
சில மாதங்களின் முன் இங்கிலாந்திலுள்ள நோர்த் வேல்ஸ் என்ற இடத்திற்குப் போய் ஒரு வாரம் தங்கியிருந்தேன். மிகவும் ரம்மியமான அந்தப் பயணத்தில் எனக்குப் பிடித்த சில காட்சிகளை உங்களுடன் பகிர்வதற்காகப் படம் பிடித்தேன்.இன்றுதான் அவற்றைத் திரும்பிப் பார்க்கும் நேரம் வந்துள்ளது. லண்டனிலிருந்து சுமார் ஐந்து மணி நேரப் பயணம். படத்தில் சிகப்பு நிறத்தில் குறித்துக் காட்டியுள்ளேன். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பார்த்த போது தெரிந்த பச்சைப் பசேலென்ற காட்சியை கீழே பாருங்கள்.
தினமும் அருகிலுள்ள கடற்கரைக்கு மண் மேட்டினூடாக ஆள் உயரத்துக்கு வளர்ந்து நின்ற புல்லுக்கூடாக நடந்து சென்றது ஒரு புதிய அனுபவம்.
மலையும் கடலும் அருவியும் சேர்ந்து இந்தப் பகுதியை உல்லாசப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாக்கியிருக்கின்றன. மௌன்டைன் ரயில்வே (Mountain railway) மலைகளைச் சுற்றிச் சுற்றியோடி 3560 அடி உயரத்துக்குக் போகின்றது. மலையுச்சியிலிருந்து தெரியும் காட்சி மெய் மறக்க வைக்கின்றது.
மேலேயுள்ள படத்தில் ரயிலில் போகும்போது தெரிந்த( bronze mine )
உலோகமெடுக்கப் பட்ட சுரங்கமொன்றைப் படமாக்கினேன்.
கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் வெள்ளிக் கோடுகளாய்த் தெரிந்த அருவிகள்.
எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆங்காங்கே தெரிந்த பழைய அரச கோட்டைகள் ( castles)
கோன்வி கோட்டையை மட்டும் தான் அருகில் போய்ப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தக் கோட்டை எட்வர்ட் நம்பர் ஒன் அரசனால் 1283 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டதாம். அதற்கு முன்னால் நின்ற என் பெண்ணையும் பாருங்கள்.
கோன்வி கோட்டையை மட்டும் தான் அருகில் போய்ப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தக் கோட்டை எட்வர்ட் நம்பர் ஒன் அரசனால் 1283 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டதாம். அதற்கு முன்னால் நின்ற என் பெண்ணையும் பாருங்கள்.
பல மைல்களுக்கு நீண்டுள்ள சுனோடோனியா ( Snodonia) மலைத்தொடர் இந்தப் பகுதியில் பிரசித்தமானது.
பல நீர் வீழ்ச்சிகளிருந்தாலும் இந்த swallow falls மிகவும் ரம்மியமானது. ல்லுக்வி ( Llugwy) என்ற அருவி மலைகளினூடாகவும் அடர் காட்டினூடாகவும் ஓடிப் பாய்வது ஒரு கண் கொள்ளாக் காட்சி.

இந்தப் பிரதேசத்தில் அழகைச் சுற்றிப் பார்க்க ஒரு வாரம் காணாதென்பது அங்கு போனபின்பு தான் தெரிந்தது. அடுத்த தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
.
32 comments:
படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி ஜெஸ்வந்தி.
படங்களும், இடமும் கொள்ளை அழகு...
WOW! It is an awesome place. Thank you for the photos and the blog article about it.
படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..
அது சரி இது நெட்டில சுட்ட படம்தானே ?
கண்ணுக்கு விருந்து...ம்ம்ம்ம் நல்லா சுத்தறீங்க போல.....என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்...
படங்கள் சூப்பர்....
நீர் வீழ்ந்து ஓடுவதை பார்க்கையில் மிக அழகாக இருக்கின்றது - இப்படி ஒரு காட்சி நேரடியாக கண்டு பல காலமாயிற்று
நன்றி ஜெஸ்வந்தி.
ம்ம்ம்ம்ம்ம...எல்லாம் அழகாகத்தான்
இருக்கின்றது! என்றாலும் ..அழகு
குறைகிறது. கொஞ்சம் ஒரு ஓரத்தில்
நின்று உங்கள் மதிவதனத்தைக் காட்டிருந்தால்
இன்னும்,இன்னும் அழகு கூடியிருக்கும்.
ம்மம்ம்ம்மம கொடுத்து வைக்கவில்லை..
அந்த இடம். பாவம்!!
என்னையும் அழைத்திருந்தால்
வந்திருப்பேனல்லவா!
அழகான காட்சிகள் நன்றி ஜெஸி.
இனிமையான புகைப்படங்கள்.. ஊட்டியை சுற்றியுள்ள சில இடங்கள் இப்படி உள்ளன. தமிழில் அருமையா அருவி என சொல்வதை நீர் வீழ்ச்சி என சொல்லவேண்டாம். ஒரு இடத்தில் மட்டும் அருவி என குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
அழகான படங்கள்
தற்போதைய பொருளாதார மந்த இறுக்க சூழ்நிலையில் உள்ள மனங்களை இளக செய்த இயற்கை புகைப்படங்கள்... பச்சை பசேல்... அருமையான நீர்வீழ்ச்சி..
புகைப்படங்கள் தொகுப்பு மிக மிக அருமை ஜெஸ்..........
nalla itam. naangkal surripartha anupavamaaka ungkal photo ullathu.
நல்ல பகிர்வு.படங்கள் அழகு
ஜெஸி மிக மிக அழகான காட்சிகளை முக்கியமான இடங்களைக் காட்சிப்படுத்தியிருக்க்கிறீர்கள்.2005 ல் நானும் இங்கு போயிருக்கிறேன்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி சங்கவி.
நன்றி சித்ரா.
நன்றி மயாதி- நெட்டில் சுட்டது போலிருந்தால் படங்கள் அழகு என்று அர்த்தமா? இத்தனை நாள் எங்கே போனீர் நண்பரே?
நன்றி தமிழ்- இங்கே வந்தாயானால் நிச்சயம் அழைத்துப் போவேன்.
ரம்மியமான காட்சிகள்.
இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை படமாக பார்க்கும்போதே ரம்மியமாக இருக்கு. நேரில் பார்த்து ரசித்த உங்களுக்கு நல்ல விருந்துதான் போங்க.
ரேகா ராகவன்.
வாவ்...எல்லா படங்களும் அருமை, அந்த மலை மேல் மூன்று பேர், படகுக் கூட்டம், இந்தப் படங்கள் ரியலி சூப்பர்.
நன்றி jailani .
நன்றி ஜமால்.
நன்றி கலா . அதெப்படி நான் படம் எடுக்கும் போது என் முகத்தையும் சேர்த்து எடுப்பது ?விரைவில் இங்கு வாருங்கள் இப்படி இடமெல்லாம் இங்கே இருக்கிறது என்று தானே சொல்கிறேன். என் பொண்ணு நின்ற படமொன்றை சேர்த்து விட்டேன்.பாருங்கள்.
நன்றி அண்ணாமலை.
நன்றி கண்மணி.
நன்றி மதுரை சரவணன்.
நன்றி மாதேவி.
நன்றி Gopi.
@மஞ்சூர் ராசா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அருவிக்கும் , நீர்வீழ்ச்சிக்கும் வேறுபாடு என்று தான் நான் நினைக்கிறேன்.மெதுவாக ஓடும் அருவிகள் ஒன்று சேர்ந்து உயரத்திலிருந்து வீழ்ந்தோடும் போது நீர்வீழ்ச்சி என்றுகுறிப்பிட்டேன்.
@ ஹேமா
வாங்க தோழி. நீங்களும் இங்கெல்லாம் போனீர்கள் என்று அறிய மிக்க மகிழ்ச்சி.
@ SUFFIX
வாங்க நண்பரே. அந்த மலைமேல் ஏறி நின்றவர்கள் என் கணவரும் பெண்களும் தான். படமெடுக்க நான் கீழே நின்றேன். உங்களுக்கு அந்தப் படம் பிடித்ததில்மகிழ்ச்சி.
ரொம்ப லேட் ஜெஸ் நான்.
மன்னியுங்கள்.அருமையான பகிர்வு.
beautiful..!
Thanks Raajaraam.
Thanks kalakalapppriya.
படங்களும் கருத்துக்களும் அருமை.
நல்லதோ கெட்டதோ உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
நல்லது - உங்க பதிவும் படங்களும்..:))
கேட்டது- இவ்ளோ லேட்டா வந்து பதிவு பார்த்தது. அதுவும் நீங்க எனக்கு பின்னூட்டம் போட்டதுக்கப்புறம் :(
நன்றி..:))
படம் எல்லாம் நல்லாத்தான்
இருக்கு ..
அது சரி இது நெட்டில சுட்ட
படம்தானே\\\\\\
அதற்கு முன்னால் நின்ற என்
பெண்ணையும் பாருங்கள்.\\\\\
சந்தேகம் தீர்ந்ததா மாயாதி??
ஹாய்...செல்லம் பெயர் தெரியாது
அதனால்.. குட்டி ஜெஸ்வந்தி
நலமா? சிரிப்பு.க்கு ஒரு முத்தம்டா!!
நன்றி அக்பர் .
நன்றி KALYANARAMAN RAGHAVAN .
நன்றி ஷங்கர் . தாமதமானால் என்ன? வந்ததற்கும் கருத்துக்கும் நன்றி.
@ கலா
ஐயோ ., மயாதிக்கு பதில் சொல்ல அந்தப் படம் போடவில்லை. கோட்டை அந்தப் படத்தில்
தான் தெளிவாக இருந்தது. என் பெண்ணுக்கு உங்கள் முத்தத்தைப் பாஸ் பண்ணிட்டேன். நன்றி சொல்லச் சொன்னாள்.
பூலோக சொர்க்கம் மாதிரி இருக்கிறது. அவ்வளவு அழகு இடம். இந்த மாதிரி இடங்கள் கூட வெளிநாட்டிலே மட்டும் இருக்கிறது பாருங்கள்.
Post a Comment