
இன்றைய நவீன உலகில் கணினியின் பாவனை எவரும் எதிர் பாராத வகையில் முன்னேறி விட்டது. கணினி உபயோகிக்காதவனை கை நாட்டுக் காரன் போல் பார்க்கத் தொடங்கி விட்டது எங்கள் சமூகம் . நாங்கள் ஆபிசில் வேலை செய்பவர்களானால் தினமும் எட்டு மணி நேரம் சுமார் 270 நாட்கள் கணினி முன்னால் இருக்கிறோம். ஆனாலும் வீடு வந்த பின்னரும் அந்த உறவு போதாதென்று , கேம்ஸ் ,மெயில், ப்ளோக் என்று பல நோக்கங்களின் நிமித்தம் மேலும் சில மணி நேரம் கணினியுடன் இருக்கிறோம். ஒரு நாள் கணினி பழுதடைந்து விட்டால் வாழ்க்கையே போய் விட்டது போல் பதறிப் போகும் நிலைமையில் பலர் இருக்கிறோம். ( அனுபவம் பேசுதுங்கோ!)
Double vision
இப்படியான அதீத கணினிப் பிரயோகம் கண்களைப் பாதிப்பதை கண் வைத்தியர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். அமெரிக்காவில் செய்த ஒரு ஆய்வில் கணினியில் வேலை
செய்வோரில் 70% ஆனோர் கம்ப்யூட்டர் விஷன் சிண்றோம் ( Computer Vision Syndrome) எனும் ஒரு கண் பார்வைச் சோர்வு நோயால் பாதிக்கப் படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் பெரிதளவில் பாதிக்கிறது. தொடர்ந்து கணினித் திரையை பார்க்கும் போது பிள்ளைகளின் கண்கள் சாதாரண பார்வை வளர்ச்சியை
ப் பெறுவது தடைப் படுகிறது. இவர்கள் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் கணினியில் இருந்தால் அவர்கள் பார்வை பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று கண்டுள்ளார்கள்.
இப்படி கண் சோர்வினால் பாதிப்படைந்தவர்கள் , தலையிடியினாலும், கண் அரிப்பு, கண்ணிலிருந்து நீர் வடிதல், வரண்ட கண்கள், கண் சோர்வு, இரட்டைப் பார்வை, மங்கலான பார்வை, தோள் ப
மேலுள்ள அறிகுறிகளைக் கொண்ட , பல மணி நேரம் வேலை செய்வதினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் கண் சோதனை செய்தபின்னர் இதற்காக விசேடமாக தயாரிக்கப் படும் கண்ணாடிகளை அணிய வேண்டியிருக்கும்.
இன்றைய சமுதாயத்தை எதிர் கொள்ளும் ஒரு பாரிய மருத்துவப் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகும். இந்தியாவிலும் இதற்கு இப்போ சிகிச்சை உண்டு. எனக்குக் கிடைத்த ஒரு லிங்கை இங்கே இணைத்துள்ளேன்.
* சரியான அளவில் ஒளியுள்ள இடத்தில் கணினி பாவிக்க வேண்டும். பிரகாசமான சூரிய ஒளியும் , இயற்கை ஒளியும் கண்களைச் சோர்வடைய வைக்கும்
* கணினியில் வேலை செய்யும் போது நாம் இயற்கையாக கண் மூடித் திறப்பது ( blink ) தானாகக் குறைந்து விடுகிறது. கண் blink பண்ணும் போது கண்கள் வறண்டு போகாமலும் , கண் அரிப்பு வராமலும் இருக்கிறது. வலிந்து நாமாக blink பண்ணும் வழக்கத்தை உண்டாக்க வேண்டும். ( உங்களுக்கு வேறு ஏதாவது ஐடியா தோன்றினாலும் அதுவும் நன்மைக்கே )
.
இப்படி கண்கள் பாதிக்கப் படாமல் தடுக்கச் செய்யக் கூடிய வழிகளைப் பார்ப்போம்.
* சரியான அளவில் ஒளியுள்ள இடத்தில் கணினி பாவிக்க வேண்டும். பிரகாசமான சூரிய ஒளியும் , இயற்கை ஒளியும் கண்களைச் சோர்வடைய வைக்கும்
* அடிக்கடி கணினியிடம் இருந்து எழுந்து இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் வேலை செய்யும் போதும் அடிக்கடி கண்களால் வெளியே பசுமையான காட்சிகளைப் பார்த்து கண்களைக் குளிர்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
* கண் யோகாசனம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒரு முறை மிகத் தூரத்திலுள்ள ஒரு பொருளை 5 -10 sec கூர்ந்தது பார்க்க வேண்டும் ( focus )
* கணினியில் வேலை செய்யும் போது நாம் இயற்கையாக கண் மூடித் திறப்பது ( blink ) தானாகக் குறைந்து விடுகிறது. கண் blink பண்ணும் போது கண்கள் வறண்டு போகாமலும் , கண் அரிப்பு வராமலும் இருக்கிறது. வலிந்து நாமாக blink பண்ணும் வழக்கத்தை உண்டாக்க வேண்டும். ( உங்களுக்கு வேறு ஏதாவது ஐடியா தோன்றினாலும் அதுவும் நன்மைக்கே )
(Blink every time you hit ' enter' key or click the mouse)
* மேலேயுள்ள படத்தில் காட்டியபடி உங்கள் இருக்கையின் உயரத்தையும் கணினித் திரைக்கும் கண்களுக்கும் இடையில் உள்ள தூரத்தையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கைப் பாருங்கள்
.
7 comments:
பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
பலருக்கும் பயனாகும் குறிப்புகள். கண்களைக் பாதுகாக்கத் தந்துள்ள ஆலோசனைகளில் சிலவற்றை இப்போதுதான் அறிய வருகிறேன். நன்றி தோழி.
நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி
தேவையான தகவல்கள் தந்துள்ளீர்கள்!
கணணியில் இருந்தால் கண்ணைப்பற்றி யோசிக்கவா இருக்கு ஜெஸி.கவனமாகத்தான் இருக்கவேணும் !
பயனுள்ள தகவல்களை பகிர்விற்கு நன்றி
நிச்சயமா ப்ளாக்கர்களுக்கு தேவையான பதிவு... அது என்னவோ கண் கெட்டபிறகு தான் அவசர அவசரமாக நடவடிக்கைகளை எடுக்கிறோம்... இதை படித்து விழித்தால் சரி....
Post a Comment