இந்த இடுகையில் ஆயுள் கெட்டியான பெயர்பெற்ற ஓக் ( Oak) மரத்தைப் பற்றி எழுதுகிறேன். இதில் விசேடமென்னவென்றால் இந்த மரத்தில் கிட்டத்தட்ட 600 இனங்கள் காணப் படுவதால் நாட்டுக்கு நாடு இவை உருவத்தில் வேறுபட்டுக் காணப் படுகின்றன. இந்த மரம் பண்டைக் காலத்தில் ஐரோப்பியக் காடுகளை ஆக்கிரமித்து இருந்துள்ளன .ஆனால் மற்றைய கண்டங்களில் பரவலாக சிறிய எண்ணிக்கையில் காணப் பட்டுள்ளன.
மேலுள்ள நாணயங்கள் பிரித்தானியாவைச் சேர்த்த ஒன்பது பென்சும் , அமெரிக்க ஷிலிங்ஸ் என்பனவாகும்.
The King Oak – Denmark
டென்மார்க்கிலுள்ள இந்த மரத்தின் வயது சுமார் 1500-௨௦௦௦ எனக் கணக்கிடப்பட்டுள்ளது . ஐரோப்பாவிலுள்ள மிக வயதான மரமாக இது கருதப் படுகிறது. இதனைச் சுற்றி வளரும் சில உயரமான மரங்கள் இதற்கு நிழலை ஏற்படுத்துவதால் சிறுகச் சிறுக இந்த மரம் பட்டுக் கொண்டிருக்கிறது.
Angel Oak
இந்த மரம் அமெரிக்காவிலுள்ள ஜோஹ்ன்ஸ் தீவொன்றில் (Johns Island) காணப்படுகிறது. 1500 வயதுள்ள இந்த மரம் 65 அடி உயரமும் 17000 சதுர அடி நிலப் பரப்பை மூடும் வகையில் பரந்து வளர்ந்துள்ளது.
Bowthorpe Oak
இந்த பௌதொர்ப் ஓக் மரம் இங்கிலாந்தில் லின்கோன்ஸயர் என்ற இடத்தில் காணப் படுகிறது. இதன் வயது 1000 க்கு மேல் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் தண்டினுள் உண்டான கோறையினுள் இருக்கைகள் பொருத்தப் பட்டு சுமார் 20 பேர் அமரக் கூடிய போசன கூடமாகப் பாவனையில் இருந்துள்ளது. ஆனால் இப்போ பராமரிக்கப் படாமல் ஆடுகளுக்கும் கோழிகளுக்குள் புகலிடமாக இருக்கிறது. இந்த மரம் கிண்நேஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Major Oak of Sherwood Forest England, UK
இந்த பாரிய மரமும் இங்கிலாந்தில் இருக்கிறது. 52 அடி உயரமும், 32 அடி சுற்றளவும் கொண்ட இந்த மரம் 800-1000 வயதுடையது எனத் தெரிகிறது. சரித்திரத்தில் ராபின் ஹூட் (Robin Hood ) எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக இந்த மரத்தின் தண்டினில் காணப்படும் கோறையில் ஒழிந்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
கிரௌச் ஓக் ( Crouch Oak)இதன் வயதும் 1000 க்கு மேல் என்று தெரிகிறது. விசேடமென்னவென்றால் இந்த மரம் என் வீட்டருகில் இருக்கிறது.தினமும் காலையும் மாலையும் இதனைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். என்னையறியாமல் அதனைப் பார்த்துப் பிரமிக்கிறேன்.தினமும் அதே ஆர்வத்துடன் பார்க்கிறேன். சற்றுக் காற்றடித்தால் காணும் .அதற்கு ஊன்றுகோல் கொடுத்து சுற்றிவர ரிப்பன் கட்டி அருகில் எவரும் போக விடாமல் செய்வார்கள்.- இந்தப் பாரிய மரம் சரிந்தால் உயிரிழப்புப் பெரிதாக இருக்கும் என்பதால்தான். இதனிலும் ஒரு கோறையுண்டு.
Jurupa Oak
ஜூருப்பா ஓக் மரம் கலிபோனியாவில் காணப் படுகிறது. இதன் வயதை அறிந்தால் பிரமித்துப் போவீர்கள். 13000 வருடங்கள் இந்த மரம் அந்த இடத்தில் இயற்கைப் பதியத்தால் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மரம் ice age காலத்திலிருந்து இருக்கிறதாம். இதுதான் உலகத்தில் மிக வயது கூடிய மரமாகும்.
Chaple Oak tree - பிரான்ஸ்
இந்த மரம் மிகவும் பிரசித்தமானது. கதைகளில் வரும் கற்பனை போல வடிவமைப்புடன் உல்லாசப் பயணிகளை ஈர்க்கின்றது.
இந்த மரத்தின் கோறையினுள் இரண்டு கோவில்கள் அமைக்கப் பட்டுள்ளன.மரத்தைச் சுற்றிச் செல்லும் ஏணிப் படிகள் இந்தக் கோவில்களுக்கு இட்டுச் செல்கின்றன. வியக்க வைக்கும் இந்த மரம் நெப்போலியன் காலத்திலிருந்து இருப்பதாகவும் அதைவிடப் பழமையானதுமாகும்.1600 ஆம் ஆண்டில் ஒரு மின்னல் தாக்கியதால் இந்த மரத்தினுள் கோறை உண்டானாலும் மரம் உயிர் தப்பியது. அதுவே பின்னர் கோவிலாக மாற்றப் பட்டது.இப்போ மரத்தின் ஒரு பகுதி பட்டுப் போனாலும் ,அந்தப் பகுதி மரச் சிலாகைகளால் மறைக்கப் பட்டு, வருடத்திற்கு இருமுறை இந்தக் கோவிலில் மேரி மாதாவின் திருநாள் கொண்டாடப் படுகிறது.
இன்னும் எழுதிக் கொண்டே போகத் தோன்றினாலும், பதிவு நீண்டுவிடக் கூடாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
இசைப் பிரியர்களுக்காக Oak tree சம்பந்தமான ஒரு பாடலை இங்கே இணைத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=x4NQz-qxEbk&feature=ரேலடேத்.
18 comments:
பல வகையான ஓக் மரங்கள் குறித்த அரிய தகவல்களை அறிய முடிந்தது. மிகவும் ப்ரியத்தனப்பட்டு தகவல்களை சேகரித்துள்ளீர்கள்.
very nice...... இதுலேயே PH.D. பண்ணலாம் போல.
அரிய தொகுப்பு...
பகிர்வுக்கு நன்றி சகோதரி...
நல்ல தகவல்கள்
அபூர்வமான நாங்களாகத் தேடிப் பார்க்கமுடியாத தொகுப்பு ஜெஸி.நன்றி நன்றி.
ஜெஸ்..!
வழக்கம் போல் அரிய தொகுப்பு
விரிவான விளக்கங்களுடன்
என்ன ஜெஸ் இப்படி கிளம்பிடீங்க? :-)
ஒரே மூச்சில் மூன்று பகுதிகளையும் வாசித்தேன் மக்கா.
ஊரில் இருந்த நிறைவு.
உங்கள் தேடலில்...இப்படி விருஷ்சமா?
ரொம்பதான் ஓய்வுபோலும்!
ஜெஸி வியக்கும் புதினம் அருமை
பார்கும் போது மரத்தடியில் பாய் போட்டு,
அசைந்தாடும் காற்றைச் சுவாசித்து,
தனிமையில்,...இனிமை காணவேண்டும்
போல் இருக்கிறது.
உங்கள் பிரயாசத்துக்கு என் நன்றிகள்
ஜெஸி
நல்ல தொடர்..ஜெஸ்வந்தி
//இதன் வயதை அறிந்தால் பிரமித்துப் போவீர்கள். 13000 வருடங்கள்//
உண்மையாகவா? இவ்வளவு காலம் ஒரு மரம் வாழ முடியுமா? மிகவும் ஆச்சர்யம்!! இறைவன் படைப்பு விந்தையானதுதான்!!
நல்ல உழைப்பு
அருமைங்க , எங்க புடுச்சிக இந்த விவரங்கள ?
GREAT! PLEASE WRITE MORE ABOUT PEOPLE...STORIES! YOU ARE THE BEST!
இது ஒரு அதிசய மரம்தான். இறைவனின் படைப்புகளில் இதுவும் ஓன்று.
அறிய தந்த அரிய தகவல்களுக்கு நன்றி. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் மரம விழாது வாழட்டும்
ஆஹா..படிக்கப் படிக்க மிகுந்த ஆவலைத் தூண்டுகிறது.. அருமையான படைப்புகள்.. எல்லாத்தையும் பொறுமையாகப் படிக்கிறேன்..
நன்றி..
உங்களின் இந்த தொடர் இன்றைய காலகட்டதிற்கு அவசியம் தேவை. படங்கள் மெருகூட்டுகின்றன. இம்முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்கள்
ஆவலுடன் படித்தவர்களுக்கும் கருத்திட்டு ஊக்கம் தந்த அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். விடுமுறை காரணத்தால் உடன் கருத்திட முடியவில்லை. மன்னிக்கவும்.
Post a Comment