கிழுள்ள படத்தில் இதன் தோற்றத்தைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட 8 -12 அடி வரை விட்டமுள்ள தண்டுடன் 300 அடிக்கு மேல் உயர்ந்து வளர்கின்றன. இந்த அசாதாரண உயரத்தினால். வேர்களினால் உறுஞ்சப் படும் நீர் உச்சிவரை செலுத்தப் படுவதில்லை. இதன் உச்சியில் காணப் படும் ஊசி முனைகள் அங்கே படியும் பனியைத் தேக்கி வைத்து உறிஞ்சும் தன்மையுள்ளன. இதனால் பனி கொட்டும் பிரதேசங்களில் தான் இந்த மரங்கள் பெருகிக் காணப் படுகின்றன. 20 வீதம் விதைகளாலும், 80 வீதம் இயற்கைப் பதியத்தாலும் இவை இனத்தைப் பெருக்குகின்றன.
உலகில் மிக உயரமான மரங்கள்
Photo source
இந்த மரங்களில் சில டைனசோ இருந்த காலங்களிலிருந்து உயிர் வாழ்கின்றன. உலகில் பல இடங்களில் காணப் பட்டாலும் சில பாரிய ,பழைய மரங்கள் கலிபோனியாவிலும்,நெவேடா மலையடிகளிலும் , சீனாவிலும் காணப் படுகின்றன.
இந்த மரத்தின் பட்டை மிகத் தடிப்பானது.நெருப்பினால் அழியாதவண்ணம் ஒரு கவசம் போல் இது காக்கின்றது.தண்ணீராலும் இந்த மரங்கள் இலகுவில் உக்கிப் போவதில்லை. இந்தப் பட்டையின் சுவை பூச்சிகளினால் விரும்பப் படாததாகவும் , நச்சுத் தன்மையுள்ளதாகவும் இருப்பதால், இந்த மரம் பூச்சிகளினால் பாதிக்கப் படுவதில்லை. இதனால் தளபாடங்கள் செய்யவும், விசேடமாக கட்டட வேளைகளில் விரும்பிப் பாவிக்கப் படுகிறது. அமிலங்களைத் தாங்கக் கூடிய சக்தியுள்ளவை என்பதால், 1930-1960 கால கட்டத்தில் ஆகாய hவிமானங்களில் battery களில் இவை பாவிக்கப் பட்டனவாம்.
ஜெனரல் சேர்மன் ( General Sherman)
இந்த மரத்தின் பரிமாணங்களையறிய மேலுள்ள படத்தை அழுத்திப் பெரிதாக்கலாம்.
இந்த மரம் அமெரிக்க போர் வீரர் வில்லியம் சேர்மன் ( William Sherman) என்பவரின் நினைவாகப் பெயரிடப் பட்டதாம். உலகத்தின் மிகப் பெரிய மரமென்று ( மிக உயரமான மரமல்ல) கின்னஸ் உலகப் பதிவில் தனக்கென இடம் பிடித்துக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு இதன் பாரிய கிளையொன்று முறிந்து விழுந்து விட்டது. ஆனாலும் இந்த இழப்பின் பின்னரும் இது தான் உலகின் மிகப் பெரிய
மரமாகப் பெருமையுடன் நிற்கிறது.
வாவோன மரம் ( Wawona Tree)
இந்த Redwood மரம் கலிபோனியாவில் யோசெமிட் பூங்காவில் இருந்தது. இதன் தண்டு 90 அடி சுற்றளவும் 315 அடி உயரமாகவும் இருந்தது. 1881 ஆம் ஆண்டு இந்த மரத்தின் பாரிய தண்டுகளில் குகைகள் தோண்டப் பட்டு அதனூடாக வாகனங்கள் செல்லக் கூடிய பாதைகள் அமைக்கப் பட்டன. இது உல்லாசப் பயணிகளை பெருமளவில் ஈர்த்ததனால் , பல்லாயிரக் கணக்கானவர்கள் ,கால் நடையாகவும் தங்கள் வாகனங்களிலும் இந்தக் குகையைக் கடந்ததை பெருமையுடன் புகைப் படமாக்கினார்கள். குதிரை வண்டிக் காலத்திலிருந்து நவீன வாகனங்கள் வரை பல விதமான வாகனங்கள் இந்த மரத்தினுடாகப் பயணித்து விட்டன.
Wawona Tree
Source
ஆனால் 1969 ஆம் ஆண்டு கொட்டிய கடும் பனியில்
(snow) 2 தொன் பனி இதன் உச்சியில் தேங்கியதால் அதன் பாரத்தைத் தாங்க முடியாததாலோ என்னவோ இந்த மரம் சாய்ந்து விட்டது. அப்போது அதன் வயது 2300 வருடங்களாகும்.
உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் இதைப் போன்று இயற்கை வனப் பூங்காக்களில் ,ஒரு சில Redwood பாரிய மரங்களில் குகைகள் அமைக்கப் பட்டன. அவையும் பிரசித்தமானவை. இந்தக் குகைகள் தோண்டிய பின்னரும், இந்த மரங்களின் ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படாதது மிகவும் விசித்திரமானது. ஆனால் இப்போது புதிதாக இந்த மரங்களில் குகை அமைப்பது சட்டப் படி தடுக்கப் பட்டு விட்டதால் ஏற்கெனவே அமைக்கப் பட்ட குகைப் பாதைகள் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கின்றன.
Shrine Drive Thru Tree
Shrine Drive Thru Tree
Source
Tour Thru Tree
Tour Thru Tree
Source
Chandelier Drive Thru Tree
உலகப் பிரசித்தமான மர வீடு
இது 4000 வருட வயதுள்ள redwood தண்டின் அடியில் குடையப் பட்டு அமைக்கப் பட்ட அறையாகும். இந்த மரத் தண்டு 33 அடி விட்டத்தையும் 250 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த அறையினுள் சென்று சரித்திரத்தில் தங்கள் பெயரையும் பதித்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். துரதிஷ்ட வசமாக சில வருடங்களுக்கு முன் இந்த மரம் விழுந்து விட்டது.
இறப்பில்லாத மர வீடு ( Eternal Tree house)
கலிபோனியாவில் ரெட்கிருஸ்ட் என்னும் இடத்தில், ஒரு இறந்த ரெட்வூத்( redwood) மரத்தின் தண்டின் அடிப் பகுதியில் இந்த வீடு அமைக்கப் பட்டது. இப்போ இது அழகான ஒரு போசன சாலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் உட்புற அழகைப் படத்தில் பாருங்கள்.
இந்த மரத்தின் வேர்களில் இருந்து உருவாகிய புதிய மரங்கள் பழைய தண்டைச் சுற்றி வளர்ந்து விட்டதால் இறப்பில்லாத மரம் எனப் பெயரிடப் பட்டது.
Eternal tree house- Entrance
Eternal Tree House- Internal view
.

34 comments:
மிக அருமையான பகிர்வு ஜெஸ்வந்தி. படங்களுக்கும் விவரங்களுக்கும் மிக்க நன்றி.
நல்ல தகவல்கள் கொண்ட பதிவு. புகைப்படங்களும் மிக அழகு. பகிர்வுக்கு நன்றி.
http://anewworldeveryday.blogspot.com/
ரெட் உட் பற்றிய தகவல்கள் படங்கள் மிகவும் நன்றாகவும் அழகாகவும் உள்ளன.
மரங்கள் எல்லாமே மற்றவர்களுக்காக இறைவனால் படைக்கப்பட்டவை.
வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், பழம் , கொட்டை, இலை உதிர்ந்தாலும் சருகு, என
எல்லா பாகங்களும் மனித உப்யோகத்திற்கு உதவுகின்றன.
மனிதர்களே மரங்களாக வாழுங்கள். அவை தான் கொடுப்பதற்காகவே பிறவி எடுத்தவை என்று
அறிஞர் ஒருவர் கூறுகிறார்.
இருக்கட்டும். உலகத்தின் பத்து முக்கியமான மரங்களைக்காண இங்கு செல்வீர்களா ?
உங்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ( இதுவரை பார்த்திருக்காவிடின் )
சுப்பு ரத்தினம்.
http://anewworldeveryday.blogspot.com
Please also visit
http://movieraghas.blogspot.com
I wish I could visit the "tree-house"....... awesome photos and information. :-)
ராமலக்ஷ்மி
ஆர்வத்துடன் படித்து முதன் முதலாகக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி தோழி.
@செ.சரவணக்குமார்
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! நான் ரசித்த விடயங்களை உங்களுடன் பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே.
மீண்டும் ஜெஸியின் இரண்டாவது மர அதிசயம்ன்னு சொல்லணும்.
அவ்வளவு அதிசயமா இருக்கு ஜெஸி.உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக் கண்டிப்பாச் சொல்லவேணும்.நேரில பார்க்கமுடியாட்டியும் அறியத் தாறதே பெரிய விஷயம்.நன்றி ஜெஸி.
@@@ ஹேமா--//மீண்டும் ஜெஸியின் இரண்டாவது மர அதிசயம்ன்னு சொல்லணும்.
அவ்வளவு அதிசயமா இருக்கு ஜெஸி.உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக் கண்டிப்பாச் சொல்லவேணும்.நேரில பார்க்கமுடியாட்டியும் அறியத் தாறதே பெரிய விஷயம்.நன்றி ஜெஸி.//
நா சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க ரெண்டு பேருக்கும் பாராட்டுக்கள்.
இண்ட்-ரெஸ்ட்டிங் இடுக்கை.
-------------
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த வெள்ளை பூக்கள் கொண்ட மரம் எதுனா இருந்தா சொல்லுங்களேன்.
நல்ல பகிர்வு தோழி.
நிறைய செய்திகள் கோர்த்து அளித்து இருக்கிறீர்கள். நன்றி.
interesting jeswanthi... thanks for sharing.. :)
@ சுப்பு ரத்தினம்.
http://anewworldeveryday.blogspot.com
கருத்துக்கு நன்றி நண்பரே. நீங்கள் எழுதியதைப் படிக்க ஆவலுடன் உங்கள் தளத்தில் தேடினேன். மரங்கள் பற்றிய பதிவைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தயவு செய்து சரியான லிங்க் தாருங்கள். எனக்கு இந்த விடயங்களில் மிகவும் ஆர்வமுண்டு.
@ சித்ரா
எனக்கும் அதே ஆசை தான் சித்ரா. நான் போவதற்கிடையில் அதற்கு எந்த அழிவும் வரக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.
@ ஹேமா
வாங்க ஹேமா. என்னைப் போல நீங்களும் இந்த மரங்களைப் பற்றி ஆவலோடு அறிவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இங்குள்ள redwood மரங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை இத்தனை உயரமானவையல்ல. இவற்றையெல்லாம் ஒரு நாள் நேரே பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டு.
@ ஜெய்லானி
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.
@ ஜமால்
வாங்க ஜமால். விரும்பிப் படித்தீர்கள் என்று அறிய மகிழ்ச்சி.
எந்த மரத்தை மனதில் வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.. இந்தியாவுக்குக் கொண்டு வரப் பட்ட மரங்களில் Almond தான் மிகவும் அற்புதமான மரம். வெள்ளைப் பூக்களையும் கொண்டுள்ளது. வேறு எதுவும் உண்டா?
@ அம்பிகா
வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி தோழி.
@ கலகலப்பிரியா
கருத்துக்கு நன்றி பிரியா.
http://www.neatorama.com/2007/03/21/10-most-magnificent-trees-in-the-world/
please visit here to see the magnificent trees.
subbu rathinam
http://movieraghas.blogspot.com
அருமை.
தொடர்ந்து அசத்தவும்! :))
//அமிலங்களைத் தாங்கக் கூடிய சக்தியுள்ளவை என்பதால், 1930-1960 கால கட்டத்தில் ஆகாய hவிமானங்களில் battery களில் இவை பாவிக்கப் பட்டனவாம்.//
சுவாரசியமான தகவல்கள் ஜெஸ்வந்தி!!
அது ஏன் இந்த மரங்கள் பெரும்பாலும் அமெரிக்காவிலேயே இருக்கின்றன என்பதற்கும் ஒரு விசேஷ காரணம் இருக்கலாம். பொதுவே ஆப்பிரிக்க, ஆசியக் கண்டங்கள்தான் தொன்மை வாய்ந்தவை என்று சொல்லப்படுபவை இல்லியா?
ஜெஸி முதலில் நன்றி “அதற்கு”
மனிதர் தேடல்கள் முடிந்து மரங்கள்
தேடுகின்றீர்களா?நல்ல இயற்கை ரசிகை
எனக்கும் இயற்கை அதிசயங்கள்
பார்க்கப்,படிக்கப் பிடிக்கும்.
ரொம்பச் சிரமப்பட்டுத் தேடினீர்களா?
தெரியாதவைகளை ஐந்து நிமிடத்தில்
அறிய வைத்தமைக்கு நன்றிடா
செல்லம்.
எல்லோரும் நலமா?
அட.. மரங்கள் பற்றி இத்தனை விவரங்களா.. படிக்க ஆர்வம் தரும் விதமாய் எழுதிய விதம் அருமை..
@ சுப்புரத்தினம்.
லிங்க் தந்ததற்கு நன்றி நண்பரே.
@ ஷங்கர்
தொடர்ந்து படிப்பதற்கு நன்றி ஷங்கர்.
@ ஹுஸைனம்மா
வாங்க தோழி. அதிகமான பாரிய மரங்கள் , விசேடமாக redwood அமெரிக்காவில் இருப்பதற்குக் காரணம் சுவாத்திய நிலைமைதான். பனிப் பிரதேசங்களில் வளரும் போது இவை மிக விரைவாக வளர்கின்றன. அமேசன் காடுகளில் இன்னும் மனிதன் அறிந்து கொள்ளாத ( பெயர் வைக்காத ) எத்தனையோ வகையான இனங்கள் இன்னும் இருக்கின்றனவே!
@ ரிஷிபன்
இந்த மரங்களே அதிசயமானவை நண்பரே. நான் விபரங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன் . அவ்வளவு தான். தொடர்ந்து வாருங்கள். நன்றி.
கலா nanri
@ கலா
வாங்க கலா. கருத்துக்கு நன்றிடா.பலனை எதிர்பாராமல் இத்தனை வருடங்களுக்கு அசையாமல் நின்று பலன் தரும் மரங்கள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டாமா.?
இந்த ரெட்வூத் மரத்தை நான் இங்கிலாந்தில் பார்த்தேன். நான் பார்த்த மரத்தின் வயது 375 .
மிகச் சிறப்பான பதிவு. படங்களைப் பார்த்து வியந்து போனேன்.
Thanks for your comments Doctor Murugananthan.
சான்சே இல்ல மிக அருமையான பதிவு மற்றும் அருமையான collection வாழ்த்துக்கள் தொடருங்கள்...
ப்ரமாதம்.. எக்ஸலண்ட்.. எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அருமையான பதிவை ஜெஸ்... கீப் கோயிங்...
அருமையான பகிர்வு. பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
படிக்கப் படிக்க அங்கேயே போய் ஒவ்வொரு மரத்தையும் நேரில் பாத்த உணர்வு.. நன்றி..
Post a Comment