண்டியிருந்தது. வாகன ஓட்டுனர் ஓயாமல் எங்களுக்கு கண்ட காட்சிகளுக்கு விளக்கம் தந்த படியே வந்தார். இங்கே சுற்றி வரக் கடல் இருந்தாலும் பத்து மாத கோடை காலமும், அரிதாகப் பெய்யும் மழையும் இங்கே தண்ணீர் தட்டுப் பாட்டை உண்டாக்கியிருப்பதாகவும் சொன்னார். நாங்கள் இப்படியான வரண்ட பூமியை எதிர் பார்க்கவில்லை என்று சொன்ன போது, இது கல்லுப் பிரதேச மென்றும் சில இடங்களில் மரங்கள் செழித்து கண்ணுக்குக் குளிர்ச்சியாக விருக்கின்றன வென்றும் அவற்றின் விபரங்களையும் தந்தார்.முதல் முதலாக என் கவனத்தை ஈர்த்தது .அங்கே காணப் பட்ட சுவர்களும் கட்டிடங்களும் தான். அவை அந்தப் பிரதேசத்திலுள்ள மலையையுடைத்து, அந்தக் கற்களின் மூலம் கட்டப் பட்டிருந்தன. வெளிர் மஞ்சள் நிறக் கற்கள் வெவ்வேறு வடிவத்தில் ,அளவில், இறுக்கமாக அடுக்கப் பட்டு சீமெந்து இல்லாமல் கட்டிடங்கள் கட்டி எழுப்பப் பட்டிருந்தன. இவை மிக வலுவானவை என்றும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் அசையாமல் நிற்கின்றன என்றும் டேவிட் (ஓட்டுனர்) எங்களுக்குச் சொன்னார். அவர்களின் அந்தத் துல்லியமான கட்டிடக் கலையை வியப்புடன் பார்த்தோம்.


ஒரு சில வீடுகள் கூட அந்த வகையில் கைவண்ணத்துடன் கட்டப் பட்டிருந்தன.
ஒரு படியாக கடற்கரையோரம் வந்து சேர்ந்தோம். அந்தக் காட்சிகள் மனதுக்கு இதமாகவும், கடற் காற்று உடம்புக்கு இதமாகவும் இருந்தது
.

புஜிபா பே ( Bugibba Bay) .என்ற இடத்தை நாங்கள் தாண்டிய போது எடுத்த படத்தை இங்கே பார்க்கலாம். காலை பத்து மணிக்கு எங்கள் ஹோட்டல் போய்ச் சேர்ந்தோம். வழியில் கண்ட பல் வேறு நிறமான போகன்விலா செடிகளும்


செவ்வரத்தை மரங்களும் ஒரு விதமான பற்றை மனதில் உண்டாக்கி விட்டன

.(தொடரும்) .


20 comments:

சத்ரியன் said...

//செவ்வரத்தை மரங்களும் ஒரு விதமான பற்றை மனதில் உண்டாக்கி விட்டன..//

ஜெஸ்ஸியக்கா,

எங்கள் மனதிலும்தான் உண்டாக்கி விட்டன.

மீதியை சீக்கிரம் தொடருங்கோ.......

sakthi said...

உலகம் சுற்றும் ஜெஸ்

என சீக்கிரம் புத்தகம் வெளியிடலாம்

போங்க.

வாழ்த்துக்கள் உங்கள் இனிமையான

பயணக்கட்டுரையை தொடருங்கள்

காத்திருக்கின்றோம்!!!

நட்புடன் ஜமால் said...

புஜிபா பே (சொல்லவே அழகாயிருக்கு)

ரொம்ப அழகாயிருக்கு,

பார்க்க இயலாத என் போன்றோருக்கு உங்கள் பயண கட்டுரை ஒரு வித திருப்தி ...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சத்ரியன் said...
//செவ்வரத்தை மரங்களும் ஒரு விதமான பற்றை மனதில் உண்டாக்கி விட்டன..//

ஜெஸ்ஸியக்கா,

எங்கள் மனதிலும்தான் உண்டாக்கி விட்டன.

மீதியை சீக்கிரம் தொடருங்கோ....//...

வாங்கோ சத்ரியன். சீக்கிரம் தொடர்கிறேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/.sakthi said...
உலகம் சுற்றும் ஜெஸ்
என சீக்கிரம் புத்தகம் வெளியிடலாம்
போங்க.
வாழ்த்துக்கள் உங்கள் இனிமையான
பயணக்கட்டுரையை தொடருங்கள்
காத்திருக்கின்றோம்!!!//

என்ன சக்தி ? கிண்டலா? ஏதோ வகையில் புத்தகம் வெளி விடாமல் என்னை நீங்கள் விடப் போவதில்லை என்று மட்டும் தெரிகிறது.
அதிக நாட்கள் காத்திருக்க விட மாட்டேன். தொடர்கிறேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/ நட்புடன் ஜமால் said...
புஜிபா பே (சொல்லவே அழகாயிருக்கு)

ரொம்ப அழகாயிருக்கு,

பார்க்க இயலாத என் போன்றோருக்கு உங்கள் பயண கட்டுரை ஒரு வித திருப்தி ..//

வரவுக்கு நன்றி ஜமால்.இப்போதானே ஆரம்பித்திருக்கேன். மோல்டா அழகாய் அடுத்த பதிவில் தான் முழுமையாய்க் காணப் போகிறீர்கள்.அப்புறம் சொல்லுங்கள்.

மயாதி said...

எப்படி சுகம்?

இப்படியே உலகம் சுற்றி திரியுறீங்கள் எப்ப இலங்கைப் பக்கம்?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மயாதி said...
எப்படி சுகம்?
இப்படியே உலகம் சுற்றி திரியுறீங்கள் எப்ப இலங்கைப் பக்கம்?

//
நல்ல சுகம் மயாதி. இலங்கைப் பக்கம் வரும் பொது இரகசியமாய் வந்து போவேன்.
அப்படி நிலைமை தமிழனுக்கு.

Anonymous said...

hmmmm peru moochu ondru velipadugirathu....un kannil nanum ulaa vanthen ingellam.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு ஜெஸ்வந்தி மேடம்.. உங்க பயண அனுபவம் இங்கெல்லாம் போய் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆவலை தூண்டுகிறது..

தொடருங்கள்.. ஆவலுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

ராமலக்ஷ்மி said...

தொடருங்கள்.

Mahi_Granny said...

பின்னால் எப்போதாவது மால்டா போகும் போது தங்களின் பயணக் கட்டுரை உதவியாக இருக்கும். நன்றாக எழுதுகிறீர்கள் . வாழ்த்துக்கள் ஜெஸ்ஸி .

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தொடருங்கள்..தொடர்கிறோம்!!

தேவன் மாயம் said...

ஊஹும்! ஒத்துக்க மாட்டேன்!! எங்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு நீங்கமட்டும் டூரா!!!

தேவன் மாயம் said...

மால்டா ஸ்டாம்புகள்தான் கையில் உள்ளன!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

டாக்டர் தேவா நான் மோல்டா விலிருந்து அனுப்பிய மடல்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. நிச்சயம் நீங்களும் அங்கே போய்ப் பாருங்கள். இன்று இரண்டாவது பகுதி எழுதி விட்டேன்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தமிழரசி
--------
பெரு மூச்சு விட வேண்டாம் தமிழ். என் பதிவுகள் படித்த பின்னர் நேரில் பார்த்த மாதிரி உணர்வு வர வேண்டும் என்று பல படங்கள் எடுத்து வந்தேன். மீதியைத் தவறாமல் படித்து விடு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி ஸ்டார்ஜன் .
நன்றி ராமலக்ஷ்மி .
நன்றி ஆரண்யநிவாஸ் .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//Mahi_Granny said...
பின்னால் எப்போதாவது மால்டா போகும் போது தங்களின் பயணக் கட்டுரை உதவியாக இருக்கும். நன்றாக எழுதுகிறீர்கள் . வாழ்த்துக்கள்//

நன்றி. அதுமட்டுமல்ல உங்களை அங்கே போக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுதுகிறேன்..

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT!PLEASE WRITE MORE!