பிரத்தியேக மனநிலை மருத்துவம்
ஹென்றி மார்க்ஹம் ( Henry Markham ) என்ற விஞ்ஞானி இப்போது சுவிற்சர்லாந்தில் மூளை சம்பந்தமான ( Blue Brain Project ) ஒரு ஆராய்ச்சியாளராக இருக்கிறார். இவர் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மனோதத்துவ மருத்துவர்கள் அவசியமில்லை என்கிறார். எவரும் கணினியில் தங்கள் மூளையின் தொழிற்பாட்டை அவதானித்து ,அவர்களின் நடவடிக்கைக்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் கண்டறிந்து தங்களைக் குணப் Marபடுத்த முடியும் என்கிறார். இது நடை முறையில் சாத்தியமா?
பெண்ணாதிக்கம்
ரய்மொந்த் ( Martin Raymond ) என்பவர் தொழிலதிபர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு கம்பனிக்கு ( Business Consultancy Future Laboratory) பொறுப்பாளராக வேலை செய்கிறார். இவரது கருத்துப் படி 2020 ஆம் ஆண்டில் 53 வீதமான மில்லியனயர் பெண்களாக இருப்பார்களாம். அதுமட்டுமில்லாமல் பெண்களால் நிர்வகிக்கப் படும் கம்பனிகள் உலகளவில் முன்னணி வகிக்கும் என்றும் அதிக இலாபகரமானவையாக இருக்கும் என்றும் அடித்துச் சொல்கிறார். ... கவனிக்கவும். இதைச் சொன்னவர் மார்ட்டின் ரய்மொந்த் . நானல்ல.
பூமிக்கு வெளியில் உல்லாசப் பயணம்
பிரித்தானிய தொலைபேசிக் கம்பனியின் ஆராய்ச்சிப் படி 2017 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் விண்வெளியில் elevators மூலம் சந்திரனிலுள்ள கிராமங்களுக்கு உல்லாசப் பயணங்களை ஆரம்பிப்பார்களாம். 2040 ஆம் ஆண்டில் அது சர்வ சகஜமாகி விடுமாம். தலை 'கிர்ர்' என்கிறதே !
ஓட்டுனர் இல்லாமல் கார் ஓடுமாம்.
2030 ஆம் ஆண்டளவில் satelite கொன்றோல் மூலம் வாகனங்கள் ஓட்டப் படுமாம். காரில் ஏறியிருந்தால் போக வேண்டிய இடத்துக்கு அது உங்களை சேமமே கொண்டு சேர்க்குமாம். உலக கால நிலைமை இன்னும் இருபது வருடங்களில் மோசமாகி விடுமென்பதால் ,அப்போது இந்த வகையில் பயணிப்பது தான் வாகன விபத்துகளைத் தடுக்கும் ஒரே வழியாம்.
.
22 comments:
ஜெஸ்ஸியக்கா,
‘எதிர்க்காலத்தைப்’ பத்தின சில தகவல்களை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.
அந்த நிலா பற்றிய செய்தியக் கேட்டாத்தான் கொஞ்சம் கலக்கமா இருக்கு. ஏன்னா, நிலாவ வெச்சித்தானே நிறைய கவிதைகள் சொல்ல முடியுது.
அதை நேர்ல பாத்துட்டாங்கன்னா நம்ம கவிதைய யாரு படிப்பாங்க?
Satellite controlled cars???? cool!
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_08.html
:-)
ஆச்சிரியமா தாங்க இருக்கு...!!
நல்ல பகிர்வு.
அப்படியே நம்ம எதிர்காலத்தையும் சொன்னா நல்லாயிருக்கும்.
நாமே சில நேரம் தீர்க்கதரிசி ஆகலாம்.
// 53 வீதமான மில்லியனயர் பெண்களாக இருப்பார்களாம். //
இதில் மட்டுமா?
இன்னும்நிறைய விஷயங்களிலும்
ஆதிக்கம் செலுத்தத்தான் போகிறார்கள்
அறியாத விஷயங்கள் ஜெஸ்ஸம்மா...
அருமை அருமையான பகிர்வுங்க ஜெஸ்
அடிக்கடி எழுதுங்க !
:)
ம்ம்.. பகிர்வுக்கு நன்றிகள் :)
அத்தனை பகிர்வுகளுமே ஆச்சரியப்பட வைக்கிறது ஜெஸி.
நம்ப காலத்திலேயே
ஏதாவது நடக்காதா?
//சத்ரியன் said...
ஜெஸ்ஸியக்கா,
‘எதிர்க்காலத்தைப்’ பத்தின சில தகவல்களை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.
அந்த நிலா பற்றிய செய்தியக் கேட்டாத்தான் கொஞ்சம் கலக்கமா இருக்கு. ஏன்னா, நிலாவ வெச்சித்தானே நிறைய கவிதைகள் சொல்ல முடியுது.
அதை நேர்ல பாத்துட்டாங்கன்னா நம்ம கவிதைய யாரு படிப்பாங்க?//
வாங்க சத்திரியன், மனிதன் நிலாவுக்குப் போனால், அதன் நிலை என்னாகும் என்ற கவலை எனக்கும் உண்டு.
உலகின் pollution பிரச்சனைக்கு வழி தெரியாமல் நிலாவைத் தேடுகிறான் குப்பை கொட்ட//
//Chitra said...
Satellite controlled cars???? cool! //
Machines are going take over human. It scares me Chitra.
// Chitra said...
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_08.html :-)//
Thank you for introducing my post in Rajani's style in Valaichcharam.
// ஜெய்லானி said...
ஆச்சிரியமா தாங்க இருக்கு...!! //
நாம இருந்து பார்க்கத் தானே போகிறோம் ஜெய்லானி.
//அம்பிகா said...
நல்ல பகிர்வு.
அப்படியே நம்ம எதிர்காலத்தையும் சொன்னா நல்லாயிருக்கும்.//
வாங்க அம்பிகா. அவங்க ஆராய்ச்சி செய்து இப்படியெல்லாம் நடக்கும் என்கிறார்கள். அவர்களைச் சாத்திரம் சொல்லச் சொல்கிறீர்களே! ஹ ஹ ஹா
//தமிழ் உதயம் said...
நாமே சில நேரம் தீர்க்கதரிசி ஆகலாம்.//
அடடே , நீங்களும் தீர்க்க தரிசனம் சொல்கிறீர்களா? உங்க பெயரையும் போட்டு இதில் சேர்த்து விட்டிருப்பேனே!
//ப்ரியமுடன்...வசந்த் said...
// 53 வீதமான மில்லியனயர் பெண்களாக இருப்பார்களாம். //இதில் மட்டுமா?இன்னும்நிறைய விஷயங்களிலும்ஆதிக்கம் செலுத்தத்தான் போகிறார்கள்அறியாத விஷயங்கள் ஜெஸ்ஸம்மா... .//
பெண்கள் மேல் இத்தனை நம்பிக்கை இருக்கா வசந்த்? இருந்து பார்த்திடுவோம் இவர்கள் ஊகம் சரியா தப்பாவென.
//நேசமித்ரன் said...
அருமை அருமையான பகிர்வுங்க ஜெஸ் அடிக்கடி எழுதுங்க !:)//
வாங்க நேசன். அடிக்கடி எழுத எனக்கும் ஆவல் .முயற்சிக்கிறேன்.
//ஆறுமுகம் முருகேசன் said...
ம்ம்.. பகிர்வுக்கு நன்றிகள் :) //
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி முருகேசன்.
//ஹேமா said...
அத்தனை பகிர்வுகளுமே ஆச்சரியப்பட வைக்கிறது ஜெஸி.//
வாங்க தோழி. என்னை ஆச்சரியப் படுத்திய விடயங்களைத் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் இரசிப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
//Madumitha said...
நம்ப காலத்திலேயேஏதாவது நடக்காதா?//
வாங்க மதுமிதா. 2017 ஆம் ஆண்டு இன்னும் 17 வருடங்களில் வந்து விடும் தோழி . காலம் இயந்திர வேகத்தில் போகிறது பாருங்கள். நடக்கப் போவதை நாங்கள் நிச்சயம் பார்ப்போம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
Post a Comment