இந்தத் தொடரில் நானறிந்த சில அற்புதமான மரங்களைப் பற்றி எழுத எண்ணியுள்ளேன். இந்த இடுகையில் என்னைப் பிரமிக்க வைத்த பாவ்பாப் ( Baobab) எனப்படும் ஆயுள் கெட்டியான ,ஆனால் உலகில் மிக அரிதாகிக் கொண்டிருக்கும் மரத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
இது ஆபிரிக்கா, மடகஸ்கார் , ஆஸ்திரேலியா என்ற இடங்களுக்கு உரித்தான மரமானாலும், இந்தியாவிலும் . இலங்கையிலும் சிறிய எண்ணிக்கையில் காணப் படுகிறது. இப்போ 4o மரங்கள் இலங்கையில் மீதமிருப்பதாக அறிகிறேன். மேலே படத்தில் மன்னாரிலுள்ள இந்த மரத்தைக் காண்கிறீர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த மரம் இன்னும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதற்கு 'யானை மரம்' என்றும் ' பேரக்கா மரம்' என்றும் பெயர் உண்டு.
ஒரு சில பாரிய இந்த மரங்கள் கிறிஸ்துவுக்கு முன்பு பிறந்தவை என்பதும் ,ஒரு சில 4000, 5000 வருடங்களாக உயிர் வாழ்கின்றன என்பதையும் அறியும் போது ,வியக்காமலிருக்க முடியவில்லை.

இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்துக்கு வளரக்கூடியது. இதன் தண்டின் விட்டம் 50 அடி வரை பருமனாகக் கூடியது, அத்துடன் நேராக உருளை வடிவில் வளர்ந்து உச்சியில் கிளைகளைப் பரப்புகின்றது. வருடத்தில் ஆறு ஏழு மாதங்கள் கிளைகளில் இலைகள் உதிர்ந்து காணப் படுகின்றன. இந்த இயல்புகளினால் பார்வைக்கு ஒரு மரத்தைப் பிடுங்கி தலை கீழாக நாட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இவை தோன்றுகின்றன. மேலே படத்தில் காணப் படும் கிளைகள் பிடுங்கி எடுக்கப் பட்ட வேர்கள் போன்று தெரிவதைப் பாருங்கள். இதனால் இதற்கு( ' upside down tree') தலை கீழான மரம்' என்றும் பெயருண்டு.


பொடியாக்கப் பட்டு சூப்பைத் தடிக்க வைக்கப் பாவிக்கப் படுகிறது.
இந்தப் பொடி ஆபிரிக்காவில் கோப்பிக்குப் பிரதியீடாக அருந்தப் படும் சுவையான பானமாகவும் இருக்கிறது. காய்ந்த பட்டைகள் , எரிபொருளாகவும், நாராக்கப் பட்டு கயிறு, பைகள், பாய்கள் என்று உருமாற்றப் பட்டு அன்றாட வாழ்க்கையில் ஒன்றி விடுகிறது. காய்ந்த வேர்களிலிருந்து முகப் பூச்சுகளும் , வயிற்று வலிக்கான மருந்துகளும் தயாரிக்கப் படுகின்றன. அத்துடன் இதன் எண்ணெய் சமையலுக்கு உதவுகிறது.இவையெல்லாம் போதாதென்று முதிர்ந்த தண்டுகள் நடுவில் கோறையாகி சுமார் 120 ,000 லீட்டர் வரை தண்ணீரை உறிஞ்சித் தேக்கி வைக்கும் தன்மையுள்ளது. இதனால் ஆபிரிக்காவில் சில வரண்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குடி நீர் வழங்கும் தண்ணீர் தடாகமாகவும் இருக்கிறது. அங்கு வளரும் ஒரு வகையான புல்லினை straw போலப் பாவித்து தண்டினில் துவாரமிட்டு அதன் மூலம் நீரை அருந்துகிறார்கள். இப்படி பலவிதமாகவும் மனித வாழ்வுக்கு உதவுவதால் இந்த மரத்தினை ' Tree of life ' என்றும் அழைப்பார்கள்.

இதன் காய்கள், நீண்ட காம்பில் தொங்கும் போது அவை கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்தது போல் காட்சி யளிக்கிறது.
1000 ஆண்டுகளின் பின்பு இதன் தண்டுகள் அனேகமாக கோறையாகின்றன. இவை மனிதர்களுக்குப் புகலிடமாகவும் இருந்திருக்கிறது. இதை விட இந்த கோறைகள் கோவில்களாக, சிறைச் சாலைகளாக , கல்லறைகளாக, கழிவறைகளாக பாவிக்கப் பட்டெனவெனவும் , ஏன் இன்றும் கூட 60 பேர் அமரக் கூடிய குடிபானச் சாலையாக ( bar ) இயங்கிக் கொண்டிருக்கிறதென்றால் நம்புவீர்களா?

மடகஸ்காரிலுள்ள இந்த மரத்தின் வயது சுமார் 1000 வருடங்களாகும். இதன் தோற்றம் ஒரு tea pot வடிவில் இருப்பதால் பிரசித்தமானது.



பல நாடுகளில் சிறைக் கைதிகள் இதனுள் அடைக்கப் பட்டதும் இதை விடப் பெரிய சிறைச் சாலைகள் இருந்ததும் தெரிய வருகிறது.



இன்னும் படிக்க இங்கே பாருங்கள்..
.
30 comments:
உண்மையில் அதிசயமான பதிவு ஜெஸி.ஒவ்வொரு படமும் மலைக்க வைக்கிறது.இனி யாரையும் "மரம்" என்று திட்டவேணாம்.மரத்தால் கிடைக்கும் பிரயோசனம் மனிதனின் உதவியை விட உயர்ந்தது.மரங்களை வளர்ப்போம்.அழியவிடாமல் மனிதன் வைத்திருந்தால் நன்றி சொல்வோம்.
இறைவன் படைப்பில் எதுதான்
அதிசயமில்லை!! ஜெஸி
இருந்தாலும்....பார்க்கக் கிடைக்காத,
முடியாத இம் மரங்களை நீங்கள்
உங்கள் தளத்தில் நட்டதில்..!!
பார்த்து அதிசயித்தேன்
நன்றி ஜெஸி
இந்த மரங்கள் பற்றி இப்போதுதான் அறிகிறேன். பிரமிக்க வைக்கிறது படங்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றிங்க!
:)
மிக azhagaana பகிர்வு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை....நண்பர்கள் அனைவருக்கும் உங்களின் பதிவை forward செய்து இருக்கிறேன்...அவளவு பயனுள்ள தகவல்கள்....நன்றி..
மிக அறிவுப்பூர்வமான தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு.. வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி...
Baobab மரம் போன்று பரந்து நிறைக்கிறது தகவல்களும் படங்களும்.
ஹேமா
வரவுக்கு நன்றி ஹேமா. எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்த விடயங்கள் இவை.
இத்தனை பயன்களைத் தரும் மரத்தினை பல்கிப் பெருக வைக்காமல் அழிய விட்ட மனிதர்கள் எத்தனை முட்டாள்கள் என்று தோன்றுகிறது.
வாங்க கலா. நான் இந்த மரத்தை ஊரில் பார்த்திருக்கிறேன். இதன் காயினால் தலையில் குட்டி விளையாடியிருக்கிறேன். அப்போ இத்தனை விடயமும் எனக்குத் தெரியவில்லை. அடுத்த முறை ஊர் போகும்போது மறக்காமல் இந்த மரங்களைப் பார்க்க நினைத்திருக்கிறேன்.
ஷங்கர்.
ஆர்வத்துடன் படித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி ஷங்கர்.
பாவ்பாப் உணவுகள் இப்போ இங்கிலாந்திற்கு இறக்குமதி செய்யப் போகிறார்கள் என்ற ஒரு
செய்தியைத் தொடர்ந்து , நான் செய்த ஆய்வில் தான் எனக்கு இத்தனை விடயமும் தெரிய வந்தது. உங்களுடன் பகிர்ந்ததில் எனக்கும் திருப்தி.
ஆஹா..! அற்புதமான, பாது காக்க வேண்டிய பதிவு... !
மிக்க நன்றி...!
very interesting........ Thank you very much for this awesome post.
So interesting post.
பல அபூர்வ தகவல்கள், படங்களுடன்.
அருமையா இருக்கு ஜெஸ்வந்தி
வியக்கவைக்கிறது எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த உனக்கு நன்றி மட்டுமே சொல்லமுடிகிறது....பலமுறை பார்த்தேன் இந்த அதிசய மரங்களை...
ஆஹா!அருமையான பதிவு! பூங்கொத்து!
இங்கு ஹேமா வின் கருத்தே எனது கருத்தும்..தேடி பதிவிட்ட உங்களுக்கு பிடிங்க ஒரு :-)))) பூங்கொத்து.
மிக அருமையான தகவல்களும் படங்களும். பதிவுக்கு நன்றி ஜெஸ்வந்தி.
வரவு தந்து , படித்து ரசித்து, கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நான் தொடர்ந்து ஒரு சில மரங்கள் பற்றி எழுத விருக்கிறேன். தொடர்ந்து வந்து படிக்க வேண்டுகிறேன்.
நிச்சயமாய். தொடருங்கள் ஜெஸ்வந்தி.
அருமை. அதிசயம்.
உங்கள் கண்கள் காண்பது வித்தியாசமானவை. :)
நன்றி
தமிழகத்தில் எங்கோ பார்த்த ஞாபகம்- சென்னையை தவிர.
உண்மையில் அபூர்வமான மரங்கள்தான்.இதுவரை பார்த்ததேயில்லை.பகிர்வுக்கு நன்றி.
வியக்கவைத்த தகவல்கள் அறிந்துகொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி ஜெஸ்வந்தி!
ரொம்ப அபூர்வமான படங்கள் போல!! புதுத் தக்வலுக்கு நன்றி ஜெஸ்வந்தி!!
சென்னை அடையாறு ஆலமரமும் நினைவுக்கு வருகிறது. :-(
யானை மரம் பிரமிக்க வைக்கிறது. அதிசய அபூர்வ பதிவு.
மரங்கள் இயற்கையின் வரங்கள்.. என்ன அழகு... அருமையான பதிவு ஜெஸ்வந்தி ....
அன்பின் ஜெஸ்வந்தி
பல அரிய தகவல்கள் - அருமையான படங்களுடன் - பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள் ஜெஸ்வந்தி
நட்புடன் சீனா
காணக் கிடைக்காத காட்சிகள்தாங்க.
அற்புதமான, பாது காக்க வேண்டிய பதிவு...
Excellant post.. :)
Post a Comment