அவரது .அழைப்பையேற்று என்னால் முடிந்தவரை உண்மையான பதில்களை இங்கே சொல்கிறேன்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
இது என்ன கேள்வி? என் பெயர் தெரியாமலா இந்தப் பதிவைப் படிக்க வந்திருப்பீர்கள்? என்றாலும் சொல்கிறேன்.என் பெயர் ''ஜெஸ்வந்தி ''
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது என் பெயரில்லை. எனக்குப் பிடித்த பெயர். பலர் மனங்களை நோகடிக்காமல், நான் நினைத்ததை எழுத எனக்கு ஒரு பெயர் தேவைப்பட்டது.அதனால் எனக்குப் பிடித்த பெயரில் ஒளிந்து கொண்டேன்.கவனிக்கவும்! உண்மைப் பெயர் என்னவென்று கேள்வியில் கேட்கவில்லை. பலர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி.
கூகுளில் தமிழில் எழுதப் பழகிக் கொண்டிருந்தேன்.தமிழ்மணத்தில் ஒரு சில வலையங்களைப் படித்தேன். அடடே ! இதை விட நன்றாக நான் எழுதுவேனே! ஏன் நான் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கக் கூடாது ? என்று தோன்றியது.
(பி. கு. : தமிழ் மணத்தில் நான் யார் வலையத்தைப் படித்தேன் என்று சத்தியமாக நினைவில்லை)
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
என் வலைப் பதிவா ?பிரபலமா? பெரிதா ஒரு முயற்சியும் செய்ய வில்லை.தமிழ் மணத்தில் படித்து ஒரு சிலருக்குக் கருத்துப் போட்டதன் வழியாகக் கண்டு பிடித்தவர்கள் வந்து படித்தார்கள். ஒரு சிலர் தமிழிசில் ,தமிழ்மணத்தில் இணையும்படி அறிவுரை சொன்னார்கள்.அதைச் செய்யவே நேரம் கிடைக்காமல் மூன்று மாதம் போய் விட்டது.
பின்னர் தமிழிஸ்ல சேர்த்தேன்.தமிழ் மணத்தில் சேர்க்க முயன்றேன்.சரிவரவில்லை.பின்னர் ஒரு வழியாக நான்கு மாதங்களின் பின்பு தான் தமிழ்மணத்தில் இணைந்தேன்.சுருக்கமாகச் சொன்னால் ஒரு சோம்பேறி..
பதிவு சுவாரசியமாக இருக்க வேண்டு மென்ற எண்ணத்தினால் பல விடயங்களை என் வலையத்தில் எழுதினேன்.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆமாம். நான் சொந்த அனுபவங்களையும், என்னைச் சுற்றியுள்ளோர் அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். அதனால் எனக்கு எந்தப் பாதகமும் இல்லை.எனக்கு இப்படியொரு வலயம் இருப்பது பல நண்பர்களுக்குத் தெரியாததால் இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா?அல்லது அதன் மூலம் பணம் சம்பாதிப்பதர்க்காகவா?
என்னங்க ? இப்படிக் கேட்டு மாட்டி விடப் பார்க்கிறீர்கள்.? நான் இங்கே சேர்த்த பணத்தை வைக்க இடமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப் பதிவுகளுக்குச் சொந்தக் காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
நான் உண்மையைச் சொல்கிறேன். எனக்கு இரண்டு
வலையங்கள் தமிழில் உண்டு. மேலதிக விபரங்கள்
கேள்வியில் கேட்கப் படவில்லை. தப்பித்தேன்..
8 ) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்குக் கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டதுண்டா? ஆம் என்றால் யார் அந்தப் பதிவர்.? ஏன் ?
ஒருவர் மேலும் பொறாமை வரவில்லை. என்னைக்கவர்ந்த பதிவர்களுடன் நட்பை உண்டாக்கிக் கொண்டேன்.
ஆனால் வலையுலகையே வெறுக்க வைக்கும்படி மோதிக் கொண்ட ஒரு சிலர் மேல் கோபம் வந்தது என்னமோ உண்மை.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்பு கொண்டு
பாராட்டிய மனிதர் யார்? அவரைப பற்றி, பாராட்டைப் பற்றி..
பல பிரபல பதிவர்கள் என் சிறுகதைகளின் விசிறிகள்.
அவர்கள் பெயர்களை நான் சொல்ல மாட்டேன்.
10) கடைசியாக-- விருப்பமிருந்தால் பதிவுலகத்துக்கு உங்களைப்பற்றிய அனைத்தையும் சொல்லுங்கள்
என்னைப் பற்றிச் சொல்ல நான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.
எனக்கு இந்த வலையுலகை மிகவும் பிடித்திருக்கிறது.
அது தேடித் தந்த நட்புகள் விலை மதிக்க முடியாதவை..
47 comments:
நான் கூட இது ஆண்களுக்கான பதிவு என்று நினைத்ததுண்டு!நல்ல பதில்கள்!பூங்கொத்து!
டெம்ப்ளேட்டில் ஏதோ கோளாறு.. சரி பாருங்கள்
இடைவெளி நிறைய இருக்கு பாருங்க..!!
template இல் ஏதோ கோளாறு என்று தெரிகிறது.சரி பண்ண முயற்சிக்கிறேன்.
//ஒழிந்து கொண்டேன்.//
ஐயையோ,வேண்டாங்க, ரொம்ப நாளைக்கு நல்லா இருங்க, சும்மா ஒளிந்து கொண்டால் போதுமுங்க.
உங்க இயல்பான கெள்வி பதில் நல்லாயிருக்குங்க ..... பகிர்ந்தமைக்கு நன்றி.
பணத்தை வைக்க இடமில்லைன்னா சொல்லுங்க என் வங்கி கணக்கு எண்ணை மடலிடுகிறேன் :P
ஜெஸ்ஸியக்கா,
சுகமா?
அந்த கட்டிலுக்கு அடியில் கிடக்கும் பணத்தையெல்லாம் இப்படி படம் போட்டு காட்டினால்...இன்கம் டாக்ஸ் பிரச்சினை வரும்னு தோணலியா உங்களுக்கு?
ஆனாலும் பதிகளில் நிறைய சமாளிப்புகள் தெரிகிறது.
//என்னங்க ? இப்படிக் கேட்டு மாட்டி விடப் பார்க்கிறீர்கள்.? நான் இங்கே
சேர்த்த பணத்தை வைக்க இடமில்லாமல் தவித்துக்
கொண்டிருக்கிறேன். //
:)))))))))) என் அக்கௌண்ட் நம்பர் வேணுமா?
dont keep the cash under your bed. Distribute or deposit plz.:)
Arumai..your responses to the questions.
ஜெஸி...எங்க ரொம்ப நாளாக் காணோம்.சுகம்தானே.உங்களைப் பற்றின உண்மை சொல்ல ஓடி வந்திருக்கீங்க போல.திரும்பவும் ஒளிஞ்சுக்குவீங்களோ !
பதில்கள் கலக்கல்ஸ்
என்னங்க ? இப்படிக் கேட்டு மாட்டி விடப் பார்க்கிறீர்கள்.? நான் இங்கே சேர்த்த பணத்தை வைக்க இடமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
எதாவது உதவி வேண்டுமா
சேர்த்த பணத்தை செலவு செய்வது எப்படின்னு மெயிலிடவா!!!!
கலகலப்பான பதில்கள்.
ரசித்தேன்!! உங்கள் பதில்(வு)களை
எம்பூட்டு நாளாச்சு ஜெஸ்!
ஜாலி! :-)
தொடர்ந்து எழுதுங்க மக்கா.
superu.......pathivu
kelvi pathilgal thiruvelaiyadal padam partha mathiri irunthadhu jes....
// அன்புடன் அருணா said...
நான் கூட இது ஆண்களுக்கான பதிவு என்று நினைத்ததுண்டு! நல்ல பதில்கள்! பூங்கொத்து! //
முதல் முதல் ஓடி வந்து பூங்கொத்து தந்ததற்கு நன்றி அருணா
நன்றி தமிழ் உதயம் .
நன்றி ஜெய்லானி .
//DrPKandaswamyPhD said...
//ஒழிந்து கொண்டேன்.//
ஐயையோ,வேண்டாங்க, ரொம்ப நாளைக்கு நல்லா இருங்க, சும்மா ஒளிந்து கொண்டால் போதுமுங்க.//
தப்பை நகைச் சுவையுடன் சுட்டிக் காட்டியதை மிகவும் ரசித்தேன். திருத்தி விடுகிறேன். நன்றி.
//சி. கருணாகரசு said...
உங்க இயல்பான கேள்வி பதில் நல்லாயிருக்குங்க ..... பகிர்ந்தமைக்கு நன்றி.//
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கருணாகரசு
.//நட்புடன் ஜமால் said...
பணத்தை வைக்க இடமில்லைன்னா சொல்லுங்க என் வங்கி கணக்கு எண்ணை மடலிடுகிறேன் :P //
வாங்க ஜமால். சிங்கப்பூரில் நல்ல வட்டி கொடுக்கிறார்களா? என்ன ? மீதி மெயிலில் சொல்கிறேன்
// சத்ரியன் said...
ஜெஸ்ஸியக்கா, சுகமா?
அந்த கட்டிலுக்கு அடியில் கிடக்கும் பணத்தையெல்லாம் இப்படி படம் போட்டு காட்டினால்...இன்கம் டாக்ஸ் பிரச்சினை வரும்னு தோணலியா உங்களுக்கு?
ஆனாலும் பதிவுகளில் நிறைய சமாளிப்புகள் தெரிகிறது. //
நல்ல சுகம் தம்பி. இன்கம் டக்ஸ் உத்தியோகத்தர்களுக்கு வேற வேலை இல்லாமல் என் ப்ளாக் படிக்கப் போகிறார்களா? என்ற எண்ணம் தான். அட, என்ன நீ? நான் எங்கே சமாளித்தேன்? இத்தனை உண்மையான பதில்களை யாரும் தந்ததாக எனக்குத் தெரியவில்லை
//.☀நான் ஆதவன்☀ said...
/என்னங்க ? இப்படிக் கேட்டு மாட்டி விடப் பார்க்கிறீர்கள்.? நான் இங்கே
சேர்த்த பணத்தை வைக்க இடமில்லாமல் தவித்துக்
கொண்டிருக்கிறேன். /
:)))))))))) என் அக்கௌண்ட் நம்பர் வேணுமா?//
என்னப்பா இப்படி அப்பாவியாய் இருக்கிறாய். முன் பின் தெரியாதவர்களுக்கெல்லாம் அக்கௌன்ட் நம்பர் கொடுக்கக் குடாதுப்பா. எங்கேயும் மாட்டி விட்டிடுவார்கள், Be careful.
//. ஜிஜி said...
Dont keep the cash under your bed. Distribute or deposit plz.:)
Arumai..your responses to the questions.//
வாங்க ஜிஜி . என்னங்க நீங்க? உண்மையாய் கட்டிலுக்குக் கீழ பணம் வைத்திருப்பவள் படம் போட்டுக் காட்டுவாளா? குறை குடம் தான் சும்மா சத்தம் போடும்.
// sakthi said...
பதில்கள் கலக்கல்ஸ்
எதாவது உதவி வேண்டுமா?
சேர்த்த பணத்தை செலவு செய்வது எப்படின்னு மெயிலிடவா!!!! //
நன்றி சக்தி. இங்கே கண்டதில் மகிழ்ச்சி. செலவு செய்வது எப்படி என்று ஒரு புத்தகம் எழுதலாம் என்று இருக்கேன். உங்கள் கருத்துக்களையும் நிச்சயம் சேர்த்துக் கொள்வேன். மெயிலிடுங்கள்
.// அமைதிச்சாரல் said...
கலகலப்பான பதில்கள்.//
கருத்துக்கு நன்றி அமைதிச்சாரல்
யதார்த்தமான எளிமையான பதில்கள். மிக்க நன்றி.
கூகுளில் தமிழில் எழுதப் பழகிக் கொண்டிருந்தேன்.தமிழ்மணத்தில் ஒரு சில வலையங்களைப் படித்தேன். அடடே ! இதை விட நன்றாக நான் எழுதுவேனே! ஏன் நான் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கக் கூடாது ? என்று தோன்றியது.///
சே! என்ன ஒரு டர்னிங்க் பாயிண்ட்! நானும் உங்கள் எழுத்துக்கு ரசிகன்னு யாருக்கும் சொல்லாதீங்க!!
ஜெஸி,
சினிமாவில்தான்...நடிப்பார்கள்
ஓஓஓ....வலைத்தளத்திலுமா!..?
நல்ல சமாளிப்பு!
சரி புத்திசாலிப் பெண்ணுக்கு இதுதான்
தேவை அதனால்....நீங்கள் மிகமிகப் புத்தி ஜாலிதான்!
பகிர்தலுக்கு நன்றி ஜெஸி
// இராயர் அமிர்தலிங்கம் said...
ரசித்தேன்!! உங்கள் பதில்(வு)களை //
ஹலோ இராயர். நலமாய் இருக்கிறீர்களா? நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறீர்கள்.மகிழ்ச்சி.
// பா.ராஜாராம் said...
எம்பூட்டு நாளாச்சு ஜெஸ்!
ஜாலி! :-
தொடர்ந்து எழுதுங்க மக்கா.//
பாடசாலை விடுமுறை மக்கா. பல சோலிகள். பயணம் வேறு போய் வந்தேன். விரைவில் பயணக் கட்டுரை எழுதுகிறேன்.
//rk guru said...
superu.......பதிவு //
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி குரு
// உண்மைப் பெயர் என்னவென்று கேள்வியில் கேட்கவில்லை. பலர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்///
ஹி ஹி நாமெல்லாம் மூளைக்காரங்க! :))
// தமிழரசி said...
kelvi pathilgal thiruvelaiyadal padam partha mathiri irunthadhu jes.... //
வாங்க தமிழ். இங்கே கண்டத்தில் மகிழ்ச்சி. டிக்கெட் இல்லாமல் படம் பார்த்ததில் திருப்தி தானே?
// V.Radhakrishnan said...
யதார்த்தமான எளிமையான பதில்கள். மிக்க நன்றி.//
தொடருக்கு அழைத்ததற்கு நன்றி நண்பரே. லிங்க் அனுப்ப இருந்தேன். அதற்குள் வந்து கருத்தும் போட்டு விட்டீர்கள்.
// தேவன் மாயம் said...
கூகுளில் தமிழில் எழுதப் பழகிக் கொண்டிருந்தேன்.தமிழ்மணத்தில் ஒரு சில வலையங்களைப் படித்தேன். அடடே ! இதை விட நன்றாக நான் எழுதுவேனே! ஏன் நான் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கக் கூடாது ? என்று தோன்றியது.///
சே! என்ன ஒரு டர்னிங்க் பாயிண்ட்! நானும் உங்கள் எழுத்துக்கு ரசிகன்னு யாருக்கும் சொல்லாதீங்க!! //
பார்த்தீர்களா? உண்மையைச் சொன்னால் எப்படி வில்லங்கம் வரும் என்று தெரிகிறதா?
நானாக யார் பெயரையும் சொல்ல மாட்டேன். நீங்கள் வந்து பகிரங்கமாக ரகசியம் சொன்னால் என்னால் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்.
// கலா said...
ஜெஸி,
சினிமாவில்தான்...நடிப்பார்கள்
ஓஓஓ....வலைத்தளத்திலுமா!..?
நல்ல சமாளிப்பு!
சரி புத்திசாலிப் பெண்ணுக்கு இதுதான்
தேவை அதனால்....நீங்கள் மிகமிகப் புத்தி ஜாலிதான்!
பகிர்தலுக்கு நன்றி ஜெஸி //
ஹலோ கலா! நலமா? ஆமா, யாரைப் பற்றி இங்கே சொல்லியிருக்கிறீர்கள்?
ஹ ஹ ஹா
// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
// உண்மைப் பெயர் என்னவென்று கேள்வியில் கேட்கவில்லை. பலர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்///
ஹி ஹி நாமெல்லாம் மூளைக்காரங்க! :)) //
உங்கள் பதிவைப் படித்தேன். நீங்கள் ரொம்பக் கவனமாகத் தான் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறீர்கள் ஷங்கர். ஆனால் அந்தக் கடைசிக் கேள்வியில் ஏன் அப்பிடிக் கவிட்டுக் கொட்டி விட்டீர்கள்? ஹ ஹ ஹா
//தமிழ் மணத்தில் நான் யார் வலையத்தைப் படித்தேன் என்று
சத்தியமாக நினைவில்லை//
என்னுதுன்னு வெளியே சொல்லாதீங்க
நான் உங்களின் சிறுகதைகளின் தீவிர விசிறி. அதன் மூலம் நான் ‘பிரபலம்னு சொல்ல வரலைங்க’ :)!
அடிக்கடி எழுதுங்கள்.
//ராமலக்ஷ்மி said...
நான் உங்களின் சிறுகதைகளின் தீவிர விசிறி. அதன் மூலம் நான் ‘பிரபலம்னு சொல்ல வரலைங்க’ :)!
அடிக்கடி எழுதுங்கள்.//
வாங்க தோழி. நீங்களும் என் விசிறியா? அறிந்ததில் மகிழ்ச்சி. நான் உங்கள் கவிதைகளின் விசிறியாக்கும்.
அடிக்கடி எழுத எனக்கும் அவா. ஆனால் பாடசாலை விடுமுறை மிக வேகமாக என்னை இணையப் பக்கத்திலிருந்து இழுத்து விட்டது. செப்டம்பர் தொடங்கியதும் எழுதி உங்களை அலுக்க வைக்கிறேன் .பாருங்கள்.
//நசரேயன் said...
//தமிழ் மணத்தில் நான் யார் வலையத்தைப் படித்தேன் என்று
சத்தியமாக நினைவில்லை//
என்னுதுன்னு வெளியே சொல்லாதீங்க //
நான் எத்தனை அழகாக சமாளித்தேன். நீங்கள் இப்படி உண்மையைப் போட்டு உடைத்து விட்டீர்களே!
நான் என்ன செய்யட்டும்? ஹ ஹ ஹா
நல்ல பதில்கள்.. உங்களை பற்றி அறிய உதவியது. வாழ்த்துகள் ஜெஸ்வந்தி மேடம்.
உங்கள் கதைகள் படிக்க ரொம்ப நல்லாருக்கும்.
Thanks Starjan.
Post a Comment