அடுத்த நாள் காலை நாங்கள் மோல்டாவுக்கும் கோசொவிர்க்கும் இடையில் இருக்கும் சிறிய கொமினோ தீவுக்குப் படகில் பயணம் செய்யத் தீர்மானித்திருந்தோம். அந்தத் தீவின் மொத்தப் பரப்பு 1. 35 சதுர மைல்கல் தான். அங்குள்ள நிரந்தர வாசிகள் நான்கு பேர் தானாம் . ஒரு போலிஸ் காரரும் , ஒரு பாதிரியாரும் தங்கள் சேவையை வழங்குவதற்காக உல்லாசப் பயணிகள் வரும் அந்த ஆறு மாதங்களில் மட்டும், கோசோ தீவிலிருந்து தினம் பயணிக்கிறார்களாம். அங்குள்ள ப்ளு லகுன் (Blue Lagoon) என்னும் கடற்கரை மிகவும் பிரசித்தமானது. பல குடாக்களிளிருந்து கொமிநோவிற்கு படகுகள் செல்கின்றன. எங்கள் ஹோட்டல் மேனேஜர் , அங்கே கூட்டம் சேர்வதற்கு முன்னர் போய் சேர்வதற்கு ஒரு டிப்ஸ் தந்தார். உல்லாசப்
பயணிகள் சுமார் 100 பேரை ஏற்றக் கூடிய பெரிய கப்பல்களில் பயணிப்பதாகவும்,அவை குறித்த நேரத்தில் மட்டும் புறப்படும் என்றும் ,அதனால் அதற்கு முன்பாக சிறிய நீர் படகுகளில் ( வாட்டர் டாக்ஸி ) சென்றால் வசதியாக இடம் பிடிக்கலாம் என்றும் சொன்னார். அதிலிருந்து அங்கே உல்லாசப் பயணிகள் குவியப் போகிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டோம்.
அவரது அறிவுரை வீண் போகவில்லை. நாங்கள் அங்கே சேர்ந்தபோது ஒரு சிலரே அங்கிருந்தார்கள். சுமார் இருபது நிமிடப் பயணம் தான். அங்கிருந்து கோசோ கரையையும் பார்க்க முடிந்தது. கடற்கரை தெரியாத படி சாய்வு நாற்காலியைப் பரப்பி விட்டிருந்தார்கள். ஒரு ஆசனத்துக்கு பத்து ஈரோ என்றபடி அறவிட்டுக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த ஒரு மலை உச்சியில் ஒருவர் கடை போட்டிருந்தார். சுடச் சுட உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். இந்தப் பணத்தில் தான் அவர்கள் அந்தத் தீவில் வருடம் முழுக்க இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டோம். கீழே வரும் படங்கள் உங்களை அங்கே நேரை அழைத்துச் செல்லும் என்று நினைக்கிறேன்.
காலை பத்து மணியளவில் ,கடற்கரை நிறைந்து விட்டது என்று சொல்லலாம்.எல்லா ஆசனங்களும் போய் பலர் கொதிக்கும் பாறைகளில் தங்கள் உடையைப் போட்டு அதன் மேல் படுத்திருந்தார்கள். கடலை ஒட்டி இருந்த பாறைத் தொடர்களும் அவை இயற்கையாகவே அமைத்துத் தந்த குடாக்களும்,நீல நிற நீரும், பொன்னிற நுண்ணிய மணலும் தாங்கள் தான் இந்தப் பிரதேசத்தின் பிரசித்தத்துக்குக் காரணம் என்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன.
நேரம் போனது தெரியாமல் போனது. அவர்கள் தாயரித்த உணவும் அற்புதம். நான்கு மணிபோல் தீவைச் சுற்றிக் காண்பித்து பின்னர் எங்களை மொல்டாவுக்குக் கொண்டு செல்லும் ஒரு வாட்டர் டாக்சியில் ஏறினோம். அது விரைந்து போனபோது தெளித்த நீர் எங்களை நனைத்தது. கடலின் நடுவில் ஆங்காங்கே தெரியும் பாறைகளும், அவற்றில் காணப் படும் குகைகளும் ஏராளம். ஒவ்வொரு குகை முன்னும் படகுகளை சில நிமிடம் நிறுத்தி படமெடுக்க உதவினார்கள்.
10 comments:
இடமும் புகைப்படங்களும் மிக அருமை
அந்த குகை அனுபவம் நினைச்சி பார்க்கவே ஒரு மாதிரியாத்தான் இருக்கு
ஒரு போட்டோ விண்டோஸில் வரும் வால்பேப்பராட்டம் இருக்கு (குகை)
படங்கள் அசத்தல்..!
படங்களும் விளக்கமும் அருமை
நான் எழுதியதை விட படங்கள் உங்களுக்கு கதை சொல்லியிருக்கும் என்று நம்புகிறேன். உண்மையைச் சொன்னால் என் வாழ்வில் இந்த அனுபவத்தை மறக்க முடியாது.
...wow!!! Superb!!! You are indeed blessed to be there. :-)
குகை சூப்பரா இருக்கு
இந்த இனிய பயணத்தில் என்னோடு தொடர்ந்து பயணிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.
ரொம்ப நல்லா இருக்கு, இப்பயணம்!
"இனியதொரு பயணம்"
நானும் பயணித்தேன்.
தீவை பார்க்கனும் என்ற எண்ணத்தை உருவாக்கியது உங்கள் பதிவு. புகைப்படங்கள் ஆர்வத்தை கூட்டியது
Post a Comment