நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday, 17 August 2010

இனியதொரு பயணம்- 2

எங்களை அந்த ஹோட்டலில் இறக்கி உள்ளே அழைத்துச் சென்று அறிமுகம் செய்து விட்டு டேவிட் எங்களிடமிருந்து விடை பெற்றார். அந்த 40 நிமிட நேரத்தில் மனிதர் பல வருடங்கள் பழகியவர் போல் மனதில் ஒட்டிக் கொண்டார். எங்களை அழைத்துச் செல்ல ஒருவர் வருவாரென்றும் , அதுவரை சில நிமிடங்கள் வரவேற்பறையில் இருக்கும் படியும் கேட்டுக் கொண்டார்கள். இரண்டே நிமிடங்களில் குளிர் பானம் பரிமாறினார்கள். அந்த ஒரு சில நிமிடங்களும் கூடப் பொறுக்க முடியாமல் பல்கணி வழியாகத் தெரிந்த கண் கொள்ளாக் கடற் கரைக் காட்சியைக் கண்டு களித்தோம் .



பொன்னிற மணலும், ஆழமற்ற தெளிந்த நீரும் அங்கே பலரை பல விதத்தில் ஆனந்தப் படுத்திக் கொண்டிருந்தது. Golden Bay ( கோல்டன் பே ) என்று சரியாகத்தான் பெயர் வைத்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் குடும்பத்துக்காக இரண்டு அறைகள் அருகருகே ஒதுக்கப் பட்டிருந்தன. விசாலமான , நவீன அலங்காரத்துடன் இருந்த அந்த அறைகளும், விசேடமாக , மெய் மறக்க வைத்த வெளிப் புறக் காட்சிகளும், நாங்கள் அங்கே வரத் தீர்மானித்தது எங்கள் அதிஸ்டம் எனச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. நான் பொய் சொல்லவில்லை என்பதை ஊர்ஜிதம் பண்ண அந்தக் காட்சிகளை உங்கள் பார்வைக்கு விருந்தாக்கி யிருக்கிறேன்
.

.
கடற் கரைக்கு சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப் பட்டிருந்த பல செயற்கை நீச்சல் குளங்கள் ( swimming pools ) அதைச்சுற்றி அந்த அழகை ரசிக்கும் மனிதர் கூட்டமும் ஈ மொய்த் ததுபோல் காட்சி தந்தன.

அன்று முழுவதும் எங்கள் பொழுதும் அங்கே இனிதாகக் கரைந்தது. கடலில் விழுவதும் , பின்னர் நீச்சல் குளத்தில் விழுவதுமாக மாறி மாறி தண்ணீரில் விழுந்து கொண்டிருந்தோம். அலுக்கவே இல்லை.
.

இரவுணவுக்காக டேவிட் விமர்சித்த புஜ்ஜிபாவில் உள்ள உணவகத்துக்கு சென்றோம். அப்போது சுமார் இரவு 7 மணி இருக்கும். அப்போதும் கடற் கரையில் கும்பலாக மனிதர் கூட்டம் . அங்கே சில நிமிடங்கள் இளைப்பாறி அந்த சூரிய அஸ்தமனத்தை ரசித்த பின்னர் உணவருந்தினோம்
(தொடரும் )

.

12 comments:

sathishsangkavi.blogspot.com said...

Very Interesting Place...

Chitra said...

Looks like a great resort!
:-)

ஜெய்லானி said...

சூப்பர் போட்டோஸ் ..அழகா இருக்கு .!!

நட்புடன் ஜமால் said...

முதல் இரண்டும் எவ்வளவு உயரத்தில் இருந்து எடுத்தீங்க - ரொம்ப நல்லாயிருக்கு ...

கமலேஷ் said...

புகைப்படங்களுடன் அருமையான பயணக் கட்டுரை தோழி.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பயணக்கட்டுரை படு ஜோர்! ஃபோட்டோஸ் அதை விட ஜோர்!!

Matangi Mawley said...

romba nalla travelogue! awaiting the next part...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி சங்கவி .
நன்றி சித்ரா.
நன்றி ஜெய்லானி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// நட்புடன் ஜமால் said...
முதல் இரண்டும் எவ்வளவு உயரத்தில் இருந்து எடுத்தீங்க - ரொம்ப நல்லாயிருக்கு.//

அந்த ஹோட்டல் கடலருகில் இருந்த ஒரு மலையில் கட்டப் பட்டிருந்தது. எங்கள் அறை மூன்றாவது மாடியில் இருந்தது. அந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட 200 அடி உயரத்திலிருந்து எடுத்திருப்பேன்.

நன்றி ஜமால்.//

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி கமலேஷ் .

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி ஆரண்யநிவாஸ். நீங்கள் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி மாதங்கி. விரைவில் மிகுதியைத் தொடர்கிறேன்